Trending

Thursday, 24 April 2014

கவுண்டரா? தமிழரா? மொழிப்பற்றா?

கவுண்டரா? தமிழரா? மொழிப்பற்றா?

மொழிப்பற்றை பற்றி பேசும் முன்னர் மொழி என்றால் என்னவென்று பாக்கனும். கொங்கு மக்களின் பாசை கொங்காளம் என்கிற காங்கி யாகும். இம்மொழி பற்றி வெள்ளைக்காரர்கள்கூட அவர்களின் குறிப்புகளில் எழுதியுள்ளார்கள். காங்கிக்கென தனி இலக்கணமே இருந்துள்ளது. காங்கி இன்றும் கொஞ்ச நஞ்ச உயிர்ப்போடு இருந்துகொண்டுதான் இருக்கிறது. காங்கி என்பது வேறொன்றுமில்லை, நாம் பேசும் கொங்கப்பாஷை எனும் கொங்குத்தமிழ் தான். சரி, இதுவும் தமிழ் தானே, என்று கேட்கலாம். அப்படிப்பார்த்தால் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று எதையும் தனி மொழி என்று கூறிவிட இயலாது. அவை எல்லாமே தமிழ், சமஸ்கிருதம் மற்றும் அவ்வட்டாரத்தின் தனி சொற்கள் என சொற்களின் கலவையே. அதுபோலத்தான் காங்கியும்.முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் புகுந்த காலம்தொட்டே இங்கிருந்த கிறிஸ்தவ பாதிரியார்கள்,

Tuesday, 15 April 2014

GAIL கெயில் கேஸ்லைன் பிரச்சனைதமிழர்களையும் உழவர்களையும் கிள்ளுக்கீரையாக நினைக்கும் போக்கு மத்திய அரசுக்கும் பெருநிறுவனங்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது. குறைந்த தூரமே பிடிக்கும் கேரளா வழி கேஸ் லைன் பதிப்பை விடுத்து தமிழ்நாடு வழியாக கொண்டு செல்ல திட்டமிடுவதே ஒரு சதி. பயனடையும் கேரளா கர்நாடக மக்கள்கூட தங்கள் நிலத்தில் கேஸ் லைன் பதிக்க எதிர்த்ததர்க்கு பணிந்த அரசு, தமிழ்நாடு வழியாக பதிக்கலாம் என்றதும் வெகு சுலபமாக சம்மதித்து விட்டது.

நம் வீட்டு பெரியவர்கள்


நம் அம்மாயி-அப்புச்சி & தாத்தா-பாட்டி சம்பாதித்தது மட்டும் அல்ல, அவர்கள் அனுபவம், பாசம், அரவணைப்பு எல்லாமே நமக்கு உரிய சொத்துக்கள் தான். வாழ்க்கை ஓட்டத்தில், வேலை சுமையால் மறந்து விட்ட அவர்களை அடிக்கடி அழைத்து பேசுவோம்.. சந்திப்போம்.. அவர்கள் மனதில் அவர்களுக்கு துணையாக ஆதரவாக கூப்பிடும் தூரத்தில்தான் உள்ளோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவோம்..(தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு) குலதெய்வ நிராகரிப்பு போல் நம் வீட்டு பெரியவர்கள் நிராகரிப்பும் நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில்

கொங்கு சமூகத்துக்குள் உறவுமுறை

அனைவரையும் அண்ணா - தம்பி, தங்கை-அக்கா என்பது இப்போது உள்ள சர்க்காரால், ஆங்கில வழியின் பாதிப்பால் உருவானது. நம் கொங்கு சமூகத்தை தவிர்த்து பிற சமூகங்களை உறவுமுறை சொல்லி முறைவைத்து அழைப்பதை தவிர்க்கவும். அனைவரையும் மரியாதையோடு அழைக்கலாம்; உறவுமுறை வைத்து அல்ல. பிற ஜாதியினரை அண்ணா-அக்கா, மாமா மச்சான் என்று அழைத்தால் அவன் நம் பெண்களை முறைப்பெண்ணாகத் தான் பார்ப்பான்.

கொங்கு சமூகத்துக்கென தனித்துவமான உறவு முறை வழக்கம் உண்டு. அனைவருக்கும் தெரிந்ததே. சொந்த கூட்டமெனில் அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை என்றும் பிற கூட்டமெனில் மாமன்-மச்சான்-மாப்பிள்ளை என்றும் அழைப்போம். நம் கொங்கு சமூகத்துக்குள் ஒருவர் அறிமுகமாகும் போது முதலில், கூட்டம் காணி தெரிந்து வயது கேட்டு உறவு முறையை அறிந்து கொள்ளுங்கள். அதை கொண்டு அவர்களை அழையுங்கள். இந்த உறவு முறை-திருமண உறவு என்பதை ஆராய்ச்சி செய்து இதையே உலகின் மிக சரியான உறவு-திருமண முறை என தெரிவித்துள்ளனர் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள். அதன் பெயர் "Dravidian Kinship". இதன் பொருட்டு பல்வேறு விவாதங்கள் அறிவியல் உலகிலும் சமூக ஆய்வாளர்கள் மத்தியிலும் நடந்து வருகிறது. நமக்குத்தான் வெளிநாட்டுக்காரன் கோட் சூட பொட்டு வந்து சொன்னால்தான் நமது பெருமையை கூட நாம் ஒத்துகொள்வோம் என்று ஆகிவிட்டதே.இதில் இன்னொரு விஷயம், கொங்கு சமூகம் பின்பற்றி வரும் இந்த முறை நாம் யாரிடமும் கற்றுகொண்டதல்ல. நாமே காலங்காலமாக பிழை திருத்த முறையில் நம் முன்னோர்களால் வழிநடத்தப்பட்டது. இதற்க்கு திராவிட பெயர் சூட்டியதே ஒரு சதிதான். 

பெண்கள் ஒருவரை மாமன் என்றாலே அழைத்தால் அதை தவறான கண்ணோட்டத்தில் நம் ஆண்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தாய்க்கு நிகரான தாய் மாமன் கூட மாமனே என்பதையும் உணர வேண்டும். எனவே நம் கொங்கு சமூகத்துக்குள் உறவு முறை அறிந்து உரிமையோடு அழைப்போம். நம் சமூகத்துக்குள் அனைவருமே உறவுகள என்பதை உணருவோம்!

கவர்ச்சியா? கண்ணியமா?

பெண்கள் தங்கள் உடை விஷயத்தை கவனிக்க வேண்டிய காலமிது. பாரம்பரிய உடைதான் உடுத்த வேண்டும் என்று எவரும் கட்டாயபடுத்தவில்லை. ஆனால் எந்த உடை உடுத்தினாலும் அதில் கண்ணியம் இருக்க வேண்டும்; கவர்ச்சி இருக்க கூடாது. 

ஆபாச நடன நிகழ்ச்சிகளில் ஆண்களின் ஆரவாரதுக்காக பெண்கள் லேசாக குனிவார்கள் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக குனிந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்ப்பையும் தக்க வைப்பார்கள். அதற்கும் இக்கால ஆடை வடிவமைப்பாளர்கள செயலுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஆண்கள் தங்களை கவனிக்க வேண்டும்; தங்களின் அழகை ரசிக்கவும் அங்கீகரிக்கவும் வேண்டும் என்னும் பெரும்பான்மை பெண்களின் எண்ணம்தான் ஆடை வடிவமைப்பின் மையப்புள்ளியாக இருக்கிறது. இந்த கேடுகெட்ட வடிவமைப்பாளர்களின் இலவச விளம்பர தூதுவர்களாக சினிமா காரர்கள் இருக்கிறார்கள்.உடலை கவ்வி அங்கங்களின் அளவுகளை எடுத்துக்காட்டும் ஆடைகளை மறந்துவிடுதல் நல்லது. தங்கள் தகப்பன்-சகோதரன் எதிரே வரவும், சகோதரன்-தகப்பன் கூச்சமின்றி உங்களை சமூக நிகழ்ச்சிகளுக்கு அழைத்துசெல்லும் விதமாகவும் உடை இருக்க வேண்டும். உடுத்த ஒரு உடையை தொடும்போது இது நமக்கு அழகாக இருக்குமா, ட்ரெண்டியாக இருக்குமா என்று கணக்கிடும் அதே நேரம் இதை அணிந்தால் கண்ணியமாக-மரியாதையாக இருக்குமா, பார்ப்பவர்களிடம் நம்மேல் மரியாதை ஏற்படுத்துமா, காமத்தை ஏற்படுத்துமா என்று எண்ணுவதும் மிக முக்கியம்.


இதைப்பற்றி பேசினால் சில ரெடிமேட் குறுக்கு பதில்களை முற்போக்கு கம்யூனிச களவாணிகள் தங்கள் மீடியா சக்தி மூலம் பரப்பி வைத்திருக்கிறார்கள்.


  1. என் ஆடை என் உரிமை - அப்படியானால், "உன் பாதுகாப்பு உன் பொறுப்பு" என்பதையும் நினைவில் வைத்துக் கொள். 
  2. என்ன சமூகம் இது? - காவல்துறை எப்படி சமூகத்தின் அங்கமோ அதுபோலவே குற்றவாளிகள் மற்றும் சபல புத்திக்காரர்களும் சமூகத்தின் அங்கம். சிறிதளவோ பெரிதளவோ  மனிதர்களிடமும் (பெண்கள் உட்பட) சபலம் நிச்சயம் உள்ளது. ஆண்களுக்கு வன்முறை ஆயுதம் என்றால் பெண்கள் வேறுவழியில் சபலத்தை-வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் உண்மையே. இதை நல்ல உணவு, பருவத்தில் கல்யாணம், மீடியாக்கள் கட்டுப்பாடு, ஒழுக்கக் கல்வி, பாரம்பரிய அமைப்புகள் மீட்பு போன்றவற்றால் தான் நிரந்தரமாக தீர்க்க முடியும்.
  3. வக்கிரம் உடையில் இல்லை, பார்க்கும் கண்களில் இருக்கிறது - கண்ணில் மிளகாய் போடி தூவிவிட்டு, காரம் மிளகாய்போடியில் இல்லை உன் கண்ணில் தான் இருக்கு என்றால் சரியா? (நன்றி டிமிட்ரி). 
  4. குழந்தைகளும் கற்பழிக்கப்படுகிறார்கள் அவர்களும் கவர்ச்சி உடை அணிந்தார்களா? - குழந்தைகளை கற்பழிப்பவர்களை தீர விசாரியுங்கள். அவர்கள் வக்கிரமான பெண்கள், சினிமாக்கள் போன்றவற்றால் காமவெறி தூண்டப்பட்டவர்களாக இருப்பார்கள். கோழைகளாக இருப்பார்கள். அவர்கள் வெறியை தீர்த்துக் கொள்ள குழந்தைகள் பலியாகிறார்கள். இதற்கு மூலவித்து யார் என்று பாருங்கள்.
  5. வயலில் வேலை செய்யும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உடைகள் முன்னபின்ன இருப்பது மட்டும் கவர்ச்சியில்லையா? - வயலில் வேலை செய்யும் உழைப்பாளிகளையும், தாய்மார்களையும் இதைவிடக் கேவலப்படுத்த முடியாது. அவர்களும், எல்லாரும் என்னை பார்த்து நாக்கை தொங்க போடணும் என்ற எண்ணத்தில் வெக்கமின்றி அரை நிர்வாணமாக திரியும் இந்த தொண்டுகளும் ஒன்றா?? அவர்கள் ஆடை தற்செயலாக விலகுகிறது; ஆனால் இவர்களோ இன்ன சைசில், இந்த உறுப்பு, இவ்வளவு தெரியணும் என்று கவர்சிக்காகவே திட்டமிட்டு வடிவமைக்கப்படுது. இரண்டையும் ஒப்பிடுவது அருவருப்பானது.


கூடப்பிறந்தவர்கள், பெற்றவர்கள் சொன்னால் கேட்காதவர்கள் துள்ளி குதித்தவர்கள், யாரோ ஒரு மனோதத்துவ டாக்டர் வந்து , நீயா நானா போன்ற சமூக நிராகரிப்புக்கு உண்டான நிகழ்ச்சியில் பேசினால் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் கேட்கிறார்கள்.

இந்த கவர்ச்சி ஆடை கலாசாரத்தை ஆதரிப்பவர்கள் முதலில் தங்கள் வீட்டு பெண்களுக்கு இந்த ஆடையை உடுத்தசொல்லி அழகு பார்ப்பார்களா..?? குடும்பத்தோடு பேசன் டிவி பார்ப்பார்களா..?? இவர்கள் முஸ்லிம்களை மட்டும் வசதியாக மறந்துவிட்டு விமர்சனங்களை வைப்பது ஏன்?? முஸ்லிம்கள் இந்தியர்கள் அல்லவா, இந்த சமூகத்தின் அங்கமில்லையா??பெண்ணியம் என்பது கவர்ச்சி ஆடை அணிவதும்,போதையில் திரிவதும், கண்ட நேரங்களிலும், கண்டவரோடு, கண்ட இடங்களில் ஊர் சுற்றுவதும் அல்ல. பண்பட்ட சமூகத்தை வளர்த்தெடுக்கும் எண்ணத்தை முன்னெடுக்கும் அறிவு முதிர்ச்சியில் உள்ளது! தற்கால போலி பெண்ணியவாதிகளின் வார்த்தைகளில் மயங்க வேண்டாம். அவர்கள் நோக்கம் பெண் விடுதலை என்னும் பெயரால் கள்ள திருமணத்திற்கு பெண்களை தூண்டி கலாசார சீரழிவு, குடும்ப முறை உடைப்பு மற்றும் பிற சாதிகளின் சொத்து சேர்க்கும் சதி போன்றவைதான். கொங்கு சமூகம் பெண்ணியத்தை பொறுத்தவரை மிகவும் முன்னேறிய சமூகம். தற்கால மோசமான சமூக சூழல் காரணமாக தற்காப்பு குறித்து சில கட்டுபாடுகளை குடும்பத்தார் விதிப்பதை கண்ட வருந்த வேண்டாம். தொழில், குடும்பம், அரசியல் என அனைத்திலும் பெண்களுக்கு அதிக உரிமைகள் அளித்து வருவது அக்காலம் முதல் இக்காலம் வரை பாரதத்தில் கொங்கு சமூகமே!

மேலும் படிக்க,
௧. கொங்கு மக்களின் பெண்ணியம்
௨. தேசத்தை மூளை சலவை செய்வது
௩. பெரியார் என்பது ஈவேராவுக்கு பொருந்துமா?
௪. அழகுக்கலையா? அசிங்கப் பிழையா? - நவீன அழகுசாதன பொருட்களின் நிஜமுகம் மற்றும் அதற்கு மாற்று 
௫. பருவத்தில் கல்யாணம் அவசியமென்ன?
௬. தாலியின் வரலாறு
௭. சீதனம்

இந்திய பெண்ணியம், சமூகம் உட்பட பல விஷயங்களைப் பற்றி ராஜஸ்ரீ பிர்லா, பிரேமா பாண்டுரங், பத்மா சுப்பிரமணியம், குருமூர்த்தி போன்றோரின் அற்புதமான உரைகள். தற்காலத்தில் அனைவரும் அறிய வேண்டிய பல செய்திகள். 

கொங்கு கிராமிய விழாக்கள்


நம் கிராமங்களில் கோவில் நிகழ்ச்சிகளில் கடந்த பத்து பதினைந்து வருடங்களாக ஆடலுடன் பாடல் என்னும் பெயரில் கவர்ச்சி-விரச நடனம் நடக்கிறது. இது தமிழகம் முழுக்கவே நடக்கிறது. என்றாலும் நம் கொங்கு நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மிக பெரும்பாலும் நம் மக்களே பொருளுதவி செய்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அருவருப்பானது. அரைநிர்வாண உடை உடுத்தி, மேடையிலேயே சாராயம்-புகை அதுவும் பெண் குடிப்பது உட்பட மிக தவறான காம வேட்கையை தூண்டும் விதமான பல்வேறு நடவடிக்கைகள் நடக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குடும்ப பெண்கள் பங்கேற்க முடியாது. தனது பண பலத்தை காட்ட சிலர் இந்த தவறை செய்கிறார்கள் இன்னும் சில கிராமங்களில் கோவில் காசிலோ-நண்பர்கள் இணைந்தோ செய்கிறார்கள். இது நம் சாதிக்கு மட்டும் அவமானம் அல்ல. அந்த கோவில்லுக்கும் தெய்வத்துக்கும் செய்யும் பாவம்-அவமானம். தெய்வமே மன்னிக்காது!

கொங்கு நாட்டுக்கே உரிய சலங்கையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் பல உண்டு. பட்டிமன்றம், சொற்பொழிவு, மேடை பாடகர்கள், வானவேடிக்கை என எவ்வளவோ நல்ல விஷயங்கள் உண்டு. அவற்றை விடுத்து மிக அசிங்கமான நிகழ்ச்சிகளை பாரம்பரியமும் கலாசார மேன்மையும் உடைய கொங்கு சமூகம் நடத்துவது மிகவும் கேவலமான செயல்பாடு. வருங்காலத்தில் நம்மவர்கள் இந்த தவறை செய்யகூடாது.


கொங்கு சமூகத்தில் கற்பு நெறிஆண்-பெண் இருபாலரும் கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த ஒழுக்கம்-கற்பு நெறி. ஆனால் நமது பாரத கலாசாரத்தை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகள் பல்வேறு வடிவங்களில் முகமூடிகளில் நமது வாழ்வியல் வழக்கங்களை திரித்து, அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் நமது வரலாறு நமக்கு சொல்லும் படிப்பினைகளை பார்ப்போம்..!

• வெள்ளையம்மாள்
இன்று நாம் கற்பு நெறிக்கு உதாரணம் சொல்ல கண்ணகியையும், இன்னும் பிற கற்பரசிகளையும் தேடும் நேரத்தில் நமது கொங்கு சமூகத்தில் பிறந்து ரத்தமும் சதையுமாக வாழ்ந்து தனது கற்பு நெறியால் ஒரு குலதெய்வமாக வணங்கப்பட்டு வரும் வெள்ளையம்மாவை நினைக்க வேண்டும். சொத்தின் பொருட்டு தனது சகோதரர்களால் வஞ்சிக்கப்படும வெள்ளையம்மா, தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைத்து தனது கற்பு நெறியை மெய்பிக்க பச்சை மண்ணில் பானை செய்து நீர் கொண்டுவந்து பட்ட மரத்திற்கு அந்நீரை விட்டு துளிர்க்க வைத்து, அதே நீரால் மண் குதிரையை கனைக்க செய்து, திரை மறைவில் வைக்கப்பட்ட தனது குழந்தை நினைத்து பால் சுரந்தது என சோதனைகளை கடந்து வென்றார். இது அவரின் மிக உயர்ந்த கற்பு நெறியின் அடையாளம். இன்றும் காடையூர் காடைஈஸ்வரர் ஆலயத்தில் வெள்ளையம்மன் சன்னதி காணலாம். முழுக்காதன் குலத்தின் குல முதல்வி.

• வீரமாத்தி 
கன்னிவாடி கன்னகோத்திர பட்டக்காரர் முத்துசாமி கவுண்டரின் மனைவிமார் மூவர் (வெண்டுவன், பூசன் மற்றும் ஆந்தை), கணவர் இறந்தவுடன் அவருடன் உடன்கட்டை ஏறினர். அவர்கள் மூவர் மற்றும் அவருடன் உடன்கட்டை ஏறிய அவரது குடிபடைகள் முதலானோரை உருவகப்படுத்தியதே வீரமாத்தி~தீப்பாய்ந்தம்மன் என்று நாம் வணங்கும் தெய்வங்கள். அன்றைய நாளில் உடன்கட்டை எருவோரை வீரமாத்தி எடுத்து வழிபடுவது மிகவும் போற்றப்பட்ட புண்ணிய காரியம். ஆனால் உடன்கட்டை ஏறுவது என்பது கட்டாயமில்லை. (வெள்ளையம்மா கூட தனது கணவன் இறந்த பின்னரே தனது கற்பு நெறியை மெய்ப்பித்து தனது மக்களை கொண்டு குடி தழைக்க வைத்தார்)

• எழுதிங்கள் சீர்
எழுதிங்கள் சீர் என்பது ஒரு பெண்ணின் கற்பு நெறியை சோதிக்க வைக்கும் பரீட்சை ஆகும். அந்த சீர் செய்யாது சீர் சடங்குகளில் அப்பெண முன்னிற்க பங்கேற்க இயலாது. அந்நாளில் நமது மேழியை (கலப்பை) எழுதிங்கள் செய்யா பெண்கள் தொடக்கூட கூடாது என்பது வாக்கு. இப்படி ஒரு சடங்கு வைத்து கற்பு நெறியை அனைத்துக்கும் முன்னிறுத்தியது கொங்கு சமூகம். 

அதே ஆண்களுக்கும் பொருந்தும். கற்பு~ஒழுக்கத்தில் தரம் தாழ்ந்தவர்களுக்கு அவர்களுக்கு உரிய கோவில் மரியாதைகள், நாட்டு உரிமை, அதிகாரம் போன்றவை பறிக்கப்படும். நமது வாழ்வியல் நெறியில் பாரம்பரியத்துக்கும் ஒழுக்கத்துக்குமே முதலிடம். பணமும் பதவியும் பின்னர் தான்.

• நல்லம்மா 
கன்னிவாடி கன்ன கோத்திர நல்லம்மா பள்ளியர் சவாலை எதிர்த்து சவால்விட்டு அதை தனது இனமக்கள் துணையோடு வென்று பின்னர் ஊரை விட்டு வெளியேறுகையில் (முழு கதைக்கு கன்னிவாடி பட்டய இணைப்பை காண்க), அமராவதி ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. தனது கற்பின் மேல் சபதமிட்டு தெய்வ அனுகூலம் மூலம் அமராவதி வெள்ளம் கால் அளவு நீராக வடிந்து வழி விடுகிறது!

• முத்தாயி-பவளாயி 
அண்ணன்மார் வரலாற்றில், அண்ணன்மார் திருமணம் செய்து கொண்ட முத்தாயி மற்றும் பவளாயி ஆகியோர் கோட்டையில் இருக்கையில் வேட்டுவர் சூழ முர்ப்ப்படும்போது கற்புக்கு பங்கம் ஏற்படும் என்று பயந்து தங்காயி அவர்களை கோட்டையில் தீக்கிரையாக்குகிறார். உயிரை விடவும் கற்பு நெறியை மென்மையாக நினைத்தமைக்கு இதுவும் ஒரு சான்று. 

இந்நாளில் கற்பு – ஒழுக்கம் சாத்தியமாக தேவையான மாற்றம் என்ன..?

அந்நாளைய கற்பு நெறிக்கு காரணம் என்ன? மூன்றே காரணங்கள் தான்..

1.சரியான உணவு முறை: அன்றைய உணவுகள் நாட்டு மாட்டு பால் மூலம் பெறப்பட்டது. மாமிச உணவுகள் கிடையாது (“மேழி பிடித்த கை கோழி பிடிக்க கூடாது” காராளன் கறி உண்ண கூடாது”). அஸ்க்க சர்க்கரை கிடையாது-கருப்பட்டி/பனங்கல்கண்டு, கடலெண்ணெய்-ரீபைண்டு ஆயில் கிடையாது – செக்கு நல்லெண்ணெய்/நாட்டு மாட்டு நெய், போன்று உணவுகள் நல்ல குணங்களை வளர்ப்பவை. நம் மனமும் புத்தியும் நல்ல விசயங்களை உள்வாங்கி சரியான பாதையில் சென்றாலும் நமது உடல் அந்த கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் உடைத்து இன்பங்களுக்கு தூண்டும். எனவே ஒழுக்கமான வாழ்வுக்கு உடம்பை கட்டுப்படுத்துதல் அவசியம். அதற்க்கு சாத்வீகமான உணவுப்பழக்கம் அவசியம். அந்நாளில் உணவு கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்பட்டது. இன்றும் பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் உணவு கட்டுப்பாடு உண்டு.

2.பருவத்தில் திருமணம்: அந்நாளில் சரியான பருவம் வந்ததும் திருமணம் செய்யப்பட்டது. அதனால் மனம் தேவையற்ற எண்ணங்களில் அலைபாயவோ, கவனம் சிதரவோ வாய்ப்பளிக்காமல் தடுக்கப்பட்டது. பருவத்தின் தேவைகள் காலாகாலத்தில் நிறைவேற்றபட்டதால் கற்பு நெறி/ஒழுக்க நெறி என்பது சாத்தியமானது. இன்றும் நகரத்தார், மார்வாடிகள், பட்டேல் போன்ற முன்னேறிய சாதிகளில் பருவத்தில் திருமணம் என்பது கட்டாயம். பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும் பாரம்பரிய வேர்களை காத்து நிற்கும் பல சமூகங்களிலும் பருவ திருமணம்தான் நடக்கிறது. இன்றும் உலகில் 96 கும் மேற்ப்பட்ட நாடுகளில் (அமெரிக்கா/ஐரோப்பிய நாடுகள் உட்பட!) ஆணுக்கு 18, பெண்ணுக்கு 16 வயதும்தான் திருமண வயது!. எனவே நமது கொங்கு சமூகமும் திருமணங்களை பருவத்தில் செய்திடல் நல்லது.
“திருமண பருவம் இயற்கை தீர்மானிப்பது! அரசாங்கம் அல்ல!!”

3. பாரம்பரிய வேர்கள் பற்றிய அறிவு: பெற்றோரும் வீட்டு பெரியவர்களும் குழந்தைகளுக்கு தமது சாதி குலம் பற்றி சொல்லி வளர்த்தார்கள். வீடு மட்டும் இன்றி, ஊரும சமூகமும் சேர்ந்து அந்த நடைமுறையை பின்பற்றியது. பின்பற்ற காரணம், அன்று குலகுருவுக்கு மிகுந்த மரியாதை இருந்தது, மடத்தின் பூஜைகள் சரிவர நடந்தது. அவர்களும் நம் மக்களுக்கு என்ன சரியான உபதேசங்கள் சரியான நேரத்தில் செய்து வந்தார்கள். அதேபோல காணியாச்சி வழிபாடு சரியாக நடந்தது. உறவுகளிடம் போட்டி பொறாமை இல்லாமையால் குழந்தைகள் உறவுகளின் முக்கியத்துவமும் அன்பும் சூழ வளர்ந்ததால் தவறுகள் செய்யவில்லை.

குடியான சாமிகள்: தம்பிக்கலை ஐயன் கோயில் வரலாறு

ஈரோடு -சத்யமங்கலம் ரோட்டில் செல்லும் பாதையில் ஈரோட்டில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது தங்கமேடு என்ற கிராமம். அங்கு உள்ள தம்பிக்கலை ஐயனின் ஆலயம் பற்றிய வரலாறு இது.காஞ்சி கோவில் பகுதியில் தம்பி கவுண்டர் என்ற குடியானவர் இருந்தார்.  அவரிடம் பல மாடுகள் இருந்தன. அவற்றை மேய்பதற்கு அவருடைய சகோதரர் நல்லய்யன் என்பவர் அழைத்துச் செல்வார். ஒரு நாள் அந்த கால்நடைகளில் ஒரு பசுவின் மடியில் பால் சுரக்கவில்லை என்பதை நல்லயன் கண்டார். அடுத்த நாள் அதை கண்காணித்தார். அது ஒரு புதருக்கு அருகில் சென்று ஒரு பாம்பு புற்றின் மீது நின்று கொண்டது. அதில் இருந்த நாகப் பாம்பு அதன் பாலை குடித்துக் கொண்டு இருந்தது. அதை தனது சகோதரர் தம்பி கவுண்டரிடம் நல்லாயன் கூறினார். அதை நம்பாத தம்பி கவுண்டர் அவனை நன்றாக அடித்து உதைத்தார். மற்றவர்கள் அவர் அடிப்பதை தடுத்து நிறுத்தி மறுநாள் அனைவரும் தம்பி கவுண்டரின் தம்பியான நல்லயனுடன் அது உண்மையா என பார்க்கச் சென்றனர். அங்கு நடந்த காட்சியைக் கண்டு பிரமித்தனர். தம்பி கவுண்டர் அநியாயமாக தனது தம்பியை அடித்து விட்டேனே என வருந்தினார். அவரை மற்ற உறவினர் தேற்றினார்கள். அன்று இரவு தம்பி கவுண்டரின் கனவில் அந்த பாம்பு தோன்றி அந்த இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறும், அப்படி செய்தால் அவருடைய வருங்கால சந்ததியினரை தான் பாதுகாப்பதாக உறுதி கூறியது. ஆகவே அன்றுஇரவே தம்பி கவுண்டர் அந்த புற்றின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். அந்த இடத்தில் இருந்து வெளிவர மறுத்தார். அவருக்கு அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன.


அவரை கேலி பேசிய ஒரு மலையாள மந்திரவாதி அவர் சிஷ்யரானார். அது போல ஒரிஸ்ஸாவை ஆண்டு வந்த விஜய கர்ணா என்ற மன்னன் அவர் சிஷ்யரானார். ஒரிஸ்ஸாவில் இருந்து ஒரு வணிகர் தன்னுடைய பேச முடியாத மகளை அங்கு அழைத்து வர அவள் பேசத் துவங்கினாள். அவந்தியில் இருந்து வந்த ஒரு பிராமணக் குருடனுக்கு கண் பார்வை தந்தார். பல காலம் பொறுத்து தம்பி கவுண்டர் இறந்து போக அவரை தெய்வமாகக் கருதி அவரை தம்பி கலை ஐயன் என அழைத்து அவருக்கு ஆலயம் அமைத்தனர். இவர் சித்தக்கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்" வல்லவரானதால் இவர் பெயரும் தம்பிக்கலை அய்யன் என மருவி பெயர் காரணம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.


தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் சித்தர் பீடமாக அமைந்துள்ளது. தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளை கற்று அவரைத்தேடி வந்த பக்தர்களுக்கு அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து பல நன்மைகள் செய்து வந்தார். தங்கமேடு எனும் இடத்தில் அமைந்துள்ள அன்னபூரனி உடனமர் நீலகண்டேஸ்வரர் தரிசனம் செய்து அங்கேயே வாழ்ந்த சித்தராவார். ஈஸ்வர வழிபாட்டில் மூழ்கிய அவர்க்கு பல்வேறு ஞானங்கள் ஏற்பட்டது. 

மருத்துவம், ஆன்மிகம் போன்றவற்றில் தெளிவான அறிவுரைகள் ,நோய் தீர்த்தல் போன்றவற்றில் வல்லவராவார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவ்விடம் Thampikkalai ayyan forest (தம்பிக்கலை அய்யன் பாரஸ்ட்) என பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இங்கு 108 சித்தர்கள் நாக வடிவுடன் இன்றும் சூட்சம தம்பிக்கலை அய்யன் உடன் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாகசர்பங்கள் வாழும் பகுதியாகவும், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் தம்பிக்கலை ஐயன் சன்னதி விளங்குவது சிறப்பாகும். நாகவனமாக இவ்விடம் இருந்தபோது அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாய் அவதரித்து ஈசனை வழிபட்ட இடம். சிவலிங்கம் மீது நாகேஸ்வரி அமர்ந்து அருள் பாலிப்பது அற்புதமான ஒன்றாகும்,இங்கே பலகாலம் முன்பு பெரிய பாம்பு புற்றுகள் இருந்த தாகவும் இறைவியின் வாக்குப்படி அங்கு நாகேஸ்வரி ஆலயம் எழுப்பபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இன்றும் இச்சன்னதி அருகில் நல்ல பாம்புகள் பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு . தம்பிக்கலை அய்யனே சூட்சம நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதாக சொல்லப்படுகிறது.நாகேஷ்வரி ஆலயம் முடித்து சென்றால் வேப்பில்லையால் அடித்து திருநீரு மந்திரித்து தீர்த்தம் வரும் பக்தர்களுக்கு தரப்படுகிறது. 

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தம்பி கலை ஆலயத்துக்கு நிறைய மக்கள் வருகின்றார்கள். பங்குனி உத்திரத்தின் முன் வரும் செவ்வாய் கிழமையில் இருந்து அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரை அந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறும். விழாவின் ஆரம்பத்தில் உற்சவர் சிலைகளை பவானி ஆற்றில் இருந்து கொண்டு வரும் நீரால் முதல் நாள் அபிஷேகம் செய்கின்றனர். அடுத்த ஆறு நாட்களும் பொங்கல் படைகப்படுகின்றது. கருப்பச்சாமி ஆலயத்தில் மட்டும் ஆடு பலி தரப்படுகின்றது. பெரிய மாட்டுச் சந்தையும் நடைபெறுகின்றது. கார்த்திகை தினத்தன்று ஒரு லட்ச தீபங்கள் ஏற்றப்படுகின்றன.


தேவி கருமாரிதாசர் என்னும் இறையடியார் தம்பிக்கலைஐயன் சன்னதியே கதி என்று தங்கிவிட்டவர். வெளியூர்க்காரரான இவர் ஆன்மீக ஆய்வுகளில் ஞானமுடையவர். தம்பிக்கலை ஐயன் கோயில் விஷேசங்களை தஞ்சை நூலகத்தின் மூலமாக கண்டறிந்து வெளிக்கொணர்ந்தவர் என்று அறியப்படுகிறார். அருள்வாக்கு கூறிவருகிறார். தற்போது முதுமை காரணமாக அதிகம் அலைவதில்லை.

கோயில் திருவிழாவின் போது மிகப்பெரிய மாட்டு சந்தை நடந்து வந்தது. அந்த மாட்டு சந்தைக்கு வரும் பசுக்களுக்கு குடிநீருக்காகவே பல நீர்தொட்டிகள் இருப்பது இன்றும் உள்ளது. தற்போது சந்தையின் பிரபல்யம் குறைந்துவருகிறது.

தம்பிக்கலைஐயன் காஞ்சிக்கோயில் செம்பன் கூட்டத்தைச் சேர்ந்தவராக அறியப்படுகிறார். காஞ்சிக்கோயில் செம்பன் கூட்டத்தவர்களே பூஜைப்பணியிலும் இருந்துள்ளனர். தம்பிக்கலை ஐயனை சில நவீன வரலாற்று விஷமிகள் பட்டக்காரர் என்று பரப்பி வருகிறார்கள். கால விசாரணையில் காஞ்சிகோயில் நாட்டு குலகுருக்கள், வரலாற்று அறிஞர்கள் மற்றும் உள்ளூர்/கோயில் பிரமுகர்கள் கூறிய செய்தி - காஞ்சிக்கோயில் கிராமங்கள் அனைத்திலும் பட்டக்காரர் என்றோ பட்டக்காரர் குடும்பம் என்றோ யாரும்  இருந்ததில்லை என்றும் பட்டக்காரர் என்றால் பழையகோட்டை பட்டக்காரர் அல்லது உள்ளூர் தொட்டிய நாயக்கர் சாதி பட்டக்காரர்களையே நினைவூட்டுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

வெள்ளையர் காலத்தில் பழையகோட்டை பட்டக்காரர்கள் விரோதத்தால் இரவோடு இரவாக எழுமாத்தூர் விட்டு வெளியேறிய பனங்காடை கூட்டத்தார் வடகரை நாடு பவானியில் காணி பெற்று பின்னர் பிழைப்பு தேடி செட்டிபாளையம் குடிவந்தனர். அப்படிக் குடிவந்தவர்களில் முத்துக் கவுண்டர் என்ற பெரியவர் தம்பிக்கலை ஐயன் கோயில் பூஜைகளில் ஈடுபடலானார். ஆனால் தம்பிக்கலைஐயன் அவர் கனவில் தோன்றி உனக்கு இது வேலையல்ல என்று கூறிவிட்டபடியால் கோயில் பூஜைகளில் ஈடுபடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். பின்னாளில் அவர் நிலங்களின்பேரில் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தவர் என்ற தகவலும் அவரது வம்சத்தார் மூலமும் அக்கால பத்திரங்கள் மூலமும் அறிய முடிகிறது. அவர் மந்திரித்துக் கொடுப்பது பாடம் போடுவது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை மக்கள் பூசாரி கவுண்டர் என்றும் அவரது வம்சாவளியினர் சுமார் எட்டு தலைமுறை இன்றும் பூசாரி கவுண்டர் குடும்பம் என்று இருக்கிறார்கள். தற்போது காஞ்சிக்கோயில் கன்னன் கூட்டத்தார் பூஜை சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோயில் புனரமைப்புப் பணிகளும் கன்னன் கூட்டத்துப் பிரமுகர் தலைமையிலேயே நடந்தது. பழையகோட்டை பட்டக்காரர், பொள்ளாச்சி திரு.மகாலிங்கம் மற்றும் பல அரசு பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கோவிலில் தம்பிகலை ஐயன் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் இன்றும் வாய்மொழியாக உலவுகின்றன. கோயிலில் வந்து முரண்டு செய்து கொண்டிருந்தான் ஒருவன். சாமி சிற்பங்களை தாண்டுவது, இடையே புகுந்து செல்வது என்று குறும்பு செய்யத் துவங்கவே அன்று இரவே அவனது கண் பார்வை போய்விட்டது. கோயிலில் வந்து அழுது புலம்பி மன்னிப்பு கேட்டு தெண்டனிட்டு பார்வை திரும்பப் பெற்றானாம்.

இக்கோயிலில் உருவாரங்கள் செய்ய உரிமை பெற்ற குயவர் குடும்பம் இன்றுமுண்டு. அவர்கள் தம்பிக்கலை ஐயன் மீது மிகவும் பக்தி சிரத்தை மிக்கவர்கள். விரதமிருந்து தங்கள் கடமையை தெய்வ காரியமாக எண்ணி செய்வர். ஆனால் கோயில் பெரிதாகவே சம்பாதிக்கும் எண்ணத்தோடு இந்தப் பணியை பறிக்க நினைத்து எடுத்தவர் அகால மரணமடைந்தார்.

இக்கோயிலுக்கு முதன் முதலில் மின்சார இணைப்பு கொடுக்க வந்த என்ஜினியர் ஏளனமாக பேசிவிட்டு கோயிலுள்ள தங்கமேட்டுக்கு செல்கையில் அங்கே படம் எடுத்துக்கொண்டு அவர்மீது மட்டும் நாகம் சீறவே, விழுந்தடித்து ஓடி முதன்வேளையாக கனக்சனை கொடுத்தாராம்.

இன்றளவும் தீராத நோய்கள, தோல்வியாதிக்காரர்கள் மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலரும் இங்கு வந்து தங்கி தங்கள் நோய் நீங்கப் பெறுகிறார்கள். விஷ ஜந்துக்கள் தீண்டியவர்கள் இங்கே கோயிலில் கொண்டு வந்து இறைவன் சந்நிதி முன் போட்டு இருபது நிமிஷம் கோயிலை விட்டு அனைவரும் வெளியேறிவிடுகிறார்கள். சிறிது நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தாமாகவே எழுந்து வெளியே வந்துவிடுகிறார். மருத்துவமனைகள் இல்லாத அக்காலத்தில் ஏராளமான உயிர்கள் இப்படி காக்கப்பட்டிருக்கிறது. சுற்றுவட்டாரத்தில் யாருக்கு பாம்புக்கடி என்றாலும் உடனடியாக இக்கோயிலுக்குத் தூக்கி வந்துவிடுவர். இன்றும் இவ்வழக்கம் தொடர்ந்துவருகிறது. விஞ்ஞானம் விளக்க இயலாத அற்புதங்களில் தம்பிக்கலை ஐயன் அருளும் ஒன்று.

கள ஆய்வு விசாரணை மற்றும் அங்கீகாரம்:
கொங்கு வரலாற்று ஆய்வாளர் புலவர் ராசு ஐயா அவர்கள்
கொங்கு குலதெய்வ கோயில்கள் ஆய்வாளர் கொங்குகுரல் பி.கே.சின்னசாமி அவர்கள்
காஞ்சிகோயில் காணியாளர்கள் குலகுரு - சிவகிரி ஆதீனம் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள்
காஞ்சிகோயில் எழுகிராம பரம்பரை ஸ்தானிக குருக்கள் ஸ்ரீ.பிரகாஷ்
தம்பிகலைஐயன் நற்பணி மன்றம், காஞ்சிகோயில்
தம்பிக்கலைஐயன் கோயில் பூஜைப் பணியாளர்கள் (கன்ன கூட்டத்தார்)
ஸ்ரீ தேவிகருமாரிதாசர் சுவாமிகள்
தீரன் பாசறை காஞ்சிக்கோயில் திரு.துளசிமணி அவர்கள்

எழுகரை சூரிய காங்கேயன் நாவல்

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை கொண்டாடும் நாம், நம் கொங்கு வரலாற்று நாயகன் சூர்ய காங்கேயன் சரித்திரத்தை தழுவி எழுதப்பட்ட எழுகரை சூர்யகாங்கேயன் வரலாற்று நாவலை படித்துள்ளோமா..??

கன்னிவாடி கன்னகுல பட்டயம் முதலான வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

எழுதியவர்: இடைப்பாடி அமுதன் (விஸ்வகர்மா ஆசாரி சமூகம்).
பதிப்பு: அனுராதா பப்ளிகேசன்
முகவரி: அனுராதா பதிப்பகம். 9, ஜலகண்டபுரம் ரோடு. இடைப்பாடி, சேலம் மாவட்டம் - 637 101

Mobile: 94873 23457

இந்த புத்தகத்தை படிக்க-பரிசளிக்க பயன்படுத்துவோம்.கோவையை நோக்கி வரும் கலாசார சூறாவளிபத்து வருடங்களுக்கு முன்பிருந்த சென்னைக்கும் இப்போதிருக்கும் சென்னைக்கும் இருக்கும் பண்பாட்டு சீர்கேட்டை (சிலர் வளர்ச்சி என்கிறார்கள்!) அனைவரும் அறிவோம். எதோ படிக்காத காட்டு மிராண்டிகளால் ஏற்பட்டதல்ல இந்த மாற்றம். படித்த மக்களால், பண பேய்களின் வளர்ச்சிக்கு சாராயத்தையும், சதையையும் தீனியாக போட்டு உற்பத்தி பெருக்கத்தை மையமாக கொண்டு இயங்கியதால் நடக்கும் அவலங்களை காண்கிறோம். இதன் காரணாம வார இறுதிகளில் நடக்கும் கேளிக்கைகளும், மக்களின் உணவு, உடை, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளில் வெறுக்கத்தக்க மாற்றங்களையும் பார்க்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பத்தின் ஆணிவேரான பெண்களே குடிப்பது, புகைப்பது பல ஆண்களோடு ஊர் சுற்றுவது.. எது கேட்டாலும் “Whats wrong in that/So what?” என்ற ஒற்றை வார்த்தையால் முடிப்பதும் கொடுமையின் உச்சம். IT கலாசாரத்தில் இருக்கும் பெண் என்றால் யோசிக்கும் ஆண்களும், பெண் கிடைக்காத குறைக்கு விதியே என்று மனதை சமரசம் செய்து கொண்டு மணம் முடிப்பதும் காண்கிறோம்.

இதே கொடூரம் இப்போது நம் கொங்கு மண்ணை நோக்கியும் வந்துகொண்டுள்ளது. இந்த கால் சென்டர் மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிகராய் பப்களும், பார்களும் கேளிக்கை நிலையங்களும் முளைக்க துவங்கியுள்ளன. சென்னை பப்களில் பெண்களுக்கு இலவச அனுமதி, அவர்கள் குடிக்கும் பீர் ஒயின் இலவசம், சாப்பிடுவதும் இலவசம் என்று சலுகைகள் கொடுத்து பெண்களை வரவைத்து கெடுத்து குட்டிசுவராக்குகிறார்கள். போதையில் பின் என்னவேண்டுமானாலும் நடக்கும். இதில் பள்ளி மாணவிகள் கூட தப்பவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி. (http://www.aanthaireporter.com/?p=20169).

சில நாட்களுக்கு முன், கோவையில் ஒரு இளம் பெண் குடிபோதையில் நாடு ரோட்டில் கிடந்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கலாம். சில மாதங்களுக்கு முன்னர் கோவை கல்லூரி விடுதிகளில் பெண்களிடம் மதுபுட்டிகளும், ஆணுறைகளும் கிடைத்து அது ஜூ.வி யில் வெளிவந்தது நினைவிருக்கலாம்.

ஆகவே, நாம் இவ்வளவு காலம் பார்த்த கோவை வேறு இன்று இருக்கும் கோவை வேறு என்பதை மனதில் நிறுத்தி நம் வாரிசுகள் சரியான பாதையில் பயனிக்கிறார்களா என்று கவனிப்பது நம் கடமை. வார இறுதி, விடுமுறை நாட்கள், காதலர் தினம் போன்றவற்றில் நம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

கவுண்டர்களின் கூட்டங்கள்-கோத்திரங்கள்

நல்லிணக்கமான கொங்கு உறவுகள்
தமிழகம் மட்டும் இன்றி பாரதம் முழுக்கவே ஒரு புதிய கலாசாரம் பரவி வருகிறது. உறவினர் என்றாலே பகைவர் என்பது. விழுந்த இடத்தை உறவினர்களிடமும், எழுந்த இடத்தை நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று பழமொழி கூறும் அளவு வளர்ந்துள்ளது வேதனைக்குரியது.


இதற்கு நம் கொங்கதேச குடியானவர்கள் சமூகமும் விதிவிலக்கல்ல. 


குறிப்பாக நம் கொங்கு சொந்தங்களில்.. மமதையால் யாரோ ஒருவர் மட்டம் தட்டுவது/சுயதம்பட்டம் என ஆரம்பிக்கும் இந்த ஈகோ பிரச்சனை ஒருவரை மாறி ஒருவர் மட்டம் தட்டுவதில் தொடங்கி, நம் உறவுகளுக்குள் பொறாமை, புறம பேசுவது, காழ்ப்புணர்ச்சி, பழிக்கு பழி என்று கடைசியில் உறவினர் என்றாலே எதிரிகள் என்னும் மனோ நிலைக்கு தள்ளி விடுகிறது. காலப்போக்கில் இந்த பகையுணர்வு குடும்ப பிரச்சனையாக பின்னர் குடும்ப சொத்தாக அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது. நம் கொங்கு சமுதாயத்தில் ஒற்றுமை குறைபாட்டிற்கு இது ஒரு முக்கிய காரணம். யாருக்கு தெரியும் முன்னாளில் இந்த ஈகோ பிரச்சனையை தொடங்கியது நம் குடும்ப பெரியவர்களில் ஒருவராகவும் இருக்கலாம்.கொங்கு சமுதாயம் வாழ்வது மகிழ்ச்சிக்கு என்பதை விட மரியாதைக்கு என்பதே சரி. மரியாதையை கெடுத்து நீங்கள் கொட்டி கொடுத்தாலும் அந்த உறவு அவர்களுக்கு இனிக்காது. நட்பில் உதவுவது என்பது "பெருமை". உறவுகளில் உதவுவது என்பது "கடமை". உறவினர்களிடம் நண்பர்கள் போல் பழகுவோம். ஈகோ, மட்டம் தட்டுதல், பெரியதனம் (சுயதம்பட்டம்) போன்றவற்றை விடுப்போம். நம்மில் ஆரம்பிக்கும் இந்த மாற்றம் நாளைய தலைமுறைக்கு நல்ல உறவுகளை ஏற்படுத்தி தரட்டும். சொத்தோடு நல்ல மனிதர்களையும் நம் பிள்ளைகளுக்கு கொடுப்போம். 

முற்காலங்களில் மரபு நெறிகளை பின்பற்றிய கவுண்டர்களிடம் இந்த ஈகோ யுத்தம் பெரிய அளவில் இல்லை. தற்போது வசதி வாய்ப்பு பெருகிய பின்னரே இந்த சீரழிவு. உறவினர்களால் அன்பும், ஆதரவும், பாதுகாப்பும் நம் சமூகத்துக்கு கிடைக்கிறது. நம் சுற்றங்களின் மூலமே நமது கலாசாரம், மாண்புகள் நம்மை பிணைத்து காக்கிறது. உறவுகளை கொண்டாடுவோம். உறவுகள் பிரிந்து மாநகரங்களில் தனித்தீவாக இருப்பதால் சமொஊக்க குழுவாக வாழும் நிலை மாறி "Individualism" தலைதூக்குகிறது. இது உலகமயமாக்கலின் இன்னொரு பாதிப்பு என்றே சொல்லலாம். உறவினர்கள் இருந்தால்தான் நாம் தனிமநிதநல்ல ஒரு தேர்ந்த பண்பட்ட சமூகம் என்னும் எண்ணம் நம் பிள்ளைகளுக்கு உண்டாகும். அப்படி உண்டானால்தான் பண்பு தவறாது நல்ல வழியில் பிள்ளைகள் வளரும். திருமண விசெசங்களுக்கு குடும்பத்தோடு சென்றால் தான் அதெல்லாம் நம் பிள்ளைகளுக்கு போய் சேரும். 

'இன்று' ஈகோ பிரச்சனையால் பகைமை பாராட்டும் ஒரு உறவினரை அழைத்து பேசுங்கள். உங்கள் உறவுகளை மீட்டெடுங்கள்.தினமும் ஒருவேளை உணவாவது குடும்பத்தோடு சேர்ந்து உண்ணுங்கள். வாரம் ஓரிரு முறையாவது குடும்பத்தோடு வீட்டில் குடும்பத்தோடு சாமி கும்பிடுங்கள். மாதம் ஒரு முறையாவது குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று வாருங்கள். மாதம் ஒருமுறையேனும் நெருங்கிய உறவினர்களை வீட்டிற்கு அழைத்தோ-அல்லது நீங்கள் சென்றோ சந்தித்து வாருங்கள். சந்திக்கும்போது ஒன்றாக சமைப்பது, கோயிலுக்கு போவது, கூட்டாஞ்சோறு எளிய விளையாட்டுக்கள் என்று இனிமையாக செலவிடுங்கள். வருடம் நான்கு முறையாவது காணியாச்சி கோயிலுக்கு சென்று வாருங்கள். வருடம் இரண்டுமுறை குலகுருவை சந்தியுங்கள். இரண்டு நிமிடமாவது தினமும் நாட்டுப்பசுவோடு நேரம் செலவிடுங்கள். வருடத்தில் இரண்டு நாட்களாவது சமுதாயத்திற்காக ஒதுக்குங்கள். நம் உறவுகளின் அனைத்து விஷேசங்களுக்கும் குடும்பத்தோடு, குழந்தைகளை அழைத்துச் செல்லவேண்டும். லீவே போடக்கூடாது என்று விரதம் கடைபிடிக்க வேண்டாம். சமூக நிகழ்சிகளில் குழந்தைகளை பங்கெடுக்க செய்ய வேண்டும். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். பெருசு என்றும் கிழடு என்றும் சினிமாவில் பெரியவர்களை பிற்போக்குவாதிகளாக ஏதும் தெரியாதவர்களாக சித்தரிப்பதை கண்டு மதியாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்; பெரியவர்கள் அவமதிக்கப்படும் வீட்டில் பெருமைகள் இருக்காது. உறவுகளும், குடும்பப் பாசமும் பிடிப்பும் இல்லாத குழந்தைகளுக்கு சாதிப் பற்றோ கலாச்சாரப் பிடிப்போ, ஒழுக்கத்தின் முக்கியத்துவமோ எதுவுமே இருக்காது. பின்னாளில் பெற்றோர்களைக் கூட கைவிட்டுவிடுவர். 


இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக எழுத்தாளர் சுஜாதா எதிர்கொண்ட சம்பவம் ஒன்று கீழே,


நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலை பார்க்கிறார்கள். இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.

அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம். ‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர். இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.

அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.

ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு. பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கில மொழியறிவுக்கும் கணிதத் திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை. படிப்புதான்.

‘சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது. படிப்பு படிப்பு படிப்புதான்’.

‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளைச் சேர்க்க mm நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’.

அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை. ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது. அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’.

‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’.

‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை. படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’.

‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா? முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’.

அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன். அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்,
‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.

வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான். அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.

"

மேலும் படிக்க,


ராமாயணம் மகாபாரதம்ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தமிழுக்கு கொண்டுவர ஆதரவளித்தவர்கள் கவுண்டர்கள் தான்.. 

கொங்கர் வீரம்இன்று வணிகர்களை மாறிப்போன கவுண்டர்களுக்கு வீரம் என்பது மறந்துபோன விஷயமாக போய்விட்டது. வெள்ளையனின் கல்வியும், நாட்டு மாட்டை கைவிட்டதாலும், மரபுகளை கைவிட்டதாலும் நமது வீரத்தை-மாண்பை மறந்து பேடிகளாக மாறிவரும் போக்கை மாற்ற வேண்டும். நமது வரலாற்றில் நமது வீரத்தை பறைசாற்றும் சம்பவங்கள் இங்கே தொகுக்கிறேன்.

• கொங்கர்` செங்களம், ஒளிறுவாள் கொங்கர், கருங்கைக் கொங்கர் எனப்பலவாறு கொங்கர் வீரம் சங்க இலக்கியங்களால் புகழப்படுகிறது.

• கொங்கர் படை சேரனுக்காக பல்வேறு காலகட்டங்களில் போர் செய்தது. கருவூர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை ஆகியோரே தமிழ் தேசங்கள் ஐந்தினுள்ளும் முதன்மையாக பாரத வர்ஷத்தை திக் விஜயம் செய்து ஆண்டவர்கள். அதற்க்கு பெருந்துணையாக இருந்தது கொங்கப்படை. சேரனுக்கு முடிசூட்டுவதும் கொங்கர்தான் என்பதும் நினைவில் கொள்க!

• மோரூர் சூரிய காங்கேயன் பாண்டியனால் வெல்ல முடியாத வாணதிராயனை வென்று உயிருடன் பிடித்து வந்தார். அதனால் மோரூர் ஆட்சி அதிகாரத்தை பெற்றார்

• தோக்கவாடி வேலாத்தாள் என்னும் பருவ வயது பெண் கொங்கப்படை திரட்டி வெல்ல முடியாத கைக்கோளர் படை வென்று குறும்படக்கினார். அவர் கோவில் இன்றளவும் தொக்கவாடியில் வேலாத்தா கோவில் என்றுள்ளது.

• அண்ணன்மார் சாமிகள் என்னும் கொங்கு இளம் சகோதரர்கள் பெரும் வேட்டுவ படையுடைய தலையூர் காளியையும் அவன் சுற்றத்தாரையும் அழித்தார்கள். போர்க்களம் இன்றளவும் வீரமலையில் உள்ளது.

• கொங்கு நாட்டில் எல்லைகளையும் ஆட்சியையும் கட்டுகொப்பாக ஒழுக்கத்துடன் வைத்து பிறரின் படையெடுப்பு, அவ்வப்போது கொங்கு நாட்டில் உரிமை இல்லாத பிற இனத்தவர் குறும்படக்கி வந்ததால் தான் சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் என யார் ஆட்சி மாறினாலும் கவுண்டர்களே கொங்கு நாட்டின் ஆட்சியாளர்களாக நிர்வாகபொறுப்பாளர்களாக இருந்தனர்.

• கரியான் சர்க்கரை பாண்டியன் பொருட்டு சோழனயே வென்றார். அதனால் பழையகோட்டையின் மன்றாடியானார்.

• பெரிய குல வேணாடர் கரிகாலனுக்காக பல போர்களை செய்தவர்கள்

• களப்பாளர் என்ற வடுக - ஒரியர்களை அடக்கி வென்று மூவேந்தர்களையும் நாடாள வைத்தது கொங்கப்படை

• சிங்களத்தின் லங்காபுரி தண்டநாதன் மூவேந்தர்களையும் சிறையிலிட்டபொழுது அவனை முறியடித்து துரத்தியது கொங்கப்படை

• இன்றும் மலையாளத்தில் பாலக்காட்டருகே சித்தூரில் "கொங்கப்படை" என்ற விழா பகவதி கோயிலில் நடைபெறுகிறது. கொங்கரை வெற்றிகொள்ள இயலாததால் மலையாளிகளுக்காக பகவதியே வந்து போரிட்டு கொங்கரை வென்றதாக கதை.

• தீரன் தீர்த்தகிரி சர்க்கரை (சின்னமலை) உந்துதலால் கொங்கப்படை பல போர்களில் வெள்ளையருக்குத் தண்ணீர் காட்டியது. ஒற்றை ஆளாக 5,000 பேர் கொண்ட படையை விரட்டி அடித்தார் தீர்த்தகிரி. திவானையோ, திப்பு சுல்தானையோ இல்லை எவனையும் தன்னை ஆல்பவனாக ஏற்றுக்கொண்டதில்லை. ஒரே நோக்கம் என்பதால் ஒன்றாக போராடினார். கடைசி வரை நேரடியாக தீரனை தீண்டகூட முடியவில்லை.

• ஒவ்வொரு ஊரிலும் ஆயுத சாலைகளும், மல்யுத்த சாலைகளும், போர்பட்டரைகளும் இருந்துள்ளன. துப்பாக்கி வெள்ளையன் வருவதற்கு முன்னரே இருந்தது. ஆனால் அது பெடிகளின் ஆயுதம் என்று நம் மக்கள் ஒதுக்கி வைத்திருந்தனர்.

வெள்ளையர்கள் இதனை ஒடுக்க ஆயுதப்பறிப்புச் சட்டம், உப்பு வரிமூலம் வெடியுப்பு காய்ச்சுதல் நிறுத்தம், சூழ்ச்சிகள், துரோகங்கள், பேடி பாடங்கள் மூலம் தற்பொழுது கொங்கர்களை பேடிகளாக்கியுள்ளனர். இதன்மூலம் கொங்கர்களை கொத்தடிமைகளாக்கியுள்ளனர்.


More Information: http://kongappadai.blogspot.in

கொங்கு வரலாற்றில் அண்ணன் தம்பி பாசம்
கொங்கு நாட்டில் சமீப காலமாக அண்ணன் தம்பி உறவு என்பதே எதிரிகளை போல சித்தரிக்க படுகிறது. இதை சினிமாக்களும், மீடியாக்களும் நன்கு விளம்பரமும் செய்தன. பத்து வயதுக்கு மேல் பங்காளிகள் என்றும், பங்காளிகள் என்றாலே எதிரிகள் என்றும் பேசுவதும் சில இடங்களில் வழக்கமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் நமது கொங்கு சமூகம் உலகுக்கே அண்ணன் தம்பி பாசம் ஒற்றுமையை எடுத்து சொன்ன சமூகம். கோவில் விசேசம் முதல் சின்ன சின்ன குடும்ப விழாக்கள் வரை பங்காளிகளை முன்வைத்து செயல்படுவதில் இருந்தே நம் முன்னோர்கள் அண்ணன் தம்பி உறவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தார்கள் என்று அறியலாம். (அதை உணர்ந்த சிலர் நாட்டாமை, சமுத்திரம் போன்ற படங்களில் பிரதிபலித்துள்ளார்கள் ஆனால் அவை நம் கண்களுக்கு தெரிவதில்லை!). நமது சமூகத்தில் அண்ணன் தம்பி உறவின் மகத்துவம் பற்றி சில வரலாற்று சம்பவங்களோடு தொகுக்கிறேன்.


சூர்ய காங்கேயன்-முத்துசாமி கவுண்டர்:
மோரூர் பட்டகாரரான சூர்ய காங்கேயன் தனது சகோதரரான கன்னிவாடி மும்முடி முத்துசாமி கவுண்டரை பாலகம் முதல் காத்து வளர்த்த நல்லராண்டியை கவுரவிக்கும் மோரூர் நாட்டின் 60 காங்கேயர்களோடு 61வது காங்கேயராக நல்லராண்டி என்னும் கொங்கு பண்டார சாதியை சேர்ந்தவரை தனது நாட்டின் பட்டகாரராக அறிவித்தார். அதற்கு அவரது பங்காளிகளான 60 கோயில்களைச் சேர்ந்த கண்ண கூட்டத்தவர்களான காங்கேயர்களும் (கன்னன் கூட்டம் அனைவருமே தங்கள் சகோதரனுக்கு அளிக்கப்பட காங்கேயன் பட்டம் கொண்டிருந்தனர்) கையொப்பமிட்டு தங்கள் பங்காளி ஒற்றுமையை காட்டினர்.

தீரன் சின்னமலை சகோதரர்கள்:
சாமானிய விவசாய குடும்பத்தில் பிறந்து தனது வீரத்தால் பட்டக்காரரான பழையகோட்டை தீர்த்தகிரி சர்க்கரை மன்றாடியாரை (தீரன் சின்னமலை) அனைவரும் அறிவோம். ஆனால் அவரின் சகோதரர்களை மிக குறைவாகத்தான் அறிவோம். குழந்தைசாமி, குட்டிசாமி, கிலேதார் உள்ளிட்ட தீர்த்தகிரியின் சகோதரர்கள் வீரத்தை ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள். சகோதரர்களில் இருவர் தங்கள் வெள்ளாமையை பார்த்துக்கொள்ள மற்றவர் அனைவரும் தீர்த்தகிரியின் தலைமையில் காவல், பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டனர். கடைசி வரை தனது சகோதரர் முயற்சிகளுக்கு உறுதுணையாகவும், வார்த்தை மீறாமல் கட்டுப்பட்டும் இருந்த தீர்த்தகிரி சகோதரர்கள் இறுதி மூச்சுவரை தங்கள் ஒற்றுமையை கைவிடவே இல்லை! ஒற்றுமையாக இருந்ததால்தான் பல வெள்ளைகாரர் ஆதரவு நபர்களை போராடி வெற்றி பெற்று நீக்கிவிட்டு புதிய பட்டக்காரர்களை நியமித்து கொங்குநாட்டை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

காளிங்கராயன் பங்காளிகள்:
பவானி எலவமலை செல்லாண்டியம்மனை காணியாச்சியாகக் கொண்டவர் கால்வாய் வெட்டிய காளிங்கராய கவுண்டர். வெள்ளோடு கனகபுரதுக்கு வாழ வந்த அவர் வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை தனது பங்காளிகளின் துணை பெற்றார். வாழ்வின் ஒவ்வொரு முயற்சிக்கு பின்னும் அவரது பங்காளிகளின் உழைப்பு இருந்தது. இறுதியில் பொள்ளாச்சி ஊற்றுகுளி சென்று ஜமீன் அமைத்த பின்பும் அவர் பங்காளிகள் அவர் பின்சென்று தங்கள் சகோதர ஒற்றுமையை நிலைநாட்டினார்கள்.

அண்ணன்மார்:
ராமர் லட்சுமனருக்கு இணையான அண்ணன் தம்பி பாசம் உடையவர்கள் பொன்னரும் சங்கரும். சின்னண்ணன் சங்கரின் கோபாவேசம் பெரியண்ணன் பொன்னரின் ஆணைக்கு கட்டுப்பட்டு அடங்கும். இறுதியில் சின்னண்ணன் மறைவுக்கு பின் பெரியண்ணன் துயராற்றாது பாடும் பாடலை கேட்டால் உருகாத மனமும் உருகும்.

“ மண்ணிழந்தேன் மனையிழந்தேன் மாணிக்கத்தை நானிழந்தேன்!..
பொன்னிழந்தேன் பொருளிழந்தேன் புலிக்குட்டி சங்கரையும் 
நானிழந்தேன்!...”” 

என்று தனது தம்பியின் பிரிவாற்றாது தான் உயிரையும் மாய்த்து கொள்கிறார் பெரியண்ணன் சங்கர்.

இப்படி இருந்த நம் கொங்கதேச அண்ணன் தம்பி பாசம் இன்று தவறாக சித்தரிக்க பட காரணம் என்ன..? நம் கலாசார மரபுகளை விட்டு விலகி சென்றதே காரணம். ஆயிரம் இருந்தாலும் நம் அண்ணன்-அய்யனுக்கு அடுத்த ஸ்தானம். ஆயிரம் இருந்தாலும் நம் தம்பி – பெற்ற முதல் மகனை போல என்ற எண்ணம் நம் அனைவர் மனதிலும் வர வேண்டும். நம் பங்காளிகள் அனைவரும் நம் சுக துக்கங்களிலும் பங்காளிகள். உறவுகளை போற்றுவோம்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates