Trending

Tuesday, 24 June 2014

இளம் விஞ்ஞானியின் அனுபவ வார்த்தைகள்

காதல் கலப்பு திருமணம் குறித்து, மாணவராக இருந்து சமீபத்தில் விஞ்ஞானியாக பணியாற்றிவரும் இளைஞர் எழுதிய அனுபவ வரிகள். பெற்றோர் இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டியது.
----------------------------------------------------------------------------------

இங்கே நான் ஆண் பெண் என வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இருபாலருக்கும் பொதுவாகவே இருக்கட்டும்.

சற்று நீளமான பதிவுதான்.. பொறுமை இருப்பவர்கள் சகித்துக் கொண்டு படியுங்கள்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புவரை இருபாலர் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். 11ம் வகுப்பில் உயிரியல் ஆசிரியர் காதல் என்பது ஹார்மோன்களின் விளையாட்டு என்றார். 11 மற்றும் 12ம் வகுப்புகளில் உயிரியல் பாடத்திட்டம் இங்குள்ள அனைவருக்கும் தெரியும். மனித அந்தரங்கங்கள் பற்றிய பாடங்களையும் ஆசிரியர் விவரித்தே சொல்லிக் கொடுத்தார். கல்லூரி, தோழிகள், தோழர்கள், அந்தரங்க உரையாடல்கள் பட்டப் படிப்பு, வேலை என்று பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.
காதல் பற்றிய என் புரிதல் இதுவாகவே இருக்கிறது
.

16 வயதில் இருந்து 25 வயது வரை ஆண் பெண் இருபாலருக்கு இடையில் ஏற்படுவது ஹார்மோன்களால் தூண்டப்படும் ஒருவித உடல் சார்ந்த அல்லது உள்ளம் சார்ந்த இனக்கவர்ச்சியே. இந்த வயதில் தெய்வீகக் காதல், உண்மைக் காதல் என்பதெல்லாம் பருவ மயக்கத்தின் அபத்தமான அலங்காரங்கள்.

இந்த வயதில் இருபாலருக்கும் டெஸ்டோடீரானும் ஈஸ்ட்ரோஜெனும் உச்சமாக வேலை செய்யும். உடல் உறுப்புகளின் வளர்ச்சியும் உச்சமாக இருக்கும். இந்தக் கால கட்டத்தில் ஆண் பெண் ஈர்ப்பு இல்லையென்றால் ஹார்மோனில் எதோ கோளாறு என்றே அர்த்தம்.
ஆனால் இதைத் தான் காதல் என்கிறது இன்றைய இளைய தலைமுறை. படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தன் தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள பெற்றோரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த ஆண் தான் என் வாழ்க்கைக்கு துணையானவன் இல்லை இந்த பெண்தான் என் வாழ்வின் ஆதாரம் என்று சொல்லி அதற்கு காதல் என்று பெயர் வைத்து அதற்கு கண் இல்லை, காது இல்லை, சாதி இல்லை, மதம் இல்லை, அந்தஸ்து இல்லை, நாங்கள் இருவரும் உயிருக்கு உயிரானவர்கள் என்பது பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

வாழ்க்கை குறித்த புரிதலை தொடங்கும் முன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க காதல் என்ற வழியை பின்பற்றுகிறது இந்த சமூகம்.

இன்றைய தரங்கெட்ட திரைப்படங்களும் இதைத் தான் திரையில் காட்டுகின்றன. காதலித்து ஏமாற்றுவது எப்படி என்பதை திரையில் சொல்லியும் சொல்லிக் கொடுக்கின்றன. பெண்கள் பெரும்பாலும் தவறாகவே திரையில் சித்தரிக்கப்படுகிறார்கள்.

சிறந்த உதாரணமாக “மான் கராத்தே” என்ற படத்தில் வரும் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள். முந்தைய காலங்களில் திரைப் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தன. அவை இலைமறை காயாக இருந்தன மேலும் அவற்றில் பெண்கள் கேவலமாக சித்தரிக்கப்பட்டதில்லை.

இப்போது வந்துள்ள “மஞ்சப்பை” படத்தில் கூட ஒரு பெண்ணே சொல்கிறார். ஆண்கள் எல்லாம் செல்போன் மாதிரி. மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அதற்கு இன்னொரு பெண் “ஆமாடி, இப்பெல்லாம் டச் ஸ்க்ரீன் வந்து விட்டது என்கிறார். எவ்வளவு மோசம். சகிக்கவில்லை.

மொபைல் போன், லேப்டாப் போன்றவை எல்லாம் இப்போது இளைய தலைமுறைக்கு அன்றாட உபயோகப் பொருட்களில் ஒன்றாகப் போய்விட்ட இந்தக் காலத்தில் தொலைத்தொடர்பு மிக எளிதான ஒன்றாகி விட்டது. இது தவறுகளுக்கு அதிக தூண்டுதலையே தருகிறது.
இந்த காதல் விளையாட்டிற்கு கீழ்க்கண்டவற்றை காரணங்களாக கருதலாம்.

1. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அதிகரித்துவிட்ட இடைவெளி. ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகள் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிலிருந்து கல்லூரி படிப்பு முடியும்வரை இது தொடர்ந்து இங்கே இவர்கள் தெரிந்து கொள்வதே வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். இவர்கள் கற்பனை உலகம் எதார்த்தத்தில் இருந்து எந்த அளவிற்கு மாறுபட்டு நிற்கிறது என்பதற்கு சென்ற வார நீயா நானா நிகழ்ச்சி பார்த்தவர்கள் அறியலாம்.

2. மீடியா நிகழ்ச்சிகள். சில நிகழ்ச்சிகளில் காட்டப்படுவதும் பேசப் படுவதும் மட்டுமே உண்மை என்று நம்புகிறார்கள். பெரும்பாலும் ரேட்டிங் பெற அவர்கள் பேச வைக்கப் படுகிறார்கள் என்பது இவர்களுக்கு புரிவதில்லை. முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் கலப்பு காதல் திருமணங்களை குறிவைத்தே விஜய் டிவி நிகழ்ச்சி நடத்துகிறது. இதைத்தான் இன்று நாம் அனைவரும் விரும்புகிறோம். சுவாரஸ்யம் இல்லாத நிகழ்சிகளை நாம் பார்ப்பதில்லை.

3. பெற்றோரின் தவறுகளாக சிலவற்றை நான் பார்க்கிறேன். குறிப்பாக நம் ஜாதியில் இது மிக அதிகம். மதிப்பெண் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்பதுபோல் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். முதல் மார்க். டாக்டர், இஞ்சினியர் தவிர மற்ற படிப்புகள் இவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. நான் விவசாயக் கல்லூரியில் சேர்ந்தபோது என் அப்பாவிடம் ஒருவர் என்னை பழாக்கிவிட்டதாக என் முன்பே கூறினார். அந்த வலி இன்னமும் இருக்கிறது. இன்று இன்ஜினியரிங் படித்த அவரது மகனுக்கு வேலை வாய்ப்பு குறித்து அவரது பார்வையில் பத்து வருடங்களுக்கு முன்பே பாழாய் போய்விட்ட என்னிடம் போனில் கேட்கிறார்.

4. பெற்றோர்கள் பெரும்பாலும் குலம் பற்றியோ, நம் கோவில்கள் பற்றியோ, நம் திருமண முறையோ ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதே இல்லை. காதல், கலப்பு திருமணம் போன்றவற்றிற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

5. பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து அறியாமை. என்னவோ யாரும் பெறாத பிள்ளையை இவர்கள் பெற்றுவிட்டதாக நினைத்து அளவுக்கு அதிகமான சுதந்திரமும் நடைமுறையும் இன்றி இஷ்டம் போல் வளர விடுகிறார்கள். என் பிள்ளை எந்தக் கஷ்டமும் படக்கூடாது அதற்காகவே நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்கிறார்கள். சரிதான். ஆனால் ஒரு கஷ்டம் வரும்போது அதை சமாளிக்க கற்றுக் கொடுப்பதில்லை.
பிள்ளைகள் தொடர்ந்து பெற்றோரின் நிழலிலேயே இருக்க முடியாது. பெற்றோரின் நிழலில் வளர்ந்து விட்ட இந்தப் பிள்ளைகள் ஒரு சாதாரண பிரச்சினையை எதிர் கொண்டு சமாளிக்கவோ தீர்க்கவோ மனதைரியம் இல்லாமல் பயம் கொள்கிறார்கள். பெற்றோர் பிள்ளைகளிடையே இடைவெளி அதிகரிக்க இதுவும் முக்கிய காரணம். இந்த இடைவெளி அவர்கள் வயதை உடையவர்களிடத்தில் நெருக்கத்தை அதிகரித்து காதல், காமம் போன்ற சிந்தனைகளுக்கு வழிவகுக்கிறது.

6. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் நெருங்கிய நட்பு வட்டமமாக நம் ஜாதியினர் மட்டுமே இருந்தனர். அதை நானாகவே உருவாக்கினேன். நீங்கள் நம்ப மறுக்கலாம். தேவையன்றி மற்ற பெண்களுடன் பழகுவதையே நாளடைவில் குறைத்துக் கொண்டேன். மற்ற பெண்கள் இது பற்றி வசை பேசினாலும் நான் கண்டுகொள்ளவில்லை ஏனெனில் நான் இழக்கப் போவது எதுவுமில்லை எனத் தெரியும். இன்று வரை நட்புடன் உள்ள என் கல்லூரி தோழிகள் சிலரும் நாம் ஜாதிப் பெண்களே. இது எப்படி நடைமுறையில் சாத்தியம் என்று கேட்பவர்களுக்கு என் பதில் : உங்கள் நட்பு வட்டத்தையே உங்களால் வரையறுத்துக் கொள்ள முடியாமல் போனால் உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் எப்படி தீர்மானிக்கப்போகிறீர்கள்?

7. நல்லது கெட்டது எவை என சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் கடமை. இதை முழுமையாக இப்போது பெற்றோர்கள் செய்கிறார்களா என்பது சந்தேகமே.

8. வரட்டுக் கௌரவம். நம் ஜாதியில் மட்டுமே சொந்த ஜாதிக்காரனை பணமுள்ளவன், பணமில்லாதவன் என பிரித்துப் பார்க்கும் அவலம் மேலோங்கி நிற்கிறது. இது நமக்குள்ளேயே ஒரு மிகப் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத ஆனால் கசப்பான உண்மை. இது தொடரும் பட்சத்தில் நம் ஜாதி அழிந்து போனாலும் ஆச்சர்யம் இல்லை.

ஒரு நிஜ சம்பவத்தை இங்கே உதாரணமாக சொல்கிறேன்.
2001ம் ஆண்டு. எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்கள். அரையாண்டு விடுமுறையில் அத்தை (அப்பாவின் அக்கா) வீட்டில் இருந்தேன். அத்தையின் கணவரான மாமாவிற்கு ஒரு மூத்த சகோதரர். அவர் மனைவி (நான் பெரியத்தை என அழைப்பேன்). என்மீது பாசத்தைப் பொழிந்தவர். அவருக்கு மூன்று பெண்கள். இரு பெண்களுக்கு திருமணம் முடிந்து மூன்றாவது பெண் பத்தாம் வகுப்பு முடித்து வீட்டில்தான் இருந்தார். அவர்கள் வீடும் அத்தையின் வீடும் அடுத்தடுத்த வீடுதான். சுவர் மட்டுமே குறுக்கே. நான் அங்கிருந்த ஒருநாள் காலையில் அவர் முந்தைய நாள் இரவு ஒரு வேறுசாதிப் பையனைத் திருமணம் செய்து கொண்டதாகப் பேசிக் கொண்டார்கள். காலையில் பால்கொண்டு சென்றபோது சொசைடியிலும் இதே பேச்சாக இருந்தது.

இது பற்றி அத்தையிடம் கேட்டபோது அழுதுகொண்டே சொன்னார். குடிப் பேரக் கெடுத்துப்புட்டு போய்ட்டாடா நான் என்னடா பண்ணுவேன் என்றார். அந்த வலியும் வேதனையும் அப்போது பெரிதாப் புரியவில்லை. தகவலறிந்து வந்த அப்பா என்னை அப்போதே ஊருக்கு கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

ஒரு வாரம் கழித்து அப்பா விவரங்கள் சொன்னார். நமது ஜாதி, குலம், திருமணம், ஒரு குலத்தை சேர்ந்தவர்கள் பங்காளிகள், அண்ணன் தங்கைகள், நமது திருமண முறை என அனைத்தையும் அப்பா சிறிது சிறிதாக எனக்கு விளக்கிச் சொன்னார்..

அதிலிருந்து மீண்டும் அடிக்கடி அத்தை வீடு சென்றாலும் அதிகம் தங்கியதில்லை. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து அத்தை வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து வரலாம் என்று சென்றேன்.

வீட்டு வாசலில் ஒரு பெண்மணி பிச்சைக்காரக் கோலத்தில் அமர்ந்திருந்தார். உள்ளே சென்று அத்தையிடம் “யாரோ ஒரு பொம்பள கேட் முன்னாடி உக்காந்திருக்கு அத்தை. நீங்க பாக்கலையா என்றேன்.. அத்தை அழ ஆரம்பித்தார். உம்பட பெரியத்தை தாண்டா இப்படி ஆகிபோனா. வக்கத்தவ பொழப்பு இப்படி ஆகும்னு நினைக்கலையே என மீண்டும் அழுகை. என் பெரியத்தையா இப்படி?எனக்கே அடையாளம் தெரியாமல் என்றேன்...

கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய நடந்து விட்டதை மாமா விவரித்தார். பெரிய மாமா அவமானம் தாங்காமல் எங்கோ சென்று விட்டதாகவும் அதிலிருந்து ஒரு வருடமாக பெரியத்தை இப்படி ஆகிவிட்டதாகவும் இப்போதெல்லாம் யாருமே பார்க்க வருவதில்லை என்றும் சொன்னார். அவரது இரண்டாவது மகள் மட்டும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்து போவாராம். ஊரில் மிக மரியாதையான குடும்பம் இப்படி சிதைந்து போனது.
என் பெரியத்தை இன்னமும் இருக்கிறார். எப்படி இருக்கிறார். ஆறு மாதங்களுக்கு நான் பார்த்தபோது இப்படித்தான் இருந்தார். சுயநினைவு இருப்பதுபோல் தெரியவில்லை. இருக்கலாம். பாத்திரத்தை துக்கிக் கொண்டு பலவீடுகளுக்கு போகிறார். மலம் கழிப்பது வீட்டு வாசலில் குளிப்பதையும் சுத்தத்தையும் மறந்தே போனார். இப்போதும் அத்தை வீட்டிற்கு போகும்போது அவரைக் காண்கிறேன்.அதே நிலையில்.

நான் ராசு வந்திருக்கிறேன் என்னை அடையாளம் தெரிகிறதா என்றால் எனக்கு கொஞ்சம் சோறு இருந்தா கொண்டாந்து குடு பசிக்கிது என்கிறார்.
எனக்குச் சோறூட்டிய என் சொந்தம் நாதியற்றுப் போனதை நினைத்து நான் யாரை நொந்து கொள்வது..? அத்தை சாப்பிட ஏதாவது கொடுத்தாலும் இப்போதெல்லாம் வாங்குவதில்லையாம். பெரிய மாமா என்ன ஆனார் என்ற தகவலே இல்லை. அவரைப் பார்க்க நேரும்போதெல்லாம் வேதனையே மிஞ்சுகிறது.

காதல், கலப்புத் திருமணத்தை ஆதரிப்பவர்களுக்கு என் ஒரே கேள்வி இதுதான். இது போன்ற ஒரு பின்பகுதி வாழ்க்கையைத் தான் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கொடுக்க விரும்புகிறீர்களா..?

அறிவுரை சொல்லும் அளவிற்கு வயதில்லை. அவ்வளவு வாழ்க்கையை வாழ்ந்து விடவும் இல்லை. இருப்பினும் என் ஜாதி மக்களுக்காக என் குலத்தை காத்திட என்னால் ஆன சில ஆலோசனைகளை உங்கள் முன் வைக்கிறேன்.
பெற்றோர்களுக்கு....!

1. முடிந்தவரை பள்ளிக் காலத்தில் உங்கள் பிள்ளைகள் வீட்டில் இருந்தே பள்ளி செல்லும்படி செய்யுங்கள்.

2. அதிக நேரத்தை உங்கள் பிள்ளைகளுடன் செலவிடுங்கள். சேர்ந்து சாப்பிடுங்கள்.

3. பதினைந்து வயதைத் தாண்டியவுடன் ஜாதி, குலம், நம் கோவில்கள், நமது வரலாறு, திருமண முறை, சடங்குகள் பற்றி சொல்லிக் கொடுங்கள்.

4. முடிந்தவரை சுப காரியங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். விடுமுறை இல்லை படிப்பில் ரொம்ப பிசி என்று அபத்தமான காரணங்களை சொல்லாதீர்கள்.

5. குறிப்பிட்ட படிப்பைத் தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். இது வெறுப்பையே உருவாக்கும்.

6. தேவையான சுதந்திரத்தை தவறாமல் கொடுங்கள். ஆனால் குறிப்பிட்ட காலம்வரை கடிவாளம் உங்கள் கையிலேயே இருக்கட்டும்.

7. பிள்ளைகளிடம் நிறையப் பேசுங்கள். நீங்கள் சரியானவற்றையே பிள்ளைகளுக்கு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையை ஆழமாக விதையுங்கள். பிள்ளைகள் எதையும் மறைக்காமல் பேசவும் அனைத்து நல்ல கெட்ட விசயங்களை பகிர்ந்து கொள்ள பெற்றோர்களைத் தவிர மற்றவரைத் தேர்ந்தெடுத்தால் இடைவெளி அதிகரிக்கிறது என்றே அர்த்தம். ஆபத்து.

8. எதிர்கால குறிக்கோள்களை வகுத்துக் கொள்ள அறிவுறுத்துங்கள். அதை நோக்கிய பயணமாக அவர்கள் கல்லூரி நாட்கள் அமைகிறது என்பதை உறுதிப் படுத்துங்கள்.

9. வாழ்க்கையின் சவாலான பக்கங்களை எழுத உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்காதவரை நீங்கள் பிள்ளைகளுக்காக கஷ்டப்படுவதாக சொல்லிக் கொள்வதில் உபயோகம் இல்லை என்பதை உணருங்கள்.

என் சகோதர சகோதரிகளுக்கு...!

1. ஹார்மோன் மூளையை கட்டுப்படுத்தும் காலங்களில் மூளையை உங்கள் மனசாட்சியின் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

2. ஒரு இலட்சியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். படிப்பாக இருக்கலாம், பணம் சம்பாதிப்பதாக இருக்கலாம், பாடுபடுவதாக இருக்கலாம். எதுவும் உங்களை இடையூறு செய்ய முடியாமல் நில்லுங்கள் .

3. நாம் செய்யும் சிறு தவறு கூட நம் பெற்றோரை நேரடியாக பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

4. காதல் என்பது இனக் கவர்ச்சிக்கு மேற்கத்திய உலகம் கொடுத்த பெயரே. இதில் உண்மைக் காதல், தெய்வீகக் காதல் என்று எதுவுமே இல்லை.

5. திருமணத்திற்கு பிறகு வாழ்க்கைத்துணையின் அன்புதான் நிரந்தரம். அதற்கு காதல் என பெயர் சூட்டிக் கொள்ளுங்கள்.

6. ஏற்றத் தாழ்வின்றி நம் ஜாதியினருடன் பழகுங்கள். நல்ல நட்பு வட்டத்தை நம் ஜாதியில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

7. கலப்புத் திருமணத்தால் நம் பெற்றோருக்கு ஏற்படும் அவமானம் மரணத்தை விட கொடியது என்பதை நாம் மறந்தும் மறந்துவிடக் கூடாது.

8. நம்மில் யாராவது ஒருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டு போய்விட்டால் நம் பெற்றோருக்கு சமுதாயம் மிகப் பெரும் தண்டனை கொடுக்கவே முற்படுகிறது. கற்பனை செய்து பாருங்கள்.

9. உங்கள் பெற்றோர் பெயரைச் சொல்லி இன்னாரது மகன்/ மகள் ஓடிப் போய்விட்டார் என்றே பேசுவார்கள்.

10. சுபகாரியங்களில் புறக்கணிக்கப் படுவார்கள்.

11. கொலைசெய்து விட்டது போல் திரும்பத் திரும்ப நாம் செய்த தவறு பற்றி கேள்விகள் கேட்கப் படும்.

12. வளர்ப்பு சரியில்லை என்பார்கள்..

13. அவர் பிள்ளை போல் நீயும் செய்து விடாதே என்று தவறான உதாரணமாக காட்டப்படுவார்கள்.

இதையெல்லாமா நாம் அவர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம்.?

இங்கே நான் சொன்ன அனைத்துமே என் சொந்த கருத்துக்களே. இதில் தவறுகள் இருக்கலாம். நல்ல விஷயங்கள் என்று நீங்கள் நம்புவதை எடுத்துக் கொள்ளுங்கள். தவறு என்று நினைத்தால் ஒதுக்கி விடுங்கள்.

இவண்,
விளைநிலத்தை விற்று விவசாயம் படிக்கவைத்த ஒரு விவசாயியின் பெருமை மகன்...
----------------------------------------------------------------------------------------------------
பருவத்தில் கல்யாணம் செய்து வையுங்கள் பெற்றோர்களே.. பருவத்தில் கல்யாணம் செய்துகொள்ளுங்கள் சொந்தங்களே.. இதை மாப்பிள்ளை கூற மறந்துவிட்டார்..

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates