Trending

Saturday, 31 August 2013

ஸ்ரீரங்கமும் கொங்கு வெள்ளாளர் பக்தியும்

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் ரொம்ப காலமாக வருடந்தோறும் ஸ்ரீரங்கம் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் இஷ்ட தெய்வங்களில் ஒரு கடவுளாக இருந்தது உண்மை.
  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மூலவர் சிற்பமானது, விபீஷனருக்கு ஸ்ரீராமர் அன்பின் காரணமாக தான் வழிபட்டு வந்த சாலகிராம ரங்கநாதராகும். ஸ்ரீராமருக்கு ரங்கநாதரே குலதெய்வம் என்பது பெரியோர் கருத்து. சூரிய வம்சத்தின் குலதெய்வம் ரங்கநாதர் என்பது அரிய செய்தியாகும்; காரணம் நாம் சூரிய வம்சத்தின் கிளையான கங்கா குலத்தோர்! 
  • வெள்ளாள அரசனான சோழன் தர்மவர்மன் என்போன் ரங்கநாதர்  மேல் அளவிலா பக்தி கொண்டவனாவான். கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தவன். அவன் பேராலே ஸ்ரீரங்கத்தின் முதல் சுற்று "தர்மவர்ம சுற்று" என்று அழைக்கப்படுகிறது.
  • கன்னிவாடி கன்னகுல பட்டயத்தில் பட்டக்காரர் மும்முடி முத்துச்சாமி மன்றாடியார் குழந்தை இல்லாமல் மன வருத்தமுற்று இருந்த காலத்தில், அவரது கனவில் தோன்றிய ஸ்ரீ நல்லநாயகியம்மன், ஸ்ரீரங்கம் சென்று தன் அண்ணனை தரிசித்து வருமாறு சொல்லியுள்ளார். அதன் பொருட்டு ஸ்ரீரங்கம் சென்று வந்த முத்துசாமி கவுண்டருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பிறந்தது. சீரங்கராய கவுண்டர் என்றும் சீரங்காயி கவுண்டச்சி என்றும் பெயரிட்டார். இன்றளவும் (கன்னிவாடி) தலைய நாட்டு பட்டக்காரர் குடும்பத்தில் ரங்கநாதர் பெயரை சூட்டும் வழக்கம் இருந்து வருகிறது. தற்போதைய கன்னிவாடி பட்டக்காரர் தனது மகளுக்கு ரங்கநாயகி என்றே பெயரிட்டுள்ளார்.
  • ஈங்கூர் ஈஞ்ச கூட்ட காணியாச்சியான தம்பிராட்டியம்மன் கோவில் ஸ்தல வரலாற்றில் வருடா வருடம் ஸ்ரீரங்கம் சென்று வந்த வழக்கம் குறிக்கப்பட்டுள்ளது.
  • திருசெங்கோட்டு பகுதியில் காரி கூட்டத்தவர் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருஷந்தோறும் ஸ்ரீரங்கம் செல்வது வழக்கம்
  • பயிர கூட்டத்தவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் குடும்ப மூத்த குழந்தைக்கு ரங்கசாமி (அ) ரங்கம்மா என்ற பேர் வைத்து முதல் மொட்டை ஸ்ரீரங்கத்தில் அடிப்பது மரபாக உள்ளது.
  • கொங்கு நாட்டின் பாசூர் மடத்திற்கு கணக்கிலடங்கா சொத்துக்கள் இருந்தன (ஒரு காலத்தில்!). இன்று திருச்சியில் இருக்கும் சத்திரம் பேருந்து நிலையம் என்பது பாசூர் மடத்தின் சார்பில் கொங்கு நாட்டில் இருந்து ஸ்ரீரங்கம், சிதம்பரம், திருவானைக்கா உள்ளிட்ட கோவில்களுக்கு ஸ்தல யாத்திரை வரும் கொங்கு நாட்டு பக்தர்களுக்காக சித்திரமாக இயங்கி வந்ததாகும்.
  • இன்றளவும் சீரங்கன், ரங்கசாமி போன்ற பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி வருவது மரபாகும்.
Thursday, 29 August 2013

கொங்கு நாட்டின் பாரம்பரிய கிரகபிரவேசம் - புண்யார்ச்சனை முறை

கொங்கு நாட்டின் பாரம்பரிய கிரகபிரவேசம் - புண்யார்ச்சனை முறை:வீடு கட்டி முடித்து கிரகபிரவேசம் செய்யும் தினத்தின் முந்தைய இரவில் கொங்கு குலாலரை (குயவர்-கொசவர்) அழைத்து கெடா பலி கொடுத்து வீட்டை சுற்றி இழுத்து வர வேண்டும் (அதன் இரத்தம் வழிய வேண்டும்). இது கறுப்பு சக்திகள் அண்டாமல் இருக்கவும் திருப்திசெய்யவே ஆகும். இன்று நீர்பூசணியை சிகப்பு வர்ணம் கலந்து மூலைக்கு மூலை உடைத்து போடுவது பலிக்கு மாற்றாக செய்யப்படுவதே ஆகும். கெடாவினை நம் குடி சாதிகளுக்கு பிரித்தளிக்கலாம். பாரம்பரிய கொங்கு குலாலர்கள் மாமிசம் உண்ண மாட்டார்கள் (தற்காலத்தில் சிலர் மாறிவிட்டிருக்கலாம்). இந்த சாங்கியம் கொங்கு குலாலரின் உரிமையாகும். பாரம்பரியமான குலாலர் இதை நன்கு அறிவார்கள்.கெடா பலி முடிந்த பிறகு, கொங்கு ஆசாரி (அந்த வீட்டுக்கு வேலை செய்தவர் அல்லது ஊர் ஆசாரி) அழைத்து வாஸ்து சாந்தி செய்ய வேண்டும். பாரம்பரிய ஆசாரிகள் நன்கு அறிவர். கொங்கு ஆசாரிகள் தேவர்களின் எஞ்சிநீயரான விஸ்வகர்மாவின் வழி வந்தவர்கள். அவர்களும் பாரம்பரியமாக சைவ உணவு பழக்கமும் பூணூலும் அணிவர் (இன்று சிலர் மாமிசம் உண்ணுகிறார்கள்). வாஸ்து சாந்தி செய்து முடித்த பிறகு காலையில் கிராமத்தின் உள்ளூர் கோவில் குருக்களை அழைத்து புண்ணியார்ச்சனை செய்யப்பட வேண்டும்.வீட்டுக்குள் பசுவை அழைத்து வருவது முக்கிய சடங்கு. நாட்டு பசுவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சீமை மாடுகள் [பன்றிகள்] பயன்படுத்த கூடாது. கன்றுடனான நாட்டு பசுவை அலங்கரித்து வீட்டுக்குள் அழைத்து வந்து அதற்கு தூப தீபங்கள் காட்டி உண்ண பழம், கீரை தர வேண்டும். இது வீட்டிற்கு மங்களம் ஏற்ப்படுத்தும் சடங்கு மட்டும் அல்ல; பசு நம் குடும்பத்தின் அங்கம என்பதை விளக்கும் சடங்காகும். பால் காய்ச்சுவதை தொடர்ந்து, அதன் பின்னர் தற்போது உள்ளதுபோல நாம் செய்ய விரும்பும் சடங்குகளை செய்யலாம். மேலே சொன்னவை இன்றியமையாதவை. இவற்றை விடுத்து தமிழ் முறையில் செய்கிறேன் என்று கிறுக்குத்தனமாக பாரம்பரிய முறைகளை தொலைத்துவிட வேண்டாம்.
(குறிப்பு: புண்ணியார்ச்சனை என்பது கொங்கு சமூகம் காலம் காலமாக பயன்படுத்தி வரும் வட்டார சொல்லாக உள்ளது. அதை விடுத்து தற்போது புது மனை புகு விழா என்று புதிதாக வார்த்தைகள் கண்டுபிடித்து பயன்படுத்துவது மிக தவறானது. புது மனைக்குள் என்றோ நாம் நுழைந்து விடுகிறோம். இந்த விழாவில் செய்யப்படுவது வீட்டிற்கு செய்யப்படும் சடங்குகளே. அதற்கு பொருத்தமானதும் பாரம்பரியமானதும் புண்ணியார்ச்சனை என்னும் பெயர்தான்)

Sunday, 18 August 2013

பூந்துறை கொங்கு உப்பிலியர்பூந்துறை காடை குலத்தைச் சேர்ந்த அழப்பிச்சாக் கவுண்டர் என்பவர் விசயநகர மன்னர் அரண்மனையில் உள்ள ஒரு அடங்கா குதிரை ,ஏறினால் தண்ணீரில் தள்ளும் அக்குதிரையை அடக்க அடிவயிற்றில் சுண்ணாம்புக் கல்லைக் கட்ட யோசனை கூறிய தன் மெய்க்காப்பாளன் உப்பிலிய சமுதாயம் நியாயம் பேச பூந்துறையில் கட்டி கொடுத்த மேடை இது..

கொங்கு உப்பிலிய சமூகம் கொங்கு பதினெட்டு சாதிகளுள் ஒன்று. கொங்கு நாட்டின் பூர்வ குடிகளில் ஒன்று. சாரை மண் கொண்டு உப்பு காய்ச்சுவது, வெடியுப்பு தயார் செய்வது உட்பட கெமிஸ்ட்ரி பணிகளில் சிறந்தவர்கள். பின்னாளில் வெள்ளையர் சதியால் உப்பு காய்ச்சும் தொழிலை விட்டு கட்டட பணிகளுக்கு சென்றுவிட்டனர் (இரு நூற்றாண்டுகள் முன்).

கொங்குநாட்டின் பதினெட்டு சாதிகளுக்கும் இருப்பது போல, இவர்களுக்கும் குலகுரு உண்டு. அவர் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளியில் உள்ளார். தற்கால சூழலில் பொருளாதார நிலையில் பின்தங்கி இருபினும் இன்னும் தங்கள் குலகுருவை மறவாமல் இருப்பது மிகவும் பாராட்ட தக்க விஷயம். கொங்கு மக்கள் அனைவரும் தங்கள் குலகுருவை அடையாளம் கண்டு தவறாது குலகுரு கடமைகளை பின்பற்றவேண்டும்.


நன்றி: சரவணன் துரைசாமி 

Wednesday, 7 August 2013

திருச்செங்கோட்டுக்கோவில் திருப்பணி

திருச்செங்கோடு கோவில் திருப்பணி:கொங்கு தேச சிற்பகலைக்கு மணி மகுடமாகவும், கொங்கேழ் சிவத்தலங்களில் ஒன்றும் ஆன திருச்செங்கோட்டு மலையின் சிற்பக்கலை மேன்மைக்கு காரணம் குறித்து ஒரு வரலாற்று சம்பவம் உண்டு.

திருசெங்கோட்டு கோவில் திருப்பணிக்கு சிறந்த சிற்பிகளை வரழைக்க அன்றைய திருச்செங்கோட்டு பகுதியின் (கீழக்கரை பூந்துறை நாடு) பட்டக்காரர் கன்ன கூட்ட அத்தப்ப நல்லதம்பி காங்கேயர் மதுரை சென்றார். நாற்பது சிற்பிகளின் தலைவனை பார்த்து கோவில் திருப்பணிக்கு வருமாறு அழைக்க- அவர் பட்டக்காரர் சரியாக தம் சிற்பிகளை பராமரிப்பாரா?-இவரை நம்பி பாண்டிய தேசம் கடந்து செல்லலாமா? என்று சந்தேகித்தார்.

எனவே, பட்டகாரரிடம் "காங்கேயரே, தற்போது மழைக்காலம் தொடங்கவிருக்கிறது. மழைக்காலம் முடிந்ததும் நாங்கள் வருகிறோம். தற்போது எங்களுக்கு அடுப்பெரிக்க விறகு ஏற்ப்பாடு செய்து தரவும்" என்று, இவரால் மூன்று மாத விறகு கொடுக்க முடிகிறதா பார்ப்போம் என்று சோதனை செய்ய எண்ணினார்.

மழைக்காலம் முழுவதுமான மூன்று மாதத்திற்கும் சேர்த்து நாற்பது குடும்பங்களுக்கு எவ்வளவு விறகு தேவை என உத்தேசித்து அவ்வளவையும் சந்தன மரங்களாக வாங்கி சிற்பிகள் வீட்டிற்கு அனுப்பினார். அந்த கட்டைகளை எரிக்க ஊரெல்லாம் சந்தனம் மணந்தது.

இந்த சம்பவத்தால் பட்டக்காரர் மகத்துவத்தை புரிந்துகொண்ட சிற்பித்தலைவன் நேரே திருச்செங்கோடு வந்து மிக சிறப்பான முறையில் கோவிலின் சிர்ப்பங்களை வடித்து கொடுத்தார். கோவிலின் பிரகாரத்தில் அத்தப்ப நல்லதம்பி காங்கேயரின் சிலை உள்ளது. அவர்தம் மகனான திருமலை அத்தப்ப நல்லதம்பி காங்கேயனும்,  செல்லகூட்ட பருத்திபள்ளி (இணைநாடு) பட்டகாரரும் கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். இவர்கள் குறித்து கோவிலில் கல்வெட்டுக்களும் உள்ளது.

ஆதாரம்: கொங்கு நாடு (1931) - முத்துசாமி கோனார் 

Sunday, 4 August 2013

கள்ள திருமணம் செய்துகொண்டோர் நிலை

கள்ள திருமணம் செய்துகொண்டோர் நிலை:இன்று ஆடி பண்டிகை விழாவுக்கு பெற்றோர் ஆசியோடு சீர் திருமணம் செய்தோர், தங்கள் பிறந்தவீட்டில் ஆசியோடும், மரியாதையோடும், சுற்றம் சொந்த பந்தங்களோடு மகிழ்வாக கொண்டாடி வருகிறார்கள்.

அதே சமயம், களவுத்தனம் (காதல்) செய்து, கள்ளதிருமணம் செய்து கொண்ட ஒழுக்கம் கெட்ட அருவருப்பு பிறவிகளின் நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டும். தங்கள் பிறந்த வீட்டிலும் அவமதிப்பு, நிராகரிப்பு என அசிங்கத்தை சுவைத்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் வீட்டில் சொந்தபந்தம் ஏதுமின்றி தனியாக உள்ளனர். அப்படியே சிலர் தங்கள் மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தாலும் அங்கு கிடைக்கும் ஓரப்பார்வை, அந்நியர் என்ற பார்வையை அனுபவித்து சமூக கைதியாக இருக்கிறார்கள். இதையெல்லாம் கள்ள திருமணம் செய்த மலகழிவுகள் வெளிப்படுத்துவார்களா..??
பெற்றோர் அனுமதியோடு கள்ள திருமணம் செய்தவர்கள் கூட உண்மையில் நிம்மதியாக இன்று கொண்டாடி உள்ளார்களா..??

தீரன் சின்னமலை

தீரன் சின்னமலைசில அரிய தகவல்கள்

• தீரன் சின்னமலை என்ற நபரே கிடையாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் தீரன் சின்னமலை எனும் தீர்த்தகிரி சக்கரை உத்தம காமிண்ட மன்றாடியார் குறித்த கல்வெட்டுகள் மூன்றும், பிரிட்டிஷ் கைபீதுகள் மூன்றும் ஆதாரங்களாக உள்ளன. அவர் குறித்த வாய்மொழி வரலாற்று தகவல்கள் கொங்கு நாடெங்கும் பரவி கிடக்கிறது. கும்மிப்பாடலும் உண்டு.

• நாட்டின் சுயாட்சிக்காக தீர்த்தகிரிக் கவுண்டர் காலத்தில் போராடியவர்களில் பெரும்பாலும் மன்னர்களே. ஆனால் கொங்கதேசத்தைப் பொறுத்தவரை ஒரு சாமானிய வெள்ளாள குடும்பத்தில் பிறந்து தன் வீரம், திறமை, மக்கள் சேவையால் ஆட்சி அதிகாரத்தை பிடித்து பட்டக்காரரராக உயர்ந்தவர் தீர்த்தகிரிக் கவுண்டர். மன்றாடியார் என்ற பட்டம் இவரின் தியாகம் வீரத்தால் கிடைத்தது, பரம்பரை உரிமையால் அல்ல. பரம்பரை உரிமையாக இவரது பெரியப்பாவே பட்டத்துக்கு உரியவர்; ஆயினும் பின்னாளில் மக்கள் செல்வாக்காலும் வீரத்தாலும் தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டவர் ஆவார். 

• கொங்கு வெள்ளாளரின் கொடி பொன்மேழிக்கொடி. எனினும், பயிர கூட்டத்தின் தனிக்கொடி அன்னப்பறவை பொறிக்கப்பட்ட அன்னக்கொடி. தீர்த்கிரியின் கொடியும் அதுவே.

• அதேபோல வெள்ளையர்களுக்கு ஜால்ரா அடித்த சிலர் தீர்த்தகிரி கவுண்டரை எதிர்த்தனர். சிலர் அவரைக் காட்டிக் கொடுத்தனர். வெள்ளைக்காரர்கள் படையெடுக்க வழி கொடுத்தது, படை கொடுத்தது என்று பலவாறு துரோகத்தை செய்தனர். சிலர் தனிப்பட்ட முறையில் பிடித்து கட்டி வைத்து அடித்தனர் (அடித்தவன் தலையை தீர்த்தகிரி மறுநாளே வெட்டி வீசிவிட்டார் என்பது வேறு விஷயம்). சமையல்கார நல்லையன் செய்த துரோகத்தை விட சில அயோக்கியர்கள் செய்தது மாபெரும் தேசத்துரோகமாகும். இன்றளவும்கூட தீரன் சின்னமலையின் தியாகத்தை தரக்குறைவாக பேசுபவர்கள் உண்டு. தான் அதிகாரத்தை பிடித்தபோது குற்றவாளிகள் சிலரை பட்டக்காரன் என்ற பதவியில் இருந்து பதவிநீக்கம் செய்தார் சின்னமலை. இருவரை வெட்டி கொன்றார். தீரன் சின்னமலையை கொள்ளையன் என்றும் கொலைகாரன் என்றும் பட்டக்காரர்கள் எழுதிக் கொடுத்த கைபீது ஆவணங்கள் இவற்றிற்கு ஆதாரமாக அரசு ஆவணங்களாக இன்றும் உள்ளது. 

• தீர்த்தகிரி சர்க்கரை கவுண்டரின் அக்காவை மணந்தவர் வெள்ளோடு சாத்தந்தை கூட்ட உலகுடையார். இவரே காங்கயம் பட்டாலியில் போற்பயிற்சிக்கு காணி வாங்கி முன்னின்று உதவி செய்தவர் (மாமன் துணை இருந்தால் மலை ஏறலாம்!)• தம்பா கவுண்டர் என்பது தீர்த்தகிரி சர்க்கரை உத்தம காமிண்ட மன்றாடியாரின் இன்னொரு பெயர்.

• தீரன் சின்னமலை "தீர்த்தகிரி சக்கரை உத்தம காமிண்ட மன்றாடியார்" என்று குறிக்கப்பட்ட கல்வெட்டு சிவன்மலையில் இருந்தது. பட்டக்காரருக்குரிய இந்த பட்டம் வம்ச உரிமையாக வந்ததா இல்லை வீரம் மற்றும் மக்கள் செல்வாக்கால் பட்டம் பெற்ற பல பலரைப் போல தீரன் சின்னமளையும் புதிதாக பட்டம் எற்றாரா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. திருமணம் முடித்து வாரிசுகள் இருந்தால்தான் பட்டாபிஷேகம் செய்யமுடியும் என்ற விதியின்படி, தீர்த்தகிரி சர்க்கரை மன்றாடியாரின் வாரிசுகள் இன்றும் உள்ளனர் என்பது செய்தி. ஆனால் அந்த வாரிசு யார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
• சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் சின்னமலை என்பதும் செவிவழி செய்தியே. தீர்த்தகிரி சின்னமலை என்று அழைக்கப்பட்ட இன்னொரு காரணம், அரச்சலூர் மலை முருகன் பெயர் தீர்த்தககுமாரசாமி. அவர்போருட்டுதான் சின்னமளைக்கும் தீர்த்தகிரி என்று பெயர் சூட்டப்பட்டது. பட்டக்காரரை பெயர் சொல்லி குறிப்பிடக்கூடாது, எனவே சிவன்மலை சென்னிமலை உள்ள கொங்கு சீமையில் சின்னமலை ஆன அரச்சலூர் மலையை குறிக்க வந்த பெயர்தான் இது. இதுவும் கூட செவி வழி செய்திதான்.

• பூந்துறை நாட்டைச் சேர்ந்தோர் தான் தீர்த்த்கிரிக் கவுண்டரை காப்பாற்றினார்கள் என்பதும் ஆதாரமற்றதும், செவிவழிச் செய்தியுமாகும்.
ஆடி 18 அன்று தூக்கில் போடப்பட்டதற்கும் வரலாற்று சான்றுகள் இல்லை. அதுவும் செவி வழி செய்தியே. 


தீரனின் போராட்ட நோக்கம்:

தீர்த்தகிரி சர்க்கரை கவுண்டரின் காலத்தில் தீரன் வேலுத்தம்பி போன்ற சக போராளிகள கடித போக்குவரத்து, கைபீதுகள் மூலமாக அவர்களின் போராட்ட நோக்கங்களை அரிய முடிகிறது. அவை,

•யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தேசமாக தங்கள் மண்ணை பூர்வகுடிகளே ஆள வேண்டும் என்பது. தீர்த்தகிரி கொங்குநாட்டை யாரின் கட்டுப்பாட்டுக்கும் உட்படாத சுதந்திரபூமியாக இருக்க விரும்பினார். வெள்ளையன் உட்பட, மைசூர் சுல்தான்களை முதலில் எதிர்க்கவும் இதுவே கரணம்.

•அன்னியர் தங்கள் நாட்டுக்குள் வந்தால் தங்கள் பெண்கள் கற்பு சூறையாடப்பட்டு பூர்வகுடிகளின் குலம் அழியும். சமூக இன கலப்பு ஏற்பட்டுவிடும். அதற்கு இடங்கொடாமல் இருக்க.

•தங்கள் உயிர் போன்றதும் பாரம்பரிய வரலாற்று ஆன்மீக மையங்களான கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அதன் புராதனம்  சிதைக்கப்படும். அதை தடுக்க

•தங்களின் பசுக்கள் கொல்லப்படும், கொள்ளையடிக்கப்படும். ஒரு நாட்டின் பெண்கள், கோவில்கள், பாதுகாப்பு, பசுக்கள் போன்றவற்றிற்கு அரசனே காவலன். அந்த தர்மத்தின் அடிப்படையில்.

இந்த தினத்தில் கவுண்டர்கள் செய்யவேண்டியது?

•ஒவ்வொரு வீட்டிலும் தீர்த்தகிரி கவுண்டர் படம் மாட்டப்பட்டு, குடும்ப அளவில் அவர் வணங்கபடுவது நம் சமூக வழக்கமாக வேண்டும். குழந்தைகளுக்கு அவரின் வரலாற்றோடு நம் சமூக பெருமைகளையும் சொல்லி தருவதால் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.

•அவரின் உன்னத நோக்கங்கள் நிறைவேற வேண்டும். மிக முக்கியமாக கொங்குநாடு தனி மாநிலம்.

•அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நம் கோவில்களை மீட்க வேண்டும். வெள்ளையன்/இஸ்லாமியர் அன்று நம் கோவில்களுக்கு செய்த அக்கிரமங்களை இன்று அறநிலையத்துறை செய்கிறது. கோவில் சொத்துக்கள் வீணடிக்க/கொள்ளையிட படுகிறது. கோவிலின் புராதனம், கல்வெட்டு போன்றவை சிதைக்கப்பட்டு பழமையான சிலைகள், தூண்கள் புனரமைப்பின்பேரில் கடத்தபடுகின்றன. அதை நிறுத்த கோவிலின் முக்கியத்துவம் உணர்ந்து இளம் தலைமுறை கோவில் நிர்வாகத்தில் பங்கெடுக்க வேண்டும்.

•நாமக்கலில் சில கவுண்டர்கள் வெக்கமே இல்லாமல் பசுக்களை கடத்த வண்டி அனுப்பி சம்பாதிக்கிறார்கள். நம் கொங்கு நாட்டு பசுவினங்களை காக்க வேண்டும். பசுக்களை கடத்த வண்டி தராமல் இருப்பதோடு, கடத்துபவர்கள லாரிகளை மடக்கி கடுமையாக தண்டிக்க வேண்டும்.பஞ்சாபில் செய்வது போல. (குறிப்பு: பசுக்கள் வண்டியில் கொண்டுபோதல் சட்டப்படியும் குற்றம்)

•நம் பெண்கள் பிற சாதி-மதத்தவரோடு திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். அதற்க்கு நம் சமூக மரபுகளை சிறு வயது முதலே சொல்லித்தந்து பின்பற்ற செய்ய வேண்டும். குல தெய்வங்கள், குலங்கள், குருக்கள், விவசாயம், பசுக்கள், பட்டக்காரர்கள் நம் குடிகள் போன்ற விஷயங்கள் அவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும். கொங்கு நாட்டின் வரலாறு, புவியியல், சமூக கல்வி போன்றவை அனவைரும் அறிந்திருக்க வேண்டும்.

அரசுக்கு கோரிக்கைகள்:

•தீரன் சின்னமலை வரலாறு பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும்.

•தீரனாரோடு சேர்ந்து தியாகம் செய்த அனைவரின் வரலாறும், படங்களும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு மணிமண்டபத்திலும் அனைத்து அரசு நூலகங்களிலும் வைக்கப்பட வேண்டும்.

•கொங்கு நாட்டை சேர்ந்த ஊட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் கட்டபொம்மன் சிலை வைத்தது போல, கோவை போலிஸ் பள்ளியிலும், அமராவதி சைனிக் பள்ளியிலும் தீரனார் சிலை வைக்கப்பட வேண்டும்.

•கொங்கு மக்களின் கோரிக்கையான கொங்கு நாடு தனிமாநிலம், அறநிலையத்துறை அபகரித்த எண்கள் பாரம்பரிய கோவில்கள போன்றவற்றை எங்களுக்கு திரும்ப தந்துவிட வேண்டும்.

•பசுக்களை கடத்துவோரை தடுத்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.

•பிற சாதி பெண்களை காதல் என்று நாடகமாடி சொத்து பறிக்கும் கும்பல்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்க்கு ஆயுதமாக பயன்படுத்தப்படும் வன்கொடுமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates