Trending

Tuesday, 4 March 2014

பெண் கிடைக்காத பிரச்சனை

இன்று திருமணத்திற்கு பெண் கிடைக்காத பிரச்சனை நம் இளைஞர்கள் பெரும்பாலானோர் மனதை பாதித்துள்ளது. இதற்கு காரணங்கள் என்ன..? இது வருங்காலத்தில் வாராமல் இருக்க நம்மவர்கள் செய்ய வேண்டியது என்ன?1. ஒற்றை குழந்தை சாபம்: ஓரே குழந்தையோடு நிறுத்திய வழக்கத்தால் இன்று நம்மவர்கள் கடும் துன்பத்தை அனுபவிக்கிறோம். பையன் பிறந்தால் ஒன்று  மட்டும்; பெண் என்றால் தான் இரண்டாவது என்று போன தலைமுறையில் பலரும் செய்தது. இப்போதும் தொடர்கிறது. ஒற்றை குழந்தை சாபத்தால் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். இன்று பெண் கிடைக்காமல் கஸ்டப்படுவோர் எத்தனை பேர் நெறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள போகிறீர்கள்..?? மூன்று குழந்தைகளோ அதற்கு மேலோ பெற்றுக்கொள்வதானால் கொங்கு சங்கங்கள் அந்த குழந்தைகளுக்கு கல்வி நிதிச்சலுகை வழங்க வேண்டும். அக்குழந்தைகளின் கல்யாணத்திற்கு மண்டபங்கள் இலவசமாக தர வேண்டும். பொண்டாட்டி காலில் விழுந்தாவது மூன்று குழந்தைகள் பெற்று கொள்வேன் என்போருக்கு  பெண் பார்க்க நாங்கள் தயார்!


ஒற்றை குழந்தை சாபம் குறித்து விரிவாக இங்கு படிக்கவும்

2. ஆடம்பர திருமணங்களை அனைவரும் போட்டி போட்டு செய்ததால் செயற்கையாக தேவையற்ற செலவுகள் கூடியது.  அதற்காக பெண்களை வேலைக்கு அனுப்பி 'பல' அப்பாக்கள் பெண்களை படிக்க வைத்த செலவையும் கல்யாண செலவையும் பெண்ணின் சம்பளத்தில் எடுக்க வேண்டும் என்று வியாபார கணக்கு போடுகிறார்கள். பெண்கல் வேளைக்கு செல்வது பற்றி விவாதம் வேறு, ஆனால் பருவத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே கருத்து. இதுபோன்ற தகப்பங்களை சமூக நிகழ்ச்சியில் குத்திக்காட்டி சீக்கிரம் பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வைப்பதே, அந்த பெண்களுக்கும், நம் சமூகத்துக்கும் நாம் செய்யும் சேவையாகும். எத்தனை பேர் எளிமையாக சீர்கள் செய்து கல்யாணம் செய்யப்போகிறீர்கள்..? நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து பெண் வீட்டில் திருமணம் நடத்த வேண்டும். பின்னர் உங்கள் தேவைக்கு ஏற்ப மண்டபங்களில் நண்பர்களுக்கும் பிற உறவினர்களுக்கும் (கடனை கழிக்க) ரிசப்சன் ஏற்ப்பாடு செய்து கொள்ளவும்.  (சீர்கள் செய்யாமல் செய்வது கல்யாணம் இல்லை; காளை சேர்ப்பது. கிறிஸ்தவ பறையர்கள் போல கோயிலில் கல்யாணம் ரிசப்சன் என்பது சீரழிவு. முறையாக அருமைகாரரை கொண்டு சீர்கள் செய்து செய்வதே கல்யாணம்). 


கொங்கு கல்யாணம் பற்றிய கட்டுரைகள் படிக்க இங்கு சொடுக்கவும்.

3. பருவத்தில் இயற்கையாக வரும் உணர்வு தேவைகளுக்கு சரியான வடிகால் வேண்டும். முன்பு ஆண்களே இருபதை தொடும் முன் கல்யாணம் செய்வார்கள். இன்று பெண்கள் முப்பது நெருங்கும் பொது செய்கிறார்கள். உண்மையில் பெண் கிடைக்காத பிரச்சனைக்கு பெண்ணின் திருமண வயது செயற்கையாக உயர்ந்ததே காரணமாகும். திருமணம் செய்யாமல் இருப்பதால் தவறான சூழ்நிலைகளால் ஒழுக்கக்கேடுகள் உருவாகும். நம் பெண்கள் பெரும்பாலும் இதுபோன்ற தவறுகளுக்கு இரையாவதில்லை என்றாலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது கல்யாணமாகாமல் கஸ்டபடுவோர் எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளுக்கு பருவத்தில் கல்யாணம் செய்து வைப்பீர்கள்..?

பருவத்தில் பெண்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டும்.. இல்லையேல், ஒவ்வொருமுறையும் அந்த பெண் மாதவிலக்காகும்போது அந்த பெண்ணை பெற்ற தந்தைக்கு ஒரு சிசுவை கொன்ற சிசுஹத்திதோஷமுண்டாகும். ஒரு பருவமடைந்த பெண், ஆண் துணை இல்லாமல் பாலியல் தேவையின் போது விடும் பெருமூச்சு உலக சமநிலையை ஆட்டம் காணச் செய்யும்.. அந்த பெருமூச்சின் வெப்பம் வம்சத்தை பொசுக்கும்.. பெண்ணுக்கு செய்யும் பெருந்தீங்காகும்.
-தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் செய்தி 

4. ஜாதகம் என்பது ஓரளவே பார்க்க வேண்டும். பெண் வீட்டாரும் பையன் வீட்டாரும் ஒன்றாக சென்று ஒரு ஜோதிடரிடம் ஒரே முறை மட்டும் ஜாதகம் பார்த்தால் போதுமானது. நம் மங்கள வாழ்த்தில் செவ்வாய் & ராகு கேது எல்லாம் சொல்லவில்லை. பத்து பொருத்தம், கெவுளி வாக்கு, தடவழி, பேர் பொருத்தம்-இவைதான் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் ஜாதகத்தை ஒதுக்குவதும் தவறாகும். அது நம் முன்னோர் பின்பற்றிய மரபு. மங்கள வாழ்த்து மட்டுமல்ல. ஏர் எழுபதில் கூட ஜாதகம் பார்ப்பதை குறிப்பிட்டுள்ளார்கள்.


இவை அனைத்துக்கும் மூல காரணம், பாரம்பரிய வழிகளை விட்டு விலகி சென்றதால் ஏற்ப்பட்ட ஆன்ம பல குறைவு. நம் இனத்தின் ஆன்ம பலம பெருக வேண்டுமானால் சரியான குலதெய்வ வழிபாடு, குலகுரு வழிபாடு, நாட்டு பசுக்கள் வளர்த்தல், பழமையான கோயில்களை புதுப்பிக்கிறேன் என்ற பேரால் இடிக்க விடாமல் காத்தல், மரபு சீர்கள் பின்பற்றல், பெரியவர்களை சொந்த பந்தங்களை மதித்தல் போன்றவற்றால் மட்டுமே முடியும். கோயில்களில் பாரம்பரிய வழிமுறைகள் பின்பற்ற வேண்டும். தமிழ் முறையில் செய்கிறேன் என்ற பேரில் புதிய திருட்டு சாமியார்களும் சிலை கடத்தல்காரர்களும் கோயிலுக்குள் வருவதை தடுக்க வேண்டும். இவை  அனைத்தும் சரியானால் அடுத்த தலைமுறையில் இதே பிரச்னை மீண்டும் வராமல் வேரோடும் வேரடி மண்ணோடும் சரி செய்துவிட முடியும்.

4 comments:

 1. ஒரு காலத்தில் பெண்ணை பெற்றவன் ,வரதட்சினை கொடுத்தே கடனாளி ஆனான்,,,அத்னால் பெண்களை கருவிலே அழிக்கும் நிலை உருவானது. இப்பொழுது சொத்தில் சம உரிமை பெண்களுக்கும் போவதால்,,,, நகை போடும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். வீட்டிற்கு 3 குழந்தைகள் இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சொத்து பிரித்து கொடுத்தல் தவறுங்க.. நிலம் பிரியக்கூடாது.. அதற்கு பதில் நம் சாதிக்கென சீர் அளவுகள் வகுக்கப்பட வேண்டும்..

   Delete
 2. வரதட்சணை அதிகம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை இருந்ததால் பெண் பிள்ளைகளை அழித்தது முடிந்துபோன விசியம்,
  ஆனால் இன்றைக்கு லேட் மேரேஜ், ஜாதகம், அதிக சம்பளத்துடன் வேலை போன்ற காரணங்களால் ஒரு தலைமுறையையே ஒழித்துவிட்டனர்,
  தகுந்த வயதில் திருமணம் செய்து வைத்து இருந்தாலே போதும் பெண் பற்றாக்குறை நீங்கும்,
  இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது கூட அவரவர் விருப்பம்,
  சரியான வயதில் திருமணம் செய்தால் பாலியல் குற்றங்கள் கூட குறையும்,
  ஆனால் யார் இதை பின்பற்றப் போரா்கள்,

  ReplyDelete
  Replies
  1. திரு செங்கோட்டுவேல் அவர்களே.. //பெண் குழந்தைகளை அழித்தது// பெண் சிசுக்கொலை கொங்கதேசப்பகுதிகளில் மிகக்குறைவு, அதுவும் பிற குறிப்பிட்ட சமூகத்தில் தான் நடக்கும்.. கொங்க வேள்ளாள கவுண்டர்கள் முதலில் மகன் பிறந்தால் ஒரே குழந்தை; மகள் பிறந்தால் இரண்டாவது என்று போனதால்தான் இன்றைய சூழ்நிலை ஏற்ப்பட்டது.

   Delete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates