Trending

Tuesday, 15 April 2014

மரபு கல்யாணமா-விளம்பர கல்யாணமா?

எளிமையாக நூறு பேரை அழைத்தாலும், வீட்டில, அருமைகாரர்-குலகுரு நடத்தி வைக்க, மங்கள வாழ்த்து முழங்க, கொங்கு மரபுப்படி அனைத்து சீரும் செய்யப்பட்டு நடப்பதே திருமணம்.

ஐந்தாயிரம் பேரை அழைத்து தமிழ் முறை திருட்டு கும்பலை வைத்து ஐம்பது லட்சம் செலவழித்து செய்யபடுவது வெறும் விளம்பரம், திருமணமல்ல.

கம்பர் நமக்கென ஓதி தந்த மங்கள வாழ்த்து இருக்க, கவுண்டர்களுக்கென தனித்துவமாக சீர் முறைகளும் இருக்க, அதை நடத்தி வைக்க காலம் முழுக்க நெறிமுறைகளோடு வாழும் அருமைகாரர்களும், குலகுருக்களும் இருக்க நாம் ஏன் கலாசார அடிமைகளாக பிற முறைகளை தேடி அலைய வேண்டும்? லட்சகணக்கில் தோரணம்-அலங்காரம், பிச்சைகாரன்போல தட்டை ஏந்தி பப்பேவும் போடுவதில் என்ன பெருமை வந்துவிட்டது? திருமண பத்திரிகை என்பது நிகழ்ச்சியின் விபரங்களை தெரிவிக்கவே. அதில் தனது சொத்து பட்டியல், பதவி, கல்வி என்று டமாரம் அடிப்பது தேவைதானா..? பத்திரிக்கைக்காகவே பட்டம் ‘வாங்கும்’ போலி கல்வி தேவைதானா..?

இவ்வளவு செலவு செய்து விளம்பரம் செய்வதால் யாருக்கு என்ன பயன்..? நம் உறவுகளுக்குலேயே போட்டி-பொறாமை-ஏக்கம்-தாழ்வு மனப்பான்மை தான் வளரும். நம் உறவுகளின் தவிர்க்க இயலா தேவைகளுக்கு கூட பத்து பைசா தர யோசிப்பவர்கள் திருமணத்திற்கு லட்சங்களை வெறும் ஆடம்பரதுக்கு வாரி இரைப்பது மனசீர்கேட்டின் உச்சம். 

பாசத்தால் தன் பிள்ளைகளுக்கு சிறப்பாக திருமணம் செய்ய வேண்டும் ஆசையால் துவங்கிய இந்த விளம்பர திருமணங்கள் அவன் செய்கிறான் என இவனும் இவன் செய்கிறான் என இன்னொருத்தனும் என சங்கிலி தொடராக இன்று எங்கோ போய் நிற்கிறது. மாட்டுக்கறி தின்றுவிட்டு மாதம் ஒரு மனைவி என்று திரிவது தவறாக கருதப்படாத மேற்குலகின் உடையான கோட்டை போட்டு வருவதும் வடக்கின் குர்தாவை போட்டு வருவதும் பெருமையாக நினைப்பது நாம் எவ்வளவு தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறோம் என்பதற்கு உதாரணம் மட்டுமல்ல அசிங்கமும் கூட. பிழைப்புக்குத்தான் அவன் ஆடைகளை உடுத்தி தொலையும் கட்டாயம் என்றால் திருமணத்திலும் இவை தேவைதானா?. நாளை அவர்கள் கலாசாரத்தில் நடக்கும் அவலங்களையும் நம் வாழ்வில் சந்தித்து/சகித்துக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.


இப்படிப்பட்ட விளம்பர திருமணங்கள் தேவையா சொந்தங்களே?

நம் மரபுப்படி கல்யாணங்களில் ஊர் தேவடியாள் நடனமாடி வரச் செய்வர். அது நம் மங்கள வாழ்த்து பாடலிலேயே இருக்கிறது. 

"கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவர

நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவடியாள்"

இன்று கொஞ்சமும் விவஸ்தை இன்றி, சினிமாவைப் பார்த்துவிட்டு, வெள்ளைக்காரன் கல்யாணமானதும் கல்யாணப்பெண்கூட ஆடுவது போல நம் கொங்கு கல்யாணத்தில் மணமேடைக்கு வரும்போதும் சரி, கல்யாணம் ஆனதும் சரி, பொண்ணை ஆட விடுகிறார்கள். சில கல்யாணங்களில் பெற்றவர்களும் கூட சேர்ந்து ஆட்டம். என்ன நினைப்பில் இருக்கிறார்கள்..??

மனைவியே ஆனாலும், பலர் பார்க்க முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது போன்ற வேலையெல்லாம் செய்யக்கூடாது. கிறிஸ்தவத்தில் தான் அந்த கருமமேல்லாம் உண்டு. சினிமா கூத்தாடிகளைப் பார்த்து கொங்கு கல்யாணத்தில் சிலர் ஹீரோயிசமாக நினைத்து செய்கிறார்கள். சிலர் கல்யாண ஆல்பத்துக்காக இப்படி செய்கிறார்கள். இதெல்லாம் அசிங்கம். இந்த நாய்சேட்டைகளை செய்ய நாம் பலபற்றை ஜாதி இல்லை. நாம் குடியானவர்கள். மனதில் நிறுத்துங்கள்.

கேக் வெட்டுவது அதை பூசிக்கொள்வது, அங்கிருப்பவர்களுக்கு திண்ண கொடுப்பது.. கேக்கில் முட்டை கலந்திருக்கும்; நாம் கல்யாணம் உறுதி செய்த நாளில் இருந்து அசைவமின்ரி பத்தியமாக இருக்க வேண்டும் என்பது தெரியாதா..??

இவை எல்லாமே வர காரணம், வெளிநாட்டு மோகம். நம் மரபின்மீதான தாழ்வு மனப்பான்மை.

“என்னடா பெருமை ஏகநாதா ன்னா, சோத்து பெருமை டா சொக்க நாதா” ன்னு சொன்னானாம். அதுதான் நினைவுக்கு வருகிறது!

ஆடம்பர திருமணங்கள் மாற வேண்டும். அந்த மாற்றம் சமூகத்தில் பிறரை கவரும் நிலையில்/அதிகம் கவனிக்கப்படும் / பொருளாதார வளம் உள்ள கொங்கு மக்களே முன்னெடுக்க வேண்டும். 

நம் மரபுகளும்-சடங்குகளும்தான் நமக்கு அடையாளம்-பெருமை. இன்று பணத்தையும், பதவியையும், ஆடம்பரத்தையும் முன்னிறுத்தியே கவுரவ ‘பிச்சை’ தீர்மானிக்கபடுகிறது. மாறாக இனி நம் மரபுகளையும் ஒழுக்கத்தையும் கொண்டு கவுரவம் கட்டப்பட வேண்டும்!

(இந்த பதிவு சிலரை புண்படுத்தும் என்பதும் விமர்சனங்களை கொண்டு வரும் என்பதும் தெரியும். மயிலிறகால் நீவி எந்த மாற்றத்தையும் கொண்டு வர இயலாது. இது நம் கொங்கு உறவுகளுக்குள் நல்லிணக்கம் வர தேவைப்படும் அவசிய மாற்றம்.

2 comments:

 1. சிங்கபூர் கொங்கு நண்பர்களின் பொங்கல் விழாவில், சுமார் 120 பேர் கலந்து கொண்டார்கள். எல்லாருக்கும் பாரம்பரிய முறையில் சம்மணமிட்டு அமரச் செய்து இலை போட்டு நம் சொந்தங்களாலேயே பந்தி பரிமாறப்பட்டது.
  இயலாத பெரியவர்களுக்கு மட்டும் தனியே டேபிளில் உணவு பரிமாறப்பட்டது.
  எந்த உணவும் கடையில் ஆர்டர் செய்யவில்லை. நம் சொந்தங்களே ஆளுக்கொரு உணவுப்பண்டம் அவரவர் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்தனர்.. கண்டவர்களை விட்டு சமைக்க செய்யவில்லை. சிங்கபூர் பணி சூழலிலும் சமைக்க நேரமிருக்கிறது; காரணம் அதுதான் மரியாதை என்ற எண்ணமும் இருக்கிறது..
  நாகரீகம் என்று எண்ணிக் கொண்டு நம் சொந்தங்கள் கையில் தட்டை கொடுத்து பிச்சை எடுக்க செய்யவில்லை.. பப்பே போடுவதுதான் நாகரீகம் என்ற முட்டாள் சிந்தனை வரவே இல்லை..
  பப்பேவில் சோறு போட பிற சாதிக்காரர்களை நிற்க வைத்து அவர்களிடம் நம் சொந்தங்களையும் பெரியவர்களையும் கையேந்தி வாங்கி உண்ண செய்து அவமதிக்கவில்லை..
  சிங்கப்பூரில் சாத்தியமென்றால் நம் ஊரில் அதிலும் குறைந்தபட்சம் நம் குடும்ப விசேஷங்களில் நிச்சயம் சாத்தியமே..
  சொந்தங்கள் சிந்திக்கவும்..

  ReplyDelete
 2. Chinema culture and upnormal indesciplined political activities along modern un natural education spoiling ourtridational culture.

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates