Trending

Tuesday, 13 May 2014

காப் பஞ்சாயத்து மற்றும் நம் பாரம்பரிய பஞ்சாயத்தின் தேவை

காப் பஞ்சாயத்து குறித்து மீடியாக்களில் மிகவும் ஆதரவாகவும், சிலர் தவறெனவும் எழுதி வருகிறார்கள். மீடியாக்கள் எப்போதும் சில கட்சிக்காகவோ, வெளிநாடுகளுக்காகவோ, மதங்களின் லாபியாகவோ தான் செயல்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே. எனவே, காப் பாஞ்சாயத்து பற்றிய உண்மையான பார்வையை வீசுவோம்.

எதிர்ப்பவர்கள்:
•முற்போக்கு-கம்யூனிஸ்ட்-மீடியா-பெண்ணிய மாபியா (வழக்கம் போல சாதி ஒழிப்பு-பெண்ணுரிமை என்ற போர்வையில்)
•உலகமயமாக்கல் என்னும் பேரால் கிராமங்களை அழிக்க நினைப்பவர்கள் 
•கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் மதவிபச்சாரிகள்  
•பாரம்பரியங்களை சீரழிக்க நினைப்பவர்கள் 


மேற்சொன்னவர்கள் தனித்தனியேவும் அவ்வப்போது கூட்டு சேர்ந்தும் லாபி அமைத்து அவர்கள் கையில் இருக்கும் மீடியா மற்றும் அரசியல் செல்வாக்கு மூலமாக எவ்வளவு தொந்தரவு கொடுக்க முடியுமோ அவ்வளவு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். இவர்களின் கூலிக்கு மாரடிக்கும் உண்மை முகம் என்ன என்று ஜெயமோகன் விளக்கமாக எழுதியுள்ளார். (http://www.jeyamohan.in/?p=28449)

ரஷ்ய உளவு அமைப்பான KGB யின் முன்னாள் அதிகரி இந்த சிந்தனையில் விஷம் கலந்து நாட்டில் குழப்பத்தை தூண்டி தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது குறித்து ஏற்கனவே பேசியுள்ளார்.

http://www.youtube.com/watch?v=zeMZGGQ0ERk

மேலும் இந்த கம்யூனிசலாபி பற்றி இந்த பதிவில் தெளிவாக அறியமுடியும் (http://naradhavijayam.blogspot.in/2014/04/blog-post_16.html)

காப் செயல்படும் விதம் 
ஹரியானா, ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப், டெல்லி போன்ற பகுதிகளில் இந்த காப் பஞ்சாயத்துக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஐந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்தார்கள். அதுபோல சில கிராமங்கள் சேர்ந்தது முஹாந்து. முகாந்துகள் சேர்ந்த எழுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் ஒரு காப். காப்புகள் சேர்ந்தது சர்வகாப்-கிட்டத்தட்ட ஒரு மாநிலமே கவர் ஆகும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் அவர்களுக்கென சட்டம் இயற்றி கொள்ள அதிகாரமுடையவர்கள்; கிராம பிரச்சனைகளை அவர்களே தீர்த்து கொள்வார்கள். உள்ளூர் மக்களே ஈடுபடுவதால் அம்மக்களுக்கு பிரச்சனையின் வேர்கள் தெரியும்;உணர்வுகள் புரியும். இங்கு பிரச்னை தீர்த்துவைக்கப்படுகிறது உத்தரவுகள் பிறப்பித்து ‘தீர்ப்பளிக்க’ப்படுவதில்லை. பெரிய பிரச்னை என்றால் பிரச்சனைக்குரிய கிராமங்கள் காப்புகள் என்று கூடி முடிவெடுப்பார்கள். ஒவ்வொரு பிரச்னையும் கிராமம் முதல் மாநிலம் வரை ஒருங்கிணைந்த நெட்வொர்க்கால் ஆளப்படுவதால் இங்கு மக்களை சுரண்டும், கிராமங்களை அழிக்கும், மதமாற்றம் சுலபமாக பாரம்பரியங்களை அழிக்கும் சக்திகள் பலமற்று போகிறது. இங்கு ஒவ்வொரு கிராமமும் சுயாட்சி அதிகாரம் மிக்கவை என்பதும், பஞ்சாயத்துக்களில் பொதுமக்களின் பங்களிப்பும் அவர்கள் விருப்பமும் சேர்ந்தே இந்த நிர்வாக அமைப்பை உருவாக்குகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 


இங்கே பிற சாதிகளைவிட ஜாத் சாதியினர் அதிகம் இருப்பதால் இதை சாதிய இயக்கம் என்று முத்திரை குத்தி கட்டம் கட்ட பார்க்கிறது தேச துரோக கும்பல்.

முக்கிய சட்டங்கள் 
கல்யாணங்களை எளிமையாக மேற்கொள்ள வேண்டும். ஆடம்பர செலவுகளை நிறுத்த வேண்டும்.
•பெண்சிசுக்கொலையை உடனடியாக நிறுத்த பிரச்சாரம் காப் பெண்கள் தலைமையில் அமைப்பு. பெண் சிசுக்கொலையை கொலைக்குற்றமாக கருதி தண்டனை.
•நிலத்தடி நீர் குறைந்ததால் அதிக நீர் தேவைப்படும் பயிர்களை விளைவிக்க தடை 
•சகோதர உறவு முறைக்குள் கல்யாணம் செய்ய தடை 
•பல தலைமுறை பகை, கொலையில் முடிய நான்கே மாதத்தில் பிரச்னை தீர்க்கப்பட்டு கொலையாளி தானே சட்டத்தின் முன் சரண்டராக செய்தமை 
•நோய்களையும், ஹார்மோன் கோளாறுகளையும் தூண்டி கலாசார சீர்கேட்டுக்கு தூண்டுவதால் பாஸ்ட் புட் உணவுகளுக்கு தடை
•பெண்களின் திருமண வயதை முறைப்படுத்துவது 
•கணக்கற்ற குடும்ப-சொத்து-தனிநபர் வழக்குகள் சமரசமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
•கிராம மக்கள் தங்கள் பாரம்பரியம், பண்பாட்டோடு ஒழுக்கமாக வாழ தேவையான சமூக பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.
•பல இடங்களில் பண்ணாட்டு நிறுவனங்களிடம் இருந்து விவசாயிகளையும் அவர்கள் பூமியையும் காத்துள்ளது
•பின்தங்கிய சமூகங்களுக்கு முறையான ஒதுக்கீடு பெற்று தந்துள்ளது.

முசாபர்நகர் கலவரம்
முசாபர்நகர கலவரம் நாடறிந்தது. இதன் மூல காரணம் முஸ்லிம் இளைஞர்கள் காப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பெண்ணை கிண்டலடித்துவிட்டார்கள். ஒரு பெண்ணுக்கு ஏற்ப்பட்ட பிரச்சனையை எவ்வளவு சீரியசாக, தீவிரமாக கருதி போராடியுள்ளார்கள் என்பது பாராட்ட வேண்டியது. நாற்பது பேர் பலி; நாடே திரும்பி பார்த்தது. இனி ஒருவன் அந்த கிராமத்து பெண்ணின் மீது கை வைக்க துணிவானா?? பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் இதை விட சிறந்த அமைப்பு வேறேது?? இதே தமிழ்நாட்டில் மேடைபோட்டு சாதி கலவரங்களை தூண்டும்படி சிலர் பேசியபோது ஆண்மையற்ற சட்டம் என்ன கிழித்தது?

https://www.youtube.com/watch?v=XjzZXHCWww8


காப் பஞ்சாயத்து வரலாறு
காப் பஞ்சாயத்துக்கள் பல ஆயிரம் வருட பாரம்பரியமுள்ளவை. மனித இனம் நாடோடி வாழ்க்கையில் இருந்து ஓரிடத்தில் நின்று வாழும் சமூக வாழ்க்கை முறைக்கு மாறிய நிலையில், பல்வேறு பகுதிகளிலும் சொந்த சமூகங்களுக்குள்ளும் வெவ்வேறு சமூகங்களுக்கிடையேயும் இணக்கமான சூழல் நிலவ அந்தந்த பகுதிகள், அங்கு நிலவும் கலாசாரம், சீதோஷ்ண நிலை, வாழ்க்கை நிலை போன்றவற்றின் அடிப்படையில் சமூக நிர்வாக அமைப்புக்களை உருவாக்கினர். வட மாநிலங்களில் அவ்வாறன நிர்வாக அமைப்புதான் காப்பஞ்சாயத்து. பஞ்சாயத் முறைக்கு வேதங்கள், மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற பண்டைய தர்ம-சமூக நிர்வாக நூல்களிலும் கூட குறிப்புக்கள் உள்ளது. காப் பஞ்சாயத்து போர்காலங்களின் இடையே தேச மன்னர் வலுவிழந்த காலங்களில் கிராம பாதுகாவலுக்கும், ஆநிரைகள் பெண்கள் காவலுக்கும் போர் வீரர்கள் போல பணிசெய்துள்ளனர். போர்க்காலங்களில் படைதிரட்ட காப் பஞ்சாயத்துக்கள் எளிமையான நெட்வொர்காக செயல்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி, இஸ்லாமிய படையெடுப்புக்களின் போது பேரும் சவாலாக காப் படை செயல்பட்டுள்ளது. தைமூருக்கு எதிரான போர், முகமது கோரியை எதிர்த்து தரோரி போர், விவசாயிகளை நோகடித்த வரிசுமையால் அலாவுதீன் கில்ஜியை எதிர்த்து போர், முல்தான் போரில் ஹுன்ஸ் எதிர்த்து, என காப் பஞ்சாயத்து நடத்திய போர்கள் கணக்கில் அடங்காது.

சில விமர்சனங்கள்
பெண்ணடிமைத்தனம், தன்னிச்சை அதிகாரம், காதல் எதிர்ப்பு, சாதியம், கவுரவ கொலை என்று சில விமர்சனங்களை வெளிநாட்டு எஜென்ட்களான தேச துரோக முற்போக்கு கம்யூனிச எழுத்தாளர்கள் தொடர்ந்து கூறி கறை பூச பார்க்கிறார்கள். 

என்னவோ யாரோ சிலர் மட்டும் பண பலத்தால் இந்த நிர்வாக முறையை நடத்துவது போன்ற பிம்பம் உருவாக்கபடுகிறது. உண்மையில் காப் பஞ்சாயத்து அமைப்புக்கள் தான் உண்மையான ஜனநாயக-குடியரசு முறையை செயல்படுத்துகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையும் அவன் கருத்தும் போது முடிவுகளில் ஆளுமை செலுத்துகிறது. பெண்கள் எந்த நேரத்திலும் காப் கிராமத்தில் வேலை செய்யவும், உளவவும் பாதுகாப்பான சுதந்திரமான சூழலை பாய்ச்சாரா (கோத்திரம்) என்னும் சகோதரத்துவ முறையால் இந்நிர்வாக அமைப்பு ஏற்படுத்தி தந்தது. இந்த கோத்திர முறை என்பது காப் கிராமங்களில் மட்டுமல்ல பாரதம் முழுக்கவே, ஏன் உலகம் முழுக்கவே உள்ள வழக்கம். அதாவது ஒரே தந்தை வழியில் வந்த இனக்குழு சகோதரர்களாக பாவிக்கப் படுவார்கள். நம்மூரில் பங்காளிகள், ஒரே கூட்டம் அல்லது ஒரே நாடு அல்லது ஒரே பிரிவு அல்லது ஒரே கரை அல்லது ஒரே கோயில் என்று பல்வேறு அடையாளங்களை கொண்டு அறிகிறார்கள். எங்குமே பங்காளிகளுக்குள் கல்யாணம் கிடையாது. சட்டமே சில உறவுகளுக்குள் கல்யாணம் கூடாது என்று சொல்கிறது, அதில் சகோதர-சகோதரி கல்யாணமும் ஒன்று. (சகோதர – சக+கோத்ர : ஒரே கோத்திரத்தில் உள்ள அனைவரும் சகோதரர்களே). இதைத்தான் காப் பஞ்சாயத்தும் கேட்கிறது. அதேபோல காதல் கலப்பு கல்யாணங்களையும் மக்கள் அனைவரின் கருத்துப்படி நிராகரித்தார்கள்-ஒதுக்கினார்கள். மாநில மக்கள் பெரும்பாலானோர் விரும்பாத ஒன்றை தலையில் திணிப்பதன் பேர் சர்வாதிகாரமா? ஜனநாயகமா? 

சட்டவிரோதம் என்று சில கிறுக்குகள் பேசுகின்றன. இந்த ஒரே-கோத்திர கல்யாணங்களை தடை செய்ய சட்ட அங்கீகாரம் கோரியும்தான் போராடினார்கள். கொலை செய்தோர், தண்டனைக்குரியோரை முறையாக சட்டத்தின் பிடியில் காப் பஞ்சாயத்து ஒப்படைக்கிறது. குடும்ப சொத்து தகராறுகளுக்கும் தீர்வுகளை சட்ட அங்கீகாரம் பெற்றுக்கொள்கிறது. அப்படியிருக்க சட்ட விரோதம் என்று சொல்பவனே கிறுக்கனாவான். மீறி தவறான கல்யாணம் செய்பவர்களை ஊரை விட்டு தள்ளி வைப்பதும், மிக அரிதாக சில நேரங்களில் கொலை செய்வதும் நடக்கிறது. கொலை செய்வதை  காப் அமைப்பு அங்கீகரிக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்களுக்காக காப் அமைப்பை தடை செய்ய வேண்டுமானால் முதலில் நம் சட்ட அமைப்பையே தடை செய்ய வேண்டும். மூன்று நன்கு மாநிலங்களை நிர்வாகம் செய்யும் காப் அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் வெறும் விரல் எண்ணிக்கை என்றால் நாட்டை கட்டுப்படுத்தும் நம் சட்டத்துறையின் தவறுகள் லட்சக்கணக்கில் உள்ளனவே!

இதுபோன்ற கொலை சம்பவங்கள் காப் கிராமத்தில் மட்டுமல்ல இந்தியா முழுதுமே நடக்கின்றது. முஸ்லிம் பெண்களை மதம் மாறாமல் மணப்பவர்கள் மீது தாக்குதல் இருந்துகொண்டுதான் உள்ளது. முஸ்லிம் மதத்தில் இறுதி வேறு மதம் மாறினால் கொலை செய்வதும் நடக்கிரகுடு அனால் இதையெல்லாம் கேள்வி கேட்காமல் காப் பஞ்சாயத்தை மட்டும் குறிவைப்பது அவர்கள் இந்திய-ஹிந்து பாரம்பரியத்தை பின்பற்றுவதும், கம்யூனிச கொள்கையை நிராகரிப்பதுமே காரணமாகும்.

உலகமயமாக்கல் கொள்கையால் மீடியாக்களின் சர்வாதிகார போக்கால் நாட்டில் மகளின் மனதை வக்கிரமான சூழலுக்கு தள்ளியது காப்களின் குற்றமல்ல. சமூக சூழலை கெடுத்தது அரசாங்கத்தின் கொள்கை குற்றம். பாதுகாப்பான சமூக சூழலில் பெண்களுக்கான சுதந்திரம் உரிமைகளை உறுதி செய்வதில் இந்திய கிராமங்களே முன்னோடி என்பதை சரித்திரம் படித்தவர்கள் அறிவார்கள். சுதந்திரத்துக்கு பின்னரே பெண் சிசு கொலை, கற்பழிப்பு குற்றங்கள், வன்கொடுமை போன்ற ஏரளாமான குற்றங்கள் பெருகின என்பதை கவனத்தில் கொள்ளவும். 

இதுபோன்ற தவறான சமூக சூழலில் இருந்து பெண்களைக் காக்க கிராம மக்கள் பெண்களின் திருமண வயதை குறைக்க கேட்டது எவ்வாறு தவறாகும்? எல்லா மக்களுக்கும், சமூகத்தவருக்கும் ஒரே சட்டம் எப்படி பொருந்தும்? இதே முஸ்லிம் மக்களுக்கு ஷரியத் திருமண சட்டம். அவர்கள் நான்கு கலியாணம் செய்யலாம். 16 வயதில் கல்யாணம் செய்வதும் செல்லும் என்று டெல்லி ஹைகோர்ட் அங்கீகரித்துள்ளது. இஸ்லாம் கிறிஸ்தவர்களுக்கு தனி சட்டம். இதென்ன பாரபட்சம்?

இதே கம்யூனிச மாபியா நியமகிரியில் பழங்குடி மக்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற தாது நிறுவனத்தை எதிர்த்து அவர்கள் சாதி பஞ்சாயத்தை (பள்ளி சபா) கூட்டி தீர்மானம் போட்டு தடுத்தார்கள். ஆனால் இந்த முற்போக்கு கம்யூனிச மாபியா இதை மட்டும் சாதியமாகவோ-கா பஞ்சாயத்து என்றோ விமர்சிக்கவில்லை. நக்ஸல் பின்புலமே காரணம்.

உத்தரபிரதேசில் குலாபி கேங் எனப்படும் பெண்கள் அமைப்பு தடி எடுத்துக்கொண்டு மனைவிகளை கொடுமைப்படுத்தும் கணவர்களை அடித்து கட்ட பஞ்சாயத்து செய்கிறது; சொத்து-கல்யாணம் போன்ற விசயங்களிலும் தலையிடுகிறது. இவர்களையும் விமர்சிக்கவில்லை. ஏனெனில் இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதி பெண்கள். இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் சாதி சார்ந்து செயல்பட்டால்-பஞ்சாயத்து செய்தால் தவறில்லை. அதை டாக்குமெண்டரி, கதைகள், கட்டுரைகள் எழுதித்தள்ளி ஹீரோவாக்கினர் இந்த முற்போக்கு மாபியா. தவறில்லை. இதுவே வேறு சாதிகள் தங்கள் பாரம்பரியங்களை பின்பற்றினால் தவறு. இது சட்ட பிரச்சனையில்லை; ஒரு சமூகத்தை அவர்களின் பாரம்பரியத்தில் இருந்து உடைத்து கரைக்க நினைக்கும் சூது என்பதை எளிமையாக அறியலாம்.


காந்தியும்கூட கிராமங்கள் சுயராஜ்யம் அடையவேண்டும் என்றே போராடினார். கிராம சுயாட்சி குறித்து பல புத்தகங்களையும் எழுதினார். ஆனால் அம்பேத்கர் சட்ட வரைவை தாக்கல் செய்தபோது சட்ட வடிவமைப்பில் கிராமங்களை தேசத்தின் மையக்கருவாக கருதாமல், தனிமனிதர்களை மையமாக வைத்து கிராமங்களையும் குடும்பங்களையும் ஒதுக்கினார். கிராமங்களே பாரதத்தின் உயிர்நாடி என்பதை மறந்து பிர்போக்கின் அடையாளம் என்று பட்டம் கட்டினார். அதற்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் அம்பேத்கரின் முட்டாள்தனத்தை துகிலுரித்தனர். சூழ்நிலை அழுத்தம் தாங்காமல் கடைசியாக அர்டிகள் 40 உள்ளே சேர்க்கப்பட்டது. 


என்னதான் கிராம சுயாட்சியை அரசியல் சட்டம் அங்கீகரித்தாலும் அம்பேத்கரின் அரைவேக்காட்டுத்தனத்தால் மையப்புள்ளி வேறெங்கோ விழுந்ததை எப்படி ஈடு செய்வது? இந்த தனிமனிததத்துவம் மேலோங்கியதன் விளைவாக அமெரிக்கா சந்தித்த சீரழிவு என்ன என்பதை கீழுள்ள வீடியோவில்  காணுங்கள்.

http://www.youtube.com/watch?v=IsV9tgXRbCI

ஆக அம்பேத்கர் தனது சொந்த வாழ்வின் கோபதாபங்களை தான் தொகுத்த சட்டங்களில் பிரதிபலித்து இந்த தேசத்துக்கே பெரிய தீங்கிழைத்து கிராம சமூகங்களுக்கு துரோகம் செய்துள்ளார்.கிராமங்களின் வீழ்ச்சிக்கும், தேசத்தின் பொருளாதார சுரண்டலுக்கும், சமூக ஒழுக்கமின்மைக்கும்- இந்த தனிமனித உரிமை கலாசார ஊக்குவிப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

நம் ஊரில் இந்த பஞ்சாயத்து முறைகள் சூழ்ச்சியால் என்றோ அழிக்கப்பட்டுவிட்டன. நாம் இன்று பெரும்பாலும் பார்ப்பது அரசியல்வாதிகளின் அறிவற்ற ஓட்டுவங்கி பஞ்சாயத்துக்கள் தான் (சில கிராமங்கள் மட்டுமே இன்றும் பாரம்பரிய பஞ்சாயத்து அமைப்புக்களை பின்பற்றி நன்மையடைகின்றன). ஒவ்வொரு கிராமத்துக்கும் ஊர் பஞ்சாயத்து உண்டு. கொங்கதேசத்தை பொறுத்தவரை ஊருக்கு கொத்துக்காரர் எனப்படும் ஊர்கவுண்டர், மணியக்காரர், கர்ணம் என்றும் இருந்தனர். கிராமங்கள் எல்லாம் நாட்டுக்கு கட்டுப்பட்டவை. நாட்டார், நாட்டு சபைகளை நடத்தினர். அவை மட்டுமின்றி சாதிகளுக்கென்று பிரதிநிதிகளாக சாதி பட்டக்காரர்களும் உண்டு. நம் கொங்கதேசத்தில் நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். பல பாரம்பரிய பட்டக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு துணை போனவர்களும், ஒழுக்கத்தை மீறியவர்களும், தர்மத்தை கைவிட்டவர்களும், திராவிட இயக்கங்களில் சேர்ந்தவர்களும் இனி பதவிக்குரிய அருகதையை இழந்துவிட்டார்கள். அவர்களை நீக்கிவிட்டு புதிய பட்டக்காரர்களையும், ஊர்க்கவுண்டர்களையும் நல்லோர்களையும், பெரியவர்களையும் கொண்டு தேர்வு செய்து நம் பஞ்சாயத்து முறைகளை புத்துயிரூட்ட வேண்டும்.


கிராம முன்சீப் முறை (VM-Village munsiff) இருந்தவரை இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் சாராய கடைகள் வழங்கப்பட்டு இந்த முன்சீப் அதிகாரமும் கிராம சுயாட்சியும் பிடுங்கப்பட்டது. அதற்கு மாற்றாக சர்கார் நியமிக்கும் கிராம நிர்வாக அலுவலர் (VAO-Village adminstrative Officer) முறை திணிக்கப்பட்டது. இதனால் கிராம அளவில் மக்களின் உணர்வு கலாசாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்வுகள் வழங்கும் நிர்வாக முறை அழிந்து எதுவாக இருந்தாலும் ஆமை வேகமும், கோனை பார்வையும், மக்களை அறியாத  சட்டத்திடம் சென்று நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. நம் கலாசார சீரழிவுக்கும் நம்முடைய இன்றைய பிரச்சனைகளுக்கும் இந்த நிர்வாக முறை சீர்கேடு மிக முக்கிய காரணம் ஆகும்.


உளுத்துப்போன ஓட்டு வங்கி அரசியல், கறை படிந்த சட்டத்துறை, இயற்கை சார்ந்த-கிராமம் சார்ந்த பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறைக்கு எதிரான பொத்தல் விழுந்த சட்டங்கள், பாரபட்சமான நீதியமைப்புக்கள் அதுவும் சாமானிய மக்களுக்கு நியாயம் இல்லாதவாறு காலம் தாழ்த்தும் நெறிமுறைகள், மக்களின் உணர்வுகளை மதிக்காத-உணராத முறை, இமயம் முதல் குமரி வரை அனைவருக்கும் ஒரே வாழ்க்கைமுறை கலாசாரம் இல்லாதபோது அனைவருக்கும் ஒரே மாதிரி சட்டம் என்ற அடக்குமுறை (முஸ்லிம் கிறித்தவர்களுக்கு மட்டும் தனி சட்டம் என்பது வேறு கதை!)-போன்ற கொடுமைகளால் நாம் மீண்டும் நம் பாரம்பரிய நிர்வாக முறையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இன்றளவும் ஊர் கவுண்டர் குடும்பங்களை கிராமங்களில் நம்மால் அறிய முடியும். அதேபோல நாட்டின் பட்டக்காரர்களையும் அறிய முடியும். ஒவ்வொரு கிராமத்துக்கும், சாதி பிரதிநிதிகள், அருமைக்காரர்கள், ஊர் கவுண்டர், நியாயகாரர்கள் போன்றோரை கொண்டு பஞ்சாயத்து உருவாக வேண்டும். ஒருவர் எந்த கட்சியில் இருந்தாலும் இது அரசியல் சாரா அமைப்பு; கிராம மேன்மைக்கும் வருங்கால சந்ததிக்குமானது என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இப்படி ஒரு நிர்வாக முறையை கிராமம் நாடு என்று மீண்டும் உருவாக்குவதே நமது சமூகம் தழைய முக்கிய காரணியாக இருக்கும்.

More Good Articles to read on:
No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates