Trending

Wednesday, 30 July 2014

கொங்கு கவுண்டர்கள் கல்யாணத்தில் குலகுரு

கொங்கு கவுண்டர்கள் கல்யாணத்தில் குலகுரு வந்து ஆசி வழங்கும் மரபு. பல காலமாக திராவிட கம்யூனிச கயவர்களால் உடைக்கப்பட்ட மரபு தற்போது மீண்டு வருகிறது.

ஏழூர் பண்ணை கூட்டத்தில் கலியாணி பிரிவின் குலகுருவாகிய அய்யம்பாளையம் மடம் ஸ்ரீ சிதம்பர குருக்கள் அவர்கள் மணமக்களை ஆசீர்வதிக்கும் வீடியோ.மற்றுமொரு கல்யாணத்தில் காலமங்கலம் கன்ன கூட்ட குலகுருவும், குருமாதாவும்..


கொங்கு கல்யாணத்தில் பிராமணர்கள்

கொங்கு திருமணங்களில் பிராமணர்கள் இல்லை என்று ஒரு கூட்டம் (திராவிட-முற்போக்கு கும்பல்) சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. கொங்கு மக்கள் என்று கொங்கு நாட்டுக்குள் ஆட்சியமைத்தார்களோ அன்றில் இருந்தே நம்மோடு வாழ்ந்து வருபவர்கள் நம் கொங்கு பிராமணர்கள். நமக்கு குலகுருக்கலாகவும், காணி கோவில் குருக்களாகவும் இருந்து கொங்கு சமூகம் ஒழுக்கமாக வாழ நல்வழி காட்டி வந்தனர். நம் கொங்க தேச பிராமணர்கள் பலர் நமக்கு குலகுருவாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நம் முன்னோர் செப்பேடு பட்டயங்கள் எழுதி கொடுத்து போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.

கொங்க குலகுருக்கள் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

கொங்கு வெள்ளாளர் திருமணத்தில் பிராமணர்கள் பங்கு குறித்து மங்கல வாழ்த்தில் குறிக்க பட்டுள்ளது.

குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று"என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.

மேலும் 'வேதம் ஓதிடும் வேதியர் வாழி' என்பதும் மங்கல வாழ்த்தில் வரும் வரியாகும்.

மேலும் பிராமணர்கள் கொங்கு திருமணத்தில் பங்கெடுத்ததற்கு அத்தாட்சியாக அக்காலத்தில் எழுதப்பட்ட ஒரு சமூக ஆய்வு நூலின் ஒரு பகுதியையும் இங்கு காணலாம்.


புத்தகத் திருவிழா

புத்தக திருவிழா.. அடடே.. நல்ல முயற்சிதானே என்று தோன்றும்.. வெளிப்படையாக நல்ல முயற்சிதான்; அதன் உள்ளார்ந்த நோக்கம்? ஆனால் இதற்குள் இருக்கும் சில சூதுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா..?


ஈரோடு புத்தக திருவிழா நடத்துபவர் ஸ்டாலின் குணசேகரன். அடிப்படையில் இவர் ஒரு கம்யூனிஸ்ட். முதலில் கம்யூனிஸ்ட்கள் மற்றும் கம்யூனிசமும இந்திய பாரம்பரியம், கலாசாரம், மரபுகளுக்கு எதிரான பல கருத்துக்களை கொண்டதாகும். அதனால்தான் பொதுவுடைமை எளிய மனிதர்களுக்கு உதவுகிறோம் என்று எவ்வளவு வேஷம் போட்டாலும் பொதுமக்கள் அவர்களை கிட்டே நெருங்க விடுவதில்லை. இந்திய விடுதலை போராட்ட காலம் முதலே விடுதலை போராட்ட தியாகிகளை காட்டிக்கொடுத்தது முதல், சீன போர் தொடர்ந்து இன்றுவரை கம்யூனிஸ்ட்களுக்கு இந்திய தேசப்பற்றை விட ரஷ்ய சீன பற்று அதிகம் என்பதை நிரூபித்து வந்துள்ளனர்.(கம்யூனிஸ்ட்களின் உண்மை முகம் பற்றி அறிய ஒரு சிறு நூல் இ-புத்தகமாக இருக்கிறது. வேண்டுவோர், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)

இந்த கம்யூனிஸ்ட்கள் ஒரு தேசத்தை தங்களுக்கேற்றவாறு மூளைச்சலவை செய்ய முதலில் எழுத்துலகை, சினிமா-மீடியாவை, சமூக ஆய்வுலகத்தை கைப்பற்றும். சமூகத்துக்குள் குழப்பம் ஏற்ப்படுத்தி பிரிவினைகளை வளர்த்து பின் தங்களுக்கேற்றவாறு சிறிது சிறிதாக மாற்றுவார்கள். இதை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் என்றோ எழுதியுள்ளார். எழுத்தாளர்களோ, பதிப்பகத்தாரோ கம்யூனிச லாபியி தாண்டி எதுவும் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள். அதை பற்றிய உண்மைகளை ரஷ்ய உளவுப்பிரிவில் வேலை செய்த உலவாளியும், இந்திய மரபியலில் டாக்டர் பட்டம் பெற்றவருமான அலுவலர் வெளிப்படையாக கூறும் வீடியோ பதிவு கீழே.· கம்யூனிசம், திராவிடம், முற்போக்கு இயக்கங்கள் நேரேடி கட்டுப்பாட்டில் இருக்கும் பிரஸ்களுக்கும், கம்யூனிச கொள்கைகளை பின்பற்றும்-பரப்பும் எழுத்தாளர்கள் புத்தகங்களை விற்கும் பப்ளிகேசன்களுக்கும் முன்னுரிமையும், மக்கள் கண்ணில் உடனே படுவது போல இடமளிப்பும் கொடுக்கபடுகிறது. இருக்கும் மொத்த ஸ்டால்களில் இவர்கள் ஸ்டால் அதிகம் இருக்கும்.

· இந்திய பாரம்பரியம், கலாசாரம் போன்றவற்றை வலியுறுத்தும் பப்ளிகேசன்களுக்கும், கம்யூனிச முற்போக்கு சக்திகளுக்கு எதிரான கொள்கையுடைய பப்ளிகேசன்களுக்கும் இடமளிப்பதில் பாகுபாடு காட்டப்படுகிறது.

·     இதே ஸ்டாலின் குணசேகரன், தனது நூல் ஒன்றில் காளிங்கராயன் சாதி கொடுமைகள் நிறைந்த அந்த காலத்திலேயே பிற சாதிகளுக்கு உரிமைகள் கொடுத்தார் என்று கம்யூனிச விஷத்தில் சாதி அபிமான சக்கரையை தடவி கொடுக்கப் பார்த்தார். அதாவது அந்த காலத்தில் எல்லா மக்களும் சாதி வெறியர்களாம்; அதை இவர் விளக்கு பிடிச்சு பார்த்தாராம்; அதில் காளிங்கராயன் மட்டும் சாதிவேற்றுமையை ஒழிக்க உண்டி குலுக்கிக்கொண்டு உரிமைகள் கொடுக்க வந்தாராம். இதை கேட்டு உள்ளூர் கவுண்டர்கள் எல்லாம் ஸ்டாலின் குணசேகரனிடம் ஒட்டிக்கொள்வார்கலாம். கால்வாய் வெட்டிய தன்னலமற்ற காலிங்கராயனுக்கும் கம்யூனிச கறையை பூசப் பார்க்கும் சூழ்ச்சி.ஏன் இவருக்கு தெரியாதா, அக்காலத்தில் நல்ல செயல்கள் செய்தால் அவர்களுக்கு உறிமைகள் கொடுப்பது அந்தந்த பட்டக்காரர்கள் என்று? இதே போல பல்வேறு சாதியினருக்கும் பல்வேறு பட்டக்காரர்கள் பல்வேறு காலகட்டங்களில் உரிமைகள் கொடுத்துள்ளனர். அக்காலத்தில் எல்லா சாதியினரும் அவரவர் மரபை-கலாசாரத்தை உணர்ந்து இணக்கமாக வாழ்ந்து வந்தனர். வெள்ளையர்களும் கம்யூனிசமும் வரும் வரை ஊரும நாடும் உருப்படியாக இருந்தது என்பதை வரலாறு படித்தவர்கள் உணர்வார்கள்.

·  பேச அழைக்கப்படும் சிறப்பு பேச்சாளர்களிடமும் இந்த பாகுபாடு நிச்சயம் உண்டு. கம்யூனிச கொள்கைகளுக்கு மாற்று கருத்துள்ளவர்களை பேச அழைக்கமாட்டார்கள், கூப்பிடவும் மாட்டார்கள். அப்படியே அழைக்கப்பட்டாலும் மீண்டுமொருமுறை வர மாட்டார்கள் என்னும் சூழல் உருவாக்கப்படும்.

·    போன வருஷம் புத்தக திருவிழாவில் நம்மாழ்வார் பேச வந்தபோது அவரை ஈரோடு தோல் சாய விஷம் பிரச்னை குறித்தோ, பவானி வாய்க்கால் கான்கிரீட் பிரச்னை குறித்தோ பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார். என்ன காரணம்?


இந்த சூழ்ச்சியின் வெளிப்பாடுதான் புத்தக திருவிழாவுமாகும். ஈரோடு போன்ற நகரங்களில் கம்யூனிச முற்போக்கு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, புத்தகங்களை ஆயுதமாக பயன்படுத்த மேற்கொள்ளுகிறார்கள். நீங்கள் புத்தக திருவிழாவுக்கு போவதாக இருந்தால், என்ன புத்தகத்தை வாங்குகிறீர்கள், அதை யார் எழுதியது, எழுதியவன் பின்னணி என்ன? பதிப்பகத்தார் பின்னணி என்ன? போன்றவற்றை உணர்ந்து வாங்குங்கள். இல்லையேல் நீங்களும்/உங்கள் குழந்தைகளும் உங்களை அறியாமல் மூளைச்சலவை செய்யப்படுவீர்கள். 

Monday, 28 July 2014

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவை

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியவை
- நல்லதம்பி காங்கேயன்1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. போகும்போதோ, வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

3. கோயிலுக்கு போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சமையல்கட்டை பசுஞ்சாணமிட்டு மெழுக வேண்டும்.

4. கோயிலை விட்டுவரும் போது யாருக்கும் பிச்சையிட்டால் கோயிலுக்கு போய் வந்த புண்ணியபலன் அனைத்தும் பிச்சையிடும் காசுடன் பிச்சை வாங்குபவர்க்கு போகும்.

5. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

6. தர்ப்பணம்/பித்ருகடன் செய்யாதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

7. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

8. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.

10. கோயிலுக்குள் திருமணங்கள் செய்யகூடாது. இது கோயிலுள் இருக்கும் இறைவனை நிந்தனை செய்வதாகும். தெய்வநிந்தனை செய்த பாவம் திருமணதம்பதிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களையும் சாடும். கோயிலுக்குள், குருக்களைகூட நமஸ்காரம் செய்யக்கூடாது. இறைவனை மட்டுமே தொழவேண்டும்.
11. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து கைகூப்பி விழுந்து வணங்க வேண்டும். கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

12. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

13. கோயிலில் கண்டிப்பாக பசுமாடு இருக்க வேண்டும்.

14. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.

15. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

16. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

17. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.

18. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம். ஆனால், நெய் என்பது வீட்டில் நாம் தயாரிக்கும் நெய்யே நெய். மற்றதெல்லாம் பொய். கலப்படம். முடிந்த அளவு வீட்டில் அதுவும் நாட்டு மாட்டு நெய் கொண்டு விளக்கிடுவது மிகுத்த பலனைத்தரும்.

19. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

20. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது. ஆலயத்தை சுத்தம் செய்வதும், சுவாமிக்கு பூஜை செய்வதும் ஒரே பலனை கொடுக்கும்.

21. கோபுர தரிசனம் கோடி நன்மை. கோபுர நிழலை, சிலைகளது நிழலை மிதிக்ககூடாது.

22. பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

23. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.

24. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.

25. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

26. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.

Monday, 14 July 2014

நகர பார்பி பொம்மைகள்

நகரத்து பெண்கள் கணவனை வாடா போடா என்பதில் ஆளுமை காண்கிறாள்.. கிராமத்து பெண்கள் பிறர தன் கணவனை வாடா போடா என்று பேசவிடாமல் மரியாதை சேர்ப்பதில் ஆளுமை காண்கிறாள்..

நகரத்து பெண்கள் சேமிப்பற்ற வாழ்க்கைமுறை நோக்கி பறந்துகொண்டிருப்பவர்கள்.. கிராமத்து பெண்கள் சேமிப்பால் நாட்டையும் வீட்டையும் காப்பவர்கள்..

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates