Trending

Tuesday, 15 April 2014

அறநிலையாத்துறை அக்கிரமம்
ஒரு கிராமத்தில் விவசாயியும் அவர் மனைவியும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பல குழந்தைகள். அவர் தன் நிலத்தில் ஒரு பகுதியில் தனது இஷ்ட/குல தெய்வத்தை வைத்து வணங்குகிறார். அவர் காலம் சென்ற பின்னர் அவரின் வாரிசுகளும் அதே கோயிலை வணங்கி வருகிறார்கள். அனைத்து சகோதரர்களின் பங்களிப்போடு கோயில் பெரிதாக கட்டி, அதன் நிர்வாகத்துக்கு தாங்கள் பாடுபட்ட பணத்தில் வரியாக, வேண்டுதலாக, தானமாக என்று சொத்துக்கள் வாங்கப்படுகின்றன. சில தலைமுறைகள் கடக்கின்றன. இவர்களின் முப்பாட்டன் கோயில் எனவே, யாரும் இதை ஆவணப்படுத்தவோ, பிரித்துகொள்ளவோ இல்லை. கோயிலின்பால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களும் பக்தியால் வருகிறார்கள். அந்த விவசாயியின் வாரிசுகளும் பெருந்தன்மையோடு அனுமதிக்கிறார்கள். திடீரென ஒரு நாள் பூத உடல், மரு வைத்த கன்னம், கெடா மீசை, இருபது அடியாளோடு ஒருவன் வந்து கோயிலில் இனி எல்லாம் என் சொற்படிதான் நடக்கவேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து சாமி கும்பிட, வண்டி நிறுத்த, பிரசாதம் வாங்க என எல்லாவற்றிற்கும் டோக்கன் போட்டு வசூல் வேட்டை ஜோராக நடக்கிறது. இந்த கொள்ளையை கோயில் நிர்வாகம் என்று கணக்குக்காட்டி அதற்கும் கோயில் பணம் சுரண்டப்படுகிறது. கோயில் சொத்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆசாமியின் சொந்த செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோயிலை சீரமைக்கிறேன் என்று முன்னோர்களின் நினைவாலயத்தை இடித்து மாடர்ன் கட்டிடம் கட்டுகிறான். கோயில் வளாகத்தில் கோயில் பணத்தில் கறி சாராயம் என கூத்து நடக்கிறது. அவர்களின் வழிபாட்டு முறைகளை மாற்றி நான் சொல்வது போலத்தான் பூசைகள், சம்பிரதாயங்கள் நடக்கணும் என்று உத்தரவு போடப்படுகிறது. பாவம், வறட்சி கால விவசாயம் செய்தே வத்திப்போய், தங்கள் உரிமைகள் என்ன வென்று அறியாத அந்த ஏழை குடியானவனின் வாரிசுகள் இயலாமையால் வெறுமனே வேடிக்கை பார்த்து தங்கள் சாமியை காண டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கிறார்கள்..


இப்படி நடந்தால் எப்படி இருக்கும்..? இதுதான் இப்போது பெரும்பாலான கோயில்களில் நடக்கிறது. அந்த ஆசாமி, நம்ம தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையாத்துறை தான்.. ஆமை புகுந்த வீடும்; அமீனா புகுந்த வீடும்; அறநிலையதுறை புகுந்த கோயிலும் உருப்படாது.. நேரடியாக பல கோயில்களில் கண்ட உண்மை..

இந்த அறம் அழிந்த துறை பற்றிய சிறு புத்தகம் இங்கே சொடுக்கவும்
http://www.mediafire.com/download/j2fivj36ms6fpk6/HR%26CE-Exposed.pdf

கொங்கதேச கோயில்களில் அறமற்ற துறையின் அக்கிரமங்கள் குறித்த சில கட்டுரைகள் லிங்க்,

நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்

http://www.tamilhindu.com/2012/04/nasiyanur-temple-misdeeds-by-tamilnadu-hr-and-ce-board/


ஈரோடு விஜயமங்கலம் கோவில்: அறநிலையத்துறை & திருப்பணி கொடுமைகள்

http://www.tamilhindu.com/2012/07/vijayamangalam-temple-issue/

ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை

http://www.tamilhindu.com/2011/02/sand-blasting-in-temples/


தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை

காளமங்கலம் கோயில் அக்கிரமங்கள்
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2847

சேவூர் வாலீஸ்வரர் கோயில் அக்கிரமங்கள்
http://sevurwar3.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8Dகுல தெய்வ கோவில் நிர்வாகத்தில் இளம் தலைமுறையினர் ஈடுபாடு காட்ட துவங்க வேண்டும். அதற்கு நாம் நம் கோவில்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டும், நிர்வாகிகளோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கோவிலில் மூன்று முக்கிய பிரச்சனைகள் தற்போது வளர துவங்கியுள்ளது.

௧. அறநிலையத்துறை கோவில்களை ஆக்கிரமிப்பு செய்து, பரம்பரை காணியாளர்களை ஓரம் கட்டுகிறது. கோவில் சொத்துக்களும் அபகறிக்கபடும். கோவிலின் பாரம்பரிய நடைமுறைகள் மாற்றப்படும்.

௨. நம் கொங்கு பகுதியில் மக்கள்தொகையில் வளர்ந்துவரும் சில சாதிகள் நம் கோவில்களை உரிமை கொண்டாடி கைப்பற்ற முற்படுகிறார்கள்.

௩.பண்ணாட்டு அளவிலான கோவில் ஜிகாத் கும்பல் நம் பாரம்பரியம் கலாசாரத்தை அழிக்க நம் கோவில்களை இடித்து கட்ட தூண்டுகிறார்கள். பணக்கார நம்மவர்கள் தங்கள் புகழை வளர்த்து கொள்ள அவர்களின் சூது தெரியாமல் கோவில் மற்றும் சிலைகளை அழித்து விடுகிறார்கள். இடித்து கட்டும் பிரம்மாண்டம் கட்டடமாக இருக்குமே ஒழிய ஆகமங்கள் இன்றி இருக்கும் அதில் இறைசக்தி இராது.

நம் காணியாச்சி தெய்வங்கள் காளி வடிவம். கோவிலில் இதுபோன்ற அரஜாகம் செய்பவர்கள் வம்சத்தையே வேரோடு அழித்து விடும் என்பது ஒரு புறம இருந்தாலும், காணியாளர்களாகிய நாம் அதற்க்கு எந்த எதிர்ப்போ-நடவடிக்கையோ எடுக்காமல் இருந்தால் அந்த பாவம் நம்மையும் சேரும்.1 comment:

 1. அறநிலையத்துறை சட்டம், அதனால் நம் கோயில்களுக்கும் ஹிந்து சமூகத்துக்கும் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள், இந்த துறையின் தோற்றம், செய்யும் தவறுகள் என்று அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கவும் பகிரவும்.
  கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கோயில் பிரச்சனைகளுக்கு போராடும் ஹிந்து சகோதரர்கள் அனைவருக்கும் இந்த லிங்கை கட்டாயம் அனுப்பவும். பொதுமக்களுக்கு அறநிலையத்துறையால் கோயில்களின் பாரம்பரியம், சொத்துக்கள் எல்லாம் எப்படி அழிந்து வணிக மையங்களாக மாறி வருகின்றன என்பதை எடுத்துரைக்க இந்த வீடியோ கட்டாயம் உதவும்.

  https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

  *கோயில்களை சர்க்கார் அறநிலையாத்துறை என்னும் துறை மூலம் ஆக்கிரமித்து கோயில் சொத்துக்களை "கவனிக்கிறது". இதுபோல அரசாங்கம் சர்ச்களையோ, மசூதிகளையோ சுரண்டுவதில்லை. ஏன் கோயில்களுக்கு மட்டும் இந்த சாபம்?

  *கோயில் சொத்துக்களை சரிவர பராமரிக்காமல், அவற்றை அரசு வேலைகளுக்கும் அரசியல்வாதிகள் வேலைக்கும் விற்று பயன்படுத்துகிறார்கள்! அக்கிரமங்களின் உச்சம் இது. கோயில் ரெஜிஸ்டர் என்னும் புஸ்தகம் பேணப்பட வேண்டும். அதில் கோயில் சொத்துக்கள் பற்றி விவரங்கள் இருக்க வேண்டும். எந்த கோயிலிலும் அறநிலையாத்துறை முறையாக பராமரிப்பதோ பேணுவதோ இல்லை. இது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

  *இந்த அறநிலையாத்துறை மதசார்பற்ற அரசால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாரபட்சமாக நடத்தும் கொடுமை ஆகும்.

  *அறநிலையாத்துறைக்கு கோயில் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. கோயில் பூஜை முறைகளையோ, விழாக்கலையோ, பிற பணிகளையோ கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை.

  *கோயிலுக்குள் பலகாரக் கடையை "பிரசாதக்கடை" என்னும் பேரில் நடத்துவது தவறு மட்டுமல்ல அசிங்கமும் ஆகும்.

  *கோயிலுக்குள் ஆகம விரோதமாக பழைய அமைப்புகளை சிதைப்பது புதிய கட்டிடங்கள் கட்டுவது மிகப்பெரிய குற்றம். குறிப்பாக அறநிலையாத்துறை அதிகாரிகளுக்கு கோயிலுக்குள் அலுவலகம் இருக்கவே கூடாது.

  *அறநிலையாத்துறை கோயிலுக்கு ஒரு வேலைக்காரர்கள். அவ்வளவே. கோயிலை தங்கள் இஷ்டம் போல எடுத்துக் கொள்ள முடியாது. நிர்வாகம் சரியில்லை என்று சட்டப்படி நிரூபித்து கோயிலை எடுத்தாலும் அதிகபட்சம் மூண்டு முதல் ஐந்து வருடத்துக்குள் மீண்டும் நிர்வாகத்தை ஒப்படைத்து கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

  இதுபோல, இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த அறநிலையாத்துறை பற்றி உள்ளது. அனைவரும் இந்த அறநிலையாத்துறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட லிங்கில் அறநிலையாத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.கோயிலில் கருத்து வேறுபாடு என்று அறநிலையாத்துறையை உள்ளே கொண்டு வந்து விடுபவர் அந்த கடவுளுக்கே துரோகம் செய்தவனாவார். அப்படி செய்பவர் கோயிலை இடித்து கோயில் சொத்தை தின்றவர்கள் என்ன ஆவார்களோ அதே நிலைக்கு ஆளாவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அந்த புத்தகத்தின் வீடியோ இணைப்பு:https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates