Trending

Monday, 31 December 2012

கொங்கு நாட்டின் தோற்றம்

கொங்கு நாட்டின் தோற்றம்

கொங்கதேசம் உருவான விதம மற்றும் நாம் குடியமர்ந்தமை வரலாற்று ஆவணங்கள் மூலமாக மூன்று கட்டங்களாக நமக்கு தெரிகிறது. கரிகாலனுக்கும் அவன் 'காதலிக்கும்' பிறந்த ஆதொண்டுக்கு தொண்டை தேசம் பிரித்து கொடுத்த பின்னர், அவன் தனது தகுதியை உயர்த்திக் கொள்ள வெள்ளாளரிடம் பெண் கேட்க, அவர்கள் மறுத்துவிட்டு கருநாயை கட்டிவைத்துவிட்டு தேசம் விட்டு கிளம்பியபோது சேரமன்னர் தடுத்து தனது தேசத்தில் வர சொல்லியதன் பொருட்டு சென்றது முதல்முறை. அப்போது கொங்கதேசம் மலைகள் சூழ்ந்த காடாக இருந்தது. இரண்டாவது குடியமர்வு கிராதகாதி சாதிகளை வெட்டி முடுக்கிவிட சேரர் எண்ணத்தின் பொருட்டு வந்தமை. மூன்றாவது கரிகாலன் மகள் சோழ நாட்டின் இளவரசி ஆட்டனத்தி சேரனுக்கு மணமுடிக்கபட்டபோது சோழ இளவரசியோடு சேர நாட்டுக்கு அனுப்பப்பட்டமை. அக்காலத்தில் பொன், பொருள், ஆநிரை, குதிரை, யானை போன்ற சீதனன்களோடு பெண்ணுக்கு ஆதரவாக குடிகளையும் அனுப்புவது வழக்கம். அது அந்த பெண்ணுக்கு ஒரு தாய்வீட்டு ஆதரவு கரமாகவும், ராஜ்யத்தில் ஆதரவு கோஷ்டியாகவும் செயல்பட நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டும் கூட.


அப்படி வந்த சமயத்தில் கொங்கு நாடு என்பது காடுகளும் மேடுக்களுமாக கிடந்த பூமி. காடுகளை சீர்படுத்தி, புதர்களையும் பாறைகளையும் அகற்றி, பாத்திகள் பிடித்து, நீர்வழிகள் உருவாக்கி விவசாய பூமிகளாக  மாற்றினார்கள். தங்கள் பூமி மட்டும் இல்லாது ஒவ்வொரு ஊருக்குமான நீராதார குளங்களையும் ஏரிகளையும் வாய்க்கால்களையும் உண்டாக்கினார்கள். காலப்போக்கில் பல்கி பெருகி கிளைத்து இனக்குழுக்களாக வளர்ந்தார்கள். தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள கூட்ட வழக்கங்ககளை உருவாக்கினார்கள். தங்களுக்கென்று உணவு, உடை, கட்டுமானம், கலை, விலங்கினங்கள் என்பன மட்டும் இன்றி பண்பாடுகளையும், நியதிகளையும், நிகழ்ச்சிகளையும்  வளர்த்தெடுத்தார்கள். பின்னர் ஒவ்வொரு குலமும் தங்களுக்கென குலதெய்வம், கோவில், காணி, குலகுரு என்று பரிணமித்தார்கள். அவ்வாறு வகுக்கப்பட்டவை அறம் சார்ந்து காலகாலதிற்க்கும் பொருந்தும்படி எளியவரும் பின்பற்றும்படியாக உருவாக்கபட்டது. இவ்வாறான சிறந்த வழக்கங்களால் தன்னிறைவடைந்த தற்சார்பு நிலையை எட்டினர்.

கொங்கு நாட்டில் பின்னர் பஞ்சம் பிழைக்கவும் நாடோடிகளாகவும் வந்த மக்களையும் அரவணைத்து அவர்களுக்கென்று வசிக்க இடம், உணவு, உடை, பாதுகாப்பு எல்லாம் தந்து தங்கள் வீட்டு விசெசங்களிலும் பங்கெடுக்கும் வண்ணம் அவர்களுக்கும் சில சடங்கு பொறுப்புக்களை கொடுத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியையும் ஒதுக்கி தந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் வண்ணார், நாவிதர், பண்டாரம், குயவர், சாணார், தோட்டி, சக்கிலியர் முதலானோர் ஆவர். இதிலும் கொங்கு செட்டியார் என்னும் மரபினர் சோழ நாட்டில் அவர்கள் இன பெண்ணின் கொலைக்காக  போர் தொடுத்து பின் கொங்கு மக்களுடன் கொங்கு நாட்டுக்கே அடைக்கலம் கொடுத்து வரப்பட்டவர்கள் .குடும்ப குழுக்களாக இருந்தவர்கள் பின் சமூக அமைப்பாக வாழ துவங்கினர்.

இடையில் வேட்டை தொழிலைகொண்ட இன குழுக்களோடும் வேறு சில இன குளுக்கலோடும் வேளாண் தொழில் செய்தவர்களுக்கு மோதல்கள் ஏற்பட்டு வந்தன. அவற்றை எல்லாம் வீரத்தாலும் ஒழுக்கத்தாலும் வென்ரெடுத்து ஆட்சியை நிலை நாட்டினர்.
24 நாடுகளாகவும் கிளை காநிகலாகவும் 60 மேற்பட்ட கூட்டங்கலாகவும் பிரித்து, நாட்டுக்கு ஒரு பட்டக்காரன், காநிக்கொரு பெரியதனகாரன், ஊருக்கு ஒரு கொத்துகாரன், சீருக்கு ஒரு அருமைக்காரன் என தங்களுக்கென ஒரு ஆட்சி-நிர்வாக முறைகளை வகுத்து கொங்கு நாட்டுக்கென தனி கலாசாரம், பண்பாடு, போர்முறைகள், ஆயுதங்கள், கோட்டை கொத்தளங்கள், கொடி, முத்திரை என்று அரசு நிர்வாகமும் கைவந்த கலையானது. பல்வேறு காலகட்டங்களில் கொங்கு நாடு சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. அவர்கள் ஆட்சியானாலும் கொங்கு நாட்டு ஆட்சியாளர்கள் என்றும் மரியாதைக்குரியவர்களாக நடத்தபட்டார்கள். சில காலங்களில் யாருக்கும் கட்டுப்படாத சுயராஜ்யமாகவும் இருந்தது.

எனவே கொங்கு நாடு என்பது கவுண்டர்கள் வரவுக்கு முன் வெறும் காடு கவுண்டர்கள் வரவுக்கு பின் கொங்கு நாடு, அவ்வளவே. கொங்கு நாட்டுக்கென ஆதியில் இருந்து அந்தம் வரை- பிறப்பிலிருந்து இறப்பு வரை, பண்பாடு நாகரீகம் வரை அனைத்தையும் வளர்த்தெடுத்த கொங்கு வேளாள கவுண்டர்களே மண்ணின் மைந்தர்கள்.3 comments:

 1. naidu community is not explanation why ? and chetty, muthiliyer, edayer?

  ReplyDelete
 2. ஒப்பனை இல்லாத வீதி!: யானைக்கு யர்ரம்...குதிரைக்கு குர்ரம்; நம்மவர்களின் கற்பனைத்திறன் அப்படி. ஒப்பணக் கலைஞர்கள் குடியிருந்த வீதிதான், ஒப்பணக்கார வீதி என்று யாரோ, எப்போதோ கிளப்பி விட்ட கற்பனை, இன்னும் இங்கே உலாவிக்கொண்டிருக்கிறது. ஒப்பனைக் கலைஞர்களுக்கும் ஒப்பணக்கார வீதிக்கும் தொடர்பு உண்டா என்று கேட்டால், இல்லை என்கிறது வரலாற்றுச்சான்று. விஜயநகர பேரரசில் சேனைகளில் வேலை பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் (அட அதுதாங்க பட்டுவாடா) பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள்தான் இந்த வீதியின் பெயருக்கு காரணமான ஒப்பணக்காரர்கள். விஜயநகர பேரரசின் சார்பில் நாயக்கர்கள் இம்மண்ணை ஆண்ட போது, ஒப்பணக்காரர்கள் என்றழைக்கப்பட்ட பலிஜா சமூகத்தினர், இப்பகுதியில் குடியேறினர். அதனால்தான் இது ஒப்பணக்காரத்தெரு ஆனது.

  ReplyDelete
 3. ஆதாரம் தினமலர் நாள் இதழ் .பார்க்க கீழ் உள்ள இணைய தள முகவரியை
  http://www.dinamalar.com/news_detail.asp?id=356453

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates