Trending

Sunday, 31 August 2014

காட்டு காவல் தெய்வ மகிமைகள்

எங்க தோட்டத்துல அரசமரத்து அய்யன் அப்படின்னு ஒரு கருப்பராயன் தோட்டத்து சாமியா இருக்கு. எங்களோட நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நாங்க போயி நிக்கறது இந்த கருப்பன் கிட்ட தான்.. எங்க அப்பாவோட அப்பாரு காலத்துல நடந்த சம்பவம்...

அது ஒரு பஞ்ச காலம்.. ஊருல இருக்கற குடிபடைகள் எல்லாம் கொஞ்சம் பஞ்சத்துல இருந்தாங்க. 

அப்போ எங்க தோட்டத்துல எங்க அப்பாரு ராய்(அதாவது கேழ்வரகு. ராய்'னு கூகுள்'ல தேடுனா கூத்தாடி லட்சுமி ராயும், ஊர ஏமாத்துன சஹாரா குழும சுப்ரதா ராயும் தான் வருவாங்க) வெதச்சு வெள்ளாமை வெச்சுருந்தாறு. ராய் தாலு நல்லா வளந்து பாலேறி கருது முத்திப் போயி அறுக்கற பக்குவத்துல இருந்துச்சு.

அப்ப பஞ்ச காலம்ங்கரதால எங்க மாதாரிக ரெண்டு பேரு போயி கவண்டனுக்கு தெரியாம கொஞ்சம் ராய் திருடிட்டு வந்தராலாம்னு நடுராத்திரில காட்டுக்குள்ள எறங்கி ராய் தாழ கைல புடுசுருக்கரானுங்க.. புடுச்சவனுங்க தான்.. அப்படியே ராய் தாழ கைல புடுச்சது புடுச்ச படியா சிலை மாதிரி ஆயுட்டானுங்க..
                                               

இங்க ஊருக்குள்ள பாத்தா நம்ம ஊரு கொத்துக்காரரு காத்தால இருந்தது வேல செஞ்ச சலுப்புல கஞ்சிய குடுச்சுட்டு கோழி கூப்பட கவல ஓட்ட(கவலை ஓட்டுதல் - ஏற்றம் இறைத்தல்) போகணுமே'னு நல்லா தூங்கறாரு. நல்லா தூங்கறயா பாட்டாளி.. தூங்கு அப்படின்னு நெனச்சுட்டு முதுல சுளீர்'னு ஒரு அடி உலுந்துச்சு.. இதார்ரா நம்மள இந்நேரத்துல அடிக்கரத்துன்னு அந்தக்கடை திரும்பி படுத்தாரு.. மறுபடிமு சுளீர்'னு முதுகுல ஒரு அடி.. கொத்துக்காரருக்கு தூக்கம் தெளிஞ்சு போச்சு.. எந்திருச்சு உக்காந்தாரு.

"அங்க தோட்டத்துல வெதச்ச வெள்ளாம களவு போவுத்து.. உனக்கு தூக்கமா"னு ஒரு குரல் கேக்குத்து. இதென்னடா வம்பா போச்சுன்னு அரிக்கேன் லைட்ட பத்த வெச்சுட்டு தோட்டத்துக்கு கெளம்புனாரு..

அது இருக்கும் தோட்டத்துக்கும் ஓட்டுக்கும் ஒரு மைலு. என்னாச்சோ ஏதாச்சோன்னு ரோசுனை பண்ணிட்டே வந்தாரு. 

இங்க வந்து பாத்தா உள்ளூரு மாதாரி ராய் தாழ புடுச்சுட்டு சிலை மாதிரி நிக்கறானுங்க.. பேச்சும் இல்ல.. மூச்சும் இல்ல.. 

"அட கருப்பா.. இவனுங்க திருடுனானுங்கன்னு தான் என்னைய எழுப்புனையா? உனக்கு வேற ஆளே கெடைக்கலையா.. இவனுங்கள இப்படி தண்டுச்சுட்டயே" அப்படின்னே சொல்லிட்டே "அரசமரத்து அய்யா இவனுங்கள மன்னிச்சு உட்ரு'னு சொல்லி கும்புட்டுட்டு தொட்டத்துல ஒரு கை மண் அள்ளி சிலை மாதிரி நின்னவனுங்க மேல போட்டாரு.. ரெண்டு பேரும் நல்ல போச்சு.

சேரிச் சேரி..கருப்பன கும்புட்டுட்டு வாங்கடான்னு சொல்லிட்டு அவனுங்கள ஊட்டுக்கு கூட்டிட்டு வந்து படுக்க சொல்லிட்டாரு.

காத்தால தூங்கி எழுந்திரிச்சு திரு திருன்னு முழிக்கரானுங்க திருட வந்த ரெண்டு பேரும்.. கொத்துக்காரர் ஒன்னும் சொல்லல.. சம்சாரத்த கூப்டாரு.. அட இவனுங்க ரெண்டு பேருக்கும் சோறு வேவுச்சு வவுறு நம்ப திங்க வரைக்கும் போடுன்னு சொன்னாரு.. அவனுங்க நல்லா சாப்பட வரைக்கும் உக்காந்து பாத்துட்டு இருந்துட்டு ஆளுக்கு நாலு வல்லம் ராய் கொடுக்க சொல்லிட்டு துண்ட ஒதறி தோள்ல போட்டுட்டு தண்ணி கட்ட தோட்டத்துக்கு போயிட்டாரு..

அன்னைல இருந்தது தோட்டத்துல திருடனும்னு நெனச்சு ஒருத்தனும் வந்தததும் இல்ல.. வெள்ளாம வெளச்ச்சலும் கொரஞ்சதும் இல்ல.. எல்லாம் அந்த கருப்பனே பாத்துக்கறான்!

இந்த பஞ்ச காலம் பற்றிய தொடர்புடைய பதிவு கொங்கப்பறையர்கள் கட்டுரையில் தெளிவாகக் காணலாம்.

-வணங்காமுடி மாவீர முத்தூர் மணியன் கூட்ட ஸ்ரீமான் சந்திரசேகர கவுண்டர்

----

இன்னைக்கு காலைல எங்க அமத்தா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்..... இது அங்க தோட்டத்துக்குள்ள இருக்கற காவல் தெய்வம் முனியப்பன்.... ரொம்பவே சக்திவாய்ந்த துடியான தெய்வம்..... இது வரைக்கும் இந்த தோட்டத்துக்குள்ள வந்து எவனும் ஒரு தேங்காயை கூட எடுத்துட்டு போக முடியாது.... பொதுவாக இந்த மாதிரி முனி எல்லாம் இரண்டும் ஆண் உருவங்களா தான் இருக்கும்.... ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் இந்த மாதிரி ஒரு அமைப்பு காண்பது அரிது.... மிக சில இடங்களில் மட்டும் தான் காண முடியும்.....

அவிநாசி வட்டத்துல ராயர்பாளையம்னு ஒரு ஊரு இருக்குது. இந்த பகுதில சில கூலிக்கார பசங்களுக்கு சாராயம் காச்சறது அப்புறம் திருட்டு தொழில் ரெண்டும் தான்... பாவம் பஞ்ச காலம்.. ஒரு தடவை தோட்டத்துல வெள்ளசோளம் வெதச்சு தட்டு வெளஞ்சு நல்லா கருது மினிங்கி அறுத்து ஊனியிருந்ததாம். இது தெரிஞ்சவனுங்க ஒரு பத்து பேரு ராத்திரி நேரம் கருது திருட வந்தானுகளாம். வந்து தட்டுல கைய வெச்சு ஒரு கருத அறுத்து மடியில போடப்போன கை அப்படியேவும், சோளத்தட்ட புடிச்ச கை அப்படியேவும் இருக்க, சுய நினைவு இல்லாம அப்படியே நின்னுட்டாங்களாம். அடுத்த நாள் பொழுது வெடிஞ்சு எல்லாரும் காட்டுக்கு வந்த இவனுக எல்லாம் அப்படியே நிக்கறாங்க. அப்புறம் போயி சாமிய கும்பிட்டு தீர்த்தமும், விபூதியும் கொண்டு வந்து தெளிச்ச பிறகு தா சுய நினைவு வந்ததாம். கண்ண முழிச்சு பாத்து எல்லாரு கால்லயும் உழுந்து கும்பிட்டு, கோயிலுக்கு வந்து சாமிய கும்பிட்டு மன்னிப்பு கேட்டு, இனி எத்தனை தலைமுறை ஆனாலும் நாங்க இந்த தோட்டத்துக்குள்ள வந்து எதையும் தொட மாட்டோம் னு சத்தியம் பண்ணி குடுத்துட்டு போனாங்களாம். அது முதல் ராயர்பாளைத்து காரனுக எவனும் உள்ள வர மாட்டான்.
- பிடாரியூர் பொருள்தந்த கூட்ட ரமேஷ் துரைசாமி கவுண்டர்

---

ஈரோட்டில் இன்னைக்கும் சித்தோடு ரோட்டுல தண்ணிபந்தபாளையம் பக்கத்துல தோட்டக்காடு இருக்குது. அங்க இருக்கற கருப்பண்ணன் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஒருக்கா குறவன் ஒருவன் வெள்ளாமை திருடிட்டு போக வந்துட்டு வெள்ளாமைய தொட்டதியும் கண் பார்வை போயிட்டுது. அங்கேயே மயங்கி கிடந்தவனை விடிஞ்சதும் தேவேந்திரன் கூட்டத்து மாமன் கூட்டம் போய் தூக்கிட்டு வந்து முத்தி முதின்னு முதிச்சு முடுக்கியுட்டிருக்காங்க.

அப்பிச்சி ஒருக்கா குடும சண்டைல விரக்தியாவி தூக்கு மாட்டிக்க போயிட்டாராம். தோட்டகாட்டுல அப்பிச்சியோட அம்மா மாடு மேச்சிகிட்டு இருந்தப்ப அவங்க கண்ணு முன்னால படம் போட்டு காட்டுனாப்பல அப்பிச்சி தூக்கு மாட்ட போறது தெரிஞ்சிதாம். மாட்டை அங்கேயே கட்டிப்புட்டு ஓட்டோட்டமா ஓடி ஊடு வந்து பாத்தா அப்பிச்சி தூக்கு மாட்டினது மாட்டுனாப்பல விருமத்தி புடிச்சாப்ல நின்னாராம். அப்படியே காப்பாத்தி தண்ணி தெளிச்சு திண்ணீர் இட்டுவுட்டு கேட்டா கவுத்த மாட்டுனப்புரம் என்ன ஆச்சுன்னு தெரில னு சொன்னாராம்.

இன்னிக்கும் கருப்பராயன் கோயில் கெவுளி வாக்கு அவ்வளவு சரியா பலிக்குமாம்.

- மண்டபத்தூர் கன்ன கூட்ட அத்தப்ப கவுண்டர்


Friday, 29 August 2014

சம்ஸ்க்ருதம் தமிழின் சகோதர பாஷைதமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்களில், பிராகிருதம், பிராமி, தமிழ் பிராமி, தமிழ் வட்டெழுத்து, கிரந்தம், கிரந்தத் தமிழ், மணிப்பிரவாளம், தேவநாகரி போன்ற பல எழுத்து நடைகள் காணப்படுகின்றன. சம்ஸ்க்ருத மொழியைக் காட்டிலும், தமிழ்மொழி சார்ந்த குறிப்புகள் அதிகம் காணப்படுவதால், தமிழ் இலக்கியங்களில், சம்ஸ்க்ருத மொழியானது, வடமொழி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும்,

Monday, 25 August 2014

கள்ள கல்யாணம் (கலப்பு கல்யாணம்) பற்றி கீதை

குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே? கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது. அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள். வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன. ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

Tuesday, 19 August 2014

பார்பினி மடாதிபதி பட்டாபிஷேகம்

கொங்கதேசம் காங்கய நாடு பார்ப்பினி காணியை சேர்ந்த மக்களுக்கு குலகுருவாகிய பார்ப்பினி மடாதிபதிக்கு 04.09.2014 காலை 7-9 குள் பட்டாபிஷேகம் வீரசொழபுரம் சோழவிநாயகர் கோயிலில் நடக்கவிருக்கிறது. பார்ப்பனி தோடை, கன்னந்தை, காடை, கீரை, வாணன், வண்ணக்கன் கூட்டத்தார் அவசியம் கலந்து கொண்டு குருவருள் பெறுக.

Monday, 18 August 2014

கோயில் புனரமைப்பு முறை

தெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல தெய்வ வழிபாடு. ஒரு கோயில் என்றால் அதில் ஸ்தலம், தீர்த்தம், விருட்சம் என்ற மூன்று முக்கிய அங்கங்கள் சொல்லப்படுகின்றன.

ஸ்தலம்: கோயில் கருவறை-மூலவர் அமைவிடத்தை ஸ்தலம் என்று சொல்வார்கள்.இந்த இடத்தை தீர்மானிப்பது மிக மிக நுட்பமான விஷயம். பஞ்சபூதங்களின் சக்தி, தெய்வசக்தி, வானியல் கதிர்வீச்சு போன்றவை

Thursday, 14 August 2014

கொங்கப்பறையர்கள்

தொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத்தின் பூர்வகுடிகளில் ஒரு இனமாவர். 

Wednesday, 13 August 2014

ஆலய வழிபடுவோர் சங்கம்

கொங்கதேசத்தில் பெரும்பாலான கோயில்கள் நமது கட்டுப்பாட்டில் தான் இருந்தன.. அவை நம் முன்னோர்களால் கட்டப்பட்டு/நிர்வகிக்கப்பட்டு, அவர்கள் காலம் காலமாக பாடுபட்டு கொடுத்த செல்வம், நிலங்களை சொத்தாக வைத்து செயல்பட்டவை ஆகும். 

தற்போது திராவிட திருட்டு கட்சிகள் வந்த பின்னர், இக்கோயில்களின் பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக திருடப்பட்டு வருகின்றன. கோயில்களில் நமக்கிருந்த உரிமைகள் மறுக்கப்படுகிறது. விலைமதிப்பற்ற சிலைகள் கடத்தப்படுகின்றது, கல்வெட்டுக்கள் சிதைக்கபடுகின்றன. இதே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ ஆன்மீக மையங்களில் இந்த அக்கிரமம் நடப்பதில்லை. இந்த அறநிலையத்துறை என்பதே ஒரு சதி என்பதை உணர்ந்து அவர்களின் பல அக்கிரமங்களை வெளிச்சம் போட்டு காட்டி பல கோயில்களையும் அவற்றின் சொத்துக்களையும் அழிவிலிருந்து மீட்டவர்கள் இந்த ஆலய வழிபடுவோர் சங்கத்தினர். 

Monday, 11 August 2014

ஆழ்துளை சமவெளி கிணறு கட்டுப்பாடுகள்

ஆழ்துளை கிணறு சம்பந்தமாக நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டத்திருத்தம் குறித்து வாக்குவாதங்கள் வலுத்து வருகின்றன. முதலில் இந்த சட்டத் திருத்த மசோதா என்னவெல்லாம் சொல்கிறது என்று பார்ப்போம்,

சட்டத்திருத்தம் கொண்டு வந்து புண்ணியம் செய்த பு.தலைவி மற்றும் கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி 

1.       சட்டத்திருத்தத்தின் மூல காரணம், தற்போது குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து இறக்கும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

2.       இனிமேல், ஆழ்துளை மட்டுமல்ல சமவெளி கிணறுகள் தொண்டவும்

Thursday, 7 August 2014

திருசெங்கோட்டு மலை-அறுபதாம் படி

"எங்கையன் அவரு பங்காளிவளோட காடு கறார் பண்ற நேரத்திக்கு  நம்மு சுள்ளிக்காட்டான் அவுங்க தாத்தன், வந்து 'செத்துப்போன உங்கையன் எங்கட்ட நானூறு ரூவா வாங்குனாறு; அதயும் பங்காளிவ சேந்து எனக்கு கட்டிப்புடுங்க' னு சொன்னாரு. பாண்டு பத்தரம் எதுவுமில்ல, அவுங்க ஐயனும் சாவர காலத்திலியும் எதுவுஞ்சொல்லுல. எங்கையன் ஒரே வார்த்த சொன்னாரு "சேரீனா! எங்கையன் வாங்குனதாவே இருக்குட்டும். அந்த பாற மேல ஏறி கெழக்க திருசெங்கோட்டு மலைய பாத்து அறவதாம் படி முருகனறிய எங்கையன் வாங்குனாறு னு சொல்லிட்டு பணத்த வாங்கிக்கணா" னு சொல்லிட்டாரு. எங்க பங்காளிவலும் எங்கையன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாம ஒத்துக்கிட்டாங்க. அந்த ஆளும் பாற மேல ஏறி சொல்லி பணத்த வாங்கிட்டுப் போய் ஒரே வாரத்துல பாம்பு கடிச்சு முடிஞ்சிட்டாறு, அவிய பன்னையமும் ஒரே தலக்கட்டுல சுருங்கிப் போச்சு"

குலகுரு மரபு-பட்டினப்பாலை

சங்க நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை வேளாளரின் சிறப்பாக சொல்லிய பாடலில் உள்ள வரிகள்.

கொலை செய்வதை வெறுத்தவர்கள்; களவு செய்வதைக் கருதாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியின் மூலம் ஆவுதி கொடுப்பார்கள்; நல்ல பசுக்களையும், எருதுகளையும் பாதுகாப்பார்கள்;
''நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களின் புகழைப் பரவச் செய்வார்கள்'' வந்த விருந்தினர்க்குப் பல பண்டங்களைக் கொடுப்பார்கள்; நல்லொழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள்; மேழிச்செல்வமே சிறந்தது என்று அதனை விரும்பிப் பாதுகாக்கும் உழவர்கள். இது நம் குலகுரு மரபுகளின் தொன்மைக்கு இன்னுமொரு சான்றுமாகும்.இதை ஒரு தி.க. தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் கூட எழுதி ஒப்புக்கொண்ட விஷயமாகும் (சாமி சிதம்பரம்-பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் நூல்)

Tuesday, 5 August 2014

காணியாளர் பழனி மங்கள கவுண்டர் (1896-1963)

பழனி நம் கொங்கதேசத்தின் 24 நாடுகளில் வைகாவூர் நாட்டை சேர்ந்த கோயில். இந்த நாட்டின் பட்டக்காரர் பழனி ஈஞ்ச கூட்டத்தார் ஆவர். இந்த ஈஞ்ச கூட்டத்தின் ரகுநாதசிங்க கவுண்டர் கொங்கு வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றவர். கொங்கதேசத்தில் குறும்பு செய்த வடுகர்களின் எண்பத்தெட்டு காணிகளை வென்று கொங்கு வெள்ளாளர்களின் வெற்றிக்கொடியை நாட்டியவர். பழனி கோயிலில் இவரின் வம்சா வழியினருக்கே என்றும் முதல் மரியாதை இருந்து வந்தது. அறநிலையத்துறை கோயிலை ஆக்கிரமித்த பின்னர் பாரம்பரிய மரபுகளை கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து விட்டனர். இன்றளவும் பழனி பகுதியில் காணியாளர் குடும்பம் என்றால் பெருத்த மரியாதை உண்டு.
S.G.பாலகிருஷ்ணன்.MP.,காணியாளர் மங்கள கவுண்டர் மற்றும் ராஜாஜி அவர்கள்
=========================================================================
பழனித்தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் (1952-57).
பழனி ஆலய அறங்காவலர் (1926-1928)
அறங்காவலர் குழுத்தலைவர்(1947-1957)
பழனி நகர்மன்றத் தலைவர் (1926-29,1931-34,1952-59)

கொத்தயம் கிராமத்தில் பிறந்த விவசாயி. பழனியில் வாழ்ந்தவர். பழனி மக்கள் அன்பாக காணியாளர் என்றே அழைப்பார்கள்.1952 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates