Trending

Wednesday, 13 August 2014

ஆலய வழிபடுவோர் சங்கம்

கொங்கதேசத்தில் பெரும்பாலான கோயில்கள் நமது கட்டுப்பாட்டில் தான் இருந்தன.. அவை நம் முன்னோர்களால் கட்டப்பட்டு/நிர்வகிக்கப்பட்டு, அவர்கள் காலம் காலமாக பாடுபட்டு கொடுத்த செல்வம், நிலங்களை சொத்தாக வைத்து செயல்பட்டவை ஆகும். 

தற்போது திராவிட திருட்டு கட்சிகள் வந்த பின்னர், இக்கோயில்களின் பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக திருடப்பட்டு வருகின்றன. கோயில்களில் நமக்கிருந்த உரிமைகள் மறுக்கப்படுகிறது. விலைமதிப்பற்ற சிலைகள் கடத்தப்படுகின்றது, கல்வெட்டுக்கள் சிதைக்கபடுகின்றன. இதே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ ஆன்மீக மையங்களில் இந்த அக்கிரமம் நடப்பதில்லை. இந்த அறநிலையத்துறை என்பதே ஒரு சதி என்பதை உணர்ந்து அவர்களின் பல அக்கிரமங்களை வெளிச்சம் போட்டு காட்டி பல கோயில்களையும் அவற்றின் சொத்துக்களையும் அழிவிலிருந்து மீட்டவர்கள் இந்த ஆலய வழிபடுவோர் சங்கத்தினர். 

இன்னும் குறிப்பாக, நம் கொங்கதேச கோயில்கள் பலவற்றையும் (நம் காணியாச்சி கோயில்கள் உட்பட) காத்ததில் இவர்கள் குழு பெரும்பங்கு வகித்தது. அந்த வகையில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகமே இந்த அமைப்பிற்கு கடன் பட்டுள்ளது என்று சொல்லவேண்டும். தற்போது, இந்த அமைப்பு ஒரு கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள் படத்தில் உள்ளன.

கோயில்களுக்கும் நற்காரியங்களுக்கும் உதவும் எண்ணம் இருந்தால் இவர்களுக்கு பணமாகவோ-உழைப்பாகவோ உதவவும். கோயில்களில் நீங்கள் கொடுக்கும் காணிக்கை பணம் அனைத்தும் எவனோ அயோக்கியனுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள்.

பெங்களூர் பகுதியில் இருப்பவர்கள்.. உங்கள் காணியாச்சி கோயிலில் அரசாங்க-அறநிலையத்துறை குண்டர்கள் தொந்தரவு இருப்பவர்கள்.. அவசியம் இந்த கூட்டத்துக்கு செல்லவும்.. நிச்சயம் ஒரு நல்ல வழி கிடைக்கும்.. இவர்கள் தான் சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை -திராவிட-கம்யூனிச  கும்பலிடம் இருந்து மீட்டவர்கள்.

இணைப்பிலும் லிங்க்களிலும் கோயில்களுக்காக இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றிய (ஒரு பகுதி மட்டும்) ஆவணங்கள் உள்ளன. 

ஆலய வழிபடுவோர் சங்கம் வெப்சைட்: Temple Worshippers Society


image
ஈரோடு விஜயமங்கலம் கோவில்: அறநிலையத...
1994 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் ஞாபகமாக இவர்கள் வைத்த ஒரு கல்வெட்டை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆயிரம்...
Preview by Yahoo


image
அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறந...
கோயிலை பல ஆண்டு காலம் பராமரிக்காமல் நாசம் செய்து விட்டு பின்னர் திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் பல இலட்சம் செலவு ச...
Preview by Yahoo


image
நசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக க...
மண்டபங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட லாரிகளில் அழகாக வெட்டி எடுக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டதா...
Preview by Yahoo1 comment:

 1. அறநிலையத்துறை சட்டம், அதனால் நம் கோயில்களுக்கும் ஹிந்து சமூகத்துக்கும் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள், இந்த துறையின் தோற்றம், செய்யும் தவறுகள் என்று அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கவும் பகிரவும்.
  கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கோயில் பிரச்சனைகளுக்கு போராடும் ஹிந்து சகோதரர்கள் அனைவருக்கும் இந்த லிங்கை கட்டாயம் அனுப்பவும். பொதுமக்களுக்கு அறநிலையத்துறையால் கோயில்களின் பாரம்பரியம், சொத்துக்கள் எல்லாம் எப்படி அழிந்து வணிக மையங்களாக மாறி வருகின்றன என்பதை எடுத்துரைக்க இந்த வீடியோ கட்டாயம் உதவும்.

  https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

  *கோயில்களை சர்க்கார் அறநிலையாத்துறை என்னும் துறை மூலம் ஆக்கிரமித்து கோயில் சொத்துக்களை "கவனிக்கிறது". இதுபோல அரசாங்கம் சர்ச்களையோ, மசூதிகளையோ சுரண்டுவதில்லை. ஏன் கோயில்களுக்கு மட்டும் இந்த சாபம்?

  *கோயில் சொத்துக்களை சரிவர பராமரிக்காமல், அவற்றை அரசு வேலைகளுக்கும் அரசியல்வாதிகள் வேலைக்கும் விற்று பயன்படுத்துகிறார்கள்! அக்கிரமங்களின் உச்சம் இது. கோயில் ரெஜிஸ்டர் என்னும் புஸ்தகம் பேணப்பட வேண்டும். அதில் கோயில் சொத்துக்கள் பற்றி விவரங்கள் இருக்க வேண்டும். எந்த கோயிலிலும் அறநிலையாத்துறை முறையாக பராமரிப்பதோ பேணுவதோ இல்லை. இது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

  *இந்த அறநிலையாத்துறை மதசார்பற்ற அரசால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாரபட்சமாக நடத்தும் கொடுமை ஆகும்.

  *அறநிலையாத்துறைக்கு கோயில் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. கோயில் பூஜை முறைகளையோ, விழாக்கலையோ, பிற பணிகளையோ கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை.

  *கோயிலுக்குள் பலகாரக் கடையை "பிரசாதக்கடை" என்னும் பேரில் நடத்துவது தவறு மட்டுமல்ல அசிங்கமும் ஆகும்.

  *கோயிலுக்குள் ஆகம விரோதமாக பழைய அமைப்புகளை சிதைப்பது புதிய கட்டிடங்கள் கட்டுவது மிகப்பெரிய குற்றம். குறிப்பாக அறநிலையாத்துறை அதிகாரிகளுக்கு கோயிலுக்குள் அலுவலகம் இருக்கவே கூடாது.

  *அறநிலையாத்துறை கோயிலுக்கு ஒரு வேலைக்காரர்கள். அவ்வளவே. கோயிலை தங்கள் இஷ்டம் போல எடுத்துக் கொள்ள முடியாது. நிர்வாகம் சரியில்லை என்று சட்டப்படி நிரூபித்து கோயிலை எடுத்தாலும் அதிகபட்சம் மூண்டு முதல் ஐந்து வருடத்துக்குள் மீண்டும் நிர்வாகத்தை ஒப்படைத்து கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

  இதுபோல, இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த அறநிலையாத்துறை பற்றி உள்ளது. அனைவரும் இந்த அறநிலையாத்துறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட லிங்கில் அறநிலையாத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.கோயிலில் கருத்து வேறுபாடு என்று அறநிலையாத்துறையை உள்ளே கொண்டு வந்து விடுபவர் அந்த கடவுளுக்கே துரோகம் செய்தவனாவார். அப்படி செய்பவர் கோயிலை இடித்து கோயில் சொத்தை தின்றவர்கள் என்ன ஆவார்களோ அதே நிலைக்கு ஆளாவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அந்த புத்தகத்தின் வீடியோ இணைப்பு:https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates