Trending

Saturday, 27 July 2013

தொல்காப்பியம் – பிராமணர்

தொல்காப்பியம் – பிராமணர்பிராமணர்கள் தமிழகத்திற்கு அந்நியர் என்றும் பிராமணராக பிறந்தாலே கெட்டவர் என்றும் ஆழமாக நம்ப வைக்கப்பட்டுள்ள தமிழ் சமூகம் அதற்கு தொல்காப்பியத்தை ஆதாரமாக காட்டுகிறது.

தொல்காப்பியத்தின் இறை வணக்க பகுதியில் எடுத்ததுமே,
“நான் மறை பயின்ற ஆன்றோர் சபையில்.. என்கிறார்!. ஆனால் வஞ்சக தீரா-விட திருடர்கள், தங்கள் சூழ்ச்சியை அரங்கேற்ற அந்த பகுதியை மறைத்துவிட்டார்கள். பல வருடங்களுக்கு முன்பே நடத்தப்பட்ட இந்த சதியால் இன்று தமிழறிஞர்கள் கூட இதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

இப்படி கட்டமைக்கப்பட்ட ஒரு சதியை கொண்டு படித்த பண்புள்ள பிராமண சமூகத்தை தமிழ் சமூகத்திடம் இருந்து விலக்கியே வைத்து விட்டார்கள் இந்த தீரா விட தீவிரவாதிகள்.  பின்குறிப்பு: கால்நடையாகவும் கட்டைவண்டியிலும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் இலக்கியங்களை மீட்டு தமிழர் என்ற அடையாளத்துக்கு வித்திட்டவர், உ.வெ.சுவாமிநாத ஐயர். இவர் ஒரு பிராமணர்.
இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு நம் முன்னோர்கள் நம் குலகுருக்களையும், நம்மோடு வாழ்ந்த கொங்க பிராமணர்களையும் கைவிட்டு பெரும் பிழையை செய்து விட்டார்கள்.  ஆனால், இன்று இளைய தலைமுறையின் முயற்சியால் வெகு வேகமாக பாரம்பரிய மரபு மீண்டு வருகிறது.

கோமாளி

கோமாளி
---------

கோமாளிகள் என்பவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மிகவும் மதிக்கப்பட்ட அங்கம. கிராமத்திற்கு மணியக்காரர், தலையாரி, கொத்துக்காரர் போன்று கோமாளியும் ஒரு அங்கம. கிராமங்களில், விழாக்களில் முன்னுரிமை கொடுத்து மதிக்கபட்டவர்கள். பண்டிகைகள் துவக்கம், பல சடங்குகளில் இவர்கள் பங்கு உண்டு. நகைச்சுவை, சமயோசிதம் போன்றவற்றை வெளிப்படுத்துவார். பல சமூகங்கள் வாழும் கிராமத்தில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வளர பாடுபடுபவர்.

கோமாளிகள் என்பவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமாவர். பழமையான கோவில் கோபுரங்களிலும் கோமாளிகளின் சிற்பத்தை காணலாம்.

மோளிப்பள்ளி அண்ணமார் கோவிலில்
கோமாளி அய்யனாக மாயவர் (மகாவிஷ்ணு) - கோமாளி வடிவில் 

அருணகிரி சுள்ளிப்பளையம் - கவுண்டச்சிபாளையம் (பெருங்குறிச்சி காணி)
கவுண்டச்சியம்மன் கோவில் கோபுரத்தில் கோமாளி (சில்மிஷ வேலைகள்)

ஆகவே பிற பண்டிகைகளை விட ஆடி பதினெட்டுக்கு இவர்கள் பங்கு முக்கியமானது. ஆடி 18 பாரத போர் முடிந்த தினம். அதை நினைவு கூறவே இன்று நாம் கொண்டாடும் பண்டிகை. போர் முடிந்த தினத்தில் மகாவிஷ்ணுவை காணும் கண்ணோட்டத்தில் ஊர் கோமாளியையும் மக்கள் கண்டு செல்வர். கோமாளி இன்றி பண்டிகை பூர்த்தியாகாது. ஒவ்வொரு கிராமத்திற்கும் கோமாளி உண்டு. 
பெரியமணலி ஸ்ரீ கரியகாளியம்மன் கோவிலில் 

உங்கள் கிராமத்தில் இருந்த கோமாளியை கண்டுபிடித்து இந்த வருடம் பண்டிகையை சிறப்பிக்க செய்யுங்கள். ஊர் கவுண்டர்கள், தர்மகர்த்தாக்கள், மற்றும் கொங்க தேச பாரம்பரியத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய பணி.

Wednesday, 24 July 2013

பொன் மேழிக்கொடி

வெள்ளாளரின் பாரம்பரிய பொன் மேழிக்கொடி:

பல நூற்றாண்டுகளாக கொங்கு வெள்ளாள கவுண்டர்களை அடையாளப்படுத்திய சித்திரமேழி சபையின் பொன் மேழிக்கொடி.Tuesday, 23 July 2013

அழகன் கூட்டம் குலகுரு மடம்

அழகன் கூட்டம் குலகுரு மடம்:கார்வழி அழகன் - சிவகிரி மடம்

கார்வழி (ஒரு பிரிவினர்), தேகாணி, காஞ்சிகோணம்பாளையம் - இருகூர் மடம்

சிவகிரி மடம்:
http://kongukulagurus.blogspot.in/2009/09/2_11.html
சிவகிரி ஆதீனம்,
சிவகிரி அஞ்சல்,
ஈரோடு மாவட்டம் - 638109
மின்னஞ்சல்: sivagiriathinam@gmail.com
பிளாக்: http://sivagiriathinam.blogspot.com/
தொலைபேசி: 04204- 240324
செல்94435- 63354


இருகூர் மடம்:
http://kongukulagurus.blogspot.in/2009/09/20.html
சிவஸ்ரீ ராமசாமி சிவாச்சாரியார் 
10/10, அக்ரஹார வீதி,
இருகூர் அஞ்சல், 
கோயமுத்தூர் - 641 103
தொலைபேசி எண்: 
94881 55164, 97906 38022, 94863 12501

Monday, 22 July 2013

காதல் தமிழனின் பூர்வீக கலாச்சாரமா..??

காதல் தமிழனின் பூர்வீக கலாச்சாரமா..??காதலை தமிழர்களின் பூர்வீக வழக்கம் என்று முற்போக்கு (புறம்போக்கு) ~ தீரா விட~ தலித்திய ~பெண்ணிய~கம்யுனிஸ முகமூடியணிந்த வெளிநாட்டு கிறிஸ்தவ கைக்கூலிகள், கள்ள திருமணங்களுக்கு தூண்டி வருகிறார்கள். காதலை சகஜப்படுத்துகிரார்கள்.


சங்க காலத்தில் பாலிய வயதிலேயே திருமணம் நடந்து வந்தது. சிறு வயதிலோ அல்லது பருவம் அடைந்த உடனேயோ திருமணம் முடிக்கப்படும். அப்படியிருக்க, எப்படி இந்த அறிவு அழிக்கும் காதல் வந்திருக்கும்??

அந்நாளில் ஆண்-பெண் உறவில் திருமணத்தின் முன் காதல் என்பதே கிடையாது. காதல் என்றால் அது தலைவன்-தலைவி இடையே திருமணத்தின் பின் வருவது தான். திருமனத்தின்முன் வருவது களவு என்று குறிக்கப்பட்டது. குடும்ப-சமூக-இன-கலாச்சார மரபுகளை மீறி வீட்டாருக்கு தெரியாமல் நடப்பதால் அது களவு எனப்பட்டது. அதாவது திருட்டுத்தனம். இன்றைய வழக்கில் “கள்ளக்காதல்”...

உதாரணம்: கண்ணகி கோவலன் திருமணம் பற்றி சிலப்பதிகாரம் புகார் காண்டத்தில் கூறப்பட்ட செய்தி. 

கண்ணகியின் வயது: “ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்...” அதாவது 2X6 =12 வயது 
கோவலனின் வயது: “ஈர்-எட்டு ஆண்டு அகவையான்..” அதாவது 2X8=16 வயது 

குறிப்பு: இவர்கள் சொல்லும் தமிழினம் என்ற ஒன்று கிடையாது. அந்நாளில் சேரர் சோழர், பாண்டியர், தொண்டை தேசங்கள் இருந்தன. முழு தமிழ்நாடு என்றோ பொதுப்படையான தமிழர் என்ற கலாச்சாரமோ ஒன்றும் கிடையாது. தமிழர் கலாசாரம் என்று, இன்று பொதுமைப்படுத்தப்படும் ஒன்று பல்வேறு பண்பட்ட சாதிகளின் வழக்கங்களே. தமிழர் தமிழினம் என்ற ஒன்று, மொழிவாரி மாநில பிரிப்பின் பின் ஏற்படுத்தபட்டதே. சங்க இலக்கொயங்களிலும் தமிழினம் என்றோ-தமிழர் கலாசாரம் என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Sunday, 21 July 2013

குலகுரு மட தகவல்: அந்துவன் கூட்டம்


குலகுரு மட தகவல்: அந்துவன் கூட்டம்

திருவாச்சி அந்துவன் – பாசூர் மடம் 
கீரனூர் அந்துவன் – கீரனூர் மடம் 
மோடமன்கலம் அந்துவன் – அய்யம்பாளையம் மடம் 

மடத்தின் தகவல்கள்/முகவரிகள்:

௧. பாசூர் மடம்: http://kongukulagurus.blogspot.in/2009/09/blog-post_11.html

தற்போதைய முகவரி:
ஸ்ரீ சாம்பசிவ தீக்ஷதர்,
மீனாக்ஷி நிலையம்,

26வடக்கு ரதவீதி,
திருவானைக்காவல்,
திருச்சி -620005.

முன்றாவது மகன் கண்ணன் செல்: 8870020624


௨. கீரனூர் மடம்: http://kongukulagurus.blogspot.in/2009/09/blog-post_4013.html

முகவரி,
கொடுமுடி பண்டித குருசுவாமிகள்,
முத்து விநாயகர் கொயில்,
கொங்கு நகர் மூன்றாவது வீதி,
ஊத்துக்குளி ரோடு,
திருப்பூர்.

போன்: 99439 97008

௩.அய்யம்பாளையம் மடம்: http://kongukulagurus.blogspot.in/2009/09/19.html

மடம் திருச்செங்கோடு அருகே அய்யம்பாளையத்தில் உள்ளது. 

முகவரி :
சிதம்பரம் குருக்கள்,
அருணகிரி அய்யம்பாளையம்,
கந்தம்பாளையம் (வழி) ,
திருச்செங்கோடு, 
நாமக்கல் (DT).
Mob: 94428 63234

Wednesday, 17 July 2013

கவுண்டர்கள் மேல் வீசப்படும் பொய் குற்றச்சாட்டுக்கள்

கவுண்டர்கள் மேல் வீசப்படும் பொய் குற்றச்சாட்டுக்கள்:கவுண்டர்கள் பிறரை துன்புறுத்தி வாழ்ந்தவர்களா? ஆதரித்து வாழ்ந்தவர்களா..??

என்னவோ, கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தங்களோடு வாழ்ந்த குடிகளை குறிப்பாக தற்போது பட்டியல் சாதிகளில் உள்ள பறையர், சக்கிலியர், பள்ளர் போன்றோரை துன்புறுத்தி வாழ்ந்தது போல, உலகமயமாக்கல்/மதமாற்றி சக்திகளின் கைக்கூலிகளான
சமூக விரோத-முற்போக்கு-கம்யுனிஸ-திராவிட முகமூடியணிந்தவர்கள் , வர்ணிக்கிறார்கள். அதில் உள்ள பொய்களை உடைத்து அம்பலப்படுத்தவே இந்த பதிவு.

கல்வி மறுப்பு:

பொய் பிரச்சாரம்:அக்கால கொங்கு சமூகத்தில் கல்வி மறுக்கபட்டது, மேல்சாதிகளே கல்வி கற்க அனுமதிக்கபட்டது.

உண்மை: அனைத்து சாதிகளுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது. கல்வி என்றால் மெக்காலே கொண்டுவந்த உளுத்துபோன கல்வி முறை அல்ல. அன்றைய பாடத்திட்டம் படி, மக்களுக்கு தேவையான அனைத்தும் கற்பிக்கப்பட்டது. மேல் கல்விக்கும் வழிவகை செய்யபட்டிருந்தது. புலவனார் என்ற ஒரு சாதியே அடிப்படை கல்வி கொடுக்க இருந்தது. மெக்காலே அவர்கள் அடையாளத்தையே அழித்து விட்டான். கொங்க தேசத்தில் 85% கல்வியறிவோடு இருந்துள்ளனர். பின்னாளில் ஆந்திராவில் இருந்து கொங்க தேசம் வந்த சில பறையரும், சக்கிளியரும் உட்பட இன்னபிற சாதிகளும் மொழி வேறுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் கல்வி கற்க இயலாமல் இருந்தனர். ஆனால் கொங்க தேசத்தில் கொங்கு வேல்லாலருடன் இருந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி அளிக்கபட்டிருந்தது.

• பழையகோட்டை பட்டக்காரர் வரலாற்றில் நூல்கள் இலக்கியங்கள் எழுதும் புலமை பெற்ற வண்ணான் சாதியை சேர்ந்த ஒருவரை ஆதரித்த குறிப்பு
•   எழுமாத்தூரில் புலமை பெற்ற பறையன் பட்டகாரருக்கு சாபம் கொடுத்த வரலாற்று குறிப்பு
•   தரம்பால் அவர்கள் எழுதிய “The Beautiful Tree”

நிலவுடைமை மறுப்பு:

பொய் பிரச்சாரம்: கொங்கு வெள்ளாளர், பிற சாதிகளின் நிலங்களை பிடுங்கிக்கொண்டு நில ஆதிக்கம் செலுத்தினர்

உண்மை: கொங்க தேசத்தில் ஒவ்வொரு காணி கிராமம் பிரிக்கும் போதும், 18 குடிகளுக்கும் வீடுகள், நிலங்கள் கொடுக்கப்படும். பல இடங்களில் ஊரே மானியமாக கொடுக்கப்படும். இன்றும் கொங்க தேசத்தில் பல கிராமங்களில் பறையன் காடு, சக்கிலிகாடு, நாடார்மேடு, கொசவன்காடு, நாவிதன்பாளிதோட்டம், வன்னாபாறை என சாதிகளின் பெயரால் தோட்டங்கள் காடுகள் இருப்பதை காண முடியும். அதேபோல, ‘ஆண்டிபாளையம், பூசாரிபாளையம், ‘ஜேடர்பாளையம் (செட்டியார்), ‘ஒடப்பள்ளி, ‘உப்பிலிபாளையம், ‘சானார்பாளையம், ‘நாசுவம்பாளையம், ‘மொடாவாண்டிசத்தியமங்கலம் என இன்னும் எத்தனையோ ஊர்கள இருப்பதை காண முடியும். பல சாதிகள் காணிகளையே வைத்திருந்ததும் உண்டு. காணியுரிமையை பொன்கொடுத்து பெற்ற செப்பேடு சாசனங்கள் மூலம் பிற சாதிகள் காணியுரிமை கொண்டிருந்ததை அறியலாம். அதோடு காடாய் கிடந்த கொண்டு தேசத்துக்குள் வந்த வெள்ளாளர்கள் மட்டுமே 48,000 குடிகள்; ஆனால் ஏனைய குடிபடைகள் 17 சாதிகளும் சேர்த்தே 12,000 குடிகள் தான். அதனால் தான் கொங்கு தேசத்தில் கொங்கு வெள்ளாளருக்கு அதிக நிலங்கள். அதுமட்டுமின்றி விவசாயம் செய்து காடழித்து நாடாக்கும் நுட்பங்கள் விவசாயிகலான வெள்ளாளர் செய்தவையே.

நாட்டுரிமையே பெற்றிருந்தாலும் பிற சாதிகளுக்கும் பிரித்து கொடுத்து அரவணைத்து வாழ்ந்த சமூகம் கொங்கு வெள்ளாளர் சமூகம். பின்னாளில் நாயக்க~இஸ்லாமிய~வெள்ளையர் ஏற்ப்படுத்திய நிர்வாக மாற்றங்களாலும்  கலாசார மாறுபாடுகளாலும், பஞ்சங்களாலும் மேல்கூறிய நிலங்களை பலரும் விற்றுவிட்டார்கள். அதற்கு கொங்கு சமூகம் பொறுப்பேற்க இயலுமா..? மீண்டும் பாரம்பரிய ஆட்சிமுறை வந்தால் மேல்கூறிய நில உரிமைகளை மீட்டு தர இன்றும் இயலும்!

கூலிப்பெண்கள் கற்பழிப்பு:

பொய் பிரச்சாரம்: வேலைக்கு வரும் பெண்களை சீண்டுவது, கற்பழிப்பது போன்ற கொடுமைகள் நடந்தன.

உண்மை: பாரம்பரிய கொங்கு சமூகத்தில் பிற சமூக பெண்களை தவறான முறையில் அணுகினால் அவர்கள் சாதியை விட்டே ஒதுக்கபடுவர். அவர்களோடு கொடுக்கல் வாங்கலோ, உறவுமுறையோ ஏன் உணவு பண்டம கூட பரிமாறிக்கொள்ள மாட்டார்கள். செத்தால் பிணம தூக்க பங்காளிகள் கூட வரமாட்டார்கள். 19 நூற்றாண்டு துவக்க காலம் முதல் நடைமுறையில் இருந்துள்ளது. இன்றளவும் கொங்க தேசத்தில் 'தொண்டு' என்னும் சொல்லாடல் உள்ளது. தொண்டு என்றால் முறைதவறி நடந்தவன் என்று பொருள். "தொண்டா திரியுது பாரு; பாந்தொண்டு" என்பதெல்லாம் வழக்கு சொற்கள். 

பின் திராவிட தீய சக்திகள் தலைதூக்கிய பின் பலர் தங்கள் கலாச்சார மாண்புகளை மறக்க துவங்கிய பின்னர் தான் கழனி வேலை செய்தவர்களிடம் தவறான நடைமுறை என்பது சிலஇடங்களில் நடந்தது.  ஒரு கிராமத்தில் ஒருத்தன் தவறு செய்தாலும் அது அக்கிராமம் மொத்தத்திற்கும் அவ்வாறான தவறான முத்திரை குத்த வகை செய்ததாக போனது. இதையே வாய்ப்பாக பயன்படுத்தி மணிவண்ணன் போன்ற திராவிட-முற்போக்கு கைக்கூலிகள் தங்கள் படங்களில் தொடர்ந்து கவுண்டர்களை பெண்மோகிகளாகவும், குடிகார மைனர்கள் போலவும் நகைச்சுவையோடு கலந்து காட்டி அதை ஒரு பொது கருத்து போல உண்டாக்கினார்கள். பணியிடங்களில் கற்பழிப்பு நடப்பது இன்றளவும் எல்லா நாடுகளிலும், எல்லா சாதிகளிலும் நடக்கும் குற்ற சம்பவம்தான். விதிவிலக்காக நடந்த சில சம்பவங்களை பொதுப்படையாக்க முடியாது. இந்த விதிவிலக்கு குற்றவாளிகள் திராவிட கும்பல் முதல் அனைத்து தரப்பு சாதி, நாடுகள் என எங்கும் உண்டு. அதை கொங்கு வெள்ளாளரின் குல மரபு போல சித்தரிப்பது நகைப்புக்குரியது. இன்னும் சொல்லப்போனால் பல தருணங்களில் பிற சமூகத்தோடு இணைபவர்கள் புதிய சாதியாக கருதப்படுவர். அவர்களை எந்த சாதியிலும் (சக்கிலியர்/பறையர் உட்பட) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவரவர் கலாசாரத்தை அனைவரும் போற்றி பாதுகாத்த காலம்.

உழைப்பு சுரண்டல்:

பொய் பிரச்சாரம்: பிற சாதிகளின் உழைப்பை கொங்கு வெள்ளாளர் சுரண்டினார்கள்.

உண்மை: பழங்காலத்தில் தங்கள் வயல் வேலைக்கு பிறரை பணிக்கமர்த்துவது கிடையாது. தங்கள் தோட்ட பணிகளுக்கு தங்கள் பங்காளிகளையே துணைக்கு அழைப்பர். அதற்க்கு பெயர் சீர் உழவுஎனப்படும்.

பின்னாளில் வேலைக்கு ஆட்கள் வைத்துகொள்ளும் வழக்கம் வந்தபோதும், கழனியில் தங்கள் பணியாளர்களுக்கும் தங்களோடு வாழும் பண்டாரம், நாவிதர், வண்ணான் உட்பட ஏனைய சாதிகள் அனைவருக்கும் பிரித்து கொடுத்தது போக மீதியைத்தான் கவுண்டர் வீட்டுக்கு கொண்டு செல்வார். இன்றும் வருடம்தோறும தங்கள் குடிகளுக்கு நெல் பணம் தரும் முறை பெரும்பாலான கிராமங்களில் இருப்பதை காணலாம்.

அளந்த வல்லம அட்டாலியில் இருக்குது
குறையை சொல்; நிறைய அள
என்று பழமொழியே உள்ளது.

காணியுரிமைகள் கைமாறும்போதும் கோவில் முப்போடு உரிமைகள் மாறுவது போல, அங்குள்ள குடிகளின் வாழ்வுக்கு தேவையான தானிய, பண தேவைகளையும் நிறைவேற்ற பொறுப்பேற்பார் கவுண்டர். இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு முடிவிலும் தன் குடிபடைகளின் நலனையும் கருத்தில் கொண்டே செயல்பட்டவர்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள். இதற்கு கொங்கு வெள்ளாளர் செப்பேடுகள் சாட்சி.

தீண்டாமை-வன்கொடுமை:

பொய் பிரச்சாரம்: கொங்கு தேசத்தில் கொங்கு வெள்ளாளர் தீண்டாமை காரணமாக வன்கொடுமைகள் செய்தனர்

உண்மை: கொங்க தேச மரபுகளில் ஒவ்வொரு சாதிக்கும் அவர்கள் குல உரிமை, குல தூய்மை, வழக்கங்கள்-மரபுகளை பேணிக்காக்கும் அதிகாரம் இருந்தது. தொழில் வேறுபாடுகள் பொறுத்து அவரவர் வாழ்விடங்களுக்கு அப்பால் சென்று புலங்தல் அனைத்து சாதியாலும் தவிர்க்கப்பட்டது. சாதிகள் கலப்பை அனைத்து சாதிகளும் வெறுத்தனர். பிற சாதிகளில் திருமணம் செய்வதை-செய்தவர்களை சக்கிலியர்-பறையர் உட்பட அனைத்து சாதியினரும் ஒதுக்கினர். ஏனெனில் தங்கள் பண்பாடு & மரபை உயர்வாக ஒவ்வொரு சாதியினரும் எண்ணிய காலம் அது. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் வந்த பின்னர் தங்கள் சாதிகளையும், மரபுகளையும் தாழ்வாக நினைக்கும் பாங்கு வளர்க்கப்பட்டது. அதற்கு பலியானது ஆந்திர, கர்நாடகத்தில் இருந்து இடையே வந்த சில சக்கிலிய-பறைய வகுப்பினரே. பாரம்பரிய கொங்க சக்கிலியரும் பறையரும் பெரும்பாலானோர் இன்னும் தங்கள் மரபுகளையும் உரிமைகளையும் பேணி வருகிறார்கள். குலத்தூய்மை-தீண்டாமை நல்லது என்பதை இன்றைய அறிவியலும் மெல்ல உணர துவங்கியுள்ளது. ஜீனில் DNA மூலம் வரும் திறமைகள், மனிதர்கள் உடலில் இருக்கும் “GUT BIOME” உள்ளிட்டவை தொழில் கலாசாரத்தால் மாறுபட்டாரோடு தீண்டாமையினால் உள்ள நன்மையை நமக்கு சொல்லும் அறிவியல் கூறுகள் ஆகும்.தங்களோடு வாழ்ந்த சமூகங்களோடு சண்டை செய்வது என்பது கொங்கு வரலாற்றில் காண முடியாத ஒன்றாகும். துடுக்குத்தனம்-கருத்து பேதங்கள் ஏற்படும் போதும் அவை சரிசெய்யப்பட்டு மீண்டும் அரவணைத்து செல்வார்களே ஒழிய ஒரு சாராரை ஒடுக்கி உதைத்து வன்கொடுமை செய்வது கவுண்டர்கள் வழக்கில் இல்லாத ஒன்று. தீண்டாமை அடிப்படையில் புதிய வழக்கங்கள் நாய்க்கர் வரவுக்கு பின் ஏற்ப்பட்டவை இன்னும் வாதத்துக்குரியவையாக இருப்பதால் அவை பற்றி விமர்சிக்க முடியாது. எனினும் பாரம்பரிய கொங்கு சமூகத்தில் வன்கொடுமைகள் இல்லை என்பது உண்மை.


சமூக ஒற்றுமை:

• மோரூர் பட்டக்காரர் குழந்தைக்காக செய்த யாகத்தில் கழுத்தறுத்துக் கொண்ட நல்லய்யன் என்னும் செங்குந்த முதலியும், அவரின் தியாகத்துக்கு கைமாறாக தங்கள் குல கோவிலில் சன்னிதியும் திருச்செங்கோட்டில் சில உரிமைகளையும் கொடுத்த கவுண்டர்களும்,

•  தலைய நாட்டு முத்துசாமி கவுண்டர் மறைவுக்காக அவருடன் தீக்குளி இறங்கிய அவருடைய விசுவாசிகளான நல்லராண்டி பண்டாரமும், நாவித நல்லானும், காளி பறையனும்,

• சோழ நாட்டில் கொங்கு செட்டிபெண் கொலைக்காக சோழ தளபதியை எதிர்த்து போர் செய்து செட்டிமார்க்கு அடைக்கலம் தந்த கொங்கு வெள்ளாளரும்,


  • காளிங்கராயன் அணைகட்ட உதவிய கம்மாளர் சாதியினருக்கு, செருப்புப்போடவும், முரசு கொட்டிக் கொள்ளவும், வீடுகளுக்கு சாந்துபூசி காட்டிக்கொள்ளவும் உரிமை வழங்கிய காலிங்கராய கவுண்டரும்


அண்ணன்மாரில் சங்கர் மறைந்தவுடன் தன் உயிரைவிட்ட வீரமலை சாம்புவனும், ஆபத்தில் இருந்த கைக்கோளர் பெண் குப்பாயிக்கு அடைக்கலம் தந்த அண்ணன்மாரும், குன்னுடையாக்கவுண்டருக்கு அடைக்கலம் தந்து காத்த செட்டியாரும்,

வண்ணார் சாதி புலவர் மனம் அமைதியுற கொதிக்கும் நெய்யில கைவிட்டு சத்தியம் செய்த பழையகோட்டை சர்க்கரை மன்றாடியும்

தாங்கள் ஆதரித்த புலவனாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த கொங்கு சமூகம் மொத்தமும்

• கவுண்டரான செல்லகுமாரர் பறையனான குப்பண்ணனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டும், குப்பண்ணனை இன்றளவும் வணங்கி வரும் கொங்கு வெள்ளாளரும்

• கொங்கு வெள்ளாளர் இல்ல திருமணம் உட்பட அனைத்து விசேசங்களிலும் அவர்தம் குடிபடைகளுக்கென்று சீர்களை ஒதுக்கி முக்கியத்துவம் அளித்ததும்

அன்றைய சமூக ஒற்றுமைக்கு வாழ்ந்து காட்டிய உதாரணம்.

சேர வாரும் செகத்தீரே

என்று அன்புடன் தம்மை நாடி வருவோரை ஆதரித்து வாழ்வது கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் வழக்கம். இந்த உண்மைகள் மறக்கடிக்கப்பட்டு கொங்கு சமூகம் தன்னை தானே தாழ்வாக என்னும்படி இன்றைய சமூக சூழ்நிலையை முற்போக்கு திராவிட கும்பல் செய்துள்ளது. இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் பாரம்பரிய நிர்வாக முறை சீர்திருத்தம் மூலம் தேர்வு காண முடியும் என்பதே யதார்த்தம். இங்கு குற்றவாளிகள் நம் பாரம்பரிய முறைகளை சீரழித்த அந்நியர்களான முகமதியரும், வெள்ளைக்காரனும் கொங்கு தேசத்துக்குள் இடையில் புகுந்த தெலுங்கர் மற்றும் கன்னடர்கள் தான். இப்படியிருந்த சமூகத்தை தான் சாதியை ஒழிக்கிறேன் என்று பித்தலாட்டம் பேசி பல முகமூடிதிருடர்கள் மதமாற்ற-அரசியல் லாபத்துக்கு வேஷம் போட்டு திரிகிறார்கள்எனவே கொங்கு வெள்ளாள கவுண்டர்கள மேல் அவதூறு பேசி பொய் குற்றம் சுமத்துவோர் முகத்தில் காரி உமிழ்ந்து இந்த உண்மைகளை எடுத்துரையுங்கள். இது கவுண்டர்களின் பெருமை என்பதை விட ஒட்டுமொத்த கொங்க தேச மக்கள் அனைவரின் பெருமைக்குரிய மரபு என்பதையே முன்னிறுத்த வேண்டும்.

மேலே வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் வெளிநாட்டு கிறிஸ்தவ மாபியா, கம்யூனிச தேசத்துரோகிகள், திராவிட கோமாளிகள் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்த மாய பிம்பமாகும். தற்போது அந்த பணியை என்.ஜி.ஓ களும் செய்து வருகின்றன. கிறிஸ்தவம் கொங்கதேசத்தில் வளர அவர்கள் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அவை பேசப்படுவதே இல்லை. 

Friday, 12 July 2013

முழுக்காதன் குல வரலாறு

வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்தவர்களுக்கு வெள்ளாள சமூகத்தில் அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.இந்த குலப்பெயர் வருவதற்கு காரணம் – இந்தக் குலத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்துதான் காது குத்துவார்கள். ஆகவே இவர்களுக்குத்தான் காது முழுமையானதாகக் கருதப்படும். எனவே இவர்கள் முழு காது உடையவர்கள் என்ற சிறப்புப் பெற்றவர்கள். இவ்வாறு இந்தக் குலத்தவர்கள் “முழுக்காதன் குலத்தவர்கள்” என்ற சிறப்பைப் பெற்றார்கள்.

இந்தக் குலத்திற்கு குலதெய்வம் வெள்ளையம்மாள் ஆகும். இந்தத் தெய்வத்திற்கு கோவை மாவட்டம் காங்கயம் பக்கத்திலுள்ள காடையூரில் உள்ள பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி இருக்கிறது. ஒவ்வொரு இனத்தவர்களின் குல தெய்வங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும். இந்த வரலாறுகள் கர்ண பரம்பரையாய் வருவன. பல குல வரலாறுகளுக்கிடையே பல சமயங்களில் ஒரே கருத்து காணப்படும். அதே மாதிரி ஒரே குல தெய்வத்தின் வரலாற்றிலும் பல பேதங்கள் இருக்கும். இந்த வரலாறுகளுக்கெல்லாம் ஆதாரம் என்னவென்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் இவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காங்கயத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரும் விவசாயிக்கு நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். அந்தப் பெண் பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று அழைத்தார்கள். (மகாபாரதத்தில் பாண்டு மன்னன் பிறக்கும்போதே வெளுத்திருந்தான் என்று படித்திருக்கிறோம்). இன்றும் இவ்வாறான குழந்தைகள் பிறக்கின்றன. அவைகளை “அல்பினோ” என்று கூறுவார்கள். அந்தப் பெண்ணிற்கு மணப்பருவம் நெருங்கியது. பெற்றோரும் உடன் பிறந்தோரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.


அவர்கள் பண்ணையில் மாடு மேய்ப்பதற்காக தூர தேசத்திலிருந்து வந்த ஒருவன் வேலையில் இருந்தான். அவனும் அவர்கள் இனத்தைச் சேர்ந்தவனே. ஆனால் ஏழை.


வெள்ளையம்மாளின் தந்தை அந்த மாடு மேய்ப்பவனுக்கே தன் பெண்ணைக் கட்டிக்கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்.


அவனுடைய ஊருக்குச் சென்று அவனுடைய பெற்றோர்களின் சம்மதம் பெற்றார். திருமணமும் நடந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.


அவளுடைய தமையன்களுக்கும் திருமணம் நடந்து எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். இந்நிலையில் வெள்ளையம்மாளின் தந்தைக்கு அந்திம காலம் நெருங்கியது. அப்போது அவர் தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு, வெள்ளையம்மாளுக்கு ஒரு காணி நிலம் கொடுக்கும்படி கூறிவிட்டு காலமானார்.


வெள்ளையம்மாளின் அண்ணிகளின் துர்ப்போதனையைக் கேட்ட அண்ணன்மார்கள் வெள்ளையம்மாளின் புருஷனை வஞ்சகமாக தனியாக கூட்டிக்கொண்டு போய் கொன்றுவிட்டார்கள். அவன் எங்கோ காணாமல் போய்விட்டான் என்று சொல்லி, வெள்ளையம்மாளின் பேரிலும் பல அவதூறுகளைக் கூறி அவளை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள். அப்போது அவள் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.


வெள்ளையம்மாள் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் மனம் போன போக்கில் போகும்போது, ஒரு சர்தார் (அந்நாளைய முஸ்லிம் அரசாங்க உயர் அதிகாரி) குதிரைமேல் வருவதைக்கண்டு அஞ்சி புதரில் ஒதுங்கினாள். சர்தார் இவளைப்பார்த்தவுடன் நின்று விசாரித்து இவளுடைய அனாதை நிலையைக் கண்டு இரங்கினான். “நான் இப்போது வரி வசூலுக்காக அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். திரும்பி வந்ததும் உன்னுடைய துயர் தீர்க்கிறேன். அதுவரை பக்கத்தில் இருக்கும் கோட்டையில் பத்திரமாக இருப்பாயாக” என்று ஆறுதல் சொல்லி, அவளைக் கோட்டையில் தங்க ஏற்பாடுகள் செய்து விட்டு, வரி வசூலிக்கப் போய்விட்டான்.

சர்தார் திரும்பி வருவதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. இதற்குள் வெள்ளையம்மாளுக்கு நான்காவது மகனும் பிறந்துவிட்டான். சர்தார் வந்த பிறகு வெள்ளையம்மாளைக் கூட்டிக்கொண்டு அவளுடைய அண்ணன்மார் ஊருக்கு வந்தான். அவர்களுடைய அண்ணன்மாரைக் கூப்பிட்டு விவரங்கள் விசாரிக்கும் போது அவளுடைய அண்ணிமார்கள் வெள்ளையம்மாள் பேரில் அடாத பழிகளைச் சுமத்தினார்கள். விபசாரி என்றும் ஏசினார்கள். அவளுடைய அண்ணன்மார்கள் வாய்மூடி மெளனமாக இருந்தார்கள். சர்தார் அவர்களைப் பார்த்து உங்கள் தகப்பனார் வெள்ளையம்மாளுக்கு காணி நிலம் கொடுக்கச் சொன்னது உண்டா இல்லையாவென்று கேட்க, அவர்கள் எங்கள் தந்தை அவ்வாறுதான் கூறிவிட்டு இறந்தார். ஆனால் இப்போது வெள்ளையம்மாள் சாதி கெட்டு வந்திருப்பதால் அவளுக்கு ஒன்றும் கொடுக்க முடியாது என்று வாதிட்டனர்.

இதைக்கேட்ட வெள்ளையம்மாள் நான் கடவுள் சாட்சியாக எந்தத் தப்பும் செய்யவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன் என்று சொன்னாள். அப்போது அவளுடைய அண்ணன்மார்கள் தங்கள் பெண்டாட்டிகளின் பேச்சைக் கேட்டு, வெள்ளையம்மாள் மூன்று சத்தியங்கள் செய்தால் நாங்கள் எங்கள் நிலம் எல்லாவற்றையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்துவிடுகிறோம், அப்படிச் செய்யாவிட்டால் இவள் தீக்குளிக்க வேண்டும் என்று கூறினர். அந்த சத்தியங்கள் என்னவென்றால்:

1. காளைகளை ஏரிலோ அல்லது வண்டியிலோ பூட்டிவதற்கு வெடத்தலாமரத்தில் நுகத்தடி செய்து வைத்திருப்பார்கள். இது நன்கு முற்றி காய்ந்திருக்கும். அந்த நுகத்தடியை மண்ணில் நட்டு தண்ணீர் ஊற்றினால் அது துளிர் விடவேண்டும்.
2. அந்த ஊர்க்கோவிலில் நிறுத்தியிருக்கும் மண் குதிரைக்கு நண்ணீர் தெளித்தால் அது தலையைக் குலுக்கி கனைக்கவேண்டும்.
3. இதற்கு வேண்டிய தண்ணீரை சுடாத பச்சை மண் குடத்தில் எடுத்து வரவேண்டும். அப்போது அந்த மண்குடம் கரையாமல் இருக்க வேண்டும்.
இதைக்கேட்ட சர்தார் வெள்ளையம்மாளிடம் இவர்கள் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீ இதற்கு ஒப்புக்கொள்ளாதே என்று கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ, நான் பதிவிரதை, நான் இந்தச் சத்தியங்களைச் செய்வேன் என்று கூறினாள். அவ்வாறே ஒரு நுகத்தடி நடப்பட்டது. பச்சை மண் குடமும் கொண்டுவரப்பட்டது. வெள்ளையம்மாள் கோவில் குளத்திலிருந்து அந்தக் குடத்தில் நீர் கொண்டு கொண்டு வந்தாள். குடம் கரையாமல் நின்றது. அந்தக் குடத்தில் இருந்து தண்ணீரை நுகத்தடிக்கு ஊற்ற அந்த நுகத்தடியில் தளிர்கள் துளிர்த்தன. மீதம் இருந்த தண்ணீரை அங்கிருந்த மண் குதிரை மேல் தெளிக்க, அந்தக் குதிரை தலையை ஆட்டி கனைத்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிசயப்பட்டுப் போனார்கள். வெள்ளையம்மாளின் அண்ணன்மார்கள் நால்வரும் சர்தாரிடம் வந்து எங்கள் சொத்து முழுவதையும் வெள்ளையம்மாளுக்கே கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டு ஊரைவிட்டே போய்விட்டார்கள். சர்தாரும் வெள்ளையம்மாளுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு தன் ஊருக்குப் போனார்.

வெள்ளையம்மாள் பல காலம் தன் மக்களுடன் வாழ்ந்து விட்டு பின் தெய்வமானாள். அவளுடைய வம்சாவளிதான் தற்காலத்தில் முழுக்காதன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

(நன்றி DR P KANDASWAMY அவர்கள் பழனி )

Sunday, 7 July 2013

வெளிநாட்டு கல்வி
வெளிநாட்டு கல்வி 
---------------------------
சமீப வருடங்களாக நம் இளைஞர்கள் பலர், பேச்சிலர் டிகிரி படித்தவுடன் வெளிநாட்டு கல்வி கற்க சென்று செட்டிலாகி லட்சங்களில் விரைவாக சம்பாதித்துவிடலாம் என்று எண்ணி ஏமாறுகிறார்கள். தற்சமயம் இதுபோல வெளிநாட்டு கல்வி மோகத்தால் சீரழிந்து பணத்தை-வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகமாக இருப்பதால், வெளிநாட்டு கல்வி குறித்த சில யதார்த்த உண்மைகளை, வெளிநாட்டில் படித்த நம் உறவுகள் பலரிடம் விசாரித்து எழுதப்பட்ட கருத்துக்களின் கோர்வை கீழே,

• வெளிநாடு செல்பவர்களில் 5% குறைவானவர்கள்தான் என்ன எதிர்பார்ப்பு-திட்டத்துடன் வெளிநாடு செல்கிறார்களோ அதை அடைகிறார்கள். சிறந்த அறிவு-அடிப்படை கல்வி, உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழகம், குடியுரிமை கொடுக்கும்-வாய்ப்புக்கள் அதிகம் உள்ள தேசம், ஏற்கனவே வேலை செய்த சிறந்த அனுபவம், படிக்கையில் தங்கள் செலவுக்கு தகுந்த ஸ்டைபண்ட் போன்றவை கிடைக்கும் மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

• வெளிநாட்டு டிகிரி மட்டுமே சிறந்த எதிர்காலத்தை தரும் என்பது சுத்த கற்பனை-பொய். வெளிநாட்டில் தற்போது டிகிரியை விட அனுபவத்திற்கும் அறிவுக்குமே மரியாதை. மாஸ்டர்ஸ் முடித்திருந்தாலும் டிப்ளமோ உள்ளவன் திறமையானவனெனின் அவனுக்கே வாய்ப்பு தரப்படுகிறது. மிக சிறந்த கல்வி, தொழில்நுட்ப அறிவோ-அல்லது வேலை அனுபவமோ இல்லாமல் வெளிநாட்டில் படித்த டிகிரி மட்டும் வைத்து வேலை வாங்குவது வெறும் கற்பனை.

• பல நாடுகளில் ஸ்டுடண்ட் விசா தருவதற்கென்றே பல பல்கலைகழகங்கள் உள்ளன. அந்த நாட்டுக்கு செல்வதற்கென்றே சிலர் இந்த கல்லூரியை நாடுகிறார்கள்.

• அங்கே உள்ள அன்றாட செலவுகள் (லிவிங் எக்ஸ்பன்ஸ்) சம்பாதிக்க தரம் தாழ்ந்த பல பகுதி நேர வேலைகளை செய்ய வேண்டியது வரும். அது செய்தாலும் தேவையான அளவு சம்பாதிக்க முடியாது. வீட்டையும் தொந்தரவு செய்ய இயலாமல், ஒரு வேளை உணவோடு வாழ்வோர் அதிகம்.

• வெளிநாட்டு கல்விக்கு குறைந்த பட்சம் 14-20 லட்சமும் அதிகபட்சம் 35 லட்சமும் செலவாகிறது. வேலை கிடைக்காதவர்கள், பின்னாளில் இந்த கடனை கட்டவே இந்தியாவில் பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்ய வேண்டியுள்ளது.

வாழ்வின் முதல் அடியே சறுக்கலில் முடிவதால் வாழ்வின் நம்பிக்கையை இழக்கிறார்கள். கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் வீடு கட்டி-கையிருப்போடு நண்பர்கள் உள்ளபோது, இவர்கள் கடனோடு இருப்பார்கள். அதேநேரம், தொழில்-உள்நாட்டிலேயே வேலைக்கு சேர்ந்தவர்கள் சில வருடங்களில் நல்ல அனுபவம் பெற்று வெளிநாட்டில் வேலை கிடைத்து நன்கு சம்பாதிப்பர். செலவு செய்து படித்தவர் கடனோடு இருக்க, பணத்தை பெற்று அனுபவம் கற்றவர் அதிகம் சம்பாதிப்பார். தொழில் துறையில் இறங்கியவர்கள்தான் இன்று மிக நல்ல நிலையில் உள்ளார்கள் என்பது யதார்த்த உண்மை. முதல் வேலை சம்பளம் கவுரவம் பார்க்காது சிறிய கம்பனிகளிலோ அல்லது குடும்ப தொழிலிலோ தொழில் கற்று பின் தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள்.

எனவே வெளிநாட்டு வீண் கற்பனையில் காட்டை விற்று, சம்பாத்தியத்தை அழித்து எதிர்காலத்தை தொலைக்காமல் அனுபவத்தையும், திறமையையும் வளர்த்து அதன் அடிப்படையில் எதிர்காலத்தை அமைத்துகொல்வதுதான் சிறந்த வாழ்வை தரும்!

Thursday, 4 July 2013

கொங்க வெள்ளாளர் ஆதி குரு - போதாயன மகரிஷிபோதாயன மகரிஷி கங்கா குலத்தவரின் ஆதி குருவாவார். கங்கா குல முதல்வனான மரபாளனுக்கு விவசாயம் முதற்கொண்டு சகல வித்தைகளையும் பயிற்றுவித்தவர். 

(நன்றி: http://gangakulam.blogspot.in/)

இவர் இயற்றிய சாஸ்திரங்கள் மிக தொன்மையும் பழமையும் உடையவை. இவர் யஜூர் வேத சாஸ்திர அடிப்படையில் பயின்றவர். இவர் தர்மம், கணிதம் , அன்றாட கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என் பல விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். இவரின் நியம விதிகளை பிராமணர்களில் பல வகை ஐயர் - ஐயங்கார் களும் கொங்கு நாட்டு பிராமணர்களும் குருக்களும் பின்பற்றுகிறார்கள். Pythagoras theorem மற்றும் Pi என்று இன்றைய அறிவியல் உலகம் சொல்லும் சூத்திரத்தை அன்றே வகுத்தவர். இவரின் கணித சூத்திரங்கள் பல ஆராய்ச்சிகளுக்கு பயன்பட்டது.

போதயனர் மரபாளனுக்கு கற்பித்த விஷயங்கள் மரபாள சூடாமணி என்னும் மிக பழமையான நூலில் தொகுக்கப்பட்டது.

மரபாள புராணத்தை அடிப்படையாக கொண்டு வீராச்சி மங்கலம் கந்தசாமி கவிராயர் வேளாள புராணம் என்னும் நூலை இயற்றினார்.வேளாள புராணம் - மரபாள சூடாமணியை தழுவி எழுதப்பட்டது

பங்குனி மாத அமாவாசை போதாயன அமாவாசை எனப்படுகிறது. இந்த அமாவாசையானது, பாரத போருக்கு களப்பலி கொடுக்க வேண்டி, ஸ்ரீ கிருஷ்ணர் சூர்ய சந்திரரை சந்திக்க வைத்து ஏற்ப்படுத்திய அமாவாசையை அனுசரித்து வருவதாகும். அன்றைய தினம் அவரவர் தத்தமது குலகுருவை தரிசிப்பது சிறப்பாகும்.

உங்கள் குலகுரு யாரென்று தெரியாதவர், கமேண்டில் உங்கள் கூட்டம், குலதெய்வ (காணியாச்சி) கோவில் அது உள்ள ஊர் மூன்றையும் தெரிவிக்கவும்..!All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates