Trending

Sunday, 20 October 2013

கொங்கு மக்களின் பெண்ணியம்கொங்கு மக்களின் பெண்ணியம்

கொங்கு சமூக பெண்கள் அடிமைபட்டு கிடப்பது போலவும், புதிதாக இன்று முளைத்த சிலர் சுதந்திரம் வாங்கி தர முயற்சிப்பது போலவும் காட்டி கொள்கிறார்கள். இது எங்கள் பெண்களை மூளை சலவை செய்து புற்ச்சி-முற்போக்கு என்னும் பெயரால் டிவி-பத்திரிகை மூலம் எங்கள் மரபுகளை உடைத்து காதல் கள்ள திருமணங்களுக்கு தூண்டுவது, தங்கள் சாதிக்கு குறுக்கு வழியில் சொத்து தேடும் சதிவேலை.

இந்த திடீர் பெண்ணிய புற்ச்சியாளர்களுக்கு கொங்கு நாட்டு பெண்ணியம் குறித்து சில தகவல்கள். அக்காலம் முதல் தற்காலம் வரை.

1.அண்ணன்மார் வரலாற்றில் தாமரை நாச்சியார் தன் அப்பா-அண்ணனுக்கு சவால் விட்டு கணவனோடு உழைத்து குடுபம்த்தை முன்னெடுத்து சென்று ஜெயித்து காட்டியவர். மரபுப்படி உறவும் உரிமையும் உள்ள குன்னுடையா கவுண்டரை மணக்கும் முடிவை மதித்தது கொங்கு சமுதாயம். குடும்பத்தையும் பண்ணையத்தையும் முன்னெடுத்து சாதித்து காட்டியர் தாமரை நாச்சியார். அதே போல தான் அண்ணன்மார் இல்லாத சமயத்தில் அருக்காணி தங்கமும் அரசு/பண்ணை நிர்வாக பணிகளை கவனித்தார். முக்கிய முடிவுகளையும் எடுத்தார். அண்ணன்மார் மணந்த பெண்களும் அதுபோலவே ஆகும்.

2. காலிங்கராயர் தனக்கு உரிமை உள்ள அத்தை பெண்ணை மணக்க எண்ணியபோது மரபுப்படி உறவு-உரிமை இருந்ததால் அந்த பெண்ணின் முடிவை ஏற்று அங்கீகரித்தது.

3. காலிங்கராயன் வழிவந்த பழனிவேலப்ப கவுண்டர் மகள் தெய்வானை என்பவர். கற்றுத்தேர்ந்த இவரது கூரிய அறிவுத் திறமை அனைவரையும் வியக்கச் செய்ததற்கான சான்று : பாசூர் குருக்கள் அகிலாண்ட தீட்சிதருடன், வெள்ளோடு இராசாக்கோவிலில் முகாமிட்டிருந்த போது தெய்வானை இவருடன் விவாதித்த பாங்கு. அன்றைய சூழலில் பெண் கல்வி-சபைகளில் பங்கேற்கும் உரிமையும் இருந்ததை காட்டுகிறது. பணியாளர்களிடமும், குடிபடைகளிடமும், எளியவர்களிடமும் அன்பு செலுத்தி பலப்பல உதவிகளும் செய்து, அவ்ர்களுக்கு அறங்கூறும் அவ்வையாக இருந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நற்பெயர் பெற்று வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக செப்பேடு இன்றும் ஈங்கூர் புலவன் புதூர் பழனிச்சாமி கவுண்டரிடம் உள்ளது


                                 
4. முழுக்காதன் குல வெள்ளையம்மாவை முதலாகக்கொண்டே அந்த குல வரலாறு துவங்குகிறது. தன் அண்ணன்களிடம் இருந்து பெற்ற சொத்துக்களை கொண்டு தன்னிச்சையாக வாழ்ந்து காட்டினார். அதை அங்கீகரித்து வாழ்த்தி வரவேற்று அவரை தெய்வமாக வணங்குவது கொங்கு சமூகம்.

5. திருமண சடங்குகளில் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கபடுகிறது. ஆண்-பெண் இருபுறமும் சீர்க்காரி என்று ஒரு பெண்ணே பல சீர்களை செய்கிறார். மாப்பிள்ளையின் சகோதரிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சகோதரனுக்கு இல்லை.

6. வேலாத்தாள் என்னும் கொங்கு பெண் படைதிரட்டி சென்று வெல்ல முடியா பகை வென்று வந்துள்ளார். வேலாத்தாளின் தலைமையில் அவருக்கு கீழ் போர்ப்பணியில் கொங்கு ஆண்களும் இருந்தனர். இன்று வேலாத்தாள் தோக்கவாடி வெண்டுவன் குல தெய்வம் (காகத்தலை காளியம்மன்).

                                                 
                                     போர் கோலத்தில் அக்கால கொங்குப்பெண்-குலதெய்வ கோவில் சிற்பத்தில்
7. கன்னிவாடி கன்ன குலத்தினர் தங்கள் வீட்டு பெண் விட்ட சவால் வெற்றி பெற, பல்லவ மன்னனை பகைத்து-மூவேந்தரும் முடி சூடி தந்த பெருமை மிகு கன்னிவாடி ராஜ்ஜியத்தையே துறந்து சென்றனர்.

8. கொங்கு தெய்வங்கள் அனைத்தும் பெண் தெய்வங்களே. வெள்ளையம்மாள், வீரமாத்தி, வேலாத்தாள், நல்லம்மா போன்றோர் கண் முன்னே வாழ்ந்து தெய்வங்கள் ஆன கொங்கு பெண்கள்.

9. ஐவேலி அசதி அவ்வையார், திருச்செங்கோடு பூங்கோதை, சின்னம்மையார், சிவன்மலை வள்ளியாத்தாள், அர்த்தநாரீசுவரர் கோவில் அழகுநாச்சி, பேரூர் துளசியம்மாள் போன்றோர் புகழ் பெற்ற சங்க கால கொங்கு பெண் புலவர்கள். அவர்கள் படைத்த ஏராளமான இலக்கியங்கள் இன்றும் உள்ளது. இது கொங்கு பெண்களின் கல்வி உரிமை மற்றும் சமூக செயல்பாடுகளில் சுதந்திரம் என்பவற்றை காட்டுகிறது.

10. பழைய கோட்டையைப் பாதுகாத்த வான்புகழ் கொண்ட வள்ளியாத்தாள், பெருங்கொடை அளித்த பெரியாத்தாள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குதிரையில் பயணம் செய்து பண்ணைய வேலைகளைக் கவனித்த வஞ்சியாத்தாளின் வாழ்வு போன்றவை கொங்கு பெண்களின் நிர்வாக திறன் சொல்லும். அதை யாரும் எதிர்க்கவோ பழிக்கவோ இல்லை. இந்த பெண்கள் மீது புலவர்கள் புகழ் பாடல் பாடியதும் உண்டு!

11. தாய்போன்ற பூந்துறைத் தெய்வானை, பார்புகழ் கொண்ட பழனியம்மாள், ஈஞ்சம்பள்ளி பச்சையம்மாள் ஈகைத்திறம், சீர்மிகக் கொண்ட சின்னம்மாள், யாரும் அளிக்காத அருங்கொடையாக தாம் அணிந்திருந்த தாலியைக் கழற்றி வழங்கிய சம்பந்தச் சக்கரையார் மனைவி போன்றோர் தங்கள் ஈகை குணத்தால் இன்றும் வரலாற்றில் நிற்பவர்கள்.

12. பாரம்பரிய மரபோடு வாழும்/வாழ்ந்த கொங்கு குடும்பங்களில் ஆணும பெண்ணும் இணைந்தே வேலை செய்வர். குடும்பம்-பண்ணையம் இரண்டிலும் பெண்ணின் பங்களிப்பு சரிசமமாக இருக்கும். இன்றும் சக்தி மசாலா முதல் பல்வேறு குடும்பகளை உதாரணம் சொல்லலாம். திருப்பூர் மற்றும் கோவையில் கொங்கு கவுண்டர் சாதியினறால் நடத்தப்படும் நிறுவனங்கள் அனைத்தும் வீட்டில் உள்ள பெண்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.வரவு செலவுகள் இவர்களை மீறி நடப்பதில்லை.

13. சுதந்திர போராட்டம் முதற்கொண்டு பல்வேறு கால கட்டங்களில் பெண்களின் பங்களிப்பு இருந்துள்ளது. “கற்றறிந்த சான்றோர்களாக, கவிபாடும் புலவர்களாக, புலவர்களை ஆதரித்த புரவலர்களாக, புலவர்களால் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்டவர்களாக, வட மொழியிலும் வல்லவர்களாக, நல்லறம் கூறும் நடுவர்களாக, நாட்டு நிர்வாகம் செய்யும் உயர் அலுவலர்களாக, பக்தியில் சிறந்தவர்களாக, ஆலயத் திருப்பணி செய்து, பல்வேறு கொடைகளைக் கோயிலுக்குக் கொடுத்தவர்களாக, ஆடவர்களை நெறிப்படுத்தும் குடும்பத் தலைவியர்களாக, அளப்பரிய ஆற்றல் படைத்தவர்களாக, மருத்துவக் கலையில் வல்லவர்களாக, தன்மான உணர்ச்சி உடையவர்களாகப் பலர் இருந்துள்ளார்கள்” – என்கிறார் புலவர் ராசு (புத்தகம்: கொங்கு குல மகளிர்)

14.தற்காலங்களில் மோசமான சமூக சூழலால் இள வயதில் பக்குவமின்மை-அறியாமை, பெண்ணுடல்&நம் நாட்டு சட்ட-காவல்துறை வலுவின்மை போன்ற காரணங்களால் தற்காப்பு குறித்தே பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுவரை கட்டுபாடுகள் விதித்தனர். அறிவு முதிர்ச்சி, பொறுப்பு, பக்குவம், ஆளுமை உடைய பெண்களை கொங்கு சமூகம் அங்கீகரிக்க தவறுவதில்லை.

அரை நிர்வாண உடை உடுத்தி பாதி ராத்திரியில் கண்டவனோடு குடித்து விட்டு ஊர் சுற்றுவதுதான் விடுதலை என்றால், அடிமைத்தனமே மேல்-அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி!இந்த பெண்ணிய முண்டங்கள் பலரும் வெளிநாட்டு காசு வாங்கிட்டு கூலிக்கு மாரடிக்கரவளுக.. இதை ஜெயமோகன் என்றோ அம்பலப்படுத்தியுள்ளார். ஆதாரம் இதோ,


௧.ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்
http://www.jeyamohan.in/?p=28449

௨.நமது எஜமானர்கள்
http://www.jeyamohan.in/?p=28387

௩.அன்னியநிதி – கடைசியாக…
http://www.jeyamohan.in/?p=28464


கொங்கு மக்கள் பெண்களை போற்றும் மாண்புக்கு ஒரு சமீப உதாரணம்: காங்கயம்-கள்ளிபாளையம் கிராமத்தில் கல்லிபாளையத்து ஆத்தா என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கபடுபவர் ஒதாளன் கூட்டத்தில் பிறந்து முழுக்காதன் குலத்திற்கு திருமணம் செயவிக்கபட்டு வந்த தாயாத்தாள். இவர் வாழ்ந்த காலம் 19 நூற்றாண்டின் துவக்க காலம.


கொங்கு மரபு சார்ந்த தனது ஒழுக்கமான வாழ்வியல் நெறி, நிர்வாகம், புத்திகூர்மை, துணிவு, கட்டுப்பாடு போன்றவற்றால் நன்கு அறியப்பட்டவர். இவரது காலத்தில் பல நிலங்கள் திருத்தப்பட்டு குடும்ப விவசாயம் செழித்தது. பல சமூக பிரச்சனைகளை முன்னிருந்து தீர்த்து வைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் இன்றளவும் அவர் வழிவந்தவர்கள், சுற்றத்தார், ஊரார் முதற்கொண்டு அவரிடம் வேலை செய்தவர்கள் உட்பட போற்றி நினைவு கூறப்படுகிறார். அவர் வாழ்ந்த இடமும் இன்றளவும் கள்ளிபாளையத்து ஆத்தா தோட்டம் என்றே அடையாலப்படுத்தபடுகிறது!


இவ்வளவு புகழ் பெற்ற அவர் வாழ்ந்த காலம் திராவிட தீய சக்திகள் பெண்விடுதலை முகமூடி அணிந்து சமூகத்தை கெடுத்து திரிந்த காலம். இதன்மூலம் கொங்கு சமூகதுக்கு இந்த திராவிட-முற்போக்கிய-போலி பெண்ணிய கும்பல்களின் அவசியமின்மை நன்கு புலப்படும்.

அவர் மறைந்து மூன்று தலைமுறைகள் மேல் கடந்துவிட்ட நிலையிலும் அவரது பேரனின் பேரன் வரை அவரது புகழ் நிலைத்து நிற்கிறது. இன்று அவரது ஒரே மகள் வயிற்று பேரனின் பேரன் அவருக்கு கோவிலும் நந்தவனமும் அமைக்கும் முயற்சியில் உள்ளார். மாண்பு பொருந்திய நமது குடும்ப பெண்களையே தெய்வமாக வழிபாடும் கொங்கு சமூகத்துக்கு ஒதாளன் குலம் வழியாக வழிபடு தெய்வம் கிடைத்துள்ளார்.


இன்றைய பெண்ணியம்-பல கோணங்களில்-பல கோணல்களில் !சமூகம் என்ன சொல்கிறது?


கலாச்சாரத்தை மண்ணாங்கட்டி என்று சொல்லிவிட்டால் போதும், சுலபமாக பெண்ணிய வியாதி ஆகி விடலாம். நம் சமூகம் சட்டத்தை விட கலாச்சார நியதிகளுக்கு கட்டுபட்டே தவறுகள் செய்யாமல் இருக்கிறது. பெண்ணிய வியாதிகள் கூறுவதுபோல, பெண்கள் சரிசமமாக வளர்க்கப்பட்டு, நடத்தப்படும் பல முன்னேறிய நாடுகளிலும் கற்பழிப்பு பாரதத்தை விட மிக அதிகமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஏன், 6 மணிக்கு மேல் (ஆண்கள்கூட!) வெளியே வர முடியாத அளவு சூழல் உள்ள நாடுகளும் உண்டு. ஆக நம் கலாசாரத்தில் பிழை இல்லை. மேற்கு கலாசாரத்தை உள்ளே கொண்டுவந்து மக்கள் வக்கிரத்தை தூண்டும் சக்திகளும் அதற்க்கு துணை போகும் மீடியாக்களும் தான் காரணம்.சட்டத்திற்கு பயந்து எத்தனை பேர் குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள்? 

கலாச்சாரம்-பாவ புண்ணியம்-மனசாட்சி இவற்றிற்கு கட்டுப்பட்டு எத்தனை பேர் குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதை எண்ணி பார்த்தால் நமக்கு கலாசாரத்தின் முக்கியத்துவம் புரியும்!

கலாசார சீரழிவால் அமெரிக்காவில் நடக்கும் அவலம். பாரத கலாசாரம் ஏன் முக்கியம்


சைகாலஜி என்ன சொல்கிறது?

தற்கால பெண்ணிய வியாதிகள் கொண்டாடும் மனோதத்துவ நிபுணர் ஷாலினியின் உரை. ஆடை அலங்காரத்துக்கு ஆண்களை கவர வேண்டும், அவர்கள் தன்னால் ஈர்க்கப்பட்டு/Disturb ஆக வேண்டும். யாராவது என அழகை புகழ்ந்தால்தான் என் நாளே விடிகிறது என்ற பெண்கள் மனநிலைதான் காரணம். இதை பண்ணாட்டு நிறுவனங்கள் தங்கள் அழகு சாதனங்களை விற்க பயன்படுத்தி கொள்கிறார்கள். நான் “Sexually Available” என்று சிக்னல் கொடுப்பது போல உடை அணிந்தால் தவறு நடக்குமா நடக்காதா..?

இதை ஆண்கள் புரிந்து கொண்டதால்தான் வேண்டாம் என்கிறோம். ஆனால் பெண்களின் அழகை ரசித்து/சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்ய துணியும் போலி பெண்ணிய வியாதிகள் தான் பெண்கள் எப்படி நெடுமா திரியலாம் என்கிறார்கள். உடர்கவர்சிக்கு ஆண்கள வசீகரிக்கபடுவர்-பெண்களிடம் அந்த கோளாறு இல்லை. அதனால் அவர்களுக்கு புரிவது இல்லை. இதை அறிவியல் சொல்கிறது!குழந்தைகள் கற்பழிப்பு?

கவர்ச்சிதான் காரணம் என்றால் சிறுமிகள் கூட கற்பழிக்கபடுகிறார்களே என்கிறார்கள். தவறு செய்தவனை ஆராய்ந்து பாருங்கள். அவனின் வக்கிர செயலின் பின்னணியில் நாகரீகமற்ற பெண்களின் நடவடிக்கையும் அதில் நிச்சயம் இருக்கும். எங்கோ இவனது வக்கிரம் தூண்டிவிடப்பட்டு, அதை சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் அரங்கேற்றி இருக்கிறான். ஆக இந்த பாவத்தில் அநாகரீக பெண்களின் பங்களிப்பு நிச்சயம் உள்ளது.

கற்பை ஏன் அழிக்கிறார்கள்?

தற்காலங்களில் கற்பு என்பது ஊடகம் உட்பட பேச்சு வழக்கிலும் போலி பெண்ணிய-திராவிட-முற்போக்கு இயக்கங்களில் தவிர்க்கபடுகிறது. இவர்கள் முற்போக்கின் நோக்கமும் விளக்கமும் தான் என்னவோ புரியவில்லை. கற்பு என்பது ஆண்கள் பெண்கள் இருவரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறி. அதுதான் தனிமனித-குடும்ப-சமூக நலத்துக்கு உகந்தது. “யார் எத்தனை பேரோடு வேண்டினும் மணக்கலாம், போதவில்லைஎனில் செல்லலாம், கற்பு காதல் எல்லாம் பொய். திருப்தியும் இன்பமும்தான் முக்கியம்” என்னும் திராவிட கிருமிகளின் தத்துவ அடிப்படையே கற்பை அழிக்க துடிக்கும் போக்கு. இதை தமிழர்கள் பண்பாட்டுக்குள் திணிப்பது ஒரு சமூக அவலம். 

ஆணும் பெண்ணும் சரி சமமா?

இயற்கை ஆணையும் பெண்ணையும் வெவ்வேறாகத்தான் படைத்துள்ளது. அறிவு, வீரம், உடல் திண்மை, உணர்வு போன்றவற்றில் இருவரும் ஒன்றாக இல்லை. ஆணின அன்றோஜென் ஆக்ரோஷம், வீரம் போன்ற குணங்களை கொடுக்கும். பெண்ணின் ஈஸ்ட்ரோஜன மென்மை உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்களை தரும். இதை உணர்ந்து கொண்டால்தான் உருப்படியான தீர்வுகளை காண முடியும். ஆணும பெண்ணும் சரி சமம என்று திணிப்பது மனப்பிறழ்வு.

தவறாக சித்தரிக்கப்படும் பெண்ணியம்:
பெண்ணியவாதி என்றால் “ஆண்களின் எதிரி; ஆண்களை கோபமூட்ட வேண்டும்; ஆண்கள் செய்வதை அப்படியே திருப்பி செய்ய வேண்டும்; பண்பாட்டு மரபுகளுக்கு எதிராக செயல்பட வேண்டும்” என்பனபோன்ற சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைந்து இருக்குமாறு பார்த்து நவீன பெண்ணியவியாதிகள் கொள்கிறார்கள். 

உண்மையான பெண்ணியம் என்றால் நல்ல பண்பட்ட சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் பெண்கள் சமூகத்தை முன்நெடுத்துசெல்லும் தலைமை பண்பும், அறிவும் பெறுதலே ஆகும். அப்படிப்பட்ட பெண்ணியத்தைத்தான் பாரத வாழ்வியல காலங்காலமாக பின்பற்றி வந்தது. இன்றும் பின்பற்றுகிறது. ஆனால் அடிமைத்தனம் என்னும் பெயரால் மோசமான சமூக சூழலை முன்னிறுத்தி எடுக்கப்படும் தற்காப்பு முயற்சிகளை உடைப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.

பெண்ணிய முகமூடியில் மாபியாக்கள்:

இன்றைய பெண்ணியவியாதிகளின் உண்மை முகத்தை ஆராய்ந்தால் அவர்கள் பல்வேறு மாபியா இயக்கங்களின் தூதுவர்களாக இருப்பது தெரியும். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற பெண்களை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள். உலகமயமாக்கல் (அமெரிக்கமயமாக்கல்), பெண்களிடம் சாராய பழக்கத்தை பெருக்குவது, பெண்கள் மூலம் குடும்ப அமைப்பு சமூகத்தை சீர்குலைப்பது, கள்ள திருமணங்களை ஊக்குவித்து மதம் பரப்புவது, கலாசாரத்தை சீரழிப்பது என்று அவர்களின் அஜெண்டா நீளும். பெண்ணிய கொள்கைகள் எவ்வாறு உலக அளவில் தவறாக சமூக-பொருளாதார தாக்குதல்களுக்கு மறைமுகமாக பயன்படுகிறது என்பதை யூடியுப் வீடியோக்களில் தேடி பார்க்கவும். தேர்ந்த சமூக அறிஞர்கள் இதுகுறித்து நிறைய எச்சரித்துள்ளார்கள்.

“நான் சொல்வதை ஒப்புக்கொண்டு அப்படியே திருப்பி சொல்; உனக்கு புரட்சிப்பெண் போராளி என்று பட்டம் கொடுக்கிறேன்” என்பதுதான் அவர்களின் அடிநாதம். விட்டில் பூச்சிகள் போல உலகம் அறியா பெண்கள் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.

எனவே பெண்ணியம் பற்றிய சரியான புரிதல் இன்றி வெறும் வாதத்துக்காக வளர்க்கப்படும் கருத்தாக்கங்கள் சமூக தடுமாற்றத்தையே ஏற்படுத்துமே ஒழிய பெண்களுக்கோ மொத்த சமூகத்துக்கோ எந்த நன்மையையும் செய்யாது.

இந்திய பெண்ணியம், சமூகம் உட்பட பல விஷயங்களைப் பற்றி ராஜஸ்ரீ பிர்லா, பிரேமா பாண்டுரங், பத்மா சுப்பிரமணியம், குருமூர்த்தி போன்றோரின் அற்புதமான உரைகள். தற்காலத்தில் அனைவரும் அறிய வேண்டிய பல செய்திகள். 

https://www.youtube.com/playlist?list=PLUj4lvbFPrK_GUYXXMMnxsQm4rEb-Ytwo


மேலும் படிக்க,

2 comments:

 1. சில நாட்கள் முன்பு நம் சொந்தம் வீட்டிற்கு சென்றபோது அவர் பெண்ணுடன் உரையாடினேன். கொஞ்சம் பேசியபோதே தெரிந்தது, இது மாடர்னிசம் -
  பெண்ணிய நோய் தாக்கிய கேஸ் என்று. சமூக விஷயங்கள், கல்யாணம், குடும்பம் என்று எல்லாவற்றிலும் எதிர்மறைக் கேள்விகளே வந்து விழுந்தது. அது மட்டும் சரியா? இவுங்க மட்டும் ஒழுங்கா? என்பதுபோலவே.. கிட்டத்தட்ட எல்லா கேள்விகளும் நீயா நானா பெண்கள், நவீன சினிமாக்களில் இளம்பெண்கள் பேசுவதுபோல வசனகர்த்தாக்கள் எழுதிய வசனங்கள்... அந்த எதிர்மறைக் கேள்விகள் தாண்டி இப்படி செய்யணும், இப்படி போகணும் என்ற தெளிவான பார்வைகளோ செயல்திட்டங்களோ இல்லை. எல்லாமே தன் மீது பெற்றோர் மற்றும் நலம்விரும்பிகளால் கோரப்படும் கட்டுப்பாட்டு விஷயங்களை மீறுவதற்காகவும் தான் நினைக்கும் விஷயங்கள் நடக்கவேண்டும் வைக்கப்படும் வாக்குவாதங்கள்.
  சரி, என்று நானும் திருப்பி கேட்க ஆரம்பித்தேன். அது தப்பு இது மட்டும் சரியா என்று கேட்பதெல்லாம் சரி.. இன்று முதல் எல்லா அதிகாரமும் உன்கிட்ட இருக்கு.. இப்போ அப்பாவுக்கு என்ன வேலை கொடுப்ப? அம்மாவுக்கு என்ன வேலை? குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச சுய பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு இவற்றிற்கெல்லாம் என்ன திட்டம் வச்சிருக்க??ஒவ்வொரு செலவுக்கும் என்ன வழி வச்சிருக்க? குடும்ப பொறுப்புகளை எப்படி சரிகட்டுவ? இருக்கும் சொத்துக்களை எப்படி பாதுகாப்ப? சமூகம்/சொந்தபந்தங்கள எப்படி நடத்தப்போற? அவர்கள் யாரும் வேண்டாம்னா மாற்று வழிகள் என்ன? ஒருவேளை இப்போ இருக்கற வேலையோ, தொழிலோ, சம்பாதிக்கும் உறுப்பினர்களோ போயிட்டா என்ன மாற்றுவழிகள் வச்சிருக்க?? திடீர்னு வீட்ல யாருக்காவது விபத்து னா என்ன அவசரடி திட்டம்? உன் நட்பில் இருக்கவங்க யாரெல்லாம் கூட இருந்து ஒவ்வொரு பிரச்சனைக்கும் வருவானுங்க? செலவு செய்வாங்க, இருந்து பார்துக்குவாங்க??
  கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அந்த பெண் கொடுத்த தடுமாற்ற பதில்களும் பத்திகளுக்கு திருப்பி கேட்கப்பட்ட குறுக்குக் கேள்விகளும் அந்தப்பெண்ணை கடுமையாக குழப்பச் செய்தது. (காரணம், இந்த எதார்த்த வாழ்க்கை சூழல் பற்றியெல்லாம் நீயா நானா, சினிமாவில் சொல்லிக்கொடுக்கவில்லை).. இன்று சுதந்திரம் என்று பெண்களுக்கு போதிக்கப்படுவது சுதந்திரமே இல்லை, ஊதாரித்தனம்.. சுதந்திரம் வரும்போது பொறுப்பும் சேர்ந்தே வரும். பொறுப்பில்லா சுதந்திரம் ஊதாரித்தனம். அதாவது எவனாவது எல்லா பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை சீர்படுத்தி வைக்கணும், தான் கேட்க ஆளில்லாமல் அவுத்து விட்ட கழுதை போல ஜாலியா சுற்றனும் என எண்ணுவது. இதுவே இன்று விடுதலை என்று காட்டப்படுகிறது/எண்ணப்படுகிறது.
  பெண்கள் சிந்திக்க வேண்டும். பெற்றோரும் சுற்றமும், முறைப்படுத்த வேண்டும். பெண்கள் மட்டுமல்ல நகரத்து இளைஞர்களும் பலர் இதே நிலைதான். ஆணோ பெண்ணோ - குடும்ப பொறுப்பு, அக்கறை, எதார்த்தம் எல்லாவற்றையும் சிந்தித்து வீட்டில் உள்ளவர்களோடு உரையாடுங்கள், செயல்படுங்கள். உங்கள் சுதந்திரம் தானே வரும்.. குடும்ப விஷயங்களில் உங்களைக் கேட்டு பெற்றோர் முடிவு செய்யும் நிலை விரைவிலேயே வந்துவிடும்.

  ReplyDelete
 2. கண்ணன்15 May 2017 at 18:41

  எங்கள் குடும்பத்தின் ஆணி வேரான எங்கள் பெரியம்மாவுக்கு இந்நாள் சமர்ப்பணம்..
  சிறுவயதிலேயே தந்தையை இழந்து, திருமணமாகி ஆறே மாதத்தில் கணவரை இழந்து, சர்வோதய சங்கத்தில் கிடைத்த வேலையின் மூலம் தன் இரு தங்கைகள், இரு தம்பிகளை வளர்த்து, மகளைப் படிக்க வைத்து, ஐவருக்கும் திருமணம் முடித்து இன்று எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதற்கான அடித்தளம், ஆணி வேர் அவரே. நான்கு வரியில் சுலபமாக எழுதிய இந்த வாழ்க்கைப் பயணம் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
  அரசியல், இலக்கியம், ஆன்மீகமென எது குறித்தும் பேசுவார்கள்.. கோவையில் படித்து, வேலை பார்த்ததால் அதிக நேரம் அவர்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவோ விசயங்கள், அறிவுரைகள் பகிர்ந்துள்ளார்கள்.. இறைவனிடம் என்ன, எவ்வளவு வேண்டலாமென வினோபா காந்தி அவர்கள் சொன்னதை மறக்க இயலாது: "அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான வெளிச்சத்தை கொடுங்கள்" அதற்குப் பிறகு? இறைவன் பார்த்துக் கொள்வார்.. என் யோசனை, குறிக்கோள் அடுத்த அடி எடுத்து வைப்பதே.. இப்படி ஆயிரம் செய்திகள் , கருத்துக்கள்...
  "பெரியம்மா தான் எங்களுக்கெல்லாம் அம்மா" என அம்மா அடிக்கடி கூறுவார்கள்.. முற்றிலும் உண்மை..
  இந்த நாள் மட்டுமல்ல எல்லா நல்ல தருணங்களும் உங்களுக்கே சமர்ப்பணம், பெரியம்மா...!
  - திரு.கண்ணன் பழனிசாமி அவர்கள்

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates