Trending

Tuesday, 9 September 2014

அழகுக்கலையா? அசிங்கப் பிழையா?

-- தெய்வநாயகி

ஆள் பாதி ஆடை பாதி என்றது போய், ஆடை பாதி அலங்காரம் பாதி என்று மனிதன் அந்த இரண்டுக்குள் ஒளிந்து கொல்லும் சூழல் தற்போது வளரப்பார்க்கிறது. முளையிலேயே கிள்ளி, நவீன அழகுக்கலையில் என்னென்ன சூது-தீமைகள்-ஆபத்துக்கள் உள்ளன, நம் முன்னோர்களின் அழகுக்கலை போன்றவை கூறப்பட்டுள்ளன. அன்னை அபிராமிக்கு அர்ப்பணம்.

நவீன உலகத்தில் பலரிடம் பேசவேண்டிய சூழ்நிலை, அறிமுகம் உடையவரா? இல்லையா? யாராக இருந்தாலும் பேசவேண்டிய நிலை. அப்படி பேசும்போது ஒருவரின் முகம், தோற்றம், உடை முதன்மை பெறுகிறது. மொத்தத்துல அழகா இருக்கணும், அப்படி இருந்த தான் சமூகத்துல ஒரு மதிப்புகிடைக்கும். அதனால் தான் இன்று தெருவுக்கு நாலு அஞ்சு அழகு நிலையம் உருவெடுத்து நிற்கிறது. ஏராளமான அழகு சாதனப்பொருட்கள் சந்தையில் குவிகின்றது. முடிமுதல் அடி வரை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு தரப்படுகிறது.

ஒருவரின் வருமானத்தில் சராசரியாக 30% அழகுநிலையதிற்கும், அழகு சாதனப்பொருளுக்கும் செலவு செய்யப்படுகிறது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. 

இதோ, தலை முடிக்கு சாதரன தேங்காய் எண்ணை போடுவதில்லை, அஸ்வினி ஹேர் ஆயில், ஷாம்பு , கண்டிஷனர், ஹேர் ஸ்ப்ரே. அப்பரம் பொடுகு வராம இருக்க பொடுகு எதிர்ப்பு ஷாம்பு. முகத்துக்கு கிரீம், பவுடர், வெயில போன கருக்காம இருக்க சன் ஸ்க்ரீன். கண்மை, மஸ்கார, உதட்டுச்சாயம் (lipstick,lipgloss & lipliner), நகச்சாயம், பாடி ஸ்பிரே, பாடி லோஷன் என்று ஏகப்பட்ட அழகு சாதனப்பொருட்கள் சந்தையில் கோலோச்சி நிற்கின்றன. இதுமட்டும் இல்லாமல் நல்ல இருக்கற முடிய சுருட்டவும், சுருட்ட முடிய நீட்டவும், வெட்டவும் அழகு நிலையங்களில் அலாதியான காசு பார்க்கப்படுகிறது.

கூடாப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மனிதனின் உயிருக்கே உலை வைப்பது.அவற்றை தயாரிப்பதால் இயற்கைக்கும் பேரழிவு. கூந்தலை நேராக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் 'பார்மால்டிஹைட்' எனப்படும் ரசாயனம் அளவுக்கு அதிகமாகவே கலந்துள்ளது. இது புற்று நோயை ஏற்படுத்தும் என உலக நல்வாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் கேச பராமரிப்பு மற்றும் பொடுகு எதிர்ப்புச் ஷாம்பு மூலம் கிட்னி, ஈரல், வயிறு மற்றும் இதர உறுப்புகளில் கோளாறு ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கூந்தல் ஸ்பிரேயைப் பயன்படுத்துவதால் திசொரொஸின் என்ற நுரையிரல் நோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.
நகப் பாலிஷ் (டியூடெக்ஸ்) நகத்துக்கு அடியில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகின்றனவாம், சிலருக்கு நகச் சாயம் ஒவ்வாமை மற்றும் புற்று நோய் ஏற்படும். குழந்தைப் பிறப்பிலும், குழந்தைக்கும் கடும் பாதிப்பை ஏற்ப்படுத்தும். நகப்பாலிஷ்  நாம் உண்ணும உணவில் சிறிது சிறிதாகக் கலந்து ஸ்லோ பாய்சன் போல செயல்படுகிறது. மேலும் சில மஸ்கராவில் போதைப் பொருட்கள் கலக்கப்படுவதால் கண் எரிச்சல்,நீர் வடிதல், கண் சிகப்பாகுதல் போன்றன ஏற்படுகின்றன.இளம் வயதில் சீக்கிரம் பார்வைக்குறைபாடு, பார்வை நரம்புகள் பலவீனமாதல் என நீண்டு மட்டமான பொருட்களை தொடர்ந்து உபயோகிப்பதால் கண்பார்வையை இழக்கவும் வழிவகுக்கின்றன.

லிப்ஸ்டிக் இது  மனச்சிதைவு, கருச்சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத்தன்மை இழப்பு உட்படப் பல்வேறு சிக்கல்களை உருவாக்கக் கூடுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில் தெரிவிக்கிறார். லிப்ஸ்டிக் வயிற்றுக்குள் செல்வதால் உணவுப்பாதை மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முகத்துக்கு பயன்படுத்தும் கிரீம், இது பெரும்பாலும் மிருகக் கொழுப்பு  சேர்க்கப்பட்டிருக்கும். ஹெவி மெட்டல்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தரமற்ற பொருளை பயன்படுத்துவதால் சரும நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். இது போன்ற கிரீம்களை தொடர்ந்து பூசுவதால் தோல் அதன் தன்மையை இழக்க நேரிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. 

லிப்ஸ்டிக் முதல் கிரீம்கள் வரை பல்வேறு அழகுசாதனப்பொருட்களும் பன்றி அல்லது மாடு அல்லது இரண்தின ரத்தம், கொழுப்பு, கொம்பு, எலும்புத்தூள் போன்ற பொருட்கள் கலக்கப்படுகின்றன.

கிளிக் செய்து பெரிதுபடுத்திப் படிக்கவும்

வாசனைத் திரவியங்களிலும் உடலில் தெளித்துக் கொள்ளும் பாடி ஸ்பிரேக்களிலும் 'பாரபீன்ஸ்' (parabens மற்றும் பாத்தலேட்ஸ் (phthalates) போன்ற அமிலங்கள் கலந்திருப்பதால் இவை காற்றில் கலந்து உடலுக்குள் புகுந்து ஊறு விளைவிக்கக் கூடியவை. மேலும் மார்பகப் புற்று நோய் ஏற்படக் கூடியதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

சேலத்தில் மிகப்பிரபலமாக இருந்த அரசியல்வாதி டை அடித்ததன் காரணமாக விஷம் உடலில் ஸ்லோ பாய்சனாக பரவி இறந்துபோனார். அப்படியானால் அதில் எவ்வளவு விஷம் இருக்கிறது; அன்றாட சிறிது சிறிதாக எவ்வளவு தீமைகள் நமக்குள்ளே செல்கிறது என்று பாருங்கள். தலைவலி, கண் பாதிப்பு, நரம்புக் கோளாறு, ஹார்மோன் சீர்கேடு என்று டை ஏற்படுத்தும் சிரமங்கள் ஏராளம். நம் முன்னோர்கள், வண்ணான் துணியில் குறியிட பயன்படுத்தும் செக்காங்கொட்டை மூலம் இயற்கையில் செய்யப்படும் டை பயன்படுத்தினார்கள்; அது ஒரு தீங்கும் செய்யாது.

கடந்த சில வருடங்களில் தான் அழகு சாதனப்பொருள் இவ்வளவு பெரிய அசுர வளர்ச்சி அடைந்தது. அதற்கும் மூலகாரணம் ஊடகங்கள் சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், விளம்பரங்கள், இவர்கள் முன்னிறுத்தும் ஊடக மனிதர்கள். ஊடக மனிதர்கள் பெரும்பாலும் திரைப் பிரபலங்கள். அவர்கள் எதை சொன்னாலும் அதை நம்பி ஏற்றுக்கொள்வது, அவர்கள் திரை பொம்மைகள், அது அவர்களின் நிஜ முகம் அல்ல போலியான முகம் & உடை. நடிகர்களின் மாய விளம்பரத்தில் மயங்கி பெண்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள். (இதுவரை காஸ்மேடிக்ஸ் பற்றி பேசாதவர்கள் பெண்களை முட்டாள் என்று இங்கே எழுதியதற்கு குதிப்பார்கள்).

நாம் உண்மையில் பின்பற்ற வேண்டியது நம் முன்னோர்களை, திரை போலிகளை அல்ல. நம் முன்னோர்களும் அழகுகலையில் சிறந்தவர்களே.
அவர்கள் பின்பற்றிய வழிவகைகள்.

தலைக்கு தேங்காய் எண்ணை இது சூரியனின் வெப்பத்தை கூந்தல் தாங்கிக்கொள்ளவும், கூந்தல் வளரவும் உதவுகிறது. முடி உதிர்வதை தடுக்கும்.
தலைக்கு அரப்பு அல்லது சிகைக்காய் பயன்படுத்தப்பட்டது. இவை கூந்தலை அழகுபடுத்துவதொடு மட்டுமின்றி உடலுக்கு மிகவும் நன்மை பயப்பனவாகும்.அதை உணர்த்தும் கொங்கு வெள்ளாளர் திருமண மங்கலவாழ்த்துப் பாடல் 

"எழிலுடை கூந்தலுக்கு எண்ணெய் தனையிட்டுக் 
குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்து" 

மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்று எல்லோருக்கும் தெரியும்,வயிறு சம்மந்தமான நோய்களுக்கு சிறந்தது, பக்டீரிய தாக்குதலில் இருந்து பதுகக்கின்றது. மஞ்சள் பூசுவதை பிற்போக்குத்தனம் என்று உளறிய 'பஹூத்தறிவு' ஜீவிகளுக்கு இந்த விஞ்ஞான விளக்கங்கள் தெரியவில்லை போலும்.கண்ணுக்கு மை என்று வள்ளுவர் முதல் வைரமுத்து வரை பாடிஇருக்கிறார்கள். இந்த மை நந்தியாவட்டை அல்லது  கரிசலாங்கண்ணி கொண்டு தயாரிக்கப்பட்டது. மருத்துவ குணங்கள் கொண்ட இது கண்ணுக்கு குளுர்சியை கொடுக்கின்றது. (கரிசலாங்கண்ணி இலையை சாறெடுத்து புது மண் கலயத்தினுள் பூசி விளக்கெண்ணெய் தீபத்தின் வெப்பத்தை அந்த சட்டியினுள் காட்ட அது கரிப்பிடிக்கும். அந்த கரியை விளக்கேன்நெய்யில் குழைத்து கெட்டியான மை செய்வார்கள். அதுபோல சோற்றுக்கற்றாழையை பிசைந்து அதே தீப நெருப்பில் சுட்டு அந்த கரியை விளக்கெண்ணெயில் குழைத்தும் செய்வார்கள். இது கண்ணுக்கு நன்மை செய்யும்)

மருதாணி என்றாலே முகம் சிவக்கும். மருதாணி வைத்துக்கொள்வது கொங்குநாட்டு வழக்கத்தில் இருந்த ஒன்று,மருதாணி கை மற்றும் கால்களுக்கு பூசப்பட்டுவதால் கை மற்றும் கால் சிவந்து அழகாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் பித்தத்தை எடுக்கும் தன்மை கொண்டது. உடல் சூட்டை குறைக்கும், வருடத்துக்கு ஒருமுறையாவது மருதாணி வைத்தல் மனநோய் வராமல் தடுக்கும். கல்யாணத்துக்கு முன்னால் மருதாணி வைக்கும் பழக்கம் நம்மவர்கள் இடையே உண்டு. இதன்மூலம் பெண்-மாப்பிள்ளை உடல் சூடு தணிந்து பித்த நாடிகள் சமநிலை அடைந்து நல்ல சந்ததி உருவாக்கும் உடல்நிலையை அடைகிறார்கள். தற்போது மெஹந்தியில் மருதாநியோடு பல கலப்படங்களும் டீத் தூளும் கலக்கப்படுகிறது. இது பித்தத்தை அதிகரித்து நாடியை சீர் கெடுக்கும் என்பதறிக. சாந்து, புனுகு, சவ்வாது, பன்னீரும் சேர்த்துச் சந்தனம் பூசிக்கொள்ளும் பழக்கம் கொங்கு நாட்டில் இருந்தது இதை எடுத்துரைக்கும் மங்கலவாழ்துப்பாடல்

"சாந்து புனுகு சவ்வாது பன்னீரும் 
சேர்த்துச் சந்தனம் சிறக்கவே பூசிக் 
கொத்தரளி கொடியரளி கோத்தெடுத்த நல்லரளி   "

நம் முன்னோர்கள்  பயன்படுத்திய முறை, இவை அனைத்தும் இயற்கை நமக்கு தந்தது, இதில் ஏதும் பாதகம் இல்லை. மாறாக ஒவ்வொன்றுக்கும் நன்மையே கொடுக்கின்றது. நாம் உண்ணும் பாரம்பரிய  உணவிலும் ஏராளமான நன்மை உள்ளது. அதை விடுத்தது செயற்கை உணவுக்கும், வெளிநாட்டு மோகத்துக்கும் அடிமைப்பட்டு சொந்த சிந்தனை இல்லாத பலியாடுகlளாகத் திரிகின்றோம். இதனால் பாதிப்பு ஒவ்வொருவருக்கும் தான், ஒருவரின் சுய வருமானம் கரைக்கப்படுகிறது, இதற்கு சான்று இன்று கோலோச்சி நிற்கும் cosmetology கிளினிக் மற்றும் கோர்ஸ். பொது மருத்துவமனையை விட இவை அதிகம், உங்கள் ஊரிலும் இருக்கும் கவனித்துப் பாருங்கள். பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி வரை இல்லை ஆனா இப்போது இருக்கும். ஒரு பொருளை அழகுப்  பொருள் என்று சாதாரண மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் திணிக்கப்படுகின்றன, அதனால் வரும் பின் விளைவுகளுக்கு வெளிநாட்டு மருத்துவ முறை, வெளிநாட்டு மருத்துவ படிப்பு, வெளிநாட்டு மருந்து. அவை மட்டுமின்றி மக்கள் படும் துன்பம், உற்பத்தியிழப்பு என்று தொடர் நஷ்டம். இதை எந்த ஒரு நிலையிலும் நிறுத்த முடியாது. இதனால் நாடே வெளிநாட்டிடம் கையேந்து நிலை. தனிமனிதனை மாத்திரமல்ல, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது!காரணம், அழகு சாதன விஷங்கள் பெரும்பாலும் வெளிநாட்டுக் குப்பைகளே. யோசிதுப்பருங்கள் ஒரு சாதாரண விஷயம் ஆனால் அதன் பின்புலன் நாட்டையும், நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட கிரீமை பூசிப் பழகிவிட்டால் தோல் அதற்கு அடிமையாகிவிடுகிறது. பூசுவதை நிறுத்தி விட்டால் பக்கவிளைவை காட்டுகிறது. ஆகமொத்தம் எதாவது ஒன்று நாம் தொடர்ந்து வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளபடுகிறோம். இது கிரீமுக்கு மட்டும் அல்ல ஷாம்பு , மருந்து எதுவானாலும் அது முடியாது  தொடரும்.


ஒருகாலத்தில் இயற்கை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நம் அழகுக்கலைகளை பழித்த திராவிட முற்போக்கு கம்யூனிச கும்பல், அன்றுமுதல் இன்றுவரை டிவி, படம், ஊடகம் என  மேற்கத்திய செயற்கை விஷ பொருட்களை விளம்பரப்படுத்துவது, பயன்படுத்துவது, சகஜப்படுத்துவது, பேஷனாக்குவது குறித்து வாயே திறக்க மாட்டார்கள்.நம் சமூகத்தில் கல்யாணம் நிச்சயமாகிவிட்டால் அசைவம் சாப்பிடவே கூடாது (கொங்க வெள்ளாள கவுண்டர்கள் சைவ உணவினர்; ஆனால் காலப்போக்கில் அசைவ உணவினர் ஆயினர். அதன் எச்சமாக நிற்பதே இதுபோன்ற கல்யாண காலங்களில் மட்டுமாவது சைவமாக இருப்பது). ஆனால், இன்றைய சில இளைஞிகளோ மாடு பன்றி போன்றவற்றின் ரத்தம், கொழுப்பை உடல் முழுதும் மேக் அப் என்னும் பேரால் பூடிக்கொண்டு அலைகிறார்கள். சாமானிய குடும்பத்தின் கல்யாணத்தில் கூட மேக் அப் செலவு குறைந்தபட்சம் ரூ.15,000.00 ஆகிறது. இந்த பெண்களின் கட்டாயத் தூண்டலால் பசங்களும் இந்த பார்லர் கருமாந்திரத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதெல்லாம் கேவலத்திலும் கேவலம். கொங்கு பெண்கள் எவ்வளவு தாழ்வு மனப்பான்மையோடு சினிமா நாய்களின் மதிப்பிறழ்வுக்கு அடிமையாகியுள்ளார்கள் என்பதற்கு அடையாளம். இதை உணர்ந்த பலறும் இன்று இயற்கை நோக்கி மாறத் துவங்கியுள்ளார்கள். திருந்தாதவர்கள் இனியாவது திருந்துவோம். அவ்வளவு இயற்கை நலனையும் மிக சொற்ப செலவில் கொடுத்த நம் பாரம்பரிய முறையை விட்டு அதீத செலவு செய்து சாவையும் நோய்களையும் விலைக்கு வாங்க வேண்டாம்.

1 comment:

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates