Trending

Tuesday, 15 April 2014

கொங்கர் வீரம்இன்று வணிகர்களை மாறிப்போன கவுண்டர்களுக்கு வீரம் என்பது மறந்துபோன விஷயமாக போய்விட்டது. வெள்ளையனின் கல்வியும், நாட்டு மாட்டை கைவிட்டதாலும், மரபுகளை கைவிட்டதாலும் நமது வீரத்தை-மாண்பை மறந்து பேடிகளாக மாறிவரும் போக்கை மாற்ற வேண்டும். நமது வரலாற்றில் நமது வீரத்தை பறைசாற்றும் சம்பவங்கள் இங்கே தொகுக்கிறேன்.

• கொங்கர்` செங்களம், ஒளிறுவாள் கொங்கர், கருங்கைக் கொங்கர் எனப்பலவாறு கொங்கர் வீரம் சங்க இலக்கியங்களால் புகழப்படுகிறது.

• கொங்கர் படை சேரனுக்காக பல்வேறு காலகட்டங்களில் போர் செய்தது. கருவூர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை ஆகியோரே தமிழ் தேசங்கள் ஐந்தினுள்ளும் முதன்மையாக பாரத வர்ஷத்தை திக் விஜயம் செய்து ஆண்டவர்கள். அதற்க்கு பெருந்துணையாக இருந்தது கொங்கப்படை. சேரனுக்கு முடிசூட்டுவதும் கொங்கர்தான் என்பதும் நினைவில் கொள்க!

• மோரூர் சூரிய காங்கேயன் பாண்டியனால் வெல்ல முடியாத வாணதிராயனை வென்று உயிருடன் பிடித்து வந்தார். அதனால் மோரூர் ஆட்சி அதிகாரத்தை பெற்றார்

• தோக்கவாடி வேலாத்தாள் என்னும் பருவ வயது பெண் கொங்கப்படை திரட்டி வெல்ல முடியாத கைக்கோளர் படை வென்று குறும்படக்கினார். அவர் கோவில் இன்றளவும் தொக்கவாடியில் வேலாத்தா கோவில் என்றுள்ளது.

• அண்ணன்மார் சாமிகள் என்னும் கொங்கு இளம் சகோதரர்கள் பெரும் வேட்டுவ படையுடைய தலையூர் காளியையும் அவன் சுற்றத்தாரையும் அழித்தார்கள். போர்க்களம் இன்றளவும் வீரமலையில் உள்ளது.

• கொங்கு நாட்டில் எல்லைகளையும் ஆட்சியையும் கட்டுகொப்பாக ஒழுக்கத்துடன் வைத்து பிறரின் படையெடுப்பு, அவ்வப்போது கொங்கு நாட்டில் உரிமை இல்லாத பிற இனத்தவர் குறும்படக்கி வந்ததால் தான் சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் என யார் ஆட்சி மாறினாலும் கவுண்டர்களே கொங்கு நாட்டின் ஆட்சியாளர்களாக நிர்வாகபொறுப்பாளர்களாக இருந்தனர்.

• கரியான் சர்க்கரை பாண்டியன் பொருட்டு சோழனயே வென்றார். அதனால் பழையகோட்டையின் மன்றாடியானார்.

• பெரிய குல வேணாடர் கரிகாலனுக்காக பல போர்களை செய்தவர்கள்

• களப்பாளர் என்ற வடுக - ஒரியர்களை அடக்கி வென்று மூவேந்தர்களையும் நாடாள வைத்தது கொங்கப்படை

• சிங்களத்தின் லங்காபுரி தண்டநாதன் மூவேந்தர்களையும் சிறையிலிட்டபொழுது அவனை முறியடித்து துரத்தியது கொங்கப்படை

• இன்றும் மலையாளத்தில் பாலக்காட்டருகே சித்தூரில் "கொங்கப்படை" என்ற விழா பகவதி கோயிலில் நடைபெறுகிறது. கொங்கரை வெற்றிகொள்ள இயலாததால் மலையாளிகளுக்காக பகவதியே வந்து போரிட்டு கொங்கரை வென்றதாக கதை.

• தீரன் தீர்த்தகிரி சர்க்கரை (சின்னமலை) உந்துதலால் கொங்கப்படை பல போர்களில் வெள்ளையருக்குத் தண்ணீர் காட்டியது. ஒற்றை ஆளாக 5,000 பேர் கொண்ட படையை விரட்டி அடித்தார் தீர்த்தகிரி. திவானையோ, திப்பு சுல்தானையோ இல்லை எவனையும் தன்னை ஆல்பவனாக ஏற்றுக்கொண்டதில்லை. ஒரே நோக்கம் என்பதால் ஒன்றாக போராடினார். கடைசி வரை நேரடியாக தீரனை தீண்டகூட முடியவில்லை.

• ஒவ்வொரு ஊரிலும் ஆயுத சாலைகளும், மல்யுத்த சாலைகளும், போர்பட்டரைகளும் இருந்துள்ளன. துப்பாக்கி வெள்ளையன் வருவதற்கு முன்னரே இருந்தது. ஆனால் அது பெடிகளின் ஆயுதம் என்று நம் மக்கள் ஒதுக்கி வைத்திருந்தனர்.

வெள்ளையர்கள் இதனை ஒடுக்க ஆயுதப்பறிப்புச் சட்டம், உப்பு வரிமூலம் வெடியுப்பு காய்ச்சுதல் நிறுத்தம், சூழ்ச்சிகள், துரோகங்கள், பேடி பாடங்கள் மூலம் தற்பொழுது கொங்கர்களை பேடிகளாக்கியுள்ளனர். இதன்மூலம் கொங்கர்களை கொத்தடிமைகளாக்கியுள்ளனர்.


More Information: http://kongappadai.blogspot.in

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates