Trending

Monday, 31 March 2014

கொங்கதேசத்தில் கிறிஸ்தவமும் ஈரோடு பிரப் சர்ச்சும்

கிறிஸ்தவ வெள்ளையர்களால் தங்கள் பணம் சுரண்டும் காலனியாதிக்க வெறியால் உருவாக்கப்பட்ட தாது வருஷ பஞ்சங்கள் போன்ற அரை நூற்றாண்டு பஞ்ச காலம் பற்றி பல்வேறு அறிஞர்களால் விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்த காலங்களை கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் மதம் பரப்பும் வாய்ப்புக்களாக பயன்படுத்திக்கொண்டன. இழவு வீட்டில் வியாபாரம் செய்தது போல.

1923ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட India and its Missions என்ற நூலில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பு Spiritual Advantages of Famine and Cholera (“பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்”). இக்கட்டுரையில்,  ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி கொடுக்கப் பட்டுள்ளது. ஆர்ச் பிஷப் எழுதுகிறார் –

“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது. நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை வற்புறுத்தி அழைத்து வர வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”

(நன்றி: திரு ஜடாயு அவர்கள், தமிழ்ஹிந்து தளம்)

கிறித்துவ மறைப் பணியாளர்கள் பஞ்ச காலத்தை எளிதான மதமாற்றக் காலமாகக் கருதியுள்ளனர். அவ்விதம் அதைப் பயன்படுத்தவும் செய்துள்ளனர். டிரிங்கால் என்னும் பாதிரியார் எழுதியுள்ள கடித வாசகம் '...ஆயிரக்கணக்கில் பிராங்க்ஸ் என்னிடமிருந்தால் பாதி நாடு திருமுழுக்குக் கேட்டு என்னிடம் வந்துவிடும்' என்று கூறுகிறது.

பஞ்சம் மற்றும் காலரா தாக்கிய போது ஈரோடு உட்பட்ட அன்றைய கோவை மாவட்டத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் இருபதாயிரம் பேர் இறந்த சோகமும் நடந்தது (வெள்ளையர்களே ஒப்புக்கொண்ட எண்ணிக்கை! யதார்த்தத்தில் எவ்வளவோ தெரியவில்லை). மக்கள் பசி பஞ்சத்தால் எறும்பு புற்றுக்குள் இருந்த தானியங்களை கூட பொறுக்கி தின்றனர். (ஆதாரம்: எனது இந்தியா, எஸ். ராமகிருஷ்ணன்). பெற்ற குழந்தைகளை விட்ரு, பிணம திண்று ஏழை மக்கள் கொடுமைகளை சொல்லி மாளாது. விவசாய நில உரிமையாளர்கள் தங்களிடம் வேலை செய்தவர்களுக்கு தங்கள் விதை தானியம் முதற்கொண்டு கஞ்சி காய்ச்சி கொடுத்து உயிர் காத்தனர். குழந்தைகளுக்கு பாலும், பெரியவர்களுக்கு உணவும், கிராமம் கிராமமாக கிணறு போன்ற நீராதாரங்களும் உள்ளூர் கவுண்டர்கள் ஏற்படுத்தி தந்தனர். இன்றளவும் பஞ்ச கும்மி பாடல்களில் தங்களை காத்த எஜமானர்களை போற்றி நினைவு கூறுகிறார்கள் எளிய மக்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களின் முன்னோர்களின் பெருஞ்சாவுக்கு காரணாம கிறிஸ்தவ வெள்ளையர்களோடு சேர்ந்து தங்கள் உயிர் காத்தவர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய சமூக ஒற்றுமை அப்படி; இன்றைய நிலை இப்படி. 

பஞ்ச காலத்தில் கோவை மக்கள்

பஞ்ச காலம் 1870 களில் துவங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர்களின் நிர்வாக சீர்கேடு மற்றும் பல்முனை சூழ்ச்சிகளால் தொடர்ந்தது. மேற்கண்ட பஞ்ச காலத்தில் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை வந்து ஈரோடு வந்த 'அருள்தந்தை' திரு.பிரப் அவர்கள் இருபது சர்ச்களை பெரும் பொருட்செலவில் கட்டினார். அதே காலகட்டத்தில் தான் லண்டன் மிஷனுக்கு பெரியமாரியம்மன் கோயில் நிலம் கைமாற்றப்பட்டது.


ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் நில மீட்பு போராட்டம் குறித்த கட்டுரை 

காலனி ஆட்சியை பற்றி பேசும்போது ஆங்கிலேய சர்க்கார் என்று மொழி அடையாளத்தையும், வெள்ளையர் ஆட்சி என்று நிற அடையாளத்தையும், பிரிட்டிஷ் ஆட்சி என்று தேச அடையாளத்தையுமே பிரதானமாக முன் வைத்தனர். காலனியாதிக்க சுரண்டல், பிரிட்டிஷ் மட்டும் செய்ததல்ல. போர்ச்சுக்கல், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளும் அடங்கும். அனைத்து காலனிகளும் அவரவர் தேசம் மொழி நிறம் கொண்டே அடையாளப்படுத்தப்பட்டனவேயன்றி எங்கும் தவறிக்கூட கிறிஸ்தவஎன்ற பொது மத அடையாளம் நாசூக்காக தவிர்க்கப்பட்டது.  காலனி சுரண்டலும் கிறிஸ்தவமும் கைகோர்த்து அண்ணன் தம்பியை போல இந்தியாவில் வளர்ந்தன. பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்ப்பது பைபிளுக்கு மீறிய செயல் என்றெல்லாம் பாதிரியார்களால் மதம் மாறிய இந்திய கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். மனத்தால் பிரிட்டிஷ்காரனாக  அரை நூற்றாண்டு பஞ்ச காலத்தை தங்கள் மதம் பரப்ப நன்கு பயன்படுத்தினர் மிஷனரிகள். இவ்வளவு நேரடி மற்றும் மறைமுக காரணங்கள் இருந்தும், காலனி ஆதிக்கம் அதன் மத அடையாளத்தால் குறிக்கப்படாத காரணம் ஏன் என புரியவில்லை. இதே இஸ்லாமிய படையெடுப்புக்கள்-ஆட்சியாளர்கள் அனைவரும் மத மையமாகவே குறிக்கப்படுகின்றனர். இந்த வித்தியாசம் ஏன் என்று தெரியவில்லை..


எது எப்படியோ, ஸ்ரீராமரின் காலணிஆட்சியின் ஸ்பரிசம்  அனுபவித்த பாரதம் இன்னும் எத்தனை கிறிஸ்தவ காலனிகொடுமைகளையும் சகிக்க பலத்தை தரும்!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates