Trending

Friday, 27 December 2013

கொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்

ஒருவன் தன்னை கவுண்டனாக அடையாளப்படுத்த ஒரு கவுண்டர் சாதி தம்பதிக்கு மகனாகப் பிறப்பது என்பது அடிப்படை. ஆனால் அதுவே முழு தகுதியையும் கொடுத்துவிடாது. கொங்கு சாதிக்கென இருக்கும் ஒழுக்கம், கடமைகள், மரபுகள் மாறாமல் வாழும்போது தான் அவன் முழுமையான கவுண்டனாகிறான். அப்படி நாம் செய்ய வேண்டிய கடமைகள், பின்பற்ற வேண்டிய வாழ்வியல் ஒழுக்க நெறிகள், செய்ய வேண்டிய தர்ம காரியங்கள் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்து, அதில் பல விசயங்களுக்கு ஆதாரமாக பல செப்பேடு பட்டயங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார்கள். 

அப்படியானவற்றில் முக்கியமான ஆதாரங்களுடன் உள்ள இன்று நாம் தவற விடும் சில கடமைகள் காண்போம். 

௧. திருமண சீர் சடங்குகள் இன்னவிதம் நடக்க வேண்டும் என்பதும், அதில் கொங்குபிராமணர் முதல் மெங்கு மாதாரி வரை அனைவருக்குமான சீர் சடங்குகலும் கொடுக்க வேண்டிய பொருட்களும் உண்டு. அறிய நினைப்போர் மங்கள வாழ்த்து பாடலை படிக்கவும். (ஆதாரம்: மதுக்கரை பட்டயம்). நம் முன்னோர்கள் சீர் முறைகள் செய்யாமல் திருமணம் செய்ய மாட்டார்கள். இப்போது உள்ளது போல பாஸ்ட் புட் கல்யாணங்கள் மிகவும் தவறானவை. கோவிலில் திருமணம் செய்வதும் பெரும் பாவமாகும். சந்தர்ப்ப சூழலால் கூட அருமைகாரர் விடுத்து திருமணம் செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவங்கள் கொங்கு தேசம் முழுக்கவே நடந்துள்ளது. எனவே நம் பாரம்பரிய முறைகளை விடுத்து தமிழ் முறை கல்யாணம் என்பதோ ஐயரை மட்டுமே வைத்து கோவிலில் திருமணம் செய்வதோ மிகவும் தவறாகும். சீர்கள் செய்து விசேசம் நடப்பதை தான் முன்னோர் சீரும் சிறப்புமாக வாழ்வது என்றனர். அதை விடுப்பதே 'சீரழிவு'. சீர்கள் செய்து திருமணம் செய்யும்போது நம் முன்னோர்களின் ஆத்மார்த்த ஆசிர்வாதம் கிடைக்கிறது. குலதெய்வ ஆசியும் , பல ஆயிரம் வருட பாரம்பரியத்தின் பிடிப்பும் ஏற்படுகிறது.

௨. கொங்கு புலவர்களை ஆதரித்து காத்து, அவர்களுக்கு திருமணத்தில் பால் பழம் கொடுத்து கம்பர் வாழ்த்து பாடக்கேட்டு, திருமண வரி கொடுக்க வேண்டியதும் கொங்கு வெள்ளாளர் கடமையாகும். இந்த வழக்கம் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் தமிழ் பற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். மன்னர்கள் பிரபுக்கள் மட்டுமே தமிழ் வளர்த்த காலத்தில் நம் கொங்க தேசத்தில் ஏழை குடியானவனும் கூட அதுவும் கொடை என்று இல்லாமல் வரி என்று கொடுத்து புலவர்களை காத்து வருகிறோம். அதனால்தான் தமிழ் பேசிய பிற தேசங்களை விட கொங்க தேசத்தில் ஏராளமான இலக்கியங்கள் எழுதப்பட்டன. புலவர்களே நமக்கு எழுத்தாணிபால் கொடுத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர். காலம் காலமாக திண்ணைப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தனர். புலவர்க்கு கொடுக்க பொருளில்லை என்று சாத்தந்தை கூட்ட வள்ளல் சடையப்ப கவுண்டர் பாம்பு புற்றினுள் கையை விட்ட சம்பவம் நடந்ததும் நம் கொங்கதேசம்தான்.


௩. குலகுருக்கள் - தங்கள் கூட்டம்-காணிக்கான குலகுருவை போற்றி வணங்கி தலைக்கட்டு வரி, மாங்கல்ய வரி, சஞ்சார வரி கொடுத்து, மடத்தில் நடக்கும் ஆத்மார்த்த பூசைகளில் கலந்துகொண்டு கல்யாணத்திற்கு முதல் பத்திரிகை தந்து, கைகோர்வை சீரின் போது வாழ்த்து பெற்றுக் கொள்வது என சொல்லப்பட்டுள்ளது.ஏன், குழந்தையில்லா தம்பதிகள் சொத்துக்கள் கூட மடத்திற்கு போக எழுதிவைத்துள்ளனர். கொங்க தேசத்தின் வளர்ச்சியில் கொங்க குலகுருக்களின் பங்கு மிகப்பெரியது. வேதங்கள் சாஸ்திரங்கள் முதலியவற்றில் இருந்த விஞ்ஞான தத்துவங்களை பட்டகாரருக்கு உபதேசித்து நீர்நிலை, கோவில், நாடு நகர எல்லை வகுத்தல் போன்றவற்றில் நல்ல பங்களிப்பு செய்துள்ளார்கள். எதிரிகளை வெல்லும் போதும், பல தீர்ப்புக்கள் சொல்லவும் மந்திர தீக்சையால் காரிய சித்தி பெற சிஷ்யர்களுக்கு உதவியுள்ளனர். அதற்கும் ஆதாரங்கள் இன்றளவும் உள்ளது. பிற கடமைகளை கூட நாம் மறந்துதான போனோம். ஆனால் குலகுரு விசயத்தில் திராவிட கம்யுனிஸவாதிகளின் பேச்சை கேட்டு நாம் மறுத்ததோடு பல குருக்களின் சொத்துக்களை பிடுங்கி, துன்புறுத்திய கதையும் நடந்துள்ளது. அப்படியான பாவங்களின் சிக்கியோர் வம்சங்கள்/கிராமங்கள்  அழிந்து,  போயுள்ளதும் வரலாறு. 

அவற்றை தப்பாமல் பின்பற்றுபவர்களுக்கு பல ஆசிகளையும், புண்ணியங்களையும் அருளியதொடு, அதை மறந்து, மறுத்து செயல்படுபவர்களுக்கு குலதெய்வங்கள் சாட்சியாக சாபத்தையும் விட்டு சென்றுள்ளனர். அந்த சாபத்தினை கீழே உள்ள வரியில் காண்போம்..

""...குருநிந்தனை சொன்னவர் கெங்கை கரையிலே காறாம்பசுவையும் பிராமணாள்களையும் மாதாபிதாவையும் கொண்ற தோஷத்திலே போவாறாகவும். யிந்தப்படிக்கி யெங்கள் வமுசத்தாறனைவரும் சம்மதிச்சு பூந்துறை புஷ்பவனீசுவரர் சுவாமி பாகம் பிரியாள் சன்னிதானத்திலே சகிறண்ணியோதக தானமாயி எழுதிக்கொடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம்.."" 


1 comment:

  1. மிகவும் பயனுள்ள பதிவு. ஆனால், தங்கள் குறிப்பிட்டுள்ள சடங்குகள் எல்லாம் செய்ய ஆட்கள் இல்லை என்பதே மிகவும் வருத்தத்திற்குரிய உண்மை.
    மேலும், கொங்கு முறைப்படி திருமணம் செய்யும் முறைகளை சொன்னால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

    நன்றி!

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates