Trending

Monday, 14 April 2014

கொங்கு மக்களின் செல்வச்செழிப்பு


பாரம்பரியமான நமது கொங்கதேசத்தில் குடியானவர்கள் மிகுந்த செல்வச்செழிப்போடு வாழ்ந்தார்கள். செல்வச்செழிப்பு என்பதற்கு அர்த்தம் இருக்கும் வளங்களை அழிக்காமல்/அழியவிடாமல், பெருகக்கூடிய விஷயங்கள் சேர்ந்து கொண்டே செல்வது. நம் முன்னோர்கள் செல்வமாக கருதியது நிலம், பசுக்கள், தானியங்கள், அறிவுள்ள குழந்தைகள் தான். இவற்றில் போடும் முதல் பெருகிக்கொண்டே செல்லும். அதனால்தான் கோயிலில் ஆசி கூறும்போது,

“தனம் தான்யம் பசு பஹுபுத்ர லாபம்-சதசம்வத்சரம் தீர்க்கமாயுஹு

என்று கூறி வாழ்த்துகிறார்கள். இன்று இருப்பது போல நாற்பது வருடங்களில் ஆயுள் முடியும் வீடுகளில் ஆயுட்கால சேமிப்பை செலவிடுவது, மாதாமாதம் நம் வருமானத்தில் வேட்டுப்போடும் கார்களில் வீணடிப்பது, அளவற்ற ஆடை ஆபரணங்களில் வீணடிப்பது, ஆடம்பர கல்யாணம் செய்வது போன்ற முட்டாள்தனங்களை நம் முன்னவர்கள் செய்ததில்லை. கொங்கதேசம் குறித்து வெள்ளையர்கள் கொங்கதேசத்தின் இயற்கை வேளாண் வளங்களையும் மக்களின் உழைப்பையும் கண்டு புகழ்ந்து தள்ளியுள்ளனர். அதற்காக அவர்கள் கஞ்சர்கள் அல்ல. கொடுத்து கொடுத்து சிறப்புற்றவர்கள். தங்கள் விளைச்சலில் பெரும்பகுதியை தங்கள் கூலிகளுக்கும், குடிபடைகளுக்கும், தான தருமங்களுக்கும் செலவிட்டது போக மீதியைத்தான் வீட்டுக்கே எடுத்து வருவார்கள். கவுண்டர் வீட்டுக்கு நியாயம் சொல்ல வரும் யாரும் சாப்பிடாமல் போக மாட்டார்கள். எல்லாருக்கும் சாப்பாடு போட்டுத்தான் அனுப்புவார்கள்.

“உண்டுகெட்டான் பிராமணன்; 
உடுத்திக்கெட்டான் துளுக்கன்;
கொடுத்துக்கெட்டான் வெள்ளாளன்; 
சேர்ந்து கெட்டான் செட்டி; 
சேராமல் கெட்டான் சேடன்.. 
என்று பழமொழி நீளும்..

 • அதாவது, நம் முன்னோர்கள் தங்கள் திறமையால், அறிவால், உழைப்பால் தேடிய செல்வத்தை, தங்களது அனாவசிய செலவுகளை நிறுத்தி, சரியாக முதலீடு செய்து பிறரின் அத்தியாவசிய செலவுகளுக்கு தானம் கொடுத்து உதவினர்.

 • நம் கொங்கதேச வரலாற்றில் எங்குமே கவண்டன் காட்டை விற்றதாக சரித்திரம் கிடையாது. காட்டை போரில் வென்று, அரச உரிமை பெற்று, பொன் கொடுத்து வாங்கி, பெண் கொடுத்த-பெண் எடுத்த வகையில், தானம்-தருமம் என நிலங்கள் சேர்ந்த/கொடுத்த வரலாறு தான் இருக்கின்றதே ஒழிய எங்குமே கவண்டன் பணத்துக்கு-பஞ்சத்துக்கு காட்டை விற்ற வரலாறே கிடையாது. நிலத்தை விற்பது அவமானம்-பாவம் என்றும் தங்கள் உரிமை, மரியாதையை இழப்பது போன்றும் பார்க்கப்பட்டது.

 • பொன் கொடுத்து நிலங்கள் வாங்கிய பட்டயங்கள் படித்தால் அதில் காணியில் வாழும் கவுண்டர் ஒருவர் ரெண்டாயிரம் பொன் முதல் இருபதாயிரம் பொன் (திருமுருகன்பூண்டி கிரைய சாசனம்) வரை கொடுத்து காணி பெற்றிருப்பார். ஒரு பொன் என்பது சுமாராக ஒரு பவுன இல்லை கால் பவுன என்று வைத்தாலும் அதன் மதிப்பென்ன என்பதை கணக்கிட்டு பாருங்கள்.

 •  சாத்தந்தை கூட்டத்து காளிங்கராயன் கால்வாய் வெட்டியபோது பணம் போதாமையால் அல்லாடிய போது அவர் தாய், “தயிர் வித்த காசு தாவாரம் வரை கெடக்குது; மோர் வித்த காசு மோட்டுவளை வரைக்கும் கெடக்குது; நெய் வித்த காசு நெரஞ்சு கெடக்குது; நீ ஏன் மருவுற என்று கேட்பார். நாட்டுப்பசுக்கள் கொடுத்த செல்வங்கள் இவை.
 • தோடை கூட்டத்து காகுந்த நல்லா கவுண்டர் குலத்துங்க சோழனுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தவர்.ஆடற்பரியும் புவனங்கள் மீதினி லம்புயமுங்
கோடவிழ் தஞ்சையில் மாநகராதி குலோத்துங்கன்முன்
கோடை குலாதிபன் காகுத்த நல்லான் துரைகள்மெச்ச
மாடையும் பொன்னும் நிறைகொடுத் தான்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) தஞ்சையிலிருந்த குலோத்துங்க சோழனுடைய முன்னிலையில் தோடை குலத் தலைவனாகிய காகுத்த நல்லான் என்பவன் மேன்மக்கள் புகழும்படி அரை வராகனெடையளவுள்ள பொற்காசுகளையும்பொற்கட்டிகளையும் தன்னெடையளவு நிறுத்துத் தானங் கொடுத்தான் என்பதாம்.


 •    சிதம்பரம் கோயிலுக்கு பொன்னம்பலம் என்று பெயர் வரக்காரணம் அங்கு வேயப்பட்ட பொற்கூரையாகும். அதற்கு தங்கம் தந்து ஆதித்த சோழனின் திருப்பணிக்கு உதவியது நம் முன்னோர்கள் வாழ்ந்து வளர்த்த கொங்கதேசமாகும்.
சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வமெ னப்பறைபோக்
கெட்கட் கிறைவ னிருக்கும் வேளூர்மன் னிடங்கழியே
                         (நம்பியாண்டார்நம்பி திருவந்தாதி)

பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்
சிற்றம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்
முற்றிலுந் தன்கைத் தேவிளை வாவதை மொய்ம் பிறையுண்
மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே. •    கொங்கதேசம் மட்டுமல்ல, அன்றைய பாரத வர்ஷத்தில் அனைத்து தேசங்கலுமே செல்வவளம் மிகுந்ததுதான். இஸ்லாமிய ஆட்சியும், கிறிஸ்தவ காலனிகளும் பாரதத்துக்குள் வரும் முன்னர் முதல் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து 1600 வருடங்கள் உலகின் முதல் பொருளாதார சக்தியாக இந்தியா இருந்தது. இதை குறித்து விளாவாரியாக சுதேசி மேதை திரு.சுவாமிநாதன் குருமூர்த்தி அவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லியுள்ளார். ஐரோப்பிய அமெரிக்க கிறிஸ்தவ பணக்கார நாடுகள் இணைந்து நடத்திய ஆய்வில் வெளிவந்த தகவல் என்பது கூடுதல் தகவலாகும். நாம்தான் நம் பாட்டன் பேச்சை விட வெள்ளைக்காரன் பேச்சுக்கு மரியாதை கொடுப்பவர்களாச்சே.   
   OECD அமைப்பு எழுதிய உலக பொருளாதார வரலாறு புத்தகத்தின் முழு பதிப்புக்கு இங்கு கிளிக் செய்யவும். (http://blogs2.lesechos.fr/IMG/pdf/Statistiques_historiques_OCDE_par_pays_depuis_1820.pdf)


   ஒட்டுமொத்த பாரத தேசத்திற்கே இப்படி என்றால் இயற்கை சூழல், உழைப்பு, நேர்மை, ஒழுக்கம் கொண்ட மக்கள், ஆன்மீக ஒளியும் அறிவும் நிறைந்த குருவருள் மிக்க கொங்கதேசத்தின் செளிப்புக்கு சொல்லவா வேண்டும்?

    கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும

    கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்

    கொங்கில் வாழான் எங்கும் வாழான் 

  –போன்ற பழமொழிகள் கொங்கதேசத்தின் செல்வச்செழிப்பைக் காட்டும்.

 •   கணக்கற்ற கோயில்களுக்கும் தர்மங்களுக்கும் முன்னோர்கள் தான தருமங்கள் செய்து கட்டளைகள் ஏற்ப்படுத்தி அது காலாகாலத்துக்கும் நடந்து வர மானிய நிலங்கள் சொத்துக்கள் விட்டுள்ளனர். இன்று அவை அறநிலையாத்துறை கோயில்களை ஆக்கிரமித்த பின்பு சீரழிந்து வருகின்றன.

 • கவிச்சக்ரவர்த்தி கம்பர் கொங்கதேச மக்களின் கொடைத்தன்மையை குறிப்பிடாத பாடல்கள் இல்லை. காராள வம்சத்தாரின் புகழை அவர் இயற்றிய பாடல்கள் அனைத்திலும் குறிப்பிட்டுள்ளார்.சோழனையே கொங்கவெள்ளாள கவுண்டர்களிடம் வாங்கிய இக்கையால் உன்னிடம் பொருள் பெறேன் என்று இடக்கையை நீட்டியவர். சோழன் காவிரியின் புகழை பாடிய போது இந்த காவிரி கொங்கதேச மக்கள் வீட்டில் விருந்துண்ட வறியவர்கள் வாய் கழுவிய நீர் என்று சொன்னார். சாத்தந்தை கோத்திர சடையப்ப வள்ளல் இலங்கையில் பஞ்சம் ஏற்ப்பட கப்பல் கப்பலாக தானியங்கள் அனுப்பி பஞ்சம் நீக்கியவர்.


 • கொங்கு மண்டல சதகபாடல்களில் எண்ணற்ற பாடல்கள் நம் முன்னோரின் செல்வசெழிப்பும் அதைக்கொண்டு அவர்கள் செய்த தானதருமங்களையும் போற்றி புகழும். இந்த லிஸ்டில் சொல்லப்பட்டது வெகு சில விஷயங்களே. இவையன்றி பாண்டியன் பெரும்படைக்கே சோறுபோட்ட மொளசி கன்ன கூட்டத்தாரும், பஞ்ச காலத்தில் குடிபடைகளுக்கு விதை நெல் முதற்கொண்டு வேகவைத்து போட்டு காத்த நம் மக்கள் அனைவருமே தனித்தனியே குறிப்பிடத்தக்கவர்கள் தான்.


இந்த செல்வச்செழிப்பிறகு காரணம் நம் முன்னோர்கள் பின்பற்றிய சத்திய நெறியும் சனாதன வாழ்க்கையும் தான். சத்திய நெறியில் வாழ குலகுருவின் ஆசிகளும் உபதேசங்களுமே பெரும்துணை செய்தன. ஒழுக்கம் தான் எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த சொத்தை நிலைநிறுத்தச் செய்யும். குலகுரு பாரம்பரியம் மிகவும் நுட்பமானது-முக்கியமானது; அதை புரிந்துகொள்ளும் அறிவை கூட, திராவிட கைக்கூலிகள் அழித்துள்ளனர். சனாதன வழியில் வாழ நம் நாட்டு பசுக்களும், குடிபடைகளும் காரணமாகும். குடிபடைகள் கூட ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள். ஆனால் நாட்டுபசுக்கள் தான் நம் ஆதார சக்திகள். விவசாயம் ஆரோக்கியம் செல்வ வளம், வீரம் அனைத்துக்கும் மூல காரணம் நாட்டுப்பசுக்களே. மொடக்குறிச்சி காணியை தூரன் கூட்டத்தார் வாங்க முளுக்காரணமே நாட்டு பசுவின் நெய் விற்ற பணம்தான். போலியான, பண்பாடற்ற, ஆரோக்கியமற்ற நகர-மேற்கத்திய  வாழ்க்கை முறையில் சிக்கி சீரழிந்து வரும் தலைமுறையையும் கெடுக்காமல் வாழ வேண்டும். செல்வ செழிப்பு நிலைக்க வேண்டுமானால் நம் பாரம்பரிய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்; நிலங்களை விற்க கூடாது; பிளாட் போட்டு வியாபாரம் செய்யக்கூடாது; நாட்டுப்பசுக்களை பேணிக்காக்க வேண்டும்; ஆடம்பர திருமணங்கள் செய்யக்கூடாது; ஆடம்பர வீடு-கார் போன்றவற்றிற்கு வெட்டி செலவு செய்யக்கூடாது. பெருகும் விஷயங்கள் எது என்று அறிந்து அதில் ஈட்டும் பொருளை கொண்டு வளம் பெருக்க வேண்டும். கொங்கதேசமும், கொங்கதேசக்குடிகளும், கொங்கதேச பாரம்பரியமும் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் கிளைகிளைத்து முசியாமல் வாழ்ந்திருக்க இறைவனை வேண்டுவோம்!

குடியானவர்களின் ஆட்சியில் கொங்கதேசம் இருந்தவரை இப்படி ஒழுக்கமாகவும் வளமாகவும், இயற்கையை சுரண்டாமலும் இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் திருட்டு சர்க்கார் முறை வந்த பின்னர் எப்படி மாறி சீரழிந்து போனது.. இவ்வளவு வளமான கொங்கதேசத்தின் இன்றைய நிலையோ??

மேலும் படிக்க,


2 comments:

 1. செவ்வேள் குமரன்6 December 2015 at 23:40

  கொங்கதேச எல்லை கிராமங்களில் ஒரு பண்ணையத்தில் காடு கரை நேர்த்தியாகவும், பாங்காகவும் இருந்தால் அந்த பண்ணையத்து ஆள்காரனிடம் "கவுண்டமூட்டுல பண்ணையத்துல இருந்தியா?" என்று கேட்பார்கள்.. அது சரியாகவும் இருக்கும்.. முரண்டு பிடித்து சோம்பேறியாக திரியும் சக்கிலி, பறையர், பள்ளி, பள்ளர், சாணார் பசங்களை, திருத்த கவுண்டர் வீட்டு பண்ணையத்தில் விடுவதும் கொங்கதேசத்தில் பல காலமாக நடக்கும் விஷயம். எல்லாருக்கும் தெரியும், குடியானவர் பண்ணையத்தில் விட்டால் படிமானம் தானாக வரும் என்று.. இது நம் முன்னோர்கள வாழ்ந்த வாழ்க்கைக்கு சிறந்த உதாரணம்.. இனியாவது மீண்டும் விழித்தெழுந்து நம் விவசாய அறிவை பெருக்கிக் கொள்வோம். விவசாயம் நம் கையில் இருக்கும்வரை தான் நிலங்களும் உழைப்பும் நம் கையில் இருக்கும். மகாலட்சுமியும் நம் சமூகத்தோடு என்றென்றும் நிலைத்திருப்பார்..

  ReplyDelete
 2. கன்ன கூட்டத்தை சேர்ந்த நம் குடியானவர் ஒருவர் இந்தியாவின் பெரும் சக்திகளில் ஒருவர். அதிக வருமான வரி செலுத்தி விருது வாங்கியவர். ஏராளமான பதவிகள் வந்தும் மறுத்து தன்னை வெளியுலகிற்கு விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர். எந்த முதல்வர் பதவியேற்றாலும் விழாவில் அவருக்கு வி.ஐ.பி வரிசையில் சீட் இருக்கும். அவர் வீட்டில் இன்றளவும் நம் முன்னோர்களின் ஒரு நல்ல பழக்கம் உண்டு. இரவு ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு அனைவரும் எட்டு மணிக்கு தூங்கிவிடுவார்கள். விடியற்காலை நான்கு மணிக்கு முன்னரே எழுந்துவிடுவார்கள். அவர்கள் செய்யாத தொழிலா, சம்பாதிக்காத பணமா, அரசியல் சமூக செல்வாக்கா.. கொஞ்சம் சிந்திப்போம்.. அவரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்த பழக்கம். அவருக்கு மட்டுமல்ல உலகின் ஏராளமான சிறந்த மனிதர்கள் முதல், நம் வேதங்கள்-சாஸ்திரங்கள் முன்னோர்கள் என்று அனைவரும் மாறுபாடு இல்லாது சொல்லும் நல்ல பழக்கம் இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலை எழுவது.
  இன்றைய சூழலில் ஒரு சின்ன திருத்தம் மிக பெரிய நன்மையை கொடுக்கும் என்றால் அது தூக்க நேர மாற்றம் தான். நம் மனித உடலின் இயல்பே இரவு இருட்ட துவங்கியதும் தூங்குவதே. இன்று நாம் நம் இயல்பை மீறி செயல்படுகிறோம். அதுவே நீண்டகால நோக்கில் வியாதிகளுக்கு அடித்தளமிடும். இரவு சீக்கிரம் தூங்குவதால் இன்னொரு சிறந்த நன்மையையும் உண்டு. போதிய தூக்கம் இருக்கும். டிவி விஷங்களில் இருந்து குழந்தைகளையும் நம் வீட்டு பெண்களையும் நம் குடும்பத்தையும் காக்கலாம். மனதையும் அறிவையும் கெடுக்கும் நிகழ்ச்சிகள், தொடர்கள், விவாதங்கள், ஆபாசங்கள் அனைத்தும் இரவு நேரத்தில்தான் ஒளிபரப்பாகின்றன. அதேநேரம் விடியற்காலை எழும்போது உடலுக்கும் மனதுக்கும் மிக பெரிய அளவில் நன்மை கிடைக்கும். கவனம், ஆற்றல், தொழில் வேலைகளுக்கு சரியான திட்டமிடல், உருப்படியான நேரம் என்று அனைத்தும் சாத்தியமே. நம் மூளை சிறப்பாக செயல்படக்கூடிய நேரம் அதிகம் கிடைக்கும். இது மறைமுகமாக நமது தொழில் வியாபாரங்களில் பெரிய மாற்றத்தைத் தரும். குழந்தைகளுக்கு கல்வி முதல் ஆரோக்கியம் வரை அனைத்தும் மேம்படும். விடியற்காலை எழுவதால் கொஞ்சம் யோகா-உடற்பயிற்சிக்கும், நிதானமாக சாமி கும்பிடவும், அன்றைய நாளை திட்டமிடவும் நேரம் கிடைக்கும். நாள் முழுதும் உற்சாகத்தை உணரலாம். நமது குணமே சில நாட்களில் நல்ல மாற்றமடைவதை உணரலாம். முயற்சி செய்வோம்.

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates