Trending

Sunday, 29 December 2013

கோடிகளில் பேரம்-நாடகக்காதல்நம் கொங்கதேசம் முழுக்க சில இயக்கங்களால் தூண்டிவிடப்பட்ட பட்டியல் சாதியை சேர்ந்த இளைஞர்கள் நம் சாதி பெண்களை குறி வைத்து காதல் நாடகமாடி கூட்டி சென்று வாழ்க்கையை சீரழிப்பதும், சொத்து பிடுங்குவதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஓரளவு பருவம் வந்த பெண்கள் சில பட்டியல் சாதி கட்சியினரால் அரங்கேற்றப்படும் நாடகக்காதலில் சிக்குவதில்லை.. கொஞ்சம் விவரம் தெரிந்த பெண்கள் காதல் மோகத்தில் மயங்குவதில்லை.. தெளிவாக உள்ளனர். எனவே இவர்களின் குறி பள்ளிப்பருவ பெண்கள் மீது திரும்பியுள்ளது. ஏழாவது எட்டாவது படிக்கும்போதே பெண்களை குறிவைக்க துவங்கிவிடுகிரார்கள். பதினெட்டு வயது தொட்ட சில நாட்களிலேயே தங்கள் வேலையை தீவிரப்படுத்தி காரியம் சாதிக்கிறார்கள். அதற்காக கேடயமாக பல ஆதாரங்களையும் தவறாது திரட்டி வைத்துக்கொள்கிறார்கள். 

தற்போது திருச்செங்கோட்டு பகுதியில் மட்டும் நம் குழு கவனித்த வரை நான்கு சம்பவங்கள் ஒரே வட்டாரத்தில் நடந்துள்ளது. பெண் வீட்டின் வசதிக்கு தக்கவாறு ஏழு லட்சம் முதல் கோடி வரை பேரம் பேசப்பட்டது! அப்படி பேரம் பேசி வாங்கியவன் இன்று உயிரோடு இருக்கிறானா என்பதை விசாரிக்க வேண்டியது நம் வேலை அல்ல. இதில் கொடுமை என்னவென்றால் காதலனை மலை போல் நம்பிப்போன பெண் அவள் கண் முன்னால் அவள் காதலன் பணத்தை வாங்கிக்கொண்டு பெண்ணை அவள் பெற்றோருடன் அனுப்பியதுதான். 

திரும்பி வந்த நான்கு பெண்களில் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டாள். அதற்குமேல் வீட்டிலும் மரியாதை இருக்காது, உறவுகளிடமும் மரியாதை இருக்காது. இது ஓடும்போது தெரியாது. ஏன், இப்படி ஒரு இயக்கம் திட்டமிட்டு தன்னை மயக்கி கொண்டு செல்வது கூட தெரியாது. எனில் அவள் சிறுவயது முதல் பார்த்த ஒருவன் இப்படி கட்சி பின்னனியோடு இருப்பான் என்று சற்றுமவல் சிந்தித்திருக்க மாட்டாள்.

காரைக்காலில் நடந்தது போல காதலனை நம்பி போகும் பெண்களுக்கு அவன் சார்ந்த கட்சிக்காரன் அடைக்கலம் கொடுக்கிறேன் என்ற பேரில் கூட்டாக சேர்ந்து கற்பழித்து நாசம் செய்கிறார்கள். இதையெல்லாம் திராவிட கம்யுனிஸ முற்போக்கு பெண்ணிய கும்பல்கள் மூடி போட்டு மறைக்கிறார்கள். சமூக நீதி போராட்டம் என்று நற்சான்று கொடுத்து நியாயப்படுத்துகிறார்கள். 

இனியும் புலம்பிக்கொண்டு இருப்பதும், வெறும் பேஸ்புக்கில் லைக் கமென்ட் கொடுத்துக்கொண்டும் இருப்பது மட்டும் போதாது.. உண்மையில் இதை தடுக்க ஏதேனும் செய்யணும் என்று நினைத்தால்.. இங்கே புலம்பாதீர்கள்.. போய், உங்கள் சொந்த பந்தங்கள், அக்கம் பக்கம் உள்ள கொங்கு உறவுகளிடம் இதை பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஐந்து பேருக்கேனும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.. பள்ளியில் சேர்த்த சில நாட்களிலேயே திராவிட விஷத்தை குழந்தைகள் மனதில் ஏற்றுகிறார்கள். அதை முடக்கி சாதியின் மேன்மை-முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இயக்கங்கள் கட்சிகளை கைகாட்டுவதோ, அவர்களை குறை சொல்லிக்கொண்டு இருப்பதோ பலன் தராது.. அவர்கள் பிரச்னை வந்தால்-ஆதரவு தேவை என்றால் பயன்படுத்த.. ஆனால் பிரச்சனையே உருவாகாமல் தடுப்பது நம் கையில் தான் உள்ளது...

நம் குழு சார்பில் கலாசார விழிப்புணர்வு நோட்டிஸ் தயாராக இருக்கிறது (நோட்டிஸ் பிரதி வேண்டுவோர் askgounder@gmail.com க்கு மெயில் அனுப்பவும் அல்லது கமேண்டில் உங்கள் முகவரி அல்லது ஈமெயில் ஐடி தரவும்) .. அதை அச்சிட்டு கோவில், குடும்ப விழாக்களில் விநியோகம் செய்யுங்கள்.. நாம் சம்பாதிப்பது மட்டும்மல்ல, நம் சமூகமும் ஒரு சொத்துதான்.. நம் முன்னோர்கள் கொடுத்த சொத்து.. அதை காத்துக்கொள்வது நம் கையில் தான் உள்ளது..

Friday, 27 December 2013

கிறிஸ்தவமயமாகும் கொங்கு திருமணங்கள்

இன்னைக்கு நம்பூரூல மதம் மாறிப்போன பறையர்கள் மற்றும் இன்ன பிற சாதிக கல்யாணம் பன்றத பார்த்தால் அவீ கல்யாணத்துக்கும் நம்பாளுங்க சிலபேர் பண்ற கல்யாணத்துக்கும் ஒரு வித்தியாசமுமில்ல..
  • அவிய சர்ச் ல கல்யாணம் மூய்க்கறாங்க நம்பாளுங்க கோயல்ல கல்யாணம் கோயல் ல கல்யாணமூய்ச்சா பாவம்புடிச்சு தொலையி..)! இது நம்ப பாட்டன் பூட்டன லாம் பண்ற மாதர கல்யானமில்ல.. நம்ம சாதிசனம் அன்னாகாலத்துல சொந்த காணில தான் இருந்தாங்க.. அல்லேலூயாக்காரன் & வெள்ளக்காரனுங்க பண்ணுன வெவகாரத்தால பஞ்சம் வந்த காலத்துல தான் கவண்டமூடு பல காணி மாறிபோனாங்க.. அப்புடி சொந்த கானில காணியாச்சி கோயகிட்டயே இருந்து நம்பாளுங்க யே கோயல் ல கல்யானமூய்க்கல??
  • அவிய கல்யாணத்த பாதிரி நடத்துவாறு.. இவ்விய கல்யாணத்த ஐயர் நடத்துவாறு.. ஐயுறு கோட நம்ப பதினெட்டு பூர்வகுடில ஒருத்துரு.. ஆனா இப்ப தமிழ் முறைன்னு யாரோ புதுசா கண்டுபுடிச்ச கெரவத்த கொண்டாந்து உட்றுக்கானுங்.. சன்னியாசம் வாங்குநிவிய கல்யாணத்த நடத்தகொடாது.. ஆனா இவிய நடத்தறாங்க.. இதுக்குள்ற என்ன சூது வாதோ யாரு கண்டா..?

  • அவிய கோட் சூட போட்டுக்கிட்டு மேடைல நிக்கறாங்க.. நம்பாளுங்க அதே மாதிரி.. சொல்லவே வேண்டா.. நாளைக்கு பொண்டாட்டி வெள்ளகாரிச்சி மாதர போனா கவண்ட சவுரீமா மொன்னையனாட்ட இருந்துக்குவானா..?? இந்த விசீத்துல நம்பு கவண்டச்சிகளை ரொம்ப பாராட்டோனு.. பொடவ மாத்தாம இருக்காங்க..
  • அவுங்க பப்பெ னு சோத்த தட்டத்துல வாங்கி திம்பாங்க.. அது அவுங்க மத கலாசாரம்.. ஆனா நம்பாலுக அதே மாதிரி தட்டத்த தூக்கிட்டு பிச்சகாரனாட்ட தோசைய போடு.. சட்னிய மோந்து ஊத்து நுகிட்டு வெக்கமில்லாம திங்கறாங்க.. ரோசமுள்ள கவண்ட பந்தியுட்டு சோறு போட்டாத்தான் திம்பான்.. இப்ப நெறய சனம இந்த மாதர பிச்ச எடுத்து திங்கறது புடிக்காம வெத்தலய போட்டுக்கிட்டு நடைய கட்டறாங்க..
  • அவிங்க கலியானதுல (வெளிநாட்டுல) சாராயங்குடிப்பாங்க .. இப்ப நம்ப சின்ன பசவ, சர்க்கார் விக்கற சாராயத்த விடிய விடிய குடுச்சுப்போட்டு காத்தால பொண்ணு மூக்க முடிக்கிற மாதர நாத்தத்தோட தாலி கட்ட வர்றானுங்க..
  • இப்போ கல்யாண மேடைல கேக் வெட்டறாங்க.. அதுல மொட்டு கலந்திருக்கும்.. கவண்டமூடு அசைவோ திங்க குடாது.. அதுலீ கல்யாண பந்தகெடா வெட்ற (பந்த கெடா கறி நம்ப குடி படைக்கு மட்டுந்தா) வரைக்கி அசைவ திங்க கூடாதுனு இன்னிக்கு இருக்கற கவன்டனும் செய்யற மொற..
  • கல்யாண ஊட்ல டேன்ஸ் ஆடுறது கிறிஸ்தவமூடு செய்வாங்க.. நம்பு கலியானத்துல தேவதாசிகளத்தான் பாடி ஆட சொல்லுவோம்.. ஆனா இப்போ நம்ப கலியான பிள்ளையமு பாடவுடராணுக.. 

இதெல்லா கேக்க வேணா தமாசா இருக்கலா.. ஆனா இது பெரிய அசிங்கோ - கேவலமினு புரிஞ்சுக்கொனும்.. நம்பு சீர் செனத்தி, மரபு தான நாம்ப கவன்த்தனா பொலைக்கரதுக்கு அடையாளம்.. இதுவுமில்லீனா நம்புளுக்கும் மத்த சாதிவுளுக்கும் என்ன வித்தியாசமுனு வேண்டா?? கலாச்சாரமோ அடையாளமோ இல்லாத அனாதையா நாம்ப?? நம்புளுக்குனு ஒரு மொற இருக்குது.. அதெல்லாம் பன்னுலீனா நம்பு ஊட்டு பெரிவீங்க சாபம் வந்து சேரும்.. பன்னுனாத்தான் அவுங்க ஆத்மா சந்தோசமா நம்பள ஆசெர்வாதம் பண்ணு.. 


இதுக்கெல்லா காரணம் நம்பு சாதில இருக்கற பணக்கார மவராசனுக அந்த கிளப், இந்த சொசைட்டி னு வெளிநாட்டு அமைப்புல சேரறாங்க.. அங்க கத்துகிட்டு அவனது இங்க கக்குரானுங்க.. பணக்காரன் பண்ற அக்கிரமத்த பேசண னு சொல்லிப்போட்டு உருப்புடியா ஒழுக்கமா இருக்கற நம்பு கவுண்டனுங்க அதே குப்பகுழில உளுந்தர்றாங்க..

நம்ப பாட்டன் முப்பாட்டன் லா எப்பிடி கல்யாணமூச்சாங்க னு தெரிய வேணுமின்னா நம்ப மங்கள வாழ்த்து பாட்ட படிச்சு பாருங்க.. வெவரமா குடுத்துருப்பாங்க..

கொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்

ஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்துவிடாது. கொங்கு சாதிக்கென இருக்கும் ஒழுக்கம், கடமைகள், மரபுகள் மாறாமல் வாழும்போது தான் அவன் முழுமையான கவுண்டனாகிறான். அப்படி நாம் செய்ய வேண்டிய கடமைகள், பின்பற்ற வேண்டிய வாழ்வியல் ஒழுக்க நெறிகள், செய்ய வேண்டிய தர்ம காரியங்கள் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்து, அதில் பல விசயங்களுக்கு ஆதாரமாக பல செப்பேடு பட்டயங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார்கள். 

அப்படியானவற்றில் முக்கியமான ஆதாரங்களுடன் உள்ள இன்று நாம் தவற விடும் சில கடமைகள் காண்போம். 

௧. திருமண சீர் சடங்குகள் இன்னவிதம் நடக்க வேண்டும் என்பதும், அதில் கொங்குபிராமணர் முதல் மெங்கு மாதாரி வரை அனைவருக்குமான சீர் சடங்குகலும் கொடுக்க வேண்டிய பொருட்களும் உண்டு. அறிய நினைப்போர் மங்கள வாழ்த்து பாடலை படிக்கவும். (ஆதாரம்: மதுக்கரை பட்டயம்). நம் முன்னோர்கள் சீர் முறைகள் செய்யாமல் திருமணம் செய்ய மாட்டார்கள். இப்போது உள்ளது போல பாஸ்ட் புட் கல்யாணங்கள் மிகவும் தவறானவை. கோவிலில் திருமணம் செய்வதும் பெரும் பாவமாகும். சந்தர்ப்ப சூழலால் கூட அருமைகாரர் விடுத்து திருமணம் செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவங்கள் கொங்கு தேசம் முழுக்கவே நடந்துள்ளது. எனவே நம் பாரம்பரிய முறைகளை விடுத்து தமிழ் முறை கல்யாணம் என்பதோ ஐயரை மட்டுமே வைத்து கோவிலில் திருமணம் செய்வதோ மிகவும் தவறாகும். சீர்கள் செய்து விசேசம் நடப்பதை தான் முன்னோர் சீரும் சிறப்புமாக வாழ்வது என்றனர். அதை விடுப்பதே 'சீரழிவு'. சீர்கள் செய்து திருமணம் செய்யும்போது நம் முன்னோர்களின் ஆத்மார்த்த ஆசிர்வாதம் கிடைக்கிறது. குலதெய்வ ஆசியும் , பல ஆயிரம் வருட பாரம்பரியத்தின் பிடிப்பும் ஏற்படுகிறது.

௨. கொங்கு புலவர்களை ஆதரித்து காத்து, அவர்களுக்கு திருமணத்தில் பால் பழம் கொடுத்து கம்பர் வாழ்த்து பாடக்கேட்டு, திருமண வரி கொடுக்க வேண்டியதும் கொங்கு வெள்ளாளர் கடமையாகும். இந்த வழக்கம் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் தமிழ் பற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். மன்னர்கள் பிரபுக்கள் மட்டுமே தமிழ் வளர்த்த காலத்தில் நம் கொங்க தேசத்தில் ஏழை குடியானவனும் கூட அதுவும் கொடை என்று இல்லாமல் வரி என்று கொடுத்து புலவர்களை காத்து வருகிறோம். அதனால்தான் தமிழ் பேசிய பிற தேசங்களை விட கொங்க தேசத்தில் ஏராளமான இலக்கியங்கள் எழுதப்பட்டன. புலவர்களே நமக்கு எழுத்தாணிபால் கொடுத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர். காலம் காலமாக திண்ணைப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தனர். புலவர்க்கு கொடுக்க பொருளில்லை என்று சாத்தந்தை கூட்ட வள்ளல் சடையப்ப கவுண்டர் பாம்பு புற்றினுள் கையை விட்ட சம்பவம் நடந்ததும் நம் கொங்கதேசம்தான்.


௩. குலகுருக்கள் - தங்கள் கூட்டம்-காணிக்கான குலகுருவை போற்றி வணங்கி தலைக்கட்டு வரி, மாங்கல்ய வரி, சஞ்சார வரி கொடுத்து, மடத்தில் நடக்கும் ஆத்மார்த்த பூசைகளில் கலந்துகொண்டு கல்யாணத்திற்கு முதல் பத்திரிகை தந்து, கைகோர்வை சீரின் போது வாழ்த்து பெற்றுக் கொள்வது என சொல்லப்பட்டுள்ளது.ஏன், குழந்தையில்லா தம்பதிகள் சொத்துக்கள் கூட மடத்திற்கு போக எழுதிவைத்துள்ளனர். கொங்க தேசத்தின் வளர்ச்சியில் கொங்க குலகுருக்களின் பங்கு மிகப்பெரியது. வேதங்கள் சாஸ்திரங்கள் முதலியவற்றில் இருந்த விஞ்ஞான தத்துவங்களை பட்டகாரருக்கு உபதேசித்து நீர்நிலை, கோவில், நாடு நகர எல்லை வகுத்தல் போன்றவற்றில் நல்ல பங்களிப்பு செய்துள்ளார்கள். எதிரிகளை வெல்லும் போதும், பல தீர்ப்புக்கள் சொல்லவும் மந்திர தீக்சையால் காரிய சித்தி பெற சிஷ்யர்களுக்கு உதவியுள்ளனர். அதற்கும் ஆதாரங்கள் இன்றளவும் உள்ளது. பிற கடமைகளை கூட நாம் மறந்துதான போனோம். ஆனால் குலகுரு விசயத்தில் திராவிட கம்யுனிஸவாதிகளின் பேச்சை கேட்டு நாம் மறுத்ததோடு பல குருக்களின் சொத்துக்களை பிடுங்கி, துன்புறுத்திய கதையும் நடந்துள்ளது. அப்படியான பாவங்களின் சிக்கியோர் வம்சங்கள்/கிராமங்கள்  அழிந்து,  போயுள்ளதும் வரலாறு. 

அவற்றை தப்பாமல் பின்பற்றுபவர்களுக்கு பல ஆசிகளையும், புண்ணியங்களையும் அருளியதொடு, அதை மறந்து, மறுத்து செயல்படுபவர்களுக்கு குலதெய்வங்கள் சாட்சியாக சாபத்தையும் விட்டு சென்றுள்ளனர். அந்த சாபத்தினை கீழே உள்ள வரியில் காண்போம்..

""...குருநிந்தனை சொன்னவர் கெங்கை கரையிலே காறாம்பசுவையும் பிராமணாள்களையும் மாதாபிதாவையும் கொண்ற தோஷத்திலே போவாறாகவும். யிந்தப்படிக்கி யெங்கள் வமுசத்தாறனைவரும் சம்மதிச்சு பூந்துறை புஷ்பவனீசுவரர் சுவாமி பாகம் பிரியாள் சன்னிதானத்திலே சகிறண்ணியோதக தானமாயி எழுதிக்கொடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம்.."" 


Thursday, 26 December 2013

மாமா – கூட்டி கொடுப்பவனை குறிக்கும் சொல்லா..?

மாமா – கூட்டி கொடுப்பவனை குறிக்கும் சொல்லா..?


விபசாரத்துக்கு கூட்டி கொடுப்பவர்களை (Pimp) குறிக்க ‘மாமா’ என்ற சொல்லை பயன்படுத்த துவங்கிய புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. மாமா-மாப்ளை, மாமன்-மைத்துனன் உறவு எவ்வளவு இனிமையானதும், முக்கியமானதும் என அனுபவித்தவர்களுக்கு நன்கு தெரியும். இதை உணர்ந்துதான் நம் திருமண சீர்கள் முதற்கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் மாமன் மைத்துனன்மார்களுக்கு சீர் அடங்குகள் வகுத்து வைத்தனர். சங்க இலக்கியங்கள் புராணங்கள் முதல் நாட்டுப்புற கதைப்பாடல்கள் தாலாட்டுக்கள் ஒப்பாரிகள் வரை மாமன் உறவை கொண்டாடாதவை இல்லை. உறவுகள் என்பது ஒரு சமூக சொத்து; சொத்தை பாதுகாப்பது அவரவர் விருப்பம். வெளிநாட்டுக்காரர்களுக்கு இந்த பாக்கியம் கிடையாது.

தமிழில் கூட்டிக்கொடுப்பவர்களை குறிக்கும் பிரத்யேக சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதே தமிழ் பேசிய பகுதிகளில் விபசாரம் என்பதே பெரும்பான்மை மக்களுக்கு தேவைப்படாத ஒன்றாக இருந்ததன் காரணம்தான். ஏன் தேவைப்படவில்லை எனில் பருவ வயது தெரிந்து முன்னோர்கள் சீக்கிரம் திருமணம் செய்து வைத்தமை, அறம் சார்ந்த கல்வி, சாத்வீக உணவு, உணர்ச்சிகளை தூண்டா சமூக நெறிமுறைகள்-நடைமுறைகள் போன்றவை காரணங்கள்.

மாமா என்ற உறவை கொச்சைப்படுத்த வேண்டும்; குடும்ப-சமூக அமைப்புகளை இழிவாக்க வேண்டும்; சமூகம்-குடும்ப சார்ந்த அமைப்பை தகர்த்து தனிமனித கலாசாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் உதவியோடு இதுபோன்று உறவுச்சொற்களை கொச்சைப்படுத்துவதை தொடர்ந்து செய்கிறார்கள். பட்டை போடுதல் (சாராயம் குடித்தல்), நாமம் போடுதல் (ஏமாற்றுதல்), கோவிந்தா-அரோகரா (ஏமாற்றப்படுதல) அதோடு திருநீறு பட்டை, நாமம் போட்டவர்களை முட்டாள்களாக காட்டுவதும், தாய்மாமன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களை நகைச்சுவை நடிகர்களை கொண்டும் சித்தரித்து வெகு காலமாக நம் மூளையில் நமக்கு தெரியாமல் பல மாய பிம்பங்களை தோற்றுவித்து வருகிறார்கள். இவற்றை செய்பவர்கள் யார் அவர்கள் பின்னணி என்ன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்..!ஒரு தாய்மாமனாகவும், எனது தாய் மாமாக்கள் மூலமும், எனது மச்சான் அவர்கள் மூலமும் எனக்கு இந்த உறவுகளின் அருமை பெருமை, அவசியம், ஆனந்தம் என்ன என்று அனுபவத்தில் புரிந்தது..!

மேற்கு கலாசார மகிமை- முற்போக்கு முகமூடிகளின் நோக்கம்

இந்த படத்தில் உள்ள வரிகளை படிக்கவும்.. தன் பேரை சொல்லி, ஒரு மனிதர், தான் இன்ன தேதியில் இடத்தில் பிறந்தேன்.. என் பெற்றோரை தெரியாது.. தெரிந்தவர்கள் என் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் என்று எழுதியுள்ளார். 

இதுதான், மேற்குலக கலாசாரம் - தனிமனிதத்துவம் ஏற்படுத்திய மாற்றம்.. இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தத்தான் நம் குடும்ப - கிராம அமைப்புக்களை உடைத்து 'மாற்றம்' ஏற்ப்படுத்த மாற்றத்திற்கான எழுத்தாளர்கள், 'முற்போக்கு சிந்தனையாளர்கள்' (அனைவரும் பெரும்பாலும் கம்யுனிஸ்ட்/கிறிஸ்தவ கைக்கூலிகள்) என்பவர்கள் அலைகிறார்கள்..??

நம் வாரிசுகள் இதுபோல ரோட்டில் நிற்க வேண்டுமா..? அப்படியானால் கண்ட சாதியில் காதல் (விபசாரம்) செய்யுங்கள்.. கள்ள கல்யாணம் செய்யுங்கள்.. தனி மனிதத்துவ சிந்தனையை மையமாக கொண்ட வாழ்க்கையை வாழுங்கள்.. குடும்ப பாசம் இருந்தாலும் இந்த தனி மனிதத்துவ மனோநிலை உங்கள் குடும்பத்தை உடைக்கும்.. இந்த மனோ நிலையை உடைக்கத்தான் நீயா நானா போன்ற சமூக விரோத நிகழ்ச்சிகளில் "பெர்சனல் ஸ்பேஸ்" என்ற பதத்தின் மூலம் மறைமுகமாக சிந்தனைக்குள் நீங்கள் குடும்பத்தின் அங்கமோ-சமூகத்தின் அங்கமோ இல்லை, நீங்கள் ஜஸ்ட் ஒரு தனிமனிதர் என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள்..

இந்த மாற்றம் அமெரிக்காவில் என்ன நிலையை ஏற்ப்படுத்தியது என திரு.குருமூர்த்தி அவர்கள் விளக்கும் வீடியோ (5 நிமிடம் தான்)

http://www.youtube.com/watch?v=IsV9tgXRbCI


Monday, 23 December 2013

நாட்டு கவுண்டர் விளக்கம்

பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள தெரியாதவர்கள். 

சாதி என்பது பழங்குடியின் மேம்பட்ட-பண்பட்ட-முறைப்பட்ட வடிவம். இங்கு பல சாதிகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் வேலைகளை பிரித்துக்கொண்டு, விதிமுறைகள், நெறிமுறைகள் ஏற்ப்படுத்தி, பிணக்கின்றி வாழும் முறை. இதை ஒரு வரியில் சொல்லிவிட்டாலும், ஒரு சமூகத்தை கட்டமைப்பது மிகப்பெரிய பணி. வாழ்வாதாரம், நாட்டுப்பசுக்கள், வனங்கள், பெண்கள்,  நீராதாரம், வரிவசூல், சாதி உரிமைகள், கோயில்கள், கல்விசாலைகள், போக்குவரத்து, பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக சட்டங்கள், நிர்வாக முறை என கணக்கில் அடங்கா பணிகள் இதில் உள்ளன. நம் நாட்டை பொறுத்தவரை சாதி என்பது ஒரு சமூக சொத்து. 

இப்படியான சமூகத்தில் தொழில் கலாசார அடிப்படையில் சாதிகள் பிரிந்தன. அது மேலும், வட்டாரம் பொறுத்து மேலும் தனித்துவம் பெற துவங்கின. (உதாரணம்: கொங்கு சாதி -படத்தை காண்க)
இப்படியான சமூகத்தில் நிர்வாக பணிகளை பிரிக்க கொங்கதேச நிர்வாக அமைப்பின்படி (படத்தை காண்க) பிரிக்கப்பட்டதே பட்டக்காரர் என்னும் அமைப்பு. 

பட்டக்காரர் என்பது அரசு நிர்வாகப் பொறுப்பு.  அரசன் பார்த்து நியமிப்பது. அரசனின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது, வரிவசூல், தானிய-விதைநெல் இருப்பு, நீராதாரம், ஆண்-பெண் விகிதாச்சாரம் எல்லை பாதுகாவல் போன்றவை கடமைகள். ஒரு நாட்டின் பட்டக்காரர் என்றால் அவர் அந்நாட்டின் எல்லா மக்களுக்குமே தலைவர்; அரச பிரதிநிதி போல. விசுவாசம், ஒழுக்கம், தர்மம் தவறும் பட்சத்திலோ, அரசன் பார்த்து மாற்றும் வரையிலோ வம்ச பரம்பரையாக பதவி சென்று கொண்டிருக்கும். இந்த பதவி தனி ஜாதியல்ல. கொங்க தேசத்திற்கு மொத்தம் 24 நாடுகள் ஒவ்வொரு நாட்டுக்கும் பட்டக்காரர் உண்டு, நாடுகளுக்குள் உப நாடுகளும் சமஸ்தானங்களும் இருப்பதால் ஒரே நாட்டிற்கு ஒன்றிற்கு மேற்ப்பட்ட பட்டக்காரர் வகையறா ஏற்படும். இங்கு பட்டக்காரர் என்பவர் பதவிக்குரிய ஒருவர் மட்டுமே

கீழ்க்கரை பூந்துறை/ராசிபுர நாட்டு பட்டகாரர் வம்சங்கள் அனைவருமே அக்கரையில் இருந்து திருசெங்கோட்டு பகுதிக்கு பஞ்சம் பிழைக்க வந்து அரசர்களின் ஆதரவால் பட்டக்காரர் பதவி பெற்ற, கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த குடியானவர்கள் ஆவர். 

பட்டக்காரர் என்பது அரசு நிர்வாகப் பதவி என்பது போல, நாட்டார்-நாட்டுக் கவுண்டர் என்பது சமூக நிர்வாகப் பதவியாகும். அக்காலத்தில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி ஜாதி நிர்வாக அமைப்புகளும் அதற்கு தலைவர்கள் உண்டு.வெள்ளாள ஜாதி நிர்வாக சபையை சித்ரமேழி சபை என்பார்கள். சித்ரமேழி என்பது வெள்ளாளர் ஜாதிக்கொடி. பொன்மேழி என்றும் சொல்வார்கள். தங்க கலப்பை பொறிக்கப்பட்ட கொடி. இந்த சித்ரமேழி சபை ஒவ்வொரு ஊரிலும் உண்டு. காணியளவிலும் உண்டு. நாட்டு அளவிலும் உண்டு (பூந்துறைநாட்டு சபை பற்றிய வெள்ளோடு கல்வெட்டு). கொங்கதேசம் முழுமைக்கும் ஒரு பெரிய நாட்டு சபையும் உண்டு. இந்த நாட்டு சபையில் ஒவ்வொரு நாட்டின் கவுண்டர்கள் சார்பில் பிரதிநிதியாக செல்பவர் நாட்டார் எனப்படுவார். நாட்டார்கள் கூடும் சபைக்கு நாட்டார் சபை என்று பேர். இந்த நாட்டார் பதவி என்பது ஜாதி பிரதிநிதியாக மக்களால் தேர்ந்தெடுக்கபடுபவர்களாவர் (இதுபற்றி சர்க்கார் கேஜட்டிலும் குறிப்புண்டு).

மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டாராக நாட்டு சபையில் பங்கேற்பார். ஒரு கட்டத்தில் மக்கள் செல்வாக்கு என்பது அரச பதவி வகித்தவர்களிடம் மிகுந்திருப்பது எதார்த்தம் என்பதால் பட்டக்காரர்களே நாட்டாராகவும் இருந்தனர். இதை வைத்துக் கொண்டு பட்டக்காரர் மட்டுமே நாட்டார் என்பது தவறு. கன்னிவாடி பட்டயத்தில் நாட்டார் வேறு பட்டக்காரர் வேறு என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. பல பட்டயங்களில் பட்டக்காரர் அல்லாதவர்கள்தான் பெரும்பான்மையாக நாட்டார் சபையில் பங்கெடுத்துள்ளனர். கொங்கதேசம் போல தொண்டை மற்றும் சோழ மண்டலங்களிலும் அங்குள்ள வெள்ளாளர்கள் சித்ரமேழி சபை நடத்தியுள்ளனர்.  எனவே சித்ரமேழி சபை என்பது வெள்ளாள ஜாதியின் சபை.

கொங்கில் பேரரசுகள் நிலையற்று இருந்த காலகட்டத்தில் தேசத்தின் பிரச்சனைகளையும் மக்களையும் இந்த சித்ரமேழி சபையைச் சேர்ந்த வெள்ளாள கவுண்டர்களே கவனித்து வந்தனர். அதனால் பேரரசுகள் மாறினும் இந்த சித்ரமேழி சபையின் பலம் மாறவில்லை.

ஜாதி நிர்வாகப் பதவியான நாட்டார் என்றாலும் சரி, அரச நிர்வாகப் பதவியான பட்டக்காரர் என்றாலும் சரி, அது ஒருவரை மட்டுமே குறிக்கும். அவரின் உறவின்முறை வட்டத்தை சேர்ந்தோர் நாட்டார் ஒரம்பறை (உறவின்முறை)/வகையறா/வம்சாவழி எனப்பட்டனர். நாட்டார் உறவினர் பங்காளிகள் எல்லாரும் நாட்டார் என்று அழைக்கக்கூடாது. இது வரலாற்று பிழையாகும்.

நாட்டாரே ஒரு நாட்டின் பெண்களுக்கும், நாட்டுப்பசுக்களுக்கும் பொறுப்பு. அவர் அனுமதியின்றி பசுக்களோ பெண்களோ நாட்டை தாண்டி போகக்கூடாது. அதன்பொருட்டே கல்யாணத்தில் நாட்டுக்கல் சீர் பின்பற்றப்படுகிறது. தாலி என்பதும் கூட நாட்டார் எழுதி தரும் கல்யாண சான்றே. இன்றும் பல ஊர்களில் நாட்டுக்கல் நடப்பட்டுள்ளது. குடும்ப வழக்கு, சொத்து தகராறு, கோயில் உரிமைகள், சாதி பிணக்குகள் என்று ஒரு நாட்டின் பேரும் பொறுப்பை நாட்டார் கவனித்தார். குலகுருவின் வழிகாட்டுதல், பயிற்சி போன்றவற்றால் இத்தனை காரியங்களும் செய்தனர்.


நாட்டுக்கல் 
இந்த நிர்வாக முறைதான் கொங்கதேசம் முழுக்க இருந்தது. ஆனால் கீழ்க்கரை பூந்துறையின் உப நாடுகளான மோரூர், மொளசி, மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி, ஏழூர்; மற்றும் ராசிபுரம் நாட்டின் நாட்டார் பிறந்த கோத்திரங்கள்-[மோரூர் கன்ன கோத்திரம்; மொளசி கன்ன கோத்திரம்; மல்லை விழியன் கோத்திரம்; பருத்திப்பள்ளி செல்லன் கோத்திரம்; ஏழூர் பண்ணை கோத்திரம் மற்றும் ராசிபுரம் விழியன் கோத்திரம் (திண்டமங்கலம், வீரபாண்டி மற்றும் மாவுரெட்டி காணிகள் தான் அவற்றை நாடுகள் என்று சொல்லலாகாது)] மட்டும் தற்கால சூழலில் நாட்டுக்கவுண்டர் என்று சர்க்காரால் தனிப்பிரிவாக வகைப்படுத்தப்பட்டனர். இங்கே நாட்டாரின் உறவின்முறையார் அனைவரையுமே நாட்டுக் கவுண்டர் என்று வகைபடுத்தியது சரித்திர பிழையே. அது இன்று நாட்டு கவுண்டர் - வெள்ளாள கவுண்டர் என்று சாதிக்குள்ளேயே பிரிவினையை உருவாக்கி விட்டது. 

இந்த நாட்டார் அமைப்பு இன்றளவும் கொங்கின் பிற பகுதிகளிலும் காணலாம் [படம் காண்க: ஈரோடு சென்னிமலை கோயில் கல்வெட்டு; பூந்துறை வெள்ளோடு எழுமாத்தூர் நசியனூர் ஆகிய நான்கு நாட்டு (அதாவது, நாடுகளின்) கவுண்டர்களால்  கும்பாபிசேகம் செய்யப்படுகிறது]. ஆனால் அவர்கள் நாட்டு கவுண்டர் என்று வகைப்படுத்தாமல் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்றே இன்றளவும் சர்க்காரால் வகைப்படுத்தப்பட்டனர். இன்று நாட்டு கவுண்டர் என்று சர்க்காரால் சொல்லப்படுவோர், ஒரு காலத்திற்கு பின் ஆற்றிற்கு மேற்கே பெண் கொள்வினை கொடுப்பினை நின்றது எனவே இந்த தனித்துவம் நிலைத்தது. 

கல்யாண முறையைப் பொறுத்தவரை எல்லா கவுண்டர்களும் அவரவர் உறவின்முறை வட்டத்துக்குள் பெண் எடுத்து கட்டினர். உறவின்முறை வட்டம் என்பது நாட்டாராகவும்-காணியாளராகவும்-குடியானவராகவும் இருக்கலாம். நாட்டார் காணியாளர் கல்யாணங்களும் பல இடங்களில் அக்காலம் தொட்டே நடந்துள்ளது. பதிவைக் கொண்டு கல்யாண உறவுகளைப் பிரிப்பது இல்லை. உறவின்முறை வட்டமே கணக்கு. இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் வகையறாவில் உள்ள சித்தாளந்தூர் கன்னர், ஆனங்கூர் கன்னர், தகடப்பாடி-மண்டபத்தூர் கன்னர் எல்லாம் மோரூர் நாட்டின் முதல் பட்டக்காரரான சூர்ய காங்கேயனின் உடன் பிறந்த சகோதரர் வம்சாவழியினர். 

கால்வாய் வெட்டிய காளிங்கராயர் அப்புச்சி/மனைவி அனுமன்பள்ளி பண்ணை கூட்டத்தை சேர்ந்தவர். அனுமன்பள்ளி பண்ணையில் இருந்து பிரிந்ததே கீழ்க்கரை நாட்டு ஏழூர் பண்ணை கூட்டமாகும். மோரூர் கன்னகூட்டத்தைச் சேர்ந்த கிழாம்பாடி கன்னர்கள் இன்று சர்டிபிகேட் நாட்டு கவுண்டர் வகையில் இல்லை. அதுபோல மொளசி கன்ன கூட்டத்தை சேர்ந்த காஞ்சிக்கோயில் கன்னனும் இல்லை. மோரூர், மொளசி நாட்டார் உட்பட இங்கு உள்ள அனைத்து காணியாள கன்ன கூட்டத்தாருக்கும் ஆதி பூர்வீகமான தலைய நாடு கன்னிவாடி பட்டக்காரரும் இன்று சர்க்காரால் நாட்டுக்கவுண்டர் என்று கூறப்படவில்லை. ராசிபுரம்/மல்லை/திண்டமங்கலம் விழியன், ஏழூர்/கல்யாணி பண்ணை, பருத்திப்பள்ளி செல்லன், வீரபாண்டி மணியன் போன்ற கீழ்க்கரை பூந்துறை-ராசிபுர நாட்டார் வகையறாவில் ஆதி காணிகள் அனைத்தும் காணியாள/குடியான கவுண்டர் வகையராதான்.

இன்றைய சர்டிபிகேட் நாட்டு கவுண்டர்களும் அவர்களின் பூர்வீகமும்:

மோரூர்/மொளசி/வெண்ணந்தூர்/மாவுரெட்டி கன்னன் - பூர்வீகம்: தலைய நாடு கன்னிவாடி 
(மணலூர் செல்லாண்டியம்மன்-சிவசெல்வியம்மன் கோயில்)

ராசிபுரம்/மல்லை/திண்டமங்கலம் விழியன் - பூர்வீகம்: காங்கயம் நாடு பரஞ்சேர்வழி காணி (கரியகாளியம்மன் கோயில்)

ஏழூர்/கல்யாணி பண்ணை - பூர்வீகம் மேல்கரை பூந்துறை நாடு-அனுமன்பள்ளி காணி 
(சின்னம்மன்-பெரியம்மன் கோயில்)

பருத்திப்பள்ளி செல்லன் - பூர்வீகம் மேல்கரை பூந்துறை நாடு-அனுமன்பள்ளி காணி 
(சின்னம்மன்-பெரியம்மன் கோயில்) இலுப்புலியே முதல் காணி என்று சொல்வாரும் உண்டு. செல்லன்கூட்டத்தாரின் ஏழு கரைகளில் பருத்திப்பள்ளி தவிர மற்ற ஆறு செல்லனும் இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் (காணியாள கவுண்டர்) வகையறாவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள்.

வீரபாண்டி மணியன் - பூர்வீகம் காங்கயம் நாடு முத்தூர் காணி 
(அத்தனூர் அம்மன்;செல்லக்குமார சாமி; குப்பண்ண சாமி)

மேலே உள்ள அனைவருமே பூர்வீகத்தில் எந்த பதவியும் வகிக்காத குடியானவர்களாவர். மோரூர் சூரிய காங்கேயனும் கூட, காடை குல பட்டயத்தில் ஆதி கன்ன கூட்டத்தை சேர்ந்தவர் என்றே குறிப்பிடப்படுகிறார். கன்னிவாடி பட்டயத்தில் ஆதி நாட்டார் பிரிவு தனியே பிரிந்து சென்றதாக குறிப்புண்டு. அந்த ஆதி நாட்டார் குடும்பம் காங்கேயம் அருகே கண்ணபுரம் சென்று குடியமர்ந்ததாக கன்னிவாடி பட்டயம் சொல்கிறது. பட்டக்காரர் பிரிவு தனியாக செல்கிறது.  மொளசி கன்ன கூட்டம் இளையபெருமாள் கோயில் விழாவில் முதலில் "அண்ணார் கட்டளை" என்று கொளாநல்லி கன்ன கூட்டத்திற்கு (கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்) மரியாதை அளித்து விழாவைத் துவக்கிறார்கள். மொளசி கன்ன கூட்டத்திற்கு கொளாநல்லி கன்ன கூட்டம் அண்ணன் முறையினர். மோரூரில் பங்காளிகளில் இருந்து பிரிவாக மொளசி பிரிந்தது என்பதை சரிபார்க்க வேண்டும்.

வீரபாண்டி மணியர், வெண்ணந்தூர் கன்னன் (சாகாடை) & திண்டமங்கலம் விழியன் காணியாள கவுண்டர்களாவர்; அவர்கள் நாட்டார் பதவி வகிக்காதவர்கள். சேலம் கேஜட்டிலும் நாட்டு கவுண்டர் பிரிவில் திண்டமங்கலம், வீரபாண்டி மணியன் கூட்டம் சேர்க்கப்படவில்லை. வம்சாவழி வரலாறுகள் ஏராளமானவை திண்டமங்கலம் விழியன் கூட்டம் என்றே சொல்கையில், திண்டமங்கலம் விழியன் ஆந்தை கூட்டம்தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. திண்டமங்கலம் ஆந்தை கூட்டத்தார்தான் மோரூரில் இருந்து மோரூர் கன்ன கூட்டத்தால் விரட்டப்பட்டோர் என்ற கூற்றுக்கு ஆதாரம் எதுவுமில்லை. அப்படியே ஆயினும், அவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழவந்தி நாட்டில் காணியுரிமையோடு மட்டுமே வாழும் காணியாளர்களாவர். வீரபாண்டி மணியன் கூட்டம் முத்தூர் மணியன் கூட்டத்தில் இருந்து பிரிந்தவர்கள். முத்தூர் மணியன் இன்றளவும் காணியாளர்கள். வீரபாண்டி மணியன் கூட்டத்துக்கும் திண்டமங்கலம் விழியன் கூட்டத்துக்கும் நாடோ/நாட்டுரிமையோ கிடையாது.

மேலே உள்ள குடிகள் எல்லாரும் தங்களுக்குள் மட்டுமே மண உறவு வைத்துக்கொள்ளும் உறவின்முறை வட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த மரபு காக்கப்பட வேண்டியது, ஆனால் இதற்கு நவீன ஆய்வாளர்கள் சொல்லும் காரணம் கண்டிக்கத்தக்கது. நவீன கொங்கு ஆய்வாளர்கள் சிலர், நாட்டார் நாட்டாருக்குள் மட்டுமே கல்யாணம் செய்வார்கள் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே பார்த்தது போல நாட்டார் என்பவர் நாட்டுக்கு ஒருவரே. மேலும், இந்த உறவின்முறை வட்டத்திலும் காணியாளர்கள் இருக்கிறார்கள். இங்கு மட்டுமின்றி கொங்கதேசத்தின் பல பட்டக்காரர் குடும்பங்களிலும் காணியாளர்களுடன் இன்றளவும் கல்யாணம் நடக்கிறது. கன்னிவாடியிலும் சரி, மோரூரிலும் சரி ஆந்தை கூட்டத்தோடு கல்யாணம் செய்தே வம்சம் தழைத்துள்ளது. 

மோரூர், மொளசி, மல்லை, பருத்திப்பள்ளி, ஏழூர் ஆகிய 5 நாடுகள் பூந்துறை நாட்டின் உப நாடுகள் தான். அதாவது இந்த நாடுகளின் நாட்டார் சின்ன நாட்டார் ஆவார். இவர்கள் அனைவரும் மேல்கரை கீழ்க்கரை இணைத்த முழு பூந்துறை நாட்டின் பெபூந்துறை காடை கூட்ட நண்ணாவுடையாருக்கு கட்டுப்பட்டவர்கள். நண்ணாவுடையார் குடும்பமும் இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே சாதி என்பதில் அனைவருமே வெள்ளாளர் தான் (மோரூர் திருமலை அத்தப்ப நல்லதம்பி காங்கேயர்-திருசெங்கோட்டு மலை திருப்பணி கல்வெட்டில் தனது பெயரை மோரூர் வெள்ளாள கன்னர்களில் என்று தான் குறிப்பிட்டுள்ளார்[படத்தை காண்க])


அதுப்போல மோரூர் நாட்டின் முதல் பட்டக்காரர் சூர்ய காங்கேயனும் பாண்டியன் அவையில் தன்னை 'தயிர்முட்டி சுமக்கும் வெள்ளாளன்' என்றே குறிக்கிறார்[படத்தை காண்க]). சூர்ய காங்கேயன் பெண் காட்டியதே இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் லிஸ்டில் இருக்கும் ஆந்தை கூட்டத்தில் தான். ஆனால் அவர்களே அன்று மோரூர் நாட்டின் பட்டக்காரர்களாவர்.


இன்று சர்டிபிகேட் நாட்டு கவுண்டர் பிரிவை சேர்ந்தோர் முன்னோரான சூரிய காங்கேயன் தனது தம்பியாகிய ஆதி கன்ன கூட்டத்தை (இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவில் இருக்கும் தலைய நாட்டு பட்டக்காரர்) சேர்ந்த முத்துசாமி கவுண்டருக்கு நல்லராண்டி பண்டாரம் பல சகாயங்கள் செய்யவே, அந்த நன்றிக்காக ஆண்டிக்கு பல பரிசுகள் கொடுத்து தனது பட்டமான காங்கயன் என்ற பட்டத்தையும் கொடுப்பதாக செப்பேடு போட்டு கொடுக்கிறார். அந்த பட்டயத்தில், தனது பங்காளிகள் 60 காங்கேயர் என (இன்று வெள்ளாள கவுண்டர் பட்டியலில் உள்ள திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த) கன்ன கூட்டத்தை சேர்ந்தவர்களை குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் சேர்ந்தே அந்த தர்மத்தை நடப்புவிக்கிறார்கள். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் திருமாலை கட்டளை, பணிமலைக் காவலர் வைகாசி பூசை போன்றவற்றை மோரூர் மொளசி கன்ன கூட்டத்தார் உட்பட கொங்கதேச கன்னகூட்டத்தார் அனைவரும் சேர்ந்து நடப்புவிக்கிறார்கள். படி மண்டபத்தில் மொரூருக்கு உரிய இரண்டு மண்டபங்களில் ஒன்று அனைத்து கன்னகூட்டத்தாருக்கும் உரித்தானது. ஆனால் பஞ்ச காலகட்டத்தில் பிற கன்ன கூட்டம் வராததால் அதை மோரூர் கன்ன கூட்டத்தார் மட்டும் நடப்புவித்தனர். கால ஓட்டத்தில் நாட்டார் என்னும் பதவியை குடும்ப உறவுகளுக்குள் உள்ள அனைவரையும் குறிக்கும்படி புகுத்தியதால் நாட்டார்-வெள்ளாளர் என்று வேறுபாடு திருசெங்கோடு பகுதியில் மட்டும் தோன்றியது. அதைத் தொடர்ந்து நாட்டு கவுண்டர் என்ற பதவியின் பேரால் தனி சாதி போன்று வரலாற்றுப் பிழை தோன்றிவிட்டது. இன்று பல இடங்களில் இந்த வேற்றுமை பகையாக வளர்ந்து நிற்கிறது.

உழவுதான் குலத்தொழில். நிர்வாக முறையில்தான் வேறுபாடு தோன்றுகிறது. பட்டக்காரர் என்று மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிய பின், அவரின் தம்பிகளுக்கு பூமியை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதை தீரன் சின்னமலை வரலாற்றிலும் கூட காண முடியும், தீரனின் தந்தை பட்டக்காரரின் தம்பியாதலால் அவருக்கு ராஜ்யத்தில் பதவி உரிமை இன்றி வெளியே செல்ல வேண்டியதாயிற்று. அதுபோலவே இன்றும் நாட்டு கவுண்டர் லிஸ்டில் உள்ள அனைவருமே அவர்கள் நாட்டின் தலைநகர்களான மோரூர், மொளசி, ராசிபுரம் என்று இருக்கவில்லை. சுற்றியுள்ள காணிகளில் குடியேறி வாழ்கிறார்கள். அந்த காணியில் உள்ள காணியாச்சி அம்மன் கோயில்களை தங்கள்  வழிபடும் அம்மன்களாக இன்றளவும் வழிபடுகிறார்கள். உதாரணமாக உஞ்சனை காளியம்மன், பட்லூர் செல்லாண்டியம்மன் போன்று. 

வெள்ளைக்காரன் வரும்முன்னர் வரை ஒழுக்கமாக இருந்த நாடும், நாட்டார் மரபும், பட்டக்காரர் மரபும் அவர்கள் வருகையின் பின் ஏற்படுத்திய நிர்வாக மாற்றத்தால் குழப்பம் ஏற்ப்பட்டது. வெள்ளையருக்கு ஒத்துவராத-எதிர்த்த பட்டக்காரர் பலரும் கொல்லப்பட்டனர்-விரட்டியடிக்கப்பட்டனர். நாட்டார் சபையும் அதன் தனித்தன்மையை இழந்தது, நாட்டார்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு இணக்கமாக இருந்தொருக்கு ஜமீன் உரிமை வழங்கப்பட்டது. நாட்டு கவுண்டர் என்று சர்டிபிகேட் பெற்று இன்றும் சொல்லிக் கொள்வோருக்கு அவர்கள் பட்டக்காரர் யார் என்று தெரியவில்லை. ஆனால், கொங்கின் பிற பகுதிகளில் பெரும்பாலான நாடுகளில் பட்டக்காரர்கள் யார் என்று அறிந்து பின்பற்றி வருகிறார்கள். தென்கரை நாட்டு பட்டக்காரருக்கு இன்றளவும் பட்டாபிஷேகம் முதற்கொண்டு அனைத்து அதிகாரம் உரிமை இருந்து வருகிறது.[http://konguvenadar.org].

அன்றைய நாளில் கொங்கதேச பிரச்சனைகள், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பிரச்சனைகள், சாதி முறைமைகள், உரிமைகள் குறித்த பிரச்சனைகளை 24 நாடுகளின் நாட்டார்கள், பட்டகாரர்கள் மற்றும் மக்கள் செல்வாக்குள்ள கவுண்டர்கள் சேர்ந்தே தீர்த்துள்ளனர். அதற்கு பல செப்பேடு பட்டயங்கள் ஆதாரமும் சொல்கிறது. 24  நாடுகளிலிருந்து வந்த கவுண்டர்கள் என்ற அர்த்தத்தில்தான் கொங்கு 24 நாட்டார் என்று கூறுகின்றனர்; இது நாட்டுரிமை பெற்ற பட்டக்காரர்களை மட்டுமே குறிக்கும் என்று எண்ணுவது தவறானது. காரணம், முக்கிய முடிவுகளின் கையொப்பத்தில் பாரம்பரிய பட்டக்காரர்கள் மட்டுமின்றி அந்தந்த காலகட்டத்தே மக்கள் செல்வாக்கு பெற்ற காணியாள கவுண்டர்களும் இடம்பெற்றனர். இவர்களே பின்னாளில் வாய்ப்பமையும்போது பட்டக்காரர் பதவியும் பெறுகிறார்கள்.

உதாரணம்: கொங்கு புலவர் பட்டயம். இங்கே பட்டக்காரர்கள் மட்டுமல்லாது,  அவர்கள் பங்காளிகள் மற்றும் நாட்டுரிமை இல்லாத பிற கூட்டத்து கவுண்டர்களும் (பொங்கலூர் நாட்டில் செகங்கூட்டம், பூந்துறை நாட்டில் புரளந்தை கூட்டம், தென்கரை நாடு ஆந்தை கூட்டம்) கையொப்பமிட்டுள்ளனர்.மதுக்கரை பட்டயம்: ஆக, அனைத்து கொங்கு வெள்ளாளர்-காணியாளர்-பட்டக்காரர் வகையறாவினர் அவரவர் நாடு எது, நாட்டின் உண்மையான பட்டக்காரர் யார் என்பதை அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும். மக்கள் செல்வாக்கு பெற்ற நல்லோர்களை புதிய நாட்டார்களாக தேர்ந்தெடுத்து சித்ரமேழி சபை அமைக்கப்பட வேண்டும். நம் சாதிக்குள் வெள்ளையன் ஏற்படுத்திய குழப்பங்களை தவிர்த்து, உண்மை உணர்ந்து கொங்கதேசம் செழிப்புற பாரம்பரிய வழியில் வாழ வேண்டும்.

Friday, 20 December 2013

மனிதர்கள் சைவ உயிரினமா அசைவ உயிரினமா?

கொங்கு வெள்ளாள கவண்டமூடு மரபுப்படி சுத்த சைவம்னு சொன்னா எல்லாருக்கும் ஆச்சிரிமா இருக்கும். ஆனா அதுதா எதார்த்தம். நாம சைவம் தான்னு சொல்ல என்னென்ன ஆதாரம், எப்புடி அசைவம் திங்க ஆரம்பிச்சோம்? அசைவம் திங்கரதால என்னென்ன பாதிப்புன்னு பாப்பம், வாங்க. 

கொஞ்சம் இலக்கிய ஆதாரம்:

"காக்கை யுண்டிவாழ் வேளாளக் குடியனார் மற்றுயிர் 
வருத்தா வாழவழி செய்தீந்து தமக்குட நிலந்திருத்தி
கடைசால் வாழ்குடை தவறா பதினெண்குடி வாழவழி
ஈந்துடைக் கொண்டே புகழெய்த பெற்றக் கொங்கவர்"
-பழம்பாடல் 

கொங்கத்தில் ஆளும் வேளாளராகிய நாம் மாமிசம் தவிர்த்து காய்கறிகளயும், பழங்களையும் உண்டு, பிற உயிரிகளை வருத்தாது, தம் நிலத்தை சீர்செய்து வேளாண்செய்து பதினெட்டு குடிகளையும் காத்து வந்ததையும், அவர்களுக்கு வாழ வழி உண்டாக்கி கொடுத்ததையும் சொல்கிறது

கொலைகடிந்தும் களவுநீக்கியும்
அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் 
நல்லனெடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர்   
(பட்டினப்பாலை 198-205)

உயிர்க்கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்வதைக் கருதாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியின் மூலம் ஆவுதி கொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாப்பார்கள்; நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களின் (குலகுரு) புகழைப் பரவச் செய்வார்கள் வந்த விருந்தினர்க்குப் பல பண்டங்களைக் கொடுப்பார்கள்; நல்லொழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள்; மேழிச்செல்வமே சிறந்தது என்று அதனை விரும்பிப் பாதுகாக்கும் உழவர்கள். 

இதுபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வேளாளர் சைவ உணவுப் பழக்கமுடையோர் என்று சொல்லும்.

எங்கே அசைவம்?
இப்ப இருக்கற சாதிகள்ல கொங்கு வெள்ளாள கவண்டமூடாட்ட ஜாதி வரலாறு பதிவானது மித்த சாதிகள் ல இல்லீங்க. நம்பகிட்ட இருக்கற அத்தன ஆவணத்திலீமு வெள்ளக்காரன் வரதுக்கு முன்ன கவண்டன் அசைவம் சாப்பட்ட ஆதாரம் இல்லீங்க. அண்ணமார் சாமி வரலாறு நெறைய பேரு எழுதிருக்கறாங்க, பாடிருக்கறாங்க. எதுலீமே அண்ணமார் சாமியோ, அதுல வந்த கவண்டமூடோ அசைவம் திண்ணதா குறிப்பில்ல. நம்ம கல்வெட்டுங்க, செப்பேடு, பட்டயம், கைபீது, ஊர் வரலாறு, ஸ்தல புராணம், குடும்ப வரலாறுகள், சாசனம்னு எந்த எடத்திலியும் கறி திங்கறத சொல்லுலீங்க.

நம்ம கவண்ட சாதில பொறந்து தெய்வமான அண்ணன்மார்,  வேலாத்தா, வெள்ளையம்மாள், செல்லகுமாரசாமி, வீரமாத்திகள் எந்த சாமிக்கும் அசைவ படையல் கெடையாதுங்க. ரொம்ப அதிசீமா ஒன்னு ரண்டு ஊருல கைவண்ட சாதில பொறந்து தெய்வமானவங்களுக்கு அறியாமைல அசைவ படையல் போடறாங்க. கறி சாராய படையல் கருப்பனார், மினி, அப்பறம் நாம கும்படற வேற ஜாதில பொறந்த சாமிங்க, உதாரணமா குப்பண்ணசாமி, மதுர வீரன், வீரமலை சாம்புவன்.

நம்ம சீர் சடங்கு எல்லாத்திலயும் சைவம் தானுங்க (பந்த கெடா வெட்டறத சிலர் சொல்லுவாங்க, அதுக்கு விளக்கம் பின்னால வரும்). மங்கள வாழ்த்துல கூட அசைவ உணவு பத்தி இல்லீங்க.

1860-1930 கள் வரைக்கும் நம்ப தேசத்துல கடுமையா பஞ்சம் வந்துச்சுங்க. ஏராளமான பேரு சோறில்லாத செத்துப் போனாங்க. அந்த காலத்துலதான் கொங்கதேசத்துல மட்டுமில்லாம எல்லா வட்டாரத்திளியும் கிறிஸ்தவம் பரவுச்சு. அப்போத்தான் நெறைய கலாச்சார சீரழிவுங்க நடந்துச்சு. அந்த பஞ்ச காலத்துலதான் நம்மாளுக கிட்ட நெறைய கெட்ட பழக்கமெல்லா வந்துச்சு. சாராயம் குடிக்கறது, கறி திங்கறது மாதிரி. அப்ப திராவிடகாரனுங்க வந்து அந்த கெட்ட பழக்கமெல்லாம் உட்டுட்டு திருந்தி ஒழுக்கமா பொழைக்க போகாதமாதிரி  பார்த்துக்கிட்டாங்க. அது இன்னிக்கு வரைக்கும் இருக்குது.

மொதல்ல நோம்பி நொடியப்ப மட்டும் பிரசாதம் னு திண்ணாங்க. அப்பறம் ஊட்டுக்கு வெளிய வச்சு சோறாக்கி கறி காச்சி திண்ணாங்க. அதைக்கூட பேரால் சட்டி னு சொல்லுவாங்க. இன்னிக்கும் பல குடும்பங்கள் ல கறி ஆக்குனா அத வெளிய வச்சுதான் ஆக்குறாங்க. தின்னுட்டு குளிசிட்டுத்தான் ஊட்டுக்குள்ளார வரோணும். கடைல கறி வாங்கி திங்கற பழக்கம் நம்பகிட்ட இல்லீங்க. கடய "கசாப் கடை" னு சொல்றோம். கசாப்ங்கறது உருது வார்த்தைங்க. கசாப் ணா கறி வெட்டறவன் னு அர்த்தம். இப்ப அடிக்கடி நடக்குது. போதாக்கொறைக்கு சினிமாவில் திராவிட குப்பைல கெடந்தவங்க கவண்டன் கதை னு சொல்லி சாயங்காலம் ஆச்சுனா சாராயம் குடிச்சு கறி வறுத்து திங்கறவன் தான் கவுண்டன்; குடிச்சிட்டு கூத்தியா வைக்கறவன்-வேளைக்கு வர்ற மத்த சாதி பொம்பளைங்கல சீண்டறவன் தான் கவண்டன் னு நம்ம மரபுகளையே தப்பா நமக்கு சொல்லிக் குடுத்தாங்க.


அதெல்லாம் சுத்த பொய். கவண்டன் ணா கறி சாராயம் கூடாது; பொண்டாட்டிய தவற மித்த பொம்பளைங்கல நெனைச்சு பார்க்க கூடாது; ஒழுக்கமா சொன்ன வார்த்தை மாறாம பொழைக்கணும்; எல்லா சாதிகளையும் அரவணச்சு காப்பாத்தணும். அவன்தான் கவண்டன்.

கெடா வெட்டு
கவுண்டர்க கறி திங்கக் கூடாது னா அது இல்லை னு சொல்ல ரண்டு விசியம் சொல்லுவாங்க. ஒன்னு பந்த கெடா விருந்து போடறது, ரண்டாவது கோயல்ல கெடா வெட்டறது.

இந்த உயிர் பலிங்கறது கோயில் ல மட்டுமில்லீங்க; பல இடங்கள் ல குடுப்பாங்க. அதாவது ஒரு கட்டடம் கட்டரப்ப இடிக்கரப்ப; ஒரு ஏரி, கெணறு தொண்டரப்ப மூடுரப்ப; பொதயல்  பொதைச்சு வைக்கரப்ப-எடுக்கரப்ப; வாய்க்கா -அணை உருவாக்கரப்ப; தேர் கட்டரப்ப, ஓட்டரப்ப, ஓடி முடுச்சு நிலைல நிருத்தரப்ப; புதுசா ஒரு இயந்திரம் ஓட்டரப்ப ஒடைக்கரப்ப; பந்தல் போடறப்ப, பிரிக்கரப்ப; ஒரு சக்ரவர்த்தி வர்றப்ப, சாமிய நோம்பிக்கு எடுத்தாரப்ப னு பல இடங்கள் ல மரியாதை நிமித்தமா அல்லது கறுப்பு சக்திகள ஏவி விடரதுக்கும் சாந்தி செய்யரதுக்கும் அல்லது கண் திருஷ்டி கழிக்கனு பலி குடுக்கறது நடக்கும். நம்ம அம்மன் கோயிலின் தெய்வ சக்தி-கறுப்பு சக்திகள் கண தேவதைகளுக்கானது. 

ஒரு காணிக்கு தலைவரு காணியாள கவுண்டரு. அதேபோல காணிக்கு தெய்வம் காணியாச்சி அம்மன். காநியாள கவுண்டருக்கு அங்குள்ள குடிசாதிகள் கட்டுப்பட்டது போல, காணில இருக்கற கறுப்பு, மினி போன்ற கணதேவதை எல்லாம் காணியாச்சிக்கு கட்டுப்பட்டது. கெடா வெட்டும்போது அந்த ஆத்மாவைத் தான் அம்மனுக்கு குடுக்கரம். அந்த ரத்தமும் படையலும் கருப்பனாருக்கும் மினிக்கும் தான். எப்பிடி காணியாச்சி அம்மனுக்கு கறி படையல் கெடையாதோ அதே மாதிரி கவுண்டருக்கும் அசைவ சோறு கெடையாது.

கறி திங்கற ஜாதில பொறந்த சாமிங்க மற்றும் கருப்பு சக்திகளுக்குத்தா கறி படையல் னு சொன்னோம். அதுபோல நம்ம பலி குடுக்கற மிருகங்களோட கறிய நம்ம குடி ஜாதிகளுக்கு பிரிச்சு குடுத்துருவோம். ஒரு பழமொழி கோட சொல்லுவாங்களே, "வண்ணான் ஆட்டுத் தலைக்கு பறந்த மாதிரி"னு . அப்ப முந்தி கவுண்டமூடு தலைக்கறி திங்கலை னு அர்த்தமா என்ன..?

இந்த கெடா வெட்டுங்கறதுல இப்ப ஒரு தப்பு நடக்குது. கெடா வெட்டும்போது ஆடு துளுக்குன உடனே கத்திய மேல இருந்து கீழ எறக்கி வெட்டணும். மொதல்ல பொடனி வெட்டப்படனும். அதுதான் கெடா "வெட்டு". "அறுப்பு" கூடாது. இப்ப முஸ்லீம்ங்க ஹலால் க்கு மந்தரம் சொல்லி அறுக்கற மாதிரி கழுத்துல கீறி விட்டு அறுக்கறது நம்ம வழக்கத்துல ரொம்ப தப்பு மட்டுமில்ல, அப்படி அறுத்து அந்த கறி தின்னா உடம்புக்கு ரொம்ப கெடுதல் கூட. பயத்துல அந்த ஆடு உடம்புல கடுமையா வெஷம் மாதிரி ஹார்மோன் சுரந்திடும் (நாம கூட ரொம்ப பயந்தா இதயம் வேகமா துடுச்சு வேர்த்து ஒன்னுக்கு வந்து பட படனு அடிச்சிக்குதே அது மாதிரி). அறுத்து கொன்ன ஆடுகளை தொங்க விட்டுருக்கரத்தை பார்த்தா துண்டு போட்டப்பறமும் அதோட தொடை மற்றும் சதைப் பகுதிங்க துடிக்கும்; அது அந்த ஹார்மோன் வேலைதான். அந்த கறி திண்ணா வெறி வரும் ஹார்மோன் தாறுமாறா வேலை செய்யும். நரம்பு மண்டலம் பாதிக்கும்.


அது சரி, முதல் ல மனுஷ பொறப்புக்கு கறி திங்கலாமா? சீமை விஞ்ஞானம் என்ன சொல்லுது?

• சைவ விலங்கினங்கள் உடல் முழுக்க வியர்க்கும், அசைவ விலங்குகள் நாக்கில் வியர்க்கும்

• சைவ பிராணிகளுக்கு தட்டையான பற்கள இருக்கும், முன் பற்கள கடித்து கத்தரிக்க பயன்படும். அசைவ விலங்கினங்களுக்கு தட்டையான பற்கள கிடையாது. கூரிய பற்கள மட்டுமே.

• அசைவ விலங்குகளுக்கு அதன் குடல் நீளம் குறைவு. அழுகிவிடும் மாமிசம் சீக்கிரம் வெளியேறிட வகை செய்யும். சைவ பிரானகளுக்கு அதன் உடல் நீளத்தை விட 20 மடங்கு குடலின் நீளம் இருக்கும். மனிதர்கள் குடல் அவர்கள் உடல் நீளத்தை விட 20 மடங்காகும்.

• அசைவ விலங்கினங்களுக்கு வயிற்றில் ஆசிட் (hydrochloric (HCl) acid) காரத்தன்மை மிகுந்திருக்கும். சைவ பிராணிகளுக்கு குறைவாகவே இருக்கும்.மனிதர்களுக்கு சைவ பிராணிகள் போலத்தான் உள்ளது.

• அசைவ விலங்குகள் நீரை நக்கிக்குடிக்கும். சைவ விலங்குகள் உறிஞ்சிக் குடிக்கும்.


நம் முன்னோர் யாரும் மாமிசம் உண்டதில்லை. நம் கொங்கு வெள்ளாள சாதியில் பிறந்து வாழ்ந்து கடவுளான தெய்வங்களான வெள்ளையம்மா, வீரமாத்தி, செல்லகுமாரசாமி, அண்ணன்மார் உட்பட யாருக்கும் மாமிசம் கிடையாது. நம் கொங்கு சீர் சடங்குகள் எதிலும் அசைவ உணவு கிடையாது. மங்கள வாழ்த்திலோ, அண்ணமார் கதைப்பாடலிலோ, இன்னபிற செப்பேடு பட்டய கல்வெட்டு செய்திகளிலோ காராள கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் யாரும் மாமிசம் உண்ட சிறு குறிப்பு கூட கிடையாது. (கெடா வெட்டு என்பது கறுப்பு சக்திகளுக்கான கண பூசை. அதன் மாமிசமும் நமக்கானதல்ல. நம் குடிபடைகளுக்குத்தான். "வண்ணான் ஆட்டுத்தலைக்கு பறந்தது போல" என்ற பழமொழியை எண்ணிபார்க்கவும். குடிபடைகள் யாரும் இல்லையேல், அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டது). கறுப்பு சக்திகளுக்கு மட்டுமில்லை, ஏரி-குளம் வெட்டையில், தெய்வ புறப்பாடு, அரசன் வருகையின்போது (திட்டி கிடாய் என்னும் திருஷ்டி கிடாய்), போர் துவங்கையில், புதையல் வைக்கும்போதும் எடுக்கும்போதும். கட்டிடம் காட்டும்போதும், இடிக்கும்போதும் பலி கொடுக்கவேண்டியது அவசியம். வீடு புண்யார்ச்சனையின்போது கெடா வெட்டுவதற்கு பதில்தான் இப்போது நீர்பூசணியில் சிகப்பு தேய்த்து வெட்டுவது.


கொங்கு வெள்ளாளர் தொழில் திறமை, அறிவுத்திறன், ஒழுக்க நெறி அனைத்தும் அசைவம் உண்ணாமல் இருந்ததால் உடல்/மன ஒத்துழைப்பால் நமக்கு சுலபமாக இருந்தது.

அசைவ உணவு என்பது நம்ம சாதிக்குள் மெல்ல திணிக்கப்பட்ட விஷப் பழக்கம். முஸ்லிம்கள் காலத்தில் துவங்கி (கறிக்கடை: கசாப் கடை), வெள்ளை ஆட்சியில் பஞ்ச காலத்தில் உறுதியாக படர்ந்தது.


அசைவ உணவு உண்பதால் தான் கவுண்ட சாதிக்கான குணம் மாறுபட்டு போகிறது. சாதி ஒழுக்கம் கடைப்பிடிக்க, தொழில் அறிவு, சூட்டிப்பு உண்டாக சைவ உணவு இன்றியமையாதது. அசைவ உணவு உண்டு நம் நாட்டை தேசத்தை நிர்வகிப்பதென்பது சாத்தியமற்றது. மூளை மற்றும் மனம் ஒத்துழைக்காது. எனவே முழு கவுண்டனாக வாழ நினைத்தால் அசைவத்தை அறவே விலக்க வேண்டும்.

காராளன் கறி திங்க கூடாது!

மேழி பிடித்த கை கோழி பிடிக்க கூடாது!


Thursday, 21 November 2013

பாடம் போடும் மருத்துவ முறைபாம்புக்கடி, நாய்கடி, தேள்கடி போன்றவை குணமாக, ஆடு மாடு கோழிகள், மனிதர்கள் குணமாகவும் பாடம் போடுவது பல காலமாக நம் நாட்டில் இருப்பது.. அதற்கு மந்திரங்கள் உண்டு.. மந்திரம் சித்தியாகத்தான் 1008 முறை சபிப்பது.. அதை பிரயோகிக்க அல்ல... 1008 முறை ஜெபம் செய்ய முறையான நிஷ்டைகள் உள்ளன.. இந்த மந்திரம் எல்லாம் குருமுகமாக கேட்டு செய்ய வேண்டும்;இல்லையேல் சித்திக்காது.... இது உண்மையில் பலனளிக்கும் முறைதான்.. நான் கண்கூடாக பார்த்தது (பாம்புகளுக்கு)... மந்திரம் சித்தியாகத்தான் 1008 முறை சபிப்பது.. அதை பிரயோகிக்க அல்ல... 1008 முறை ஜெபம் செய்ய முறையான நிஷ்டைகள் உள்ளன.. இந்த மந்திரம் எல்லாம் குருமுகமாக கேட்டு செய்ய வேண்டும்;இல்லையேல் சித்திக்காது.... இது உண்மையில் பலனளிக்கும் முறைதான்.. நான் கண்கூடாக பார்த்தது (பாம்புகளுக்கு)... எங்கள் வீட்டுக்கு பாம்புகள் அடிக்கடி வரும்.. நானே பலமுறை பார்த்திருக்கேன்.. எங்கள் பகுதியில் ஒருவர் இந்த வேளைகளில் கில்லாடி.. ஒரு  முறை வந்து மந்திரம் செபித்து மண் அள்ளி போட்டார்.. இப்போது பாம்புகள் வந்து 13 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.. அதே நேரம் பக்கத்து வீடுகளில் பாம்பு நடமாட்டம் ஆங்காங்கே இருக்கிறது..

கொங்க தேசத்தில் சித்தாண்டிகள் என்று மிக சில பகுதிகளில் அறியப்படும் சாமியார் போன்றவர்கள் (இன்றளவும் பெரியவர்களை கேட்டால் சொல்வார்கள்) சிலருக்கு குருமுகமாக பாடம் போடும் மந்திரத்தை செபித்து தருவார்கள்.. அவர்கள் ஆடு மாடு கோழி உட்பட மனிதர்களுக்கும் இது போன்ற பாடம் போடும் வேலைகளை செய்வார்கள்.. அப்படிப்பட்டவர்கள் தான் தம்பிகளை அய்யன், வாழை தோட்டத்து அய்யன், குப்பண்ண பரதேசியார் போன்றவர்கள்.. இன்றளவும் இது போன்றவர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள்.. என் நண்பனின் தாத்தா கூட.. நன்மைக்காக பயன்படுவது வைட் மேஜிக் எனப்படும்.. இந்த பாடம் போடும் முறையை பிற மதத்திலும் காணலாம்.. அக்குல்ட் சயின்ஸ் என்று வெளிநாட்டுக்காரனும் நம்முடைய இந்த வித்தைகளை படிக்க என்றோ துவங்கி விட்டான். அவன் அடிவருடிகளான சில திராவிட, கம்யுனிஸ முற்போக்கு குப்பகளும், நம்மை அதற்குள் விடாமல் பகுத்தறிவு, மூட நம்பிக்கை என்று பட்டம் கட்டி விரட்டி விட்டான்..

Sunday, 10 November 2013

காளிபட்டி கந்தசாமி கோவில்-வரலாறும் சிறப்பும்காளிபட்டி ஆதியில் சேர (கொங்கு) தேசத்தில் கீழக்கரை பூந்துறை நாடு பகுதியில் பருத்திப்பள்ளி இணை நாட்டின் பகுதியாக இருந்தது. (பின்னர் பெண் கொடுத்த வகையில் சீதனமாக மல்லசமுத்திரம் தனி கிளை நாடாக பிரிக்கப்பட்டு, பரஞ்சேர்வழியில் இருந்து ராசிபுரம் வந்த குடியானவர்களான ராசிபுரம் விழியன் கூட்டத்தார் வழி வந்த நல்லணன் உரிமைக்கு வந்தது).பருத்திபள்ளி செல்லன்கூட்ட கத்தேரி லட்சுமண கவுண்டர் மிகுந்த முருகபக்தி கொண்டவர். அருள்வாக்கு சொல்லி வந்தார். அதோடு காவடியும் காணிக்கைகளும் பழனிக்கு கொண்டு சென்று வந்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், "இனி பழனிக்கு வரத்தேவையில்லை. யாமே காளிபட்டியில் குடிகொண்டுள்ளோம்" என்று உத்தரவு தர, காளிபட்டியில் கோவில் எழுப்பி வழிபாடுகள் நடந்தினர். வேண்டுதல்கள் பலிக்கவே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவரது வழிவந்தவர்கள் தேர்த்திருவிழாவும் மாட்டுசந்தையும் அப்போதே துவங்கி நடத்தி வந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவு நிலை எடுத்திருந்த பட்டக்காரர்கள் ஐரோப்பா சென்று கல்வி பெற்றனர். அந்த காலத்திலேயே பல்லாயிரம் ரூபாய்கள் வருவாய் கொண்டதாக இந்த கோயில் இருந்துள்ளது. ஆனால் கோயில் வருமானத்தில் குளறுபடிகள் அரங்கேறவே கோர்ட் வழக்கு நடந்து மிகுந்த அவமானமடைந்ததை முத்துசாமி கோனார் "கொங்குநாடு" நூலில் குறிப்பிடுகிறார்.காளிபட்டி தேரும், மாட்டு சந்தையும் இன்றளவும் பிரசித்தம். திருவிழாவில் விற்கப்படும் மிட்டாய்கள் கூட மிக பிரசித்தம்.

                         திருவிழா நிகழ்ச்சிகளில் திருட்டு குற்றங்கள் அரங்கேறின. இதை தடுக்கவே, விட்டம்பளையம் ஜமீனான ஹானரரி ஜட்ஜ் சாமர வேலப்ப கவுண்டர் காளிபட்டி தேர் திருவிழாவுக்கு என்று கோர்ட் அங்கு வர உதவி செய்தார். 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த நீதி வழங்கும் முறை, தற்போதும் கடைப்பிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, தவறு செய்பவர்களை கைது செய்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதற்காகவே நடமாடும் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், அது முதலே திருவிழா சமயத்தில் கிராமத்தை நோக்கி நீதிமன்றமே வந்த கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகினறனர்.

Thursday, 7 November 2013

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்-கதை வடிவில்

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்-கதை வடிவில்

-இந்திரா சௌந்தரராஜன் 

ன்று ஏதாவது ஒரு சிக்கல் என்றால், நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு முதலில் போய்ப் பார்ப்பது நல்ல ஒரு ஜோசியரைத்தான்! ஜோசியரில் நல்ல ஜோசியர் கெட்ட ஜோசியர் என்று இருக்கிறார்களா என்ன என்று கேட்கலாம். சந்தேகமே வேண்டாம்! இருக்கிறார்கள் என்பதே என் பதிலாகும். எப்படி? நமக்கு நேரம் நன்றாக இருந்து விதியும் இருந்தால், நன்றாக சரியான ஜோசியரிடம்தான் நாம் போய் நிற்போம். அவரும் நம் கட்டங்களைப் பார்த்து, சரியாக கணக்குப் போட்டு பின்னர் பிசகு எதுவுமில்லாமல் நமக்குத் தீர்வைச் சொல்லுவார்.

நம் நேரத்தில் பிசகு இருக்கும் பட்சத்தில், ஒரு அரைகுறை ஜோசியரிடம்தான் போய் மாட்டுவோம். அவரும் அவர் அறிந்ததைக் கூறி, நம்மைத் தவறாக வழிநடத்தி விடுவார். இந்த உலகத்தில் எல்லாமே இரண்டாக இருக்கிறது. இனிப்பென்றால் கசப்பு, நெருப்பென்றால் குளிர், அதேபோல நல்லவிதமாய் ஒருவர் என்றால், தீயவிதமாய் ஒருவர்…
இவர்கள் எப்படி இருக்கலாம் என்றெல்லாம் கேட்க முடியாது. மனித இனம் தோன்றிய நாளில் இருந்தே இதுதான் நிலைப்பாடு. இனியும் அது இருந்தே தீரும். ஜோதிடர்களுக்கும் இது பொருந்தும்.

சரி, இந்த ஜோதிடர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் தவறாமல் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்பார். அதுதான் குலதெய்வம் பற்றியது. ‘உங்கள் குலதெய்வம் எது? அதை நீங்கள் முறையாக வணங்கி வருகிறீர்களா?’ என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுள் ஒருவரே என்பதுதான் சர்வமத சித்தாந்தம். நம் இந்து மதம்தான், அந்த ஒருவரைப் பலவாக ஆக்கி நாம் பக்தி செய்திட பகிர்ந்து அளித்திருக்கிறது. இது அந்தக் கடவுளை எளிதாக உணரவும், நெருங்கவும் நமக்கும் மிக வசதியாக உள்ளது. நமது தெய்வங்கள் அலங்காரமாக, ஆயுதங்களோடு இருப்பதன் பின்புலம், நம் உளவியல் நிமித்தமே என்பதுதான் நம் கடவுளர்களின் சிறப்பே!
இதனால்தான் கடவுளோடு நாம் மிகவும் நெருங்க முடிகிறது. ‘வாடா போடா’ எனலாம்… அப்பா அம்மா எனலாம்… நண்பன் எனலாம்… குருவாகவும் கொள்ளலாம். நம் குழந்தையாகவும் கருதி தூக்கி வைத்துக் கொஞ்சலாம்.

அன்பும் பக்தியும் இருந்துவிட்டால் போதும்… யோகியரும் ஞானியரும் காட்டிலும் மேட்டிலும் காலம் காலமாக தவம் செய்தும் அடைய முடியாமல் தவிக்கின்ற அந்தக் கடவுளை, நாம் மிக இலகுவாக நம் அன்றாட வாழ்வில் அடைந்து விடலாம். இதற்காகவே நமக்கே நமக்கு என்று நம் முன்னோர்கள் வீடு வாசல் என்று சொத்து சுகங்களை விட்டுச் செல்வது போல் ஒரு தெய்வத்தையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அதுதான் குலதெய்வம்!
எந்த தெய்வத்தை வணங்காவிட்டாலும், இந்த தெய்வத்திடம் ஒரு வணக்கம் இருந்தே தீர வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்களுக்கும் எண்ணம். குலதெய்வம் என்று ஒன்று இருந்தாலே, சில சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தே தீரும். குழந்தை பிறந்தால் அதன் முதல் முடியை காணிக்கையாகத் தருவது. அது போக, பிள்ளைப் பேற்றுக்கும் அறிவு விழிப்புக்கும் தூண்டுதலான காது குத்துதல் போன்ற நிகழ்வுகள் குலதெய்வ வழிபாட்டுச் சடங்கை ஒட்டியே இருக்கும்.

சில குடும்பங்களில், குலதெய்வ வழிபாடு என்பதே மறந்து, குலதெய்வம் எதுவென்றே தெரியாத அமைப்பெல்லாம் உண்டு. இதெல்லாமே நம் ஜாதகக் கட்டத்தைப் பார்த்தால் கணக்குப் போட்டு உணர முடியும். ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஒரு இடம் உண்டு. அதில் நம் பக்தி, சாபம், திமிர், வியாதி, தரித்திரம் என்று எல்லாம் பளிச்சென்று தெரியும் விதமாக டேரா போட்டிருக்கும். இதை வைத்துத்தான் ஜோதிடரும் கேட்பார்!
என்றால், குலதெய்வ வழிபாட்டோடு பிறதெய்வ வழிபாடுகளை குறைவின்றிச் செய்பவர்கள் எல்லோருமே ஆனந்த வாழ்க்கை வாழ்கிறார்களா? அவர்களுக்கு துன்பமே இல்லையா என்று குயுக்தியாகக் கேட்கக் கூடாது.
ஆக, குலதெய்வத்தை மறவாமல் போற்றி வருபவர்கள் குடும்பங்களில் பெரிய துன்பங்களுக்கு இடமில்லை. பெரிதாக ஏதாவது வந்தாலும், அது நிச்சயம் நீங்கி அந்தக் குடும்பம் ஒரு நல்ல வாழ்க்கையை இந்த மண்ணில் வாழ்ந்து காட்டுகிறது என்பது தான் அடிப்படைச் சிறப்பாகும்.
வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப் பேறு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் இவை எல்லாம் அருள் இருந்தால் மட்டுமே பெற முடிந்தவை ஆகும்.
இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னதான அருள் சார்ந்த விஷயம் வந்துவிட்டால், முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்து விடலாம். எனவே, பிரதான தேவையே அருள்தான்! இந்தக் குலதெய்வத்தின் சிறப்பை பெரியவர் உணரச்செய்த சம்பவம் ஒன்று உண்டு.

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது.அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும்

உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன்
துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின்
துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,"சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.பெரியவர் அவரிடம், "குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். 


குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர். 

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”


"ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

"உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”"ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”"அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”


"ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”


"அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

"என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும்
சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?” "நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

"அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!” "காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட
தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத்தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

"அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப்
பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”"நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக்
குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம்
பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.அவரும் ஒரு பத்து நாள் கழித்து, "சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன்.
எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை
அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி
கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

"சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

"சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”"அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

"சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். 

பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். "அது…

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது
குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வசான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு
அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத்தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”- பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!"அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது? ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! 


அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின்

தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக்
கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத்தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

 


- பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.
இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும்
அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால்,
அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில்
நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய்
தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப்பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது. ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு
இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும்
அதுதான் நிகழ்ந்தது.


எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்டதூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?

ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையைஏற்படுத்திற்று.

(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates