Trending

Friday, 18 October 2013

காலிங்கராயர் - வேட்டுவர் சர்ச்சைகால்வாய் வெட்டிய காலிங்கராயருக்கு ஜெயலலிதா சிலை வைத்ததை பாராட்டியும் அதோடு அவரை வேட்டுவர் என்று சொல்லியும் போஸ்டர்கள் அச்சடித்து பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது. காலிங்கராயர் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பதும், சாத்தந்தை கூட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் பிற்காலத்தில் வாழ்ந்த ஊத்துக்குளியில் இன்றளவும் காலிங்கராயர் வம்சாவழியினர் உள்ளனர் என்பதும் நாடறிந்த செய்தி-(ஆதாரம்: பாசூர் சாமியார் செப்பேடு; காலிங்கராயன் பட்டயம்; ஊத்துக்குளி காலிங்கராயர் கைபீது). இருப்பினும் இவ்வாறான போஸ்டர் ஒட்டப்பட்டது இரு சாதிகளுக்குள் வன்மத்தையும் சண்டையையும் தூண்டிவிடும் முயற்சியாகும்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அரசு சார்பில் வைக்கப்பட்ட காலிங்கராயர் சிலை 
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அரசு சார்பில் வைக்கப்பட்ட காலிங்கராயர் சிலை கல்வெட்டு - காலிங்கராயர் வாரிசுதாரர் ஊத்துக்குளி காலிங்கராயர் வம்சம்  சிறப்பிக்கபடுதல் 
                                            

(


காலிங்கராயன் செப்பேடு மூலம்

ஸ்வஸ்திஸ்ரீ விஜயாப்த்புதய சாலிவாஹந சகாப்தம் 1253 கலியப்தம் 4432யிது மேல் செல்லாநின்ற ப்ரஜோத்பத்தி வருஷம் உத்தராயணமும் வ்ருஷப மாசமும் சுக்ல பக்ஷமும் பிரதிமையும் குருவாரமும் ரேவதி நக்ஷத்ரமும் சுபநாமயோகமும் கௌலவாகரணமும் பெத்த சுபதினத்தில் ஸ்ரீராஜாதிராஜ ராஜபரமேஸ்வர ராஜ மாத்தாண்ட உத்தணடராஜ தேவாண்டராஜ பிரதாப வீரப்பிரதாப நரபதி மயிசூரு கிருஷ்ணராஜ உடையாறய்யறவர்கள் ஸ்ரீரத்ன சிங்காஜநரூடராய் ப்ருதிவி ஸாம்ராஜ்யம் அருளாநின்ற காலத்தில் மயிசூருக்குச் சேந்த கொங்குதேசம் மேல்கறைப் பூந்துறைநாட்டுக்குச் சேந்த பேரோட்டுக்கு பிரதிநாமதேயமான விருப்பாக்ஷிபுரத்திலேயிருக்கும் ஸ்த்யோஜாத ஞானசிவாசாரியாற் யிம்முடி அகிலாண்டதீக்ஷித ஸ்வாமியாறவற்கள் பாத சன்னிதானத்துக்கு பூந்துறை நாட்டுக்குச் சேந்த வெள்ளோடு தென்முகம் கனகபுரம் யெலவமலை சாத்தந்தை கோத்திரமானகுருகடாஷத்துனாலேயும் வேதநாயகியம்மன் வறபிறசாதத்துனாலேயும் வாணியை அணையாயிக் கட்டி கொங்கு தேசம் பூந்துறைனாட்டில் சென்னெல் வைத்தவறான பட்டக்காறர் யிம்முடி காலிங்கறாயக் கவுண்டரவர்கள் குருசுவாமியார் பாதத்துக்கு எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். னான் மகாமந்திர உபதேசம் பண்ணிக்கும்போது குருசுவாமியார் அப்பணையானது. உங்கள் வமுசத்தாற் பெரியோருகள் பூந்துறை னாட்டுலே அதிகாரம் செலுத்தி அணையும் கட்டி நமக்கு குருக்கள் மானியமும் குடுத்து சஞ்சார காணிக்கையும் தலைக்கட்டு வரியும் குடுத்து வந்தாற்கள். யிப்போ ஊத்துக்குளி சீமையிலே ஒங்கள் பெயரற்கள் காணிவாங்கி அதிகாறம் செலுத்தறபடியினாலே வெகு சமூகம் நமக்கு ஞாபகம் யிருக்கும்படிக்கி சாசனம் எழுதிக்கொடுக்கச்சொல்லி சுவாமி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி குருசுவாமியாற் பாதத்துக்கு ஒடல் உயிற் பொருள் மூன்றும் தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பற சாசனம். தீட்சை மகாமந்திற ஒபதேசம் பண்ணிக்கொண்டு வறுஷம் பிரதி தலைக்கட்டு காணிக்கை னாகறம் பணம் னாலு குடுத்து சஞ்சாரம் வந்தபோது சஞ்சாறக் காணிக்கையும் குடுத்துவறுவோமாகவும். ஆதீனத்து சிவபூசை மீனாட்சி சுந்தறேசுவற சுவாமிக்கு பிறதோஷக் கட்டளை நடப்பிவிக்கும்படி சன்னிதானத்திலே அப்பணையானபடிக்கி நடப்பிவிக்குறது. அபிஷேகம் மேறைக்கி வருஷம் ஒன்னுக்கு பொன் 36 பிரதோஷக் கட்டளை சாசுவதமாயி நடப்பிவிக்குற படிக்கி னாங்கள் யெந்த னாட்டிலே யெந்த தேசத்துலே யென் வமுசத்தாற் காணிவாங்கி அதிகாரம் பண்ணி பட்டம் செலுத்தினாலும் யிந்தப்படிக்கி வருஷம் பிரதி நடத்திவறுவோமாகவும். சுவாமியாரிட்ட தென்டனை கண்டினை ஆக்கினை அபறாதத்துக்கு உள்பட்டு நடந்து வறுவோமாகவும்.

யிப்படிக்கி நடந்துவருங்காலத்தில் யென் வமுசத்தாற் யிதுக்கு விகாதம் சொல்லாமல் சன்னிதானத்துக்கு பயபக்தியாயி நடத்திவைத்தவன் சுகமாயி தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் அஷ்டைஸ்வர்யமும் ஆயுளாறோக்கியமும் தேவபிரஸாதமும் குரு பிஸாதமும் மென்மேலும் உண்டாயி கல்லு காவேரி புல்லு பூமி ஆசந்திரார்க்க உள்ளவறைக்கும் பாடகவல்லி சறுவலிங்கமூர்த்தி அகத்தூறம்மன் கடாக்ஷத்துனாலே சுகமாயி யிறுப்பாற்கள். யிந்த சாசனம் பாத்து படித்தபேறும் செவியில் கேட்ட பேறும் சுகமாயி யிறுப்பாற்கள். யிதுக்கு விகாதம் சொல்லி குரு நிந்தநை சொன்னவன் கெங்கைக் கறையிலே காறாம் பசுவையும் பிறாமணாளையும் மாதா பிதாவையும் கொண்ண தோஷத்துலே போவாறாகவும் யிந்தப்படிக்கி பவாநி வேதநாயகி சங்கமேஸ்வர சுவாமி சன்னிதானத்திலே ஸஹிரண்யோதக தாராபூறுவமாயி யெழுதிக் கொடுத்த தாம்பற சாசனம். வேதநாயகி ஸமேதர சங்கமேசுவர ஸ்வாமி ஸஹாயம். மீநாக்ஷி ஸுந்தரேஸ்வர ஸ்வாமி ஸஹாயம் அகத்தூறம்மன் துணை.

தாநபாலன யோர்மத்யே தாநா ஸ்ரயோநு பாலனம் தானாத் ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாதி அச்சுதம் பதம்: ஸ்வதத் தாத்வி குணம் புண்யம் பரதத்தாநு பாலநம் பரத்தாப ஹரேண ஸ்வதத்தாம் நிஷ்பலம் பவேது:

ஊத்துக்குழி காலிங்கறாயக்கவுண்டற் யிவற் சம்மதியில் யிந்தச் சாசனம் எழுதினவன் பவாநி கூடல் அருணாசலாசாரி மகன் சொக்கலிங்காச்சாரி கய்யெழுத்து உ.

- இவ்வாறு 1331 ஆம் வருடம் காலிங்கராயன் வாய்க்கால் ஏற்படுத்திய காளிங்கராயக் கவுண்டர் எழுதி அளித்துள்ளார்


ஊற்றுக்குழி காலிங்கராயர் வம்சாவளி(untill 17th century info in mackenzie manuscripts)

1.காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 50

2.யிவர் குமாரன் நஞ்சய காலிங்கறாய கவுண்டர் பட்டம் ஆண்ட u 40

3.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21

4.இவர் குமாரன் நஞ்சய காலிங்க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 20

5.இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 19

6.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 21

7.இவருடைய தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12

8.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 23

9.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21

10.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 16

11.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர்பட்டம் ஆண்ட u 9

2. இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26

13. இவர் குமாரன் விருமாண்டை காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 30

14. இவர் தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 11

15. இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 20

16. இவர் குமாரன் ஈஸ்வர மூர்த்தி வண்றாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 6

17. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட u15

18. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 31

19. இவர் குமாரன் விறுமாண்டே காலிங்க ராயக்கவுண்டர் பட்ட ஆண்டு u 23

20. இவர் குமாரன் பிள்ளை முத்துகாலிங்க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 13

21. இவர் குமாரன் சின்னய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 19

22. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u20

23. இவர் குமாரன் நஞ்சய காலிங்கராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 30

24. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26

25. இவர் தம்பி நஞ்சய காலிங்க ராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12

26.இவர் குமாரன் காலிங்கறாயக்கவுண்டர் பட்டம்ஆண்ட u 29

27.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 2

28. யிவற் தம்பி அகத்தூற் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 4

28 பட்டங்கள், 582 ஆண்டுகள்.

சான்றாதாரங்கள்

குழந்தை வேலன்,க., (ப.ஆ.), நாகசாமி,இரா.,(பொ.ஆ.), பாளையப்பட்டுக்களின் வம்சாவளி-தொகுதி-1, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை, 1981.

அரசினர்க் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை,1997.மெக்கன்சி மனுஸ்க்ரிப்ட் இல் உள்ள ஆதாரம் 


காளிங்கராயன் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரருக்கு கொடை கொடுத்த பாடல், திருசெங்கோடு திருப்பணிமாலை என்னும் நூலில்,கால்வாய் வெட்டுவதை எதிர்த்த பவானி வெள்ளைவேட்டுவனை கொன்றுவிட்டுத்தான் காளிங்கராயர் கால்வாயே வெட்டினார். தேர்தல் நெருங்கி வருவதால் இரு தரப்பிலும் உள்ள (கிறிஸ்தவ முதலாளிகளால் இயக்கப்படும்) திராவிட கைக்கூலிகளின் தூண்டுதல் பேரில் வேட்டுவர்- வேளாளர் சாதி பகையை தூண்டிவிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய சில கதாசிரியர்கள், வரலாறு என்ற பெயரில் சிறுவர்களை தூண்டிவிட்டுள்ளனர். பிறரின் முன்னோர்களை உரிமை கொண்டாடி புகழ் தேடிக்கொள்ளும் அளவு வேட்டுவர்கள் தாழ்ந்து விட்டனர் என்று பெரியாரிச திராவிட வரலாற்று ஆய்வாளர்கள் நினைத்துவிட்டனர் போலும். இப்படி வேறு இனத்தில் சாதியில் பிறந்தவரை வேட்டுவரின் முன்னோர் என்று கூறும் திராவிட விஷமிகளின் செயல் வேட்டுவர்களை அவமானப்படுத்தும் செயலே அன்றி பெருமிதப்படுத்துவதன்று என்பதை தன்மான உணர்வுள்ள எவரும் உணர்ந்து கொள்வார்கள். 

காலிங்கராயன் குறித்த தமிழ் இணைய பல்கலைகழக - கொங்கு மண்டல சாதக பாடல் விரிவுரை வேட்டுவர் சாதியிலேயே அல்லாள இளையா நாய்க்கன் ராஜ வாய்க்காலை வெட்டினார். அவருக்கு மரியாதை செய்யவோ, அவரின் வம்சா வழியினரை போற்றிக்காக்கவோ இந்த திராவிட போலி வரலாற்று கதாசிரியர்களுக்கு சிந்தனை இல்லை. தலையூர் காளி வம்சாவளியில் வந்தவர் வீட்டில்தான் அல்லாள இல்லையா நாய்க்கன் வாரிசும் பெண் எடுத்துள்ளார். தலையூர் காளியை காளிங்கராயன் என்று மாற்றி காட்டிக்கொண்டு பொய்யை பரப்பி கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் அவரது ஊரில் வெள்ளாள கவுண்டர்கள்தான் அல்லாள இளைய நாய்க்கன் வாரிசுகளுக்கு வீடு கட்டிக்கொடுத்து, பக்கபலமாக உற்ற துணையாக உதவி வருகின்றனர்.

தலையூர் காளியை காளிங்கராயன் என்று சித்தரிக்கும் முயற்சி 

எனவே வீண் விரோதத்தையும் சர்ச்சையும் கிளப்பி விடும் திராவிட கிறிஸ்தவ கைக்கூலிகளின் பேச்சை புறந்தள்ளிவிட்டு முன்னோர்களும் நல்லோர்களும் காட்டும் பாதையில் நட்புறவோடு செல்வது இரு சமூகத்துக்கும் மற்றும் கொங்கு நாட்டுக்கும் நல்லதாகும். வதந்தி பரப்பி வம்பு தேடும் சூழ்ச்சிகார அரசியல்வாதிகளையும் சமூக தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோரையும் நற்குடியில் பிறந்த வெள்ளாளர் மற்றும் வேட்டுவர் மக்களும் அடையாளம் கண்டு பொருட்படுத்தாது புறக்கணிக்கவும்.

4 comments:

 1. ஊசிப்பாளையம் செப்பேடு, தென்னிலைப்பட்டயம், திருச்செங்கோடு அல்லாளன் இளையான் பட்டயம், தருமபுரிப் பட்டயம், வெள்ளோட்டுப் பட்டயம், தலையூர் பட்டக்காரர் பட்டயம், புதுர் பட்டக்காரர் பட்டயம், எட்டரைப் பட்டயம் (திருச்சி வட்டம்). சோழன் பூர்வ பட்டயம் மற்றும் காளிங்கராயன் அணை கட்டிய பட்டயம் ஆகியனவும் வேட்டுவ கவுண்டரின் வீர வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

  ReplyDelete
 2. வெள்ளை வேட்டுவர் பெயரை கூறவும்..

  ReplyDelete
 3. கொங்கு வேளாள கவுண்டர் இன மன்னன்
  காலிங்கராயன் புகழ் வாழ்க

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates