Trending

Thursday, 31 October 2013

கொங்கு தீபாவளி--தீபாவளி என்பது நரகாசுரனுக்கு நாம் கொடுக்கும் திதி. பூமாதேவியின் மைந்தனான நரகாசுரன் தான் இறக்கும் தருவாயில் பூமியில் பிறக்கும் மக்கள் அனவைரும் தான் இறந்த நாள் அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வதால் (அன்று மட்டும் வெந்நீர் கங்கையாகும்) கர்ம வினைகள் அகன்று போகும் என்று வரம் பெறுகிறார். (கங்கை பனிகட்டியோடு வெப்பம் சேர்வதால் நீராக மாறுகிறது, மற்ற ஆறுகள் நீர்மேகத்தொடு குளிர்ச்சி சேர்வதால் நீராகி ஓடி வருகிறது. கங்கை நீரில் எப்போதும் உள்ளே அக்னி உள்ளது). மேலும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் கங்கா குலத்தவர்கள் என்பதை நினைவில் நிறுத்தவும். கங்கா ஸ்நானம் மிக நல்லது.

-- நரகாசுரன் இறந்தது சதுர்த்தசி அன்று-அமாவாசைக்கு முந்தைய தினம். நரகசதுர்தசி. அதனால் தான் விடியும் முன்பே குளித்து வெள்ளை வேட்டி அணிந்து 'வீட்டில் செய்த'  பலகாரங்களை படைத்து தர்ப்பண கடனை முடிக்கிறோம். 

--நல்லெண்ணெய் கொண்டு தீபங்கள் அதிகாலை நேரம் ஏற்றப்பட வேண்டும்.

-- கைத்தறியில் நெய்த வெள்ளை வேட்டி அணிவதே பண்டிகையின் சரியான முறையாகும். ஏனெனில் அதுதான் திதியின்போது உடுத்துவேண்டிய உடை. அதை விட்டுவிட்டு Louis Phillippe போட ஓட கூடாது. நரகாசுரன் அதை கேட்கவில்லை.

-- தீபாவளி அன்று இறைவனுக்கு படைக்கும் பலகாரங்கள் வீட்டில் செய்ய வேண்டும். கடையில் விற்பதை படைக்க கூடாது.

-- தீபாவளி பட்டாசு வெடிப்பது, பாரம்பரியமாக நம் காணியாச்சி கோவில்களில் தான். உள்ளூர் கொங்கு உப்பிளியர் தான் அன்றைய கெமிஸ்ட்ரி. அவர்கள் குலத்தொழில் சாரை மண்ணில் இருந்து உப்பு காய்ச்சுவது; அப்படி காய்ச்சும் போது உப பொருளாக வேடியுப்பும் கிடைக்கும். அதை கொண்டு வான வெடி-கல் உடைக்கும் வெடி-போருக்கு குண்டுகள் செய்வது அன்றைய வழக்கம். வெள்ளைக்காரன் காலத்தில் இது பெரிய வணிகம் ஆனால் அவனாலேயே முடக்கப்பட்டது. அமாவாசை தினமான தீபாவளி அன்று காணியாச்சி கோவில் சென்று நாட்டு வெடிகள் வெடிப்பார்கள். அந்த வெடிகள் சுற்று சூழலை பாதிக்காது. மாறாக மழை பெய்ய வழி வகை செய்யும்.

-- கொங்கு சமூகத்தில் அசைவ உணவு பழக்கம் கிடையவே கிடையாது. ஏன் எந்த வெள்ளாளர் சாதிக்கும் இருக்காது. இது இடையில் செயற்கையாக நுழைந்தது/திணிக்கபட்டது; இனி கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும். அசைவ உணவால் நம் குணமும் அதனால் அனைத்தும் மாறும். அசைவ உணவுகளை நாம் பொதுவாகவே உண்ண கூடாது. அதிலும் தீபாவளி அமாவாசை அன்றுதான் வரும். தீபாவளிக்கு மறுநாள் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகும். எனவே நிச்சயம் அசைவம் தவிர்க்க வேண்டிய பண்டிகையாகும். 


Thursday, 24 October 2013

கொங்கு வெள்ளாளர் பெருமை2000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் ‘வேள்’ என்றும் ‘வேளிர்’ என்றும் சிறப்பிக்கப்பட்டவர்கள் வேளாளர்கள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது உலக வழக்கு. உயிரனைய உழவுத் தொழிலை வேளாளர்கள் செய்வதால் ‘வேளாண்மை’ எனப்பட்டது. ‘வேளாண்மை’ என்ற சொல்லுக்கு உழவுத் தொழிலால் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களை தாமும் உண்டு பிறர்க்கும் அளிக்கும் உபகாரத்தைச் செய்பவர்கள்.


வேளாளர்கள் ‘தொல்குடி’, தொன்முதிர்குடி’ என்று குறிக்கப்பட்டனர். தமிழக மூவேந்தர்கட்கு மகட்கொடை கொடுக்க உரிமை படைத்தவர்கள் வேளாளர்கள். அரசர்கட்கு முடிசூட்டும் உரிமை படைத்தவர்கள்.

கொங்கு வேளாளர்கள் நாடு, மக்கள், கால்நடை ஆகியவற்றைக் காப்பவர்கள் என்ற பொருளில் காமிண்டர் என்ப்பட்டப் பெயர் பெற்றனர். காமிண்டர் என்ற பெயரே காலப்போக்கில் ‘கவுண்டர்’ என்று மாற்றம் பெற்றது. கொங்கு வேளாளர்கள் 96 கீர்த்திகள் படைத்தவர் என்பர். கொங்கு வேளாளர் குலங்களில் பல பெயர்கள் தமிழக மூவேந்தர்களையும், சங்க காலச் சிற்றரசர்களையும் நினைவுப்படுத்தும் பெயர்களாக உள்ளது சிறப்புக்குரியதாகும்.

சேரன், வில்லி, வில்லம்பர், அந்துவன், பனையன், சோழன், நேரியன், பாண்டியன், வேம்பன், மீனவன் ஆகிய குலப்பெயர்கள் தமிழக மூவேந்தரோடு தொடர்பு உடையவை. பதுமன், பண்ணன், மலையர், காரி என்ற குலப் பெயர்கள் சங்க காலக் குறுநில மன்னர்கட்குரிய பெயர்களாகும். தொடர்பு எதுவும் இல்லாமல் குலப் பெயர்கள் அமையாது. எனவே, கொங்கு வேளாளர் வரலாற்றுச் சிறப்பு ஆராய்வதற்கு உரியதாகும்.

மூவேந்தர்களின் ஆட்சி நிலைக்கக் கொங்கு வேளாளர்கள் பேருதவி புரிந்துள்ளனர். காலிங்கராயன், பல்லவராயன், தொண்டைமான், கச்சிராயன், மூவேந்தவேளான், வாணவராயர், காடவராயன் என்ற உயர் பட்டப் பெயர்கள் கொங்கு வேளாளர் தலைவர்கட்கு அரசர்களால் அளிக்கப்பட்டுள்ளன. கொங்கு வேளாளர் சமூகத் தலைவர்கள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள் பல. கொங்கு வேளாளர் பெரும்புகழ் கூறும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பட்டயங்கள் பலப்பல. மேற்கண்ட அனைத்தும் குடத்துள் இட்ட விளக்காகவே உள்ளன. இவற்றை உலகறியச் செய்ய வேண்டும்.

தூய பழக்க வழக்கமும், உயர் பண்பாடும், ஒழுக்கமும், கட்டுப்பாடும், நேர்மையும், வாய்மை தவறாமையும் உள்ள சமுதாயம் கொங்கு வேளாளர் சமுதாயம். நாடுகள் பிரித்து எல்லைகள் வகுத்து தலசுய ஆட்சி முறையை அன்றே நடைமுறைப்படுத்திய சமுதாயம் கொங்குச் சமுதாயம். அதன் சிறப்புக் கருதி கொங்கு நாட்டை வென்று அடிமைப்படுத்திய பிற அரசர்கள் கூட அந்த ‘நாடு’ ‘நாட்டார்’ அமைப்பை மாற்றவில்லை. தங்களுக்கென்று ‘மேழிக்கொடி’ படைத்து, தாங்கள் கூடும் அவைக்கு ‘சித்திரமேழிச் சபை’ என்று பெயரிட்டு ஆவணப்படுத்திய பெருமக்கள் கொங்கு வேளாளர் பெருமக்கள்.

பதினெட்டு வகையான குடிபடைகளை ஆதரித்து சமய விழா, சமுதாய விழா, குடும்ப விழாக்களில் அனைவரையும் பங்கு கொள்ளச் செய்து தாராளமாக அவர்கட்குத் தானியம் வழங்கி ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ பொதுவுடைமைச் சமுதாய வாழ்வை நடைமுறைப் படுத்தியது கொங்குச் சமுதாயம். பொதுவாக அவர்களைப் ‘பணி மக்கள்’ என்று மக்கள் உரிமையோடு அழைத்தது கொங்குச் சமுதாயம்.


கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வேளாளர்கள், குலக்காணியூர், குலதெய்வம், குலகுரு, காணிப்புலவர்கள் பெற்று வாழ்ந்த ஒரே சமுதாயம் தமிழகத்தில் கொங்குச் சமுதாயம் ஒன்றேயாகும்.‘ஊருக்குக் ‘கொத்துக்காரர்’, நாட்டுக்குப் ‘பட்டக்காரர்’, சடங்கு கட்கு ‘அருமைக்காரர்’ ஆகியோரை நியமித்து நீதிநெறிக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த சமுதாயம் கொங்குச் சமுதாயம்.


சமய நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் உயிர் மூச்சாகக் கொண்டவர்கள் கொங்கு வேளாளர்கள். அவர்கள் வழி படும் குப்பியண்ணன், சாம்புவன் தாழ்த்தப்பட்டவர்கள்.

காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். தாங்கள் முன்னோர்களைப் போற்றி வழிபடும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். கொங்குச் சமுதாயம் பற்றி தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் உள்ள ஆய்வாளர்கள் பலர் ஆய்ந்து பற்பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளனர். அவர்களில் சிலர் கீழ்க்கண்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர்.


கொங்கு வேளாளர்கள் நல்ல தேகபலம் உடையவர்கள்; மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர்கள்’. ‘கொங்கு நாட்டார் இனம் மற்ற நாட்டு மக்களை விட வேறு பட்டதாகவே இருக்கும். சொல் ஒன்று வெட்டு ஒன்று என்றே இருப்பார்கள்’. ‘தங்கள் குடும்பத்திற்கோ, குலத்திற்கோ வரும் இழிவைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ‘உயர்ந்த கட்டுப்பாட்டுடன் இயங்கிய சமூகம்’ ஒரு புலவர் வேளாளர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்களைத் தொகுத்துக் கூறுகிறார்.அவர்களுள் கம்பரே முதலிடம் பெறுவதையும் காணுகிறோம்.அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
கம்பர்செந் தமிழும் இரட்டையர் மொழிந்த


கட்டளைக் கலித்துறைக் கவியும்

கனிந்ததெள் ளமிர்தம் எனப்புக ழேந்தி

களித்திடும் கலம்பகத் தமிழும்
பண்புசீர் ஒட்டக் கூத்தனாம் புலவன்
பகிர்ந்திடும் பைந்துளா யிரமும்
பசுந்தமிழ் தேறு வாணியர் தாசன்
பரிவுடன் புகன்றசெங் கவியும்
செம்பியன் கவியும் வழுதிமார் கவியும்
சேரமான் செப்பிய கவியும்
தேவர்தன் சிறையை மீட்டவேள் குமரன்
தெளிவுற இசைத்தவெண் பாவும்
சம்பந்தர் கவியும் அவ்வைதன் தமிழும்
சங்கத்தார் செப்பிய தமிழும்
தவத்தினால் மிகவும் புகழ்கொண்ட வேளாளர்
தகைமையைச் சாற்றுதற்கு எளிதோ


வேளாளர் புகழ்

வேளாளர் புகழ் உரைக்க இதுவரை வந்த நூல்கள்.. போதுமோ..??

கம்பர்செந் தமிழும் இரட்டையர் மொழிந்த
கட்டளைக் கலித்துறைக் கவியும்
கனிந்ததெள் ளமிர்தம் எனப்புக ழேந்தி
களித்திடும் கலம்பகத் தமிழும்
பண்புசீர் ஒட்டக் கூத்தனாம் புலவன்
பகிர்ந்திடும் பைந்துளா யிரமும்
பசுந்தமிழ் தேறு வாணியர் தாசன்
பரிவுடன் புகன்றசெங் கவியும்
செம்பியன் கவியும் வழுதிமார் கவியும்
சேரமான் செப்பிய கவியும்
தேவர்தன் சிறையை மீட்டவேள் குமரன்
தெளிவுற இசைத்தவெண் பாவும்
சம்பந்தர் கவியும் அவ்வைதன் தமிழும்
சங்கத்தார் செப்பிய தமிழும்
தவத்தினால் மிகவும் புகழ்கொண்ட வேளாளர்
தகைமையைச் சாற்றுதற்கு எளிதோ

Monday, 21 October 2013

புராதன கோவில்கள் திட்டமிட்டு சிதைப்பு: கொங்கு கோவில்களும் அடக்கம்

                          

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பல கோவில்களில் புனரமைப்பு, சீரமைப்பு, கும்பாபிசேகம் செய்கிறோம், வசதி செய்து தருகிறோம் என பல்வேறு காரணங்களை சொல்லி கோவில்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகின்றன. பல கோவில்கள் மொத்தமாக இடிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற கோவில்கள் முதல் கிராம கோவில்கள், குலதெய்வ கோவில்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை, தனியார் கோவில்கள் என அனைத்து கோவில்களும் இந்த சதிக்கு பலியாகி வருகின்றன.

இங்கே நடக்கும் தவறு என்ன..?

கோவிலின் பழமையும் பாரம்பரியமும் ஒரு அளப்பரிய சொத்து. அதன் புராதனம் கட்டிடக்கலை, கலை நயமிக்க வேலைப்பாடுகள் போன்றவை விலைமதிப்பற்றவை. கோவிலின் ஆன்ம சக்தி மற்றும் அதன் அதிர்வலைகள் அங்குள்ள கோவில் அமைப்பு, ஸ்தானம் முதலிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது. கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் சாசனங்கள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை அழிப்பதன் மூலம் கோவிலின் புராதனமும், வரலாற்று ஆதாரங்களும், கோவிலின் ஆன்ம சக்தியும் அழிக்கப்படுகின்றன.

யார் செய்கிறார்கள்?
இந்த மாபியா பல மட்டங்களில் இருக்கிறது. வெளிநாட்டு மதவாதிகள்-தொண்டு நிறுவனங்கள், சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றிற்கு ஏஜென்ட்களாக செயல்படும் சில பெரிய மனிதர்கள், சிறிய குறைகளை பெரிதுபடுத்தி இடிக்க சொல்லும் சில சாமியார்கள், கேரள மந்திரவாதிகள், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு துணை போகும் ஸ்தபதிகள், இவர்கள் அறிவுரையில் இயங்கும் சில அறங்காவலர்கள் போன்றோர் ஆவர்.

ஏன் செய்கிறார்கள்?

இந்திய பாரம்பரியத்தையும் தொன்மையையும் கண்டு பொறாமை

மதம் பரப்பும் நோக்கத்திற்கு இந்தியாவின் பாரம்பரிய தர்மம் சார்ந்த வாழ்க்கை நெறி இடையூறாக உள்ளது. அதற்கு அடித்தளமாக உள்ள கோவில்கள், சமயநெறிகள், பண்பாட்டு வழக்கங்கள் போன்ற ஆணிவேர்களை அறுக்க நினைக்கும் தொலை நோக்கு திட்டத்தின் ஒரு பகுதி – கோவில்கள் அழிப்பு

கலாசார உலகமயமாக்கலுக்கு (அமெரிக்கமயமாக்கலுக்கு) பாரமரியம் ஒரு தடையாக உள்ளது. அதை அழிக்க வெளிநாட்டு பெருமுதலாளிகளும்-தொண்டு அமைப்புக்களும்-மதவாத சக்திகளும், எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து மக்கள் சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருப்பது போல, பாரம்பரிய மரபுகளை திரிக்க நடத்திகொண்டிருக்கும் நாடகத்தின் ஒரு பகுதி. கலாசார மாற்றத்தால் இந்திய சமூகத்தை பெரு நுகர்வு சமூகமாக மாற்றி தங்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பன்மடங்கு பெருக்கும் திட்டம்.

இந்தியாவின் வரலாற்றை திரிக்க நினைக்கும் வெளிநாட்டு-உள்நாட்டு சக்திகளுக்கு இடையூறாக, உண்மை வரலாற்றுக்கு சான்றாக இருக்கும் கோவில் கல்வெட்டுக்களும் சாசனங்களும் உள்ளன. எனவே அவற்றை அழிப்பது அவசியமாகிறது.

இந்திய சிற்ப வேலைகளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. கடத்தி செல்வோரின் நோக்கமும் அதுவே.

ஸ்தபதிகளுக்கு இருப்பதை சீரமைப்பதை விட இடித்து கட்டினால் வருமானம் அதிகம். அதன் பொருட்டு அவர்களும் துணை போகிறார்கள்.

•சில அறங்காவலர்கள்-பெரிய மனிதர்கள் விளம்பர மோகத்தால் தங்கள் பெயர் கோவில் கல்வெட்டில் இடம்பெற பழமையான கோவிலை இடித்து புதிதாக கட்ட நன்கொடை அளித்து தூண்டுகிறார்கள். கோவில்களை தங்கள் கவுரவம் வளர்க்கும் இடங்களாக எண்ணியதன் விளைவு.

பல இடங்களில் ஸ்தபதிகளும் அறங்காவலர்களும் இந்த கோவில் சிதைப்பு கும்பலின் பணத்திற்கு-சதிக்கு மயங்கி துணை போவதும் உண்டு.

மன்னர்களும், பிரபுக்களும், கோவில் பக்தர்களும் கோவில் சொத்துக்களாகவும், ஏரி/குளம்/மண்டபம் போன்ற பொது சொத்துக்களாகவும் அளித்த கொடைகளுக்கு சான்றாக கல்வெட்டுக்கள், கோவில் ஆவணங்கள் உள்ளன. தற்போது கோவிலையும், கோவில்-பொது சொத்துக்களையும் கொள்ளையிடும் மாபியாவுக்கு சான்றுகளை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எப்படி செய்கிறார்கள்?

முதலில் கோவிலில் அது பின்னம், இது குறை என்று மாற்றங்களை சொல்லும் இந்த மாபியா குழு, கோவில் குழுவினரை தெய்வ குற்றம் என்பது போல பயமுறுத்தி விடுவர். அதை சீர்படுத்தும் முறைகளை சொல்லும்போது கோவிலுக்கு ஒவ்வாத மாற்றங்களை சொல்லி, புராதன சின்னங்களை அப்புறப்படுத்துவர். கேட்பாரற்று கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கி சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோவில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோவிலுக்கு பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்.

சில இடங்களில் கும்பாபிசேகம் செய்கிறேன் என்று பழமையான கோவிலையே இடித்து தள்ளிவிட்டு ஆடம்பரமாக கோவில்கள் என்னும் பெயரில் கட்டிடங்கள் கட்டுகிறார்கள்.

சுத்தபடுத்துகிறேன் என்னும் பெயரில் கோவிலின் சுவர்களிலும், தூண்களிலும் சேன்ட் பிளாஸ்டிங் எனப்படும் (Sand Blasting) எனப்படும் முறையால் மணல் துகள்களை மிகை அழுத்த காற்றின் மூலம் வேகமாக அடிக்கச்செய்வர். அதனால் கல் சுவரும், கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கொத்தி விடப்பட்டது போல விகாரமாகிவிடும். காலப்போக்கில் வலுவிழந்து சிதைந்து விடும்.

வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலா தளம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்.

கருவறைக்குள் டைல்ஸ் ஓட்டுவது, கருவறைக்குள் போகஸ் லைட் போட்டு மூலவர் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது, கற்சுவர்களுக்கு மேல் கிரானைட் ஓட்டுவது, கோவில் விக்கிரகங்களின் இடங்களை மாற்றி வைப்பது (ஸ்தான பேதம்) என கணக்கில் அடங்காத தவறுகளால் கோவிலின் ஆன்ம சக்தி சிதைக்கப்படும்.

இப்படி என்னென்ன வழி இருக்கிறதோ அத்தனை வழிகளாலும் ஆலயங்களின் சாநித்யம் சிதைக்கப்படுகிறது.

சில உதாரணங்கள்

o தஞ்சை பெரிய கோவில் – கல்வெட்டுக்களும், புராதன சிற்பங்களும் சீரமைப்பு என்ற பெயரில் நாசம் செய்யப்பட்டன (2008)
(http://janajaati.blogspot.in/2008/08/imminent-danger-to-thanjavur-big-temple.html)

o திருவொற்றியூர் கோவில் - சிலைகள் உடைக்கப்பட்டு, அகற்றப்பட்டு, கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டு அராஜகம் அரங்கேறியது (2013)
(http://www.dinamalar.com/news_detail.asp?id=789444)

o காளமங்கலம் குலவிளக்கம்மன் கோவில் – கோவிலை விளம்பர தளமாக, மாற்றினார். ஆகம விதிமீறல்கள் தலைவிரித்தாடியது. கோவில் கதவில் ஈ.வெ.ரா. சிற்பங்கள், கோவிலுக்குள் அறங்காவலர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் என அநியாயங்களின் உச்சம் அரங்கேறியது.
(http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2847)

o சேவூர் வாலீஸ்வரர் கோவில் – கல்வெட்டுக்கள் சேன்ட் பிளாஸ்டிங் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.
(http://sevurwar3.blogspot.in/search/label/சேவூர்%20போர்)

o சுமார் முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து புராதன சிலைகளை கடத்தி விற்று வந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வழக்கு என்னவாயிற்று, கடத்தப்பட்ட சிலைகளின் நிலை பற்றிய வலுவான விசாரணைகள் இன்றி வழக்கு அமைதியாக இருக்கிறது. முறையாக தோண்டப்பட்டால் பல முக்கிய புள்ளிகளும் பல்லாயிரம் கோடி புராதன சொத்துக்களும் மீட்கப்படும்
http://www.aazham.in/?p=1718
http://chasingaphrodite.com/tag/art-of-the-past/

o சிலை கடத்தல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் தங்கைக்கு உள்ள தொடர்பை பற்றி திரு.சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் ஏற்கனவே மேடைகளில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=zOgpYsUf6Aco இன்றளவும் வாரம் இரு கோவில்களிலாவது கோவில் கலசங்கள் திருடு போகின்றன.

இவை உதாரணங்கள் மட்டுமே. விலைமதிப்பற்ற பல்வேறு ஆபரணங்கள் உலோக சிலைகள் கடத்தப்டுகின்றன. சமீபத்தில் மதுரை கோவிலுக்கு சொந்தமான ரூ.66,000 கோடி மதிப்புடைய மரகத லிங்கம் காணாமல் போனது தமிழகம் முழுக்க பேரதிர்ச்சியை உருவாக்கியது. இவையன்றி எத்தனையோ பெரிய கோவில்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவை முதற்கொண்டு, கிராம குலதெய்வ கோவில்கள் வரை இந்த மாபியா கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகிறது.

மக்கள் செய்யவேண்டியது

நூறு ஆண்டு பழமையான கோவில்கள் இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ-சிற்பங்கலையோ அழிப்பதோ, சேன்ட் பிலாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத்துறை முதல் கோவில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.

கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.

சேன்ட் பிளாஸ்டிங் மூலமோ இல்லை பிற பணிகள் மூலமோ கோவிலில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவை சேதப்படுத்துவதை பார்த்தால் உடனடியாக தடுக்க வேண்டும். தன்னார்வ அமைப்புக்கள், தொல்லியல்துறை, உள்ளூர் நிர்வாகம் என எவ்வளவு தூரம் தகவல் தெரிவிக்க முடியுமோ தெரிவித்து குற்றங்களை தடுக்க வேண்டும்.

கோவிலின் தொன்மையான தூண்கள் சுவர் கற்கள் சிற்பங்கள் போன்றவற்றை எவரேனும் எடுப்பதை கண்டால் உடனடியாக தடுக்க வேண்டும்.

கோவிலின் கருவறை இடம் மாற்றம் செய்யக்கூடாது. கருவறைக்குள் கழிப்பறை போல டைல்ஸ் ஒட்டக்கூடாது. கோவிலின் கருவறைகளின் நீள-அகல-உயரங்களை மாற்றம் செய்யக்கூடாது. பழமையான சிலைகளை அகற்ற அனுமதிக்க கூடாது. கருவறைக்குள் லைட் போடக்கூடாது.

செயற்கை சாம்பிராணி, கெமிக்கல் கற்பூரம், சீமை-கலப்பின மாடுகளின் பால், தயிர், நெய், கெமிக்கல் விபூதி போன்றவற்றை கோவிலில் பயன்படுத்த கூடாது. நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பசுஞ்சாணத்தால் செய்யப்பட விபூதி, இயற்கை கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அரசாங்கம் செய்ய வேண்டியது

தற்போது நடைபெற்று வரும் அனைத்து கோவில் வேலைகளையும் உடனடியாக நிறுத்த அரசாணை பிறப்பித்து, அக்கோவில்களில் நடக்கும் பணிகள் குறித்தான ஆய்வு தொல்லியல் துறை, தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் ஆன்மீக அமைப்புக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கோவில் ஊழியர்கள், நிர்வாகிகளுக்கு கோவிலின் வரலாறு, தொன்மை குறித்த பயிற்சி அளிக்கபட்டிருக்க வேண்டும். கோவிலின் முகப்பில் கோவிலின் வரலாறு, புராதனம் போன்ற தகவல்களை தெரிவிக்க தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

சிலை கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து வேரோடும்-வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் நடந்த கோவில் வேலைகளை கணக்கெடுத்து அங்கு நடந்த மாற்றங்களை கணக்கெடுத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்.

தொல்லியல்துறை ஆவணப்படுத்திய அனைத்து புராதன சின்னங்களையும் மறு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க ஆணையிட வேண்டும்.

தமிழக கோவில்களின் நிர்வாகத்தை-கட்டுப்பாட்டை விட்டு அறநிலையத்துறை வெளியேறி ஆன்மீக குழு, கோவிலின் பாரம்பரிய நிர்வாக குழுவினரிடம் ஒப்படைத்து அரசு கண்காணிப்பு பணியை மட்டுமே செய்ய வேண்டும்.

புதிய கோவில் பணிகள் வல்லுனர் குழு, தொல்லியல்துறை, ஆன்மீக அமைப்புக்கள், பக்தர்கள் பிரதிநிதிகள் என ஒரு மேலாண்மை குழுவின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையில் நடைபெறச்செய்ய வேண்டும்.

தற்போது நடக்கும் வேகத்தில் கோவில் அழிப்பு பணிகள் தொடர்ந்தால் வருங்காலத்தில் சுற்றுலா தளங்கள் இருக்கும்; கோவில்கள் இராது. இருந்தாலும் அதில் சாநித்யம் இராது. மாலிக் கபூர் ஏற்ப்படுத்திய சேதத்தை விட கொடூரமான முறையில் தற்போதைய நவீன மாலிக் கபூர்கள் செய்கிறார்கள். அரசு-மக்கள் என அனைத்து தரப்பும் கைகோர்த்து போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்த பாடுபடுவது மிக அவசியமாகும். இல்லையேல் நம் முன்னோர்களில் லட்சகணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பாடுபட்டது பலனின்றி போவதோடு, அடுத்த தலைமுறை வரலாற்று அடையாளம் தொலைத்த அனாதைகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.

தீர்வு

புராதனம் சிதையாமல் கோவில்கள் கட்டவோ/புதுப்பிக்கவோ/புனரமைக்கவோ நினைப்போர் "Reach Foundation" தொடர்பு கொள்ளவும். அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் தருவார்கள். ரீச் பவுண்டேசன் முகவரி:

Office: A-1/3,Century Enclave, 54, Kalakshetra Road, Thiruvanmiyur, Chennai 600041

Contact Numbers: +91 9444-441-181/ 9840-762-326

Email: reach.foundation.india@gmail.com
http://www.conserveheritage.org/
http://templesrevival.blogspot.com/
http://reachhistory.blogspot.com/

(உங்களுக்கு தெரிந்த கோவில் நிர்வாகிகளுக்கு இந்த விஷயத்தை பற்றி சொல்லி இந்த முகவரியை கொடுக்கவும்)

(Thanks: http://www.tamilhindu.com/2013/10/ancient-temples-routiney-defaced-in-tn/)


Sunday, 20 October 2013

கொங்கு மக்களின் பெண்ணியம்கொங்கு மக்களின் பெண்ணியம்

கொங்கு சமூக பெண்கள் அடிமைபட்டு கிடப்பது போலவும், புதிதாக இன்று முளைத்த சிலர் சுதந்திரம் வாங்கி தர முயற்சிப்பது போலவும் காட்டி கொள்கிறார்கள். இது எங்கள் பெண்களை மூளை சலவை செய்து புற்ச்சி-முற்போக்கு என்னும் பெயரால் டிவி-பத்திரிகை மூலம் எங்கள் மரபுகளை உடைத்து காதல் கள்ள திருமணங்களுக்கு தூண்டுவது, தங்கள் சாதிக்கு குறுக்கு வழியில் சொத்து தேடும் சதிவேலை.

இந்த திடீர் பெண்ணிய புற்ச்சியாளர்களுக்கு கொங்கு நாட்டு பெண்ணியம் குறித்து சில தகவல்கள். அக்காலம் முதல் தற்காலம் வரை.

1.அண்ணன்மார் வரலாற்றில் தாமரை நாச்சியார் தன் அப்பா-அண்ணனுக்கு சவால் விட்டு கணவனோடு உழைத்து குடுபம்த்தை முன்னெடுத்து சென்று ஜெயித்து காட்டியவர். மரபுப்படி உறவும் உரிமையும் உள்ள குன்னுடையா கவுண்டரை மணக்கும் முடிவை மதித்தது கொங்கு சமுதாயம். குடும்பத்தையும் பண்ணையத்தையும் முன்னெடுத்து சாதித்து காட்டியர் தாமரை நாச்சியார். அதே போல தான் அண்ணன்மார் இல்லாத சமயத்தில் அருக்காணி தங்கமும் அரசு/பண்ணை நிர்வாக பணிகளை கவனித்தார். முக்கிய முடிவுகளையும் எடுத்தார். அண்ணன்மார் மணந்த பெண்களும் அதுபோலவே ஆகும்.

2. காலிங்கராயர் தனக்கு உரிமை உள்ள அத்தை பெண்ணை மணக்க எண்ணியபோது மரபுப்படி உறவு-உரிமை இருந்ததால் அந்த பெண்ணின் முடிவை ஏற்று அங்கீகரித்தது.

3. காலிங்கராயன் வழிவந்த பழனிவேலப்ப கவுண்டர் மகள் தெய்வானை என்பவர். கற்றுத்தேர்ந்த இவரது கூரிய அறிவுத் திறமை அனைவரையும் வியக்கச் செய்ததற்கான சான்று : பாசூர் குருக்கள் அகிலாண்ட தீட்சிதருடன், வெள்ளோடு இராசாக்கோவிலில் முகாமிட்டிருந்த போது தெய்வானை இவருடன் விவாதித்த பாங்கு. அன்றைய சூழலில் பெண் கல்வி-சபைகளில் பங்கேற்கும் உரிமையும் இருந்ததை காட்டுகிறது. பணியாளர்களிடமும், குடிபடைகளிடமும், எளியவர்களிடமும் அன்பு செலுத்தி பலப்பல உதவிகளும் செய்து, அவ்ர்களுக்கு அறங்கூறும் அவ்வையாக இருந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நற்பெயர் பெற்று வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக செப்பேடு இன்றும் ஈங்கூர் புலவன் புதூர் பழனிச்சாமி கவுண்டரிடம் உள்ளது


                                 
4. முழுக்காதன் குல வெள்ளையம்மாவை முதலாகக்கொண்டே அந்த குல வரலாறு துவங்குகிறது. தன் அண்ணன்களிடம் இருந்து பெற்ற சொத்துக்களை கொண்டு தன்னிச்சையாக வாழ்ந்து காட்டினார். அதை அங்கீகரித்து வாழ்த்தி வரவேற்று அவரை தெய்வமாக வணங்குவது கொங்கு சமூகம்.

5. திருமண சடங்குகளில் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கபடுகிறது. ஆண்-பெண் இருபுறமும் சீர்க்காரி என்று ஒரு பெண்ணே பல சீர்களை செய்கிறார். மாப்பிள்ளையின் சகோதரிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சகோதரனுக்கு இல்லை.

6. வேலாத்தாள் என்னும் கொங்கு பெண் படைதிரட்டி சென்று வெல்ல முடியா பகை வென்று வந்துள்ளார். வேலாத்தாளின் தலைமையில் அவருக்கு கீழ் போர்ப்பணியில் கொங்கு ஆண்களும் இருந்தனர். இன்று வேலாத்தாள் தோக்கவாடி வெண்டுவன் குல தெய்வம் (காகத்தலை காளியம்மன்).

                                                 
                                     போர் கோலத்தில் அக்கால கொங்குப்பெண்-குலதெய்வ கோவில் சிற்பத்தில்
7. கன்னிவாடி கன்ன குலத்தினர் தங்கள் வீட்டு பெண் விட்ட சவால் வெற்றி பெற, பல்லவ மன்னனை பகைத்து-மூவேந்தரும் முடி சூடி தந்த பெருமை மிகு கன்னிவாடி ராஜ்ஜியத்தையே துறந்து சென்றனர்.

8. கொங்கு தெய்வங்கள் அனைத்தும் பெண் தெய்வங்களே. வெள்ளையம்மாள், வீரமாத்தி, வேலாத்தாள், நல்லம்மா போன்றோர் கண் முன்னே வாழ்ந்து தெய்வங்கள் ஆன கொங்கு பெண்கள்.

9. ஐவேலி அசதி அவ்வையார், திருச்செங்கோடு பூங்கோதை, சின்னம்மையார், சிவன்மலை வள்ளியாத்தாள், அர்த்தநாரீசுவரர் கோவில் அழகுநாச்சி, பேரூர் துளசியம்மாள் போன்றோர் புகழ் பெற்ற சங்க கால கொங்கு பெண் புலவர்கள். அவர்கள் படைத்த ஏராளமான இலக்கியங்கள் இன்றும் உள்ளது. இது கொங்கு பெண்களின் கல்வி உரிமை மற்றும் சமூக செயல்பாடுகளில் சுதந்திரம் என்பவற்றை காட்டுகிறது.

10. பழைய கோட்டையைப் பாதுகாத்த வான்புகழ் கொண்ட வள்ளியாத்தாள், பெருங்கொடை அளித்த பெரியாத்தாள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குதிரையில் பயணம் செய்து பண்ணைய வேலைகளைக் கவனித்த வஞ்சியாத்தாளின் வாழ்வு போன்றவை கொங்கு பெண்களின் நிர்வாக திறன் சொல்லும். அதை யாரும் எதிர்க்கவோ பழிக்கவோ இல்லை. இந்த பெண்கள் மீது புலவர்கள் புகழ் பாடல் பாடியதும் உண்டு!

11. தாய்போன்ற பூந்துறைத் தெய்வானை, பார்புகழ் கொண்ட பழனியம்மாள், ஈஞ்சம்பள்ளி பச்சையம்மாள் ஈகைத்திறம், சீர்மிகக் கொண்ட சின்னம்மாள், யாரும் அளிக்காத அருங்கொடையாக தாம் அணிந்திருந்த தாலியைக் கழற்றி வழங்கிய சம்பந்தச் சக்கரையார் மனைவி போன்றோர் தங்கள் ஈகை குணத்தால் இன்றும் வரலாற்றில் நிற்பவர்கள்.

12. பாரம்பரிய மரபோடு வாழும்/வாழ்ந்த கொங்கு குடும்பங்களில் ஆணும பெண்ணும் இணைந்தே வேலை செய்வர். குடும்பம்-பண்ணையம் இரண்டிலும் பெண்ணின் பங்களிப்பு சரிசமமாக இருக்கும். இன்றும் சக்தி மசாலா முதல் பல்வேறு குடும்பகளை உதாரணம் சொல்லலாம். திருப்பூர் மற்றும் கோவையில் கொங்கு கவுண்டர் சாதியினறால் நடத்தப்படும் நிறுவனங்கள் அனைத்தும் வீட்டில் உள்ள பெண்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.வரவு செலவுகள் இவர்களை மீறி நடப்பதில்லை.

13. சுதந்திர போராட்டம் முதற்கொண்டு பல்வேறு கால கட்டங்களில் பெண்களின் பங்களிப்பு இருந்துள்ளது. “கற்றறிந்த சான்றோர்களாக, கவிபாடும் புலவர்களாக, புலவர்களை ஆதரித்த புரவலர்களாக, புலவர்களால் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்டவர்களாக, வட மொழியிலும் வல்லவர்களாக, நல்லறம் கூறும் நடுவர்களாக, நாட்டு நிர்வாகம் செய்யும் உயர் அலுவலர்களாக, பக்தியில் சிறந்தவர்களாக, ஆலயத் திருப்பணி செய்து, பல்வேறு கொடைகளைக் கோயிலுக்குக் கொடுத்தவர்களாக, ஆடவர்களை நெறிப்படுத்தும் குடும்பத் தலைவியர்களாக, அளப்பரிய ஆற்றல் படைத்தவர்களாக, மருத்துவக் கலையில் வல்லவர்களாக, தன்மான உணர்ச்சி உடையவர்களாகப் பலர் இருந்துள்ளார்கள்” – என்கிறார் புலவர் ராசு (புத்தகம்: கொங்கு குல மகளிர்)

14.தற்காலங்களில் மோசமான சமூக சூழலால் இள வயதில் பக்குவமின்மை-அறியாமை, பெண்ணுடல்&நம் நாட்டு சட்ட-காவல்துறை வலுவின்மை போன்ற காரணங்களால் தற்காப்பு குறித்தே பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுவரை கட்டுபாடுகள் விதித்தனர். அறிவு முதிர்ச்சி, பொறுப்பு, பக்குவம், ஆளுமை உடைய பெண்களை கொங்கு சமூகம் அங்கீகரிக்க தவறுவதில்லை.

அரை நிர்வாண உடை உடுத்தி பாதி ராத்திரியில் கண்டவனோடு குடித்து விட்டு ஊர் சுற்றுவதுதான் விடுதலை என்றால், அடிமைத்தனமே மேல்-அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி!இந்த பெண்ணிய முண்டங்கள் பலரும் வெளிநாட்டு காசு வாங்கிட்டு கூலிக்கு மாரடிக்கரவளுக.. இதை ஜெயமோகன் என்றோ அம்பலப்படுத்தியுள்ளார். ஆதாரம் இதோ,


௧.ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்
http://www.jeyamohan.in/?p=28449

௨.நமது எஜமானர்கள்
http://www.jeyamohan.in/?p=28387

௩.அன்னியநிதி – கடைசியாக…
http://www.jeyamohan.in/?p=28464


கொங்கு மக்கள் பெண்களை போற்றும் மாண்புக்கு ஒரு சமீப உதாரணம்: காங்கயம்-கள்ளிபாளையம் கிராமத்தில் கல்லிபாளையத்து ஆத்தா என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கபடுபவர் ஒதாளன் கூட்டத்தில் பிறந்து முழுக்காதன் குலத்திற்கு திருமணம் செயவிக்கபட்டு வந்த தாயாத்தாள். இவர் வாழ்ந்த காலம் 19 நூற்றாண்டின் துவக்க காலம.


கொங்கு மரபு சார்ந்த தனது ஒழுக்கமான வாழ்வியல் நெறி, நிர்வாகம், புத்திகூர்மை, துணிவு, கட்டுப்பாடு போன்றவற்றால் நன்கு அறியப்பட்டவர். இவரது காலத்தில் பல நிலங்கள் திருத்தப்பட்டு குடும்ப விவசாயம் செழித்தது. பல சமூக பிரச்சனைகளை முன்னிருந்து தீர்த்து வைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் இன்றளவும் அவர் வழிவந்தவர்கள், சுற்றத்தார், ஊரார் முதற்கொண்டு அவரிடம் வேலை செய்தவர்கள் உட்பட போற்றி நினைவு கூறப்படுகிறார். அவர் வாழ்ந்த இடமும் இன்றளவும் கள்ளிபாளையத்து ஆத்தா தோட்டம் என்றே அடையாலப்படுத்தபடுகிறது!


இவ்வளவு புகழ் பெற்ற அவர் வாழ்ந்த காலம் திராவிட தீய சக்திகள் பெண்விடுதலை முகமூடி அணிந்து சமூகத்தை கெடுத்து திரிந்த காலம். இதன்மூலம் கொங்கு சமூகதுக்கு இந்த திராவிட-முற்போக்கிய-போலி பெண்ணிய கும்பல்களின் அவசியமின்மை நன்கு புலப்படும்.

அவர் மறைந்து மூன்று தலைமுறைகள் மேல் கடந்துவிட்ட நிலையிலும் அவரது பேரனின் பேரன் வரை அவரது புகழ் நிலைத்து நிற்கிறது. இன்று அவரது ஒரே மகள் வயிற்று பேரனின் பேரன் அவருக்கு கோவிலும் நந்தவனமும் அமைக்கும் முயற்சியில் உள்ளார். மாண்பு பொருந்திய நமது குடும்ப பெண்களையே தெய்வமாக வழிபாடும் கொங்கு சமூகத்துக்கு ஒதாளன் குலம் வழியாக வழிபடு தெய்வம் கிடைத்துள்ளார்.


இன்றைய பெண்ணியம்-பல கோணங்களில்-பல கோணல்களில் !சமூகம் என்ன சொல்கிறது?


கலாச்சாரத்தை மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்டால் போதும், சுலபமாக பெண்ணிய வியாதி ஆகி விடலாம். நம் சமூகம் சட்டத்தை விட கலாச்சார நியதிகளுக்கு கட்டுபட்டே தவறுகள் செய்யாமல் இருக்கிறது. பெண்ணிய வியாதிகள் கூறுவதுபோல, பெண்கள் சரிசமமாக வளர்க்கப்பட்டு, நடத்தப்படும் பல முன்னேறிய நாடுகளிலும் கற்பழிப்பு பாரதத்தை விட மிக அதிகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஏன், 6 மணிக்கு மேல் (ஆண்கள்கூட!) வெளியே வர முடியாத அளவு சூழல் உள்ள நாடுகளும் உண்டு. ஆக நம் கலாசாரத்தில் பிழை இல்லை. மேற்கு கலாசாரத்தை உள்ளே கொண்டுவந்து மக்கள் வக்கிரத்தை தூண்டும் சக்திகளும் அதற்க்கு துணை போகும் மீடியாக்களும் தான் காரணம்.சட்டத்திற்கு பயந்து எத்தனை பேர் குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள்? 

கலாச்சாரம்-பாவ புண்ணியம்-மனசாட்சி இவற்றிற்கு கட்டுப்பட்டு எத்தனை பேர் குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதை எண்ணி பார்த்தால் நமக்கு கலாசாரத்தின் முக்கியத்துவம் புரியும்!

கலாசார சீரழிவால் அமெரிக்காவில் நடக்கும் அவலம். பாரத கலாசாரம் ஏன் முக்கியம்


சைகாலஜி என்ன சொல்கிறது?

தற்கால பெண்ணிய வியாதிகள் கொண்டாடும் மனோதத்துவ நிபுணர் ஷாலினியின் உரை. ஆடை அலங்காரத்துக்கு ஆண்களை கவர வேண்டும், அவர்கள் தன்னால் ஈர்க்கப்பட்டு/Disturb ஆக வேண்டும். யாராவது என அழகை புகழ்ந்தால்தான் என் நாளே விடிகிறது என்ற பெண்கள் மனநிலைதான் காரணம். இதை பண்ணாட்டு நிறுவனங்கள் தங்கள் அழகு சாதனங்களை விற்க பயன்படுத்தி கொள்கிறார்கள். நான் “Sexually Available” என்று சிக்னல் கொடுப்பது போல உடை அணிந்தால் தவறு நடக்குமா நடக்காதா..?

இதை ஆண்கள் புரிந்து கொண்டதால்தான் வேண்டாம் என்கிறோம். ஆனால் பெண்களின் அழகை ரசித்து/சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்ய துணியும் போலி பெண்ணிய வியாதிகள் தான் பெண்கள் எப்படி நெடுமா திரியலாம் என்கிறார்கள். உடர்கவர்சிக்கு ஆண்கள வசீகரிக்கபடுவர்-பெண்களிடம் அந்த கோளாறு இல்லை. அதனால் அவர்களுக்கு புரிவது இல்லை. இதை அறிவியல் சொல்கிறது!குழந்தைகள் கற்பழிப்பு?

கவர்ச்சிதான் காரணம் என்றால் சிறுமிகள் கூட கற்பழிக்கபடுகிறார்களே என்கிறார்கள். தவறு செய்தவனை ஆராய்ந்து பாருங்கள். அவனின் வக்கிர செயலின் பின்னணியில் நாகரீகமற்ற பெண்களின் நடவடிக்கையும் அதில் நிச்சயம் இருக்கும். எங்கோ இவனது வக்கிரம் தூண்டிவிடப்பட்டு, அதை சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் அரங்கேற்றி இருக்கிறான். ஆக இந்த பாவத்தில் அநாகரீக பெண்களின் பங்களிப்பு நிச்சயம் உள்ளது.

கற்பை ஏன் அழிக்கிறார்கள்?

தற்காலங்களில் கற்பு என்பது ஊடகம் உட்பட பேச்சு வழக்கிலும் போலி பெண்ணிய-திராவிட-முற்போக்கு இயக்கங்களில் தவிர்க்கபடுகிறது. இவர்கள் முற்போக்கின் நோக்கமும் விளக்கமும் தான் என்னவோ புரியவில்லை. கற்பு என்பது ஆண்கள் பெண்கள் இருவரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறி. அதுதான் தனிமனித-குடும்ப-சமூக நலத்துக்கு உகந்தது. “யார் எத்தனை பேரோடு வேண்டினும் மணக்கலாம், போதவில்லைஎனில் செல்லலாம், கற்பு காதல் எல்லாம் பொய். திருப்தியும் இன்பமும்தான் முக்கியம்” என்னும் திராவிட கிருமிகளின் தத்துவ அடிப்படையே கற்பை அழிக்க துடிக்கும் போக்கு. இதை தமிழர்கள் பண்பாட்டுக்குள் திணிப்பது ஒரு சமூக அவலம். 

ஆணும் பெண்ணும் சரி சமமா?

இயற்கை ஆணையும் பெண்ணையும் வெவ்வேறாகத்தான் படைத்துள்ளது. அறிவு, வீரம், உடல் திண்மை, உணர்வு போன்றவற்றில் இருவரும் ஒன்றாக இல்லை. ஆணின அன்றோஜென் ஆக்ரோஷம், வீரம் போன்ற குணங்களை கொடுக்கும். பெண்ணின் ஈஸ்ட்ரோஜன மென்மை உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்களை தரும். இதை உணர்ந்து கொண்டால்தான் உருப்படியான தீர்வுகளை காண முடியும். ஆணும பெண்ணும் சரி சமம என்று திணிப்பது மனப்பிறழ்வு.

தவறாக சித்தரிக்கப்படும் பெண்ணியம்:
பெண்ணியவாதி என்றால் “ஆண்களின் எதிரி; ஆண்களை கோபமூட்ட வேண்டும்; ஆண்கள் செய்வதை அப்படியே திருப்பி செய்ய வேண்டும்; பண்பாட்டு மரபுகளுக்கு எதிராக செயல்பட வேண்டும்” என்பனபோன்ற சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைந்து இருக்குமாறு பார்த்து நவீன பெண்ணியவியாதிகள் கொள்கிறார்கள். 

உண்மையான பெண்ணியம் என்றால் நல்ல பண்பட்ட சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் பெண்கள் சமூகத்தை முன்நெடுத்துசெல்லும் தலைமை பண்பும், அறிவும் பெறுதலே ஆகும். அப்படிப்பட்ட பெண்ணியத்தைத்தான் பாரத வாழ்வியல காலங்காலமாக பின்பற்றி வந்தது. இன்றும் பின்பற்றுகிறது. ஆனால் அடிமைத்தனம் என்னும் பெயரால் மோசமான சமூக சூழலை முன்னிறுத்தி எடுக்கப்படும் தற்காப்பு முயற்சிகளை உடைப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

பெண்ணிய முகமூடியில் மாபியாக்கள்:

இன்றைய பெண்ணியவியாதிகளின் உண்மை முகத்தை ஆராய்ந்தால் அவர்கள் பல்வேறு மாபியா இயக்கங்களின் தூதுவர்களாக இருப்பது தெரியும். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். உலகமயமாக்கல் (அமெரிக்கமயமாக்கல்), பெண்களிடம் சாராய பழக்கத்தை பெருக்குவது, பெண்கள் மூலம் குடும்ப அமைப்பு சமூகத்தை சீர்குலைப்பது, கள்ள திருமணங்களை ஊக்குவித்து மதம் பரப்புவது, கலாசாரத்தை சீரழிப்பது என்று அவர்களின் அஜெண்டா நீளும். பெண்ணிய கொள்கைகள் எவ்வாறு உலக அளவில் தவறாக சமூக-பொருளாதார தாக்குதல்களுக்கு மறைமுகமாக பயன்படுகிறது என்பதை யூடியுப் வீடியோக்களில் தேடி பார்க்கவும். தேர்ந்த சமூக அறிஞர்கள் இதுகுறித்து நிறைய எச்சரித்துள்ளார்கள்.

“நான் சொல்வதை ஒப்புக்கொண்டு அப்படியே திருப்பி சொல்; உனக்கு புரட்சிப்பெண் போராளி என்று பட்டம் கொடுக்கிறேன்” என்பதுதான் அவர்களின் அடிநாதம். விட்டில் பூச்சிகள் போல உலகம் அறியா பெண்கள் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.

எனவே பெண்ணியம் பற்றிய சரியான புரிதல் இன்றி வெறும் வாதத்துக்காக வளர்க்கப்படும் கருத்தாக்கங்கள் சமூக தடுமாற்றத்தையே ஏற்படுத்துமே ஒழிய பெண்களுக்கோ மொத்த சமூகத்துக்கோ எந்த நன்மையையும் செய்யாது.

இந்திய பெண்ணியம், சமூகம் உட்பட பல விஷயங்களைப் பற்றி ராஜஸ்ரீ பிர்லா, பிரேமா பாண்டுரங், பத்மா சுப்பிரமணியம், குருமூர்த்தி போன்றோரின் அற்புதமான உரைகள். தற்காலத்தில் அனைவரும் அறிய வேண்டிய பல செய்திகள். 

https://www.youtube.com/playlist?list=PLUj4lvbFPrK_GUYXXMMnxsQm4rEb-Ytwo


மேலும் படிக்க,

Friday, 18 October 2013

காலிங்கராயர் - வேட்டுவர் சர்ச்சைகால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு ஜெயலலிதா சிலை வைத்ததை பாராட்டியும் அதோடு அவரை வேட்டுவர் என்று சொல்லியும் போஸ்டர்கள் அச்சடித்து பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது. காலிங்கராயர் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பதும், சாத்தந்தை கூட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் பிற்காலத்தில் வாழ்ந்த ஊத்துக்குளியில் இன்றளவும் காலிங்கராயர் வம்சாவழியினர் உள்ளனர் என்பதும் நாடறிந்த செய்தி-(ஆதாரம்: பாசூர் சாமியார் செப்பேடு; காலிங்கராயன் பட்டயம்; ஊத்துக்குளி காலிங்கராயர் கைபீது). இருப்பினும் இவ்வாறான போஸ்டர் ஒட்டப்பட்டது இரு சாதிகளுக்குள் வன்மத்தையும் சண்டையையும் தூண்டிவிடும் முயற்சியாகும்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அரசு சார்பில் வைக்கப்பட்ட காலிங்கராயர் சிலை 
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அரசு சார்பில் வைக்கப்பட்ட காலிங்கராயர் சிலை கல்வெட்டு - காலிங்கராயர் வாரிசுதாரர் ஊத்துக்குளி காலிங்கராயர் வம்சம்  சிறப்பிக்கபடுதல் 
                                            

(


காலிங்கராயன் செப்பேடு மூலம்

ஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்த்புதய சாலிவாஹந சகாப்தம் 1253 கலியப்தம் 4432யிது மேல் செல்லாநின்ற ப்ரஜோத்பத்தி வருஷம் உத்தராயணமும் வ்ருஷப மாசமும் சுக்ல பக்ஷமும் பிரதிமையும் குருவாரமும் ரேவதி நக்ஷத்ரமும் சுபநாமயோகமும் கௌலவாகரணமும் பெத்த சுபதினத்தில் ஸ்ரீராஜாதிராஜ ராஜபரமேஸ்வர ராஜ மாத்தாண்ட உத்தணடராஜ தேவாண்டராஜ பிரதாப வீரப்பிரதாப நரபதி மயிசூரு கிருஷ்ணராஜ உடையாறய்யறவர்கள் ஸ்ரீரத்ன சிங்காஜநரூடராய் ப்ருதிவி ஸாம்ராஜ்யம் அருளாநின்ற காலத்தில் மயிசூருக்குச் சேந்த கொங்குதேசம் மேல்கறைப் பூந்துறைநாட்டுக்குச் சேந்த பேரோட்டுக்கு பிரதிநாமதேயமான விருப்பாக்ஷிபுரத்திலேயிருக்கும் ஸ்த்யோஜாத ஞானசிவாசாரியாற் யிம்முடி அகிலாண்டதீக்ஷித ஸ்வாமியாறவற்கள் பாத சன்னிதானத்துக்கு பூந்துறை நாட்டுக்குச் சேந்த வெள்ளோடு தென்முகம் கனகபுரம் யெலவமலை சாத்தந்தை கோத்திரமானகுருகடாஷத்துனாலேயும் வேதநாயகியம்மன் வறபிறசாதத்துனாலேயும் வாணியை அணையாயிக் கட்டி கொங்கு தேசம் பூந்துறைனாட்டில் சென்னெல் வைத்தவறான பட்டக்காறர் யிம்முடி காலிங்கறாயக் கவுண்டரவர்கள் குருசுவாமியார் பாதத்துக்கு எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். னான் மகாமந்திர உபதேசம் பண்ணிக்கும்போது குருசுவாமியார் அப்பணையானது. உங்கள் வமுசத்தாற் பெரியோருகள் பூந்துறை னாட்டுலே அதிகாரம் செலுத்தி அணையும் கட்டி நமக்கு குருக்கள் மானியமும் குடுத்து சஞ்சார காணிக்கையும் தலைக்கட்டு வரியும் குடுத்து வந்தாற்கள். யிப்போ ஊத்துக்குளி சீமையிலே ஒங்கள் பெயரற்கள் காணிவாங்கி அதிகாறம் செலுத்தறபடியினாலே வெகு சமூகம் நமக்கு ஞாபகம் யிருக்கும்படிக்கி சாசனம் எழுதிக்கொடுக்கச்சொல்லி சுவாமி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி குருசுவாமியாற் பாதத்துக்கு ஒடல் உயிற் பொருள் மூன்றும் தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். தீட்சை மகாமந்திற ஒபதேசம் பண்ணிக்கொண்டு வறுஷம் பிரதி தலைக்கட்டு காணிக்கை னாகறம் பணம் னாலு குடுத்து சஞ்சாரம் வந்தபோது சஞ்சாறக் காணிக்கையும் குடுத்துவறுவோமாகவும். ஆதீனத்து சிவபூசை மீனாட்சி சுந்தறேசுவற சுவாமிக்கு பிறதோஷக் கட்டளை நடப்பிவிக்கும்படி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி நடப்பிவிக்குறது. அபிஷேகம் மேறைக்கி வருஷம் ஒன்னுக்கு பொன் 36 பிரதோஷக் கட்டளை சாசுவதமாயி நடப்பிவிக்குற படிக்கி னாங்கள் யெந்த னாட்டிலே யெந்த தேசத்துலே யென் வமுசத்தாற் காணிவாங்கி அதிகாரம் பண்ணி பட்டம் செலுத்தினாலும் யிந்தப்படிக்கி வருஷம் பிரதி நடத்திவறுவோமாகவும். சுவாமியாரிட்ட தென்டனை கண்டினை ஆக்கினை அபறாதத்துக்கு உள்பட்டு நடந்து வறுவோமாகவும்.

யிப்படிக்கி நடந்துவருங்காலத்தில் யென் வமுசத்தாற் யிதுக்கு விகாதம் சொல்லாமல் சன்னிதானத்துக்கு பயபக்தியாயி நடத்திவைத்தவன் சுகமாயி தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் அஷ்டைஸ்வர்யமும் ஆயுளாறோக்கியமும் தேவபிரஸாதமும் குரு பிஸாதமும் மென்மேலும் உண்டாயி கல்லு காவேரி புல்லு பூமி ஆசந்திரார்க்க உள்ளவறைக்கும் பாடகவல்லி சறுவலிங்கமூர்த்தி அகத்தூறம்மன் கடாக்ஷத்துனாலே சுகமாயி யிறுப்பாற்கள். யிந்த சாசனம் பாத்து படித்தபேறும் செவியில் கேட்ட பேறும் சுகமாயி யிறுப்பாற்கள். யிதுக்கு விகாதம் சொல்லி குரு நிந்தநை சொன்னவன் கெங்கைக் கறையிலே காறாம் பசுவையும் பிறாமணாளையும் மாதா பிதாவையும் கொண்ண தோஷத்துலே போவாறாகவும் யிந்தப்படிக்கி பவாநி வேதநாயகி சங்கமேஸ்வர சுவாமி சன்னிதானத்திலே ஸஹிரண்யோதக தாராபூறுவமாயி யெழுதிக் கொடுத்த தாம்பற சாசனம். வேதநாயகி ஸமேதர சங்கமேசுவர ஸ்வாமி ஸஹாயம். மீநாக்ஷி ஸுந்தரேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் அகத்தூறம்மன் துணை.

தாநபாலன யோர்மத்யே தாநா ஸ்ரயோநு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாதி அச்சுதம் பதம்: ஸ்வதத் தாத்வி குணம் புண்யம் பரதத்தாநு பாலநம் பரத்தாப ஹரேண ஸ்வதத்தாம் நிஷ்பலம் பவேது:

ஊத்துக்குழி காலிங்கறாயக்கவுண்டற் யிவற் சம்மதியில் யிந்தச் சாசனம் எழுதினவன் பவாநி கூடல் அருணாசலாசாரி மகன் சொக்கலிங்காச்சாரி கய்யெழுத்து உ.

- இவ்வாறு 1331 ஆம் வருடம் காலிங்கராயன் வாய்க்கால் ஏற்படுத்திய காளிங்கராயக் கவுண்டர் எழுதி அளித்துள்ளார்


ஊற்றுக்குழி காலிங்கராயர் வம்சாவளி(untill 17th century info in mackenzie manuscripts)

1.காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 50

2.யிவர் குமாரன் நஞ்சய காலிங்கறாய கவுண்டர் பட்டம் ஆண்ட u 40

3.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21

4.இவர் குமாரன் நஞ்சய காலிங்க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 20

5.இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 19

6.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 21

7.இவருடைய தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12

8.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 23

9.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21

10.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 16

11.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர்பட்டம் ஆண்ட u 9

2. இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26

13. இவர் குமாரன் விருமாண்டை காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 30

14. இவர் தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 11

15. இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 20

16. இவர் குமாரன் ஈஸ்வர மூர்த்தி வண்றாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 6

17. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட u15

18. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 31

19. இவர் குமாரன் விறுமாண்டே காலிங்க ராயக்கவுண்டர் பட்ட ஆண்டு u 23

20. இவர் குமாரன் பிள்ளை முத்துகாலிங்க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 13

21. இவர் குமாரன் சின்னய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 19

22. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u20

23. இவர் குமாரன் நஞ்சய காலிங்கராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 30

24. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26

25. இவர் தம்பி நஞ்சய காலிங்க ராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12

26.இவர் குமாரன் காலிங்கறாயக்கவுண்டர் பட்டம்ஆண்ட u 29

27.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 2

28. யிவற் தம்பி அகத்தூற் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 4

28 பட்டங்கள், 582 ஆண்டுகள்.

சான்றாதாரங்கள்

குழந்தை வேலன்,க., (ப.ஆ.), நாகசாமி,இரா.,(பொ.ஆ.), பாளையப்பட்டுக்களின் வம்சாவளி-தொகுதி-1, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை, 1981.

அரசினர்க் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை,1997.மெக்கன்சி மனுஸ்க்ரிப்ட் இல் உள்ள ஆதாரம் 


காளிங்கராயன் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரருக்கு கொடை கொடுத்த பாடல், திருசெங்கோடு திருப்பணிமாலை என்னும் நூலில்,கால்வாய் வெட்டுவதை எதிர்த்த பவானி வெள்ளைவேட்டுவனை கொன்றுவிட்டுத்தான் காளிங்கராயர் கால்வாயே வெட்டினார். தேர்தல் நெருங்கி வருவதால் இரு தரப்பிலும் உள்ள (கிறிஸ்தவ முதலாளிகளால் இயக்கப்படும்) திராவிட கைக்கூலிகளின் தூண்டுதல் பேரில் வேட்டுவர்- வேளாளர் சாதி பகையை தூண்டிவிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய சில கதாசிரியர்கள், வரலாறு என்ற பெயரில் சிறுவர்களை தூண்டிவிட்டுள்ளனர். பிறரின் முன்னோர்களை உரிமை கொண்டாடி புகழ் தேடிக்கொள்ளும் அளவு வேட்டுவர்கள் தாழ்ந்து விட்டனர் என்று பெரியாரிச திராவிட வரலாற்று ஆய்வாளர்கள் நினைத்துவிட்டனர் போலும். இப்படி வேறு இனத்தில் சாதியில் பிறந்தவரை வேட்டுவரின் முன்னோர் என்று கூறும் திராவிட விஷமிகளின் செயல் வேட்டுவர்களை அவமானப்படுத்தும் செயலே அன்றி பெருமிதப்படுத்துவதன்று என்பதை தன்மான உணர்வுள்ள எவரும் உணர்ந்து கொள்வார்கள். 

காலிங்கராயன் குறித்த தமிழ் இணைய பல்கலைகழக - கொங்கு மண்டல சாதக பாடல் விரிவுரை வேட்டுவர் சாதியிலேயே அல்லாள இளையா நாய்க்கன் ராஜ வாய்க்காலை வெட்டினார். அவருக்கு மரியாதை செய்யவோ, அவரின் வம்சா வழியினரை போற்றிக்காக்கவோ இந்த திராவிட போலி வரலாற்று கதாசிரியர்களுக்கு சிந்தனை இல்லை. தலையூர் காளி வம்சாவளியில் வந்தவர் வீட்டில்தான் அல்லாள இல்லையா நாய்க்கன் வாரிசும் பெண் எடுத்துள்ளார். தலையூர் காளியை காளிங்கராயன் என்று மாற்றி காட்டிக்கொண்டு பொய்யை பரப்பி கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் அவரது ஊரில் வெள்ளாள கவுண்டர்கள்தான் அல்லாள இளைய நாய்க்கன் வாரிசுகளுக்கு வீடு கட்டிக்கொடுத்து, பக்கபலமாக உற்ற துணையாக உதவி வருகின்றனர்.

தலையூர் காளியை காளிங்கராயன் என்று சித்தரிக்கும் முயற்சி 

எனவே வீண் விரோதத்தையும் சர்ச்சையும் கிளப்பி விடும் திராவிட கிறிஸ்தவ கைக்கூலிகளின் பேச்சை புறந்தள்ளிவிட்டு முன்னோர்களும் நல்லோர்களும் காட்டும் பாதையில் நட்புறவோடு செல்வது இரு சமூகத்துக்கும் மற்றும் கொங்கு நாட்டுக்கும் நல்லதாகும். வதந்தி பரப்பி வம்பு தேடும் சூழ்ச்சிகார அரசியல்வாதிகளையும் சமூக தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோரையும் நற்குடியில் பிறந்த வெள்ளாளர் மற்றும் வேட்டுவர் மக்களும் அடையாளம் கண்டு பொருட்படுத்தாது புறக்கணிக்கவும்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates