Trending

Sunday, 22 June 2014

யார் இந்த பெருமாள் முருகன்?

பெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் கூட்டப்பள்ளி பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அம்மா குடும்ப விவசாயப்பணி; அப்பா சினிமா தியேட்டரில் கேண்டீன்-சைக்கிள் ஸ்டேண்ட் குத்தகைதாரர். தந்தையின் குடிப்பழக்கத்தால்-தற்கொலையால் கடன் சுமை ஒருபுறம், உறவினர் புறக்கணிப்பு மறுபுறம் என்ற நிலையிலும் தனது உழைப்பால் பெ.முருகனையும் அவர் அண்ணனையும் வளர்த்தார் அவர் அம்மா. அவர் அண்ணனும் பின்னாளில் அதே குடி பழக்கம், கடன், தற்கொலை என்று முடிந்தார். சிறுவயதில் இருந்தே சமூகம்-சொந்த பந்தங்களின் அரவணைப்பு இல்லை. தனித்த சூழல். போதாக்குறைக்கு பின்னாளில் பட்டியல் சாதி பெண்ணை காதல் கல்யாணம் செய்து கொண்டார். மீண்டும் சமூக புறக்கணிப்பு. நொந்து போய் இறந்து போனார் அவர் தாய். சிறுவயது முதலே இலக்கிய வாசிப்பு. இலக்கிய உலகை ஆக்கிரமித்து வைத்திருந்த கம்யூனிச-திராவிட சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சமூகம், பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதன் மூலம் மக்களை அந்நிய வாழ்க்கைமுறை, சிந்தனை போன்றவற்றிற்கு அடிமையாக்கி தேசத்தை சுரண்ட  பல அல்லக்கைகளையும், ஆயுதங்களையும் எழுத்துலகில் வைத்துள்ளது; அதில் ஒன்றுதான் பெருமாள் முருகன். இந்த கம்யூனிச கும்பல் குறித்து விலாவாரியான கட்டுரை http://naradhavijayam.blogspot.in/2014/04/blog-post_16.html . இந்த கம்யூனிச மாபியா கொங்குப்பகுதியில் இன்னும் பல சில்லறை எழுத்தாளர்களை சமூகத்தை சீரழிக்க உருவாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  
உடையும் பெ.முருகனின் புரட்டுகள்:

பெருமாள் முருகன் தனது நாவல்கள் மூலமும், கூட்டங்கள் மூலமும் பல பொய்களை பரப்பி வருகிறார். அவை என்னென்ன, அதன் பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பதையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. ஒருவனுக்கு ஒருத்தி – கற்பு போன்றவை சங்க காலம் முதலே கிடையாது; எட்கர் தர்ஸ்டன் எழுதிய புத்தகத்தில் பல ஜாதிகளிலும் மருமகளோடு மாமனார் உறவு வைத்ததை ஆதாரமாக சொல்லியுள்ளார். உண்மையில், வெள்ளையர்கள் தங்களது பல்வேறு புத்தகங்கள் மூலம் ஒவ்வொரு சாதியையும் ஏதாவது ஒரு வகையில் கீழ்மைப்படுத்தி எழுதியுள்ளனர். அந்த கீழ்மை படுத்துவதற்கான காரணங்கள் பெரும்பாலும் உண்மையற்றவையாகவே உள்ளன. பெற்ற தந்தையை அண்ணன் என்றழைக்கும் வழக்கம் கொங்குப்பகுதியில் பழங்காலம் தொட்டே உள்ளது. பெண் தெய்வங்களுக்கு ‘அம்மா-அம்மன்-ஆத்தா’ என்ற விகுதிச் சொற்கள் வருவது போல ஆண் தெய்வங்களுக்கு ‘அண்ணன்’ என்ற விகுதி அப்பன்-அய்யன் என்பதை குறிக்க அக்காலம்தொட்டே புழங்கி வந்துள்ளது (எ.கா.:கருப்பண்ணன்-நல்லியண்ணன்-பொங்கியண்ணன்-ராக்கியண்ணன்). இந்த வழக்கம் தமிழகத்தின் எல்லா பகுதியிலும் இருப்பதை அறியலாம். கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் அண்ணா விகுதி பெயர்கள் அதிகம் (பசவண்ணா, ராமண்ணா, வீரண்ணா). அந்த மரபு ஒரு கட்டத்தில் எல்லா பகுதியிலும் மறைந்தாலும் கொங்கு பகுதி உட்பட சில ஜாதிகளில் வழக்கத்தில் இருந்து வந்தது. கொங்குப்பகுதியில் இன்றளவும் இவ்வழக்கம் உள்ளது. கள ஆய்வுக்கு வந்த வெள்ளையர் அப்பாவை அண்ணன் என்று குறிப்பிடுவதை கவனித்து அதை ஜாதியை இழிவுபடுத்தப் பயன்படுத்திக்கொண்டான். பெ.முருகன் இந்த பாட்டையே எடுத்து பாடிக்கொண்டு ஜாதிகளை தாழ்வுபடுத்தி பேசியும் எழுதியும் வருகிறார்.

கொங்குஜாதிகள் மாமனார் முன்னால் மருமகனோ-மருமகளோ உட்காரவும் மாட்டார்கள்; அதுபோல மருமகன் முன் மாமியார் அமர மாட்டார். அந்த அளவு குடும்ப மரியாதை காத்த சமூகம். அதோடு, கொங்கதேசத்தில் பூர்வகுடியாய் இருந்த எல்லா ஜாதிகளுமே வெள்ளைப் புடவை கட்டும் வழக்கமுள்ளவர்கள். கணவன் இறந்தால் மீண்டும் கல்யாணம் செய்யும் வழம்மில்லாதவர்கள். அதை இன்றளவும் பின்பற்றும் உத்தமியர் வாழும் மண் கொங்கு மண்ணாகும். அது மட்டுமல்ல, வீரமாத்தி என்றொரு வழக்கமுண்டு. கணவன் இறந்தவுடன்  அவருடன் சேர்ந்து தீக்குளியில் இறங்கி உயிர்விடும் கற்புநெறியில் உயர்ந்த மங்கையர்க்கு கோவிலெடுத்து  வழிபடுவர். இதுவும் கொங்கின் எல்லா பூர்வகுடி சாதியினரும் பின்பற்றிய வழக்கமாகும். பாரத தேசத்தில் பல்வேறு பகுதியில் வீரமாத்தி என்னும் தீக்குளி இறங்கும் ‘சதி’ வழக்கம் கட்டாயமாகும். ஆனால் கொங்கில் பெண்களுக்கு அவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே தீக்குளி இறங்கலாம். அது அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். அப்படி இருந்தும் கற்பு நெறியில் உயர்ந்த மாதர் தங்கள் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி பிடிவாதமாக தீக்குளி இறங்கிய சம்பவங்கள் ஏராளம். பூந்துறை நாட்டில் மட்டுமே 350 வீரமாத்தி கோயில்கள் உண்டு. பெ.முருகனின் வீட்டுக்கு அருகிலேயே வேலாத்தா கோயில் அப்படிப்பட்ட கோயிலேயாகும். பாவம், அவருக்கு இதுபோன்ற நல்ல விஷயங்கள் கண்ணில் படவில்லையோ இல்லை கண்ணை மூடிக்கொண்டாரோ தெரியவில்லை.

அப்பாவை அண்ணன் என்று அழைப்பது போல, அண்ணனை அப்பன் என்று அழைக்கும் வழக்கமும் கொங்குப்பகுதியில் உண்டு. பெ.முருகனுக்கும் ஒரு அண்ணன் உண்டு. இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறார்..?

எட்கர் தர்ஸ்டன் உடன் தென்னிந்திய குடிகள் பற்றி ஆய்வு செய்த ராகவையங்கார் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட தவறான கருத்துக்கள் குறித்து பல காலம் வருத்தப்பட்டு பேசியுள்ளார் என்பதை பெ.முருகன் வசதியாக மறந்துவிட்டார் போலும்.

இவ்வளவு ஆதாரங்களும், வரலாறும் இருக்க கொங்கதேசம் உட்பட தமிழகத்தில் எங்குமே கற்பு இல்லை ஒருவனுக்கு ஒருத்தி இல்லை என்பது கம்யூனிஸ்ட்கள் இந்திய சமூகங்கள் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியை மட்டுமே பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

2. பெண்கள் குடிப்பார்கள்
சாராயப்பழக்கம் என்பதை சமூக வரலாறுகள், சீர் சாங்கியம் என்று எதிலும் பார்க்க இயலாது. கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு குடி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். அசைவ உணவு மற்றும் சாராய போதை என்பன சமீபகால மாற்றமே ஒழிய பாரம்பரிய வழக்கமன்று. யாராவது சாராயம் குடித்தால் அவர்களுக்கு ஓலை எழுதி ஜாதி விலக்கம் செய்துவிடுவது கொங்கவெள்ளாள கவுண்டர்கள் மரபு. ஆண்களுக்கே இப்படியென்றால் பெண்களுக்கு? கிறிஸ்தவ மிஷனரி மற்றும் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட தாது வருஷ பஞ்சகாலத்தில் ஏற்ப்பட்ட சீரழிவுகளில் இவையும் ஒன்று. காட்ட வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான் என்பதும் தற்காலத்தில் வந்த பழமொழியே. காட்டை விற்கும் வழக்கம் அன்றைய நாளில் கிடையாது. தாமஸ் மன்றோ என்ற வெள்ளையன் வந்த பிறகே ரயத்வாரி முறைக்கு மாறிய பின்னரே நிலம் என்பது வணிகப்பொருளாக மாறியது; அதற்கு முன்னர்  நிலம் என்பது சமூக உரிமையின் அடையாளம். அதனாலேயே காணியுரிமை என்று சொன்னார்கள். விதிவிலக்குகள் விதிகள் செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவே சைவ முறைதான்:http://konguwritings.blogspot.in/2013/12/blog-post.html

3. கொங்கு வெள்ளாளர்கள் காட்டில் கிடக்கும் பிற்போக்குவாதிகள்:
கொங்கு வெள்ளாளர்கள் மற்றும் கொங்கு குடிகளின் கல்வியறிவு என்ன, அவர்களின் உழைப்பு, செல்வச்செழிப்பு மற்றும் எழிய வாழ்க்கைமுறை குறித்து இந்த கட்டுரையில் விளக்கமாகவே கூறியுள்ளோம். பெ.முருகன் நேரமிருந்தால் கற்றுக்கொள்ளட்டும்.
கொங்கு மக்களின் கல்வியறிவு: http://konguwritings.blogspot.in/2013/06/blog-post_20.html
கொங்கு மக்களின் செலவச்செழிப்பு: http://konguwritings.blogspot.in/2014/04/blog-post_14.html

4. திருசெங்கோட்டில் இருப்பது அர்த்தநாரீஸ்வரர் அல்ல-அது கண்ணகி
கண்ணகி தனது இடது முலையை திருகி எரிந்து மதுரையை எரித்தார். ஆனால் திருச்செங்கோட்டு அர்த்தநாரீஸ்வரர் திருமேனியில் உமைப்பாகம் இடப்புறம்;ஐயனின் வலப்புறம் மட்டுமே மார்பகம் இன்றி இருக்கும். எனவே அர்த்தநாரீஸ்வரர் விக்ரகம் உறுதியாக கண்ணகி சிலையன்று என்று கூறலாம். இதை பல்வேறு தமிழறிஞர்களும் விவாதித்து ஏற்றுக்கொண்ட உணமி; ஆனால் கம்யூனிசவியாதிகளுக்கு இவை நிராகரிக்கக்கூடிய உண்மையாகவே உள்ளது வியப்பு. ஏனெனில், கம்யூனிஸ்ட்களுக்கு தேவை சாக்கு, உண்மையல்ல.

5. கோயில் திருவிழாக்களில் பிடித்த ஆணோடு பெண் புணரும் கற்பனை
திருச்செங்கோடு உட்பட தமிழகத்தின் பல்வேறு கோயில் திருவிழாக்களில் பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆணோடு உடலுறவு கொள்ளும் நிகழ்ச்சி பின்பற்றப்பட்டதாக  கூறியுள்ளார். முதலில் திருசெங்கோட்டை பார்ப்போம். திருச்செங்கோட்டுக்கு மட்டும் சிற்றிலக்கியங்கள் அறுபதுக்கும் மேல் உண்டு. அதை பெ.முருகனும் நன்கு அறிவார். எந்த புத்தகத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்த சிறு குறிப்பு கூட கிடையாது. திருச்செங்கோடு தவிர இந்த வட்டாரத்தில் வாழ்ந்த பல்வேறு அரசர்கள் மீது பாடப்பட்ட சிற்றிலக்கியங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு, அவையன்றி கல்வெட்டுக்கள், செப்பேடுகள், என்று எதிலுமே குறிப்புகள் இல்லை. தற்போதும் உயிரோடு இருக்கும் என்பது தொண்ணூறு வயது பெரியவர்கள் அறுபது பேரிடம் விசாரித்தும் ஒருவர் கூட இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டதே இல்லை என்று பதிலளித்துள்ளார்கள். பல்வேறு வெள்ளையர்கள், வெளிநாட்டு பயணியர்கள் எழுதிய பயணக்குறிப்பு என்று எதிலும் இதற்கு ஆதாரமில்லை. இப்படி ஒரு குற்றச்சாட்டு ஹிந்து மதத்தையும், பாரத கலாசாரம் பாரம்பரியத்தையும் தாழ்வுபடுத்தி சீரழிக்கும் கம்யூனிச சூதுகளில் ஒன்றே.

6.கல்வி மறுப்பு; ஒடுக்குமுறை; வன்கொடுமை; கூலிப்பெண்கள் கற்பழிப்பு

காலம்காலமாக நற்குடிகளை குற்றவாளியாக்க கம்யூனிச கயவர்கள் பயன்படுத்தும் குற்றச்சாட்டுக்கள் தான் இவை. இந்த பித்தலாட்டங்களை உடைக்கும் உண்மைகள் ஆதாரங்களோடு இந்த பதிவில் ஏற்கனவே சொல்லியுள்ளோம்.
கட்டுரை லிங்க்:http://konguwritings.blogspot.in/2013/07/blog-post_17.html

மாதொருபாகன் நாவல் பற்றி கருத்து சொல்லத் தகுதியுடைய  வரலாற்று ஆய்வாளர்கள், கோயில் முன்னாள் அறங்காவலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறும் வீடியோ ஆவணப்பதிவு இங்கே.
http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html

திருச்செங்கோடு பூக்குழி மாதொருபாகன் கூளமாதாரி கங்கணம் பீக்கதைகள் நிழல்முற்றம் 

மேலும் படிக்க,
மாதொருபாகன் முக்கியஸ்தர்கள் கருத்து-மீடியாக்கள் மறைத்தவை

மாதொருபாகன் சர்ச்சை
எட்கர் தர்ஸ்டன் சொல்வதெல்லாம் நிஜமா?

9 comments:

 1. அவசியம் படிக்க வேண்டிய பதிலுரை... இதை வெகு தளங்களுக்கு கொண்டுசெல்லவேண்டியது நம் கடமை.

  ReplyDelete
  Replies
  1. சத்தாபரணம் தெரியுமா வடசென்னிமலையில் விசாரியுங்கள்

   Delete
 2. excellent research article.. thank you.

  ReplyDelete
 3. Very true.. Shall propagate this in our Kongu circle..

  ReplyDelete
 4. திரு பெ முருகனின் கூற்று தவறானது என்பதை நிரூபிக்க திருச்செங்கோட்டில் வாழும் முதியவர்களைப் பேட்டி கண்டு அவைகளை ஆவணப் படுத்தி youtube போன்ற தளங்களில் தரவேற்றினால் மக்கள் தெளிவு பெறுவர்

  ReplyDelete
 5. க.தண்டபாணி.8 March 2015 at 04:23

  இந்த தகவல்களை அனைவரும் அறியுமாறு பரப்ப வேண்டும்...

  ReplyDelete
 6. திருச்செங்கோடு மற்றும் கொங்கு வட்டார முக்கியஸ்தர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துக்கள்.. வீடியோ பதிவோடு..

  http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates