Trending

Friday, 24 January 2014

கொங்கு மக்களின் சத்ய நெறி

    சொன்ன சொல் மாறாமை என்பது கொங்கு மக்களின் குடிப்பண்பாகும். இந்த தர்ம நெறியே கொங்கு மண்ணில் பல நூற்றாண்டுகள் எண்ணற்ற இன்னல்களையும், வெளியோர் குறும்புகளையும் தாண்டி கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களை ஆட்சியாளர்களாக நிலை நிறுத்தியது கொங்கு மன்னர்களின் தர்ம நெறியின் மீது இருந்த அசைக்க முடியா பற்றுதான் அவர்களின் குடிமக்களாகிய கொங்கு பூர்வகுடி 18 சாதியரையும் பிணைத்து ஒன்றுபட்ட இணக்கமான சமூகமாக வாழச்செயதது.

கொங்கு மக்களின் வாக்கு தவறா வாழ்க்கை நெறிக்கு பல்வேறு உதாரணங்களை வரலாற்றில் காணலாம்.

பழையனூர் நீலி
பழையனூர் நீலி என்னும் பேய் மனித வடிவங்கொண்டு தன்னை போன ஜென்மத்தில் வஞ்சகம் செய்திட்ட கணவனை கொல்ல துரத்தியது. அதனிடம் இருந்த தப்ப நினைத்த வணிகனை வேளாளர் நியாய சபை முன் குற்றம் சுமதி தன்னுடன் அனுப்புமாறு கோரியது. அதன் நடிப்பை நம்பி, உன் உயிருக்கு ஆபத்து நேருமெனில் நாங்கள் எழுபதுவரும் தீப்புகுவோம் என்று வணிகனுக்கு வாக்குரைத்தனர். வணிகனை அழைத்து சென்ற பேய் கொன்று தீர்த்தது. வாக்கு பெற்ற வணிகன் உயிர் நீத்த பின் எவர வந்து கேட்பார் என்றில்லாமல் கொடுத்த வாக்கை காக்க  எழுபது பேரும் தீப்புகுந்து உயிர் நீத்தனர். இந்த வரலாறு பல காலமாக வழக்குரைத்து வரப்படுவதாகும். கொங்கு மண்டல சதகம் முதல் பல இலக்கியங்கள் சான்று சொல்லும். தர்ம நெறி பிறழாது சொன்ன சொல் காத்த வெள்ளாளரை இன்றளவும் பல தரப்பட்ட மக்களும் தெய்வமாக தொழுது வருகிறார்கள்.

உயிர் நீத்த எழுபது போரையும் தங்கள் முன்னவராக கருதி கொங்கு வெள்ளாள விழியன் குல கவுண்டர் மரபினர் கங்கையில் மூழ்கி எழுந்ததும் வரலாறாகும்.

பொன்னர் வாக்கு:
செம்பகுலன் என்ற ஆசாரியின் சூதின் பொருட்டு நடந்த பஞ்சாயத்தில் எதிர் வாதம் கேட்காமல் தவறாக பேசிய காராள வம்சத்தாரை பொன்னர் சாபமிட்டார். அதன் சாரம், காராள வம்சத்தில் நீதி தவறுவோர் வீட்டில் குறை உண்டாகும் என்பதாகும். இன்றளவும் சத்திய நெறி தவறி நடக்கும் வேளாளர் இல்லங்களில் முடகுலந்தைகள் பிறப்பது, ஆண் வாரிசின்றி வம்சமழிவது, பெண்கள் நெறிகெட்டு போவது, பூர்வீக சொத்துக்கள் இழப்பது, அகால மரணங்கள், துர்மரனங்கள் சம்பவிப்பது, குல நாசமுண்டாவது என்று இன்னல்களை சந்திப்பார்கள என்பது கண்கூடு. பெரியண்ணன் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை. அவரின் சாப வரிகளை நாட்டுப்புற கதைப்பாடலில் பின்வருமாறு சொல்கிறார்கள்.பழமொழிகள்:

"ஒரு நாக்கு ஒரு சொல்லு"
"சொத்தழிஞ்சாலும் சொல்லழிய கூடாது"

போன்றவை இன்றளவும் கொங்கு வட்டாரத்தில் புழங்கி வரும் சொலவடைகளாகும்.

இலக்கியங்கள்:
பல்வேறு இலக்கியங்களும், காப்பியங்களும், ஆய்வு நூல்களும் கொங்கு மக்களின் நியாய நெறிகளை போற்றி புகழ்ந்துள்ளன. அவற்றில் ஒரு சிறு பகுதியை இங்கு காண்போம்.

திருச்செங்கோடு திருப்பணிமாலை நூலில்,

"சொல்லாலும் தருமத்தாலும் அரிச்சந்திரன் போல இருந்தான்" 

என்றும்,


"பருதிநீர் பொய்த்தாலும் பருதிமதி பொய்த்தாலும் 

சுருதிமறை பொய்த்தாலும் சொன்ன மொழி பொய்யாதார்;

இமையவர்கள் பொய்த்தாலும் இந்திரனார் பொய்த்தாலும் 
உமைபாகர் கிருபையினால் உற்றமொழி பொய்யாதார்" 


குழந்தைவேல் அகவற்பா நூலில்,


பருத்திப்பள்ளி செல்லன்குலத்தார் மேல் பாடப்பட்ட பாடலில்,
பழனி மாம்பழக்கவிச்சிங்க நாவலர் பாடியது,
என்றும் பாடப்பட்டனர்.

வேளாள புராணத்தில் கொங்கு வெள்ளாளர் ஆதி குரு போதாயன மகரிஷி, வெள்ளாள மக்களின் ஆதி பாட்டனான மரபாளனுக்கு சொன்ன உபதேசம் கீழ,

நம்மிடம் நற்பண்புகள் சேர்ந்தால்தான் ஜாதிக்கோ பதவிக்கோ மரியாதை.. வெள்ளாளன் என்ற ஜாதி மட்டுமோ - மணியாரன், பட்டக்காரன், ஊர்கவுண்டன் போன்ற பதவிகள் மட்டுமோ மரியாதையை உருவாக்கிடாது. வாய் கூசாது பொய் பேசுவது, பிறரை கேவலமாக தூற்றுவது, பொய் பிரசாரங்கள் செய்வது, பிறரது துன்பத்தில் இன்பம் காண்பது இதெல்லாம் நல்ல சாதிக்கு-நல்ல பிறப்புக்கு அடையாளமில்லை. நம் நற்பண்புகளே நிரந்தரமான வளர்ச்சியை, பெருமையை நிலைநிறுத்தும்.. சூதும் வாதும் வேதனை செய்யும். தர்மம் தலைகாக்கும்.

கொங்கதேசத்தில் பாரம்பரியத்துக்கும், தர்ம-ஒழுக்க நேரிகளுக்குமே முதலுரிமை கொடுக்கப்படும். ஒருவன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் கோயிலில் முதல் மரியாதைகள் கிடைக்காது; அவன் குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வந்திருத்தலும், சத்யம்-ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்திருந்தாலும் மட்டுமே மரியாதைக்குரியவனாகிறான். இன்று பணமுள்ளவன் மரியாதையை 'வாங்குகிறான்'.

கொங்கதேசத்தின் நாடுகளுக்கு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட நாட்டார்களும் ஒழுக்கம் சத்யநெறி பார்த்தே அக்காலத்தில் நியமிக்கப்பட்டனர். ஆனால் பின்னாளில் பல பட்டக்காரர்கள்-நாட்டார்கள், ஒழுக்கம் தர்மம் கைவிட்டு மரியாதைக்கு அருகதையற்றவர்களாகியும், பிரிட்டிஷ் அபிமானிகளாக மாறிவிட்டார்கள். ஆணவம் அகங்காரத்தால் குடிகளை துன்புருத்தியவர்களை கவுண்டர்கள் கைவிட்டனர். இன்று அவர்களை கொங்குமக்கள் தங்கள் தலைவர்களாக நினைப்பதில்லை.

வெள்ளோடு பயிர கூட்ட குப்பண்ண கவுண்டர் மீது ஒரு நீதிச்சதகமே பாடினர். இவையன்றி இன்னும் எண்ணற்ற சிற்றிலக்கியங்கள், வெள்ளையர் குறிப்பேடுகள், ஜெயமோகன் போன்ற தற்கால வரலாற்று சமூக ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வு நூல்கள், கொங்கு மக்களின் சத்திய நெறி குறித்து குறிப்பிட்டு பாடியுள்ளன. அனைத்தையும் தொகுத்தால் புத்தகமே போட வேண்டி வரும் என்பதால் இதோடு முடிக்கிறோம்.

வளர்ச்சிக்கு விதை:
கொங்கு மண்டல வளர்ச்சிக்கு கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் உழைப்பு, அறிவுத்திறன், விடா முயற்சி என்று பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் இரண்டாம் தர காரணிகள் தான். கொங்கு மக்களின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணமாவது அவர்கள் பின்பற்றிய சத்ய நெறியே ஆகும்.  அதற்கு மேற்பட்டு தொடர்ந்து விவசயத்தொழில் என்ற நுணுக்கமான கலையை காலம் காலமாக செய்த காரணத்தால் எடுத்த காரியங்களை செயல்படுத்தி வெற்றி கானும் திறன் பெற்றிருந்தனர்.

நெறிவழுவாத வாழ்க்கையை கடைபிடித்ததால் இறையருளும் குருவருளும் இயல்பாகவே பெற்றனர். கொங்கு மக்களுக்கு கடன் கொடுத்தோர்  எப்படியும் தங்களது பொருள் விட்டு செல்லாது என்று நம்பிக்கொடுத்தனர். சொத்தை விற்றாவது தங்கள் வாக்கை காப்பர் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. வியாபார வாய்ப்புக்களும் நேர்மை, சொன்ன சொல் தவறாமை ஆகிய காரணங்களால் தொடர்ந்து வந்தன.


அன்றைய தேசங்களில் கொங்கதேசத்தில் மட்டுமே இருந்த குலகுரு அமைப்பும், ஊருக்கு ஊர் நாம் போற்றி வளர்த்த புலவர் பெருமக்களும் உபதேசம், இடித்துரைப்பு மூலம் இந்த தர்மநெறி வளர அடிப்படை காரணம் என்று உறுதியாக நம்பலாம். எனவே நம் மண்ணின், முன்னோர்களின் பாதை மாறாது நாம் காத்து வந்த தர்மத்தை நம் அடுத்த தலைமுறைக்கும் கற்பித்து நல்வழிப்படுத்துவோம்.

6 comments:

 1. கவுண்டர் வீட்டு பசங்கனா இவர மாதிரி இருக்கோனும்ங்க......

  நம்ம செங்கனி குல கவுண்டர் வீட்டு பையன் தான் ‪‎கரூர்‬ ‎புன்னம்‬ ‪‎சத்திரம்‬ ‪‎லோகேஸ்‬... இவர் ஏற்காட்டில் படிக்கிறார் ....
  லீவுக்கு ஊருக்கு வந்தப்போ கரூர் to ஈரோடு ரோட்டில் புன்னம் சத்திரத்தில் ஒரு செல்போன் கீழே கிடந்தது.சுமார் 21000 ஆயிரம் sony போன்... சிறிது நேரத்தில் அந்த செல்போனுக்கு அழைப்பு வந்தது.நம்ம லோகேஸ் போன் அட்டன் பண்ணி பேசும்போது எதிரில் பேசிய நபர் படபடப்புடன் போன் என்னுடையது, தொலைந்து போய்விட்டது கொடுத்துருங்க, என்றார்.
  நம்ம லோகேஸ், 'போன் என்கிட்ட தான் இருக்கு என் பேரு லோகேஸ். புன்னம் சத்திரத்தில் உங்க போன் மெயின் ரோட்டில் கீழே கிடந்து எடுத்தேன்... சத்திரம் வந்து வாங்கிக்கோங்க' நு சொன்னார்.

  'நான் வாராதுகுள்ள நீங்க போன switch off பண்ணிட்டீங்க நா என்ன பண்றது' நு அவர் கேட்க, நம்ம லோகேஸ் "நாங்க கவுண்டர் வீட்டு பசங்க எங்கள அந்த மாதிரி எல்லாம் வளர்கல" என்று சொல்லிவிட்டு, "சத்திரம் வந்து என் நம்பருக்கு போன் பண்ணுங்க" என்று தனது செல் நம்பரை கொடுத்துள்ளார்....

  சிறிது நேரத்திற்கு பிறகு போனை தொலைத்த நபர் இரண்டு சக்கர வாகனத்தில் சத்திரம் வந்து லோகேஸ் க்கு போன் செய்து போனை பெற்று கொண்டு 500 ரூபாய் பணம் கொடுக்க லோகேஸ் அந்த பணத்தை வாங்காமல் "பணத்துக்கு ஆசபடற ஆள் நாங்க கிடயாதுங்க" என்ற சொல்ல..

  பிறகு போனை தொலைத்த நபர் டீ யாவது சாப்பிடலாம் என்று சொல்ல ஒரு டீ கடையில் டீ சாப்பிட்டு விட்டு அந்த நபர் பணம் கொடுக்க முயல நம்ம லோகேஸ் அவரை தடுக்க ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு லேகேஸ் டீ க்கு பணம் கொடுத்துவிட்டு "நீங்க எங்க ஊருக்கு எங்கள தேடி வந்த விருந்தினர்" என்று சொல்லி "பாத்து பத்திரமாக போங்க" என்று வழியனுப்ப, அந்த நபர் ஒரு அதிர்ச்சி கலந்த பிரமிப்போடு பல முறை நன்றி சொல்லி விட்டு ஈரோடு நோக்கி கிளம்பினார்...
  அந்த போனில் பல முக்கிய தகவல்கள் மற்றும் முக்கியமான contact s இருந்ததாக அந்த நபர் கூறினாராம்....

  பின் குறிப்பு... செல்போனை தொலைத்த நபர் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்......
  தலை வணங்குகிறேன் லோகேஷ் செயலை பார்த்து..

  ReplyDelete
 2. சொன்ன சொல் தவறாதவர்கள் கொங்கு வேளாளர்கள்-
  சொல் நிலை அந்துவன் (சொன்ன வாக்கு தவறாத அந்துவன் குலத்தோர்) என்பது மொழி

  ReplyDelete
  Replies
  1. குமாரவேல்20 October 2015 at 04:53

   குடியானவன் பிறவிக் குணமாச்சேங்க மாப்ள....

   Delete
 3. மகிழ்ச்சி லோகேஷ்

  ReplyDelete
 4. மகிழ்ச்சி லோகேஷ்

  ReplyDelete
 5. மகிழ்ச்சி லோகேஷ்

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates