Trending

Wednesday, 5 November 2014

களையிழந்து போன எங்கள் ஏரிக்கருப்ராயன் கோவில்

பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஏரிக்கருப்ரராயன் சாமி கோவிலில் முன்னர் இருந்த ஒரு பத்தி பரவசம் இப்போது இல்லை... சின்ன வயசுல இருந்தே என் அம்மா கூட புதன்கிழமை தோரும் சென்று வழிபட்டு வந்தேன்....


அப்பொழுதெல்லாம் கோவில் வளாகத்தில் சுடு மண் சிற்ப குதிரை, மனித உருவங்கள், ஆடு, மாடு போன்ற சிலைகள் வேண்டுதலின் பெயரில் வைக்கப்பட்டிருந்தது, ஒரு ஆயிரம் பேருக்கு நடுவே சென்றது போல இருக்கும், மேலும் இங்கு கருப்பராயன் சுயம்புவாக எழுந்தவர் எனவே மிகுந்த சக்தி படைத்தவர், மேலும் இங்கு முக்கிய சிறப்பு முன் மண்டபத்தில் இருபுறமும் இருக்கும் பெரிய மினி (கருப்பராயன்), அன்னாந்து பார்க்கும் போது ஒரு நிமிடம் எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் பயமாக இருக்கும் அவ்வளவு கோவமாக உக்கிரம் அந்த சிற்பக்கலையில் வெளிப்பட்டது...பண்டிகை காலங்களில் கிடா வெட்டி அந்த இடமே ரத்த வெள்ளத்தில் மிதக்கும், பலியிட வீட்டுக்கு ஒரு கிடா வளர்த்த காலங்கள் உண்டு... அப்பேற்பட்ட கோவிலில் பெரிதாக செய்கிறேன் பேர்வழி என்று பழைய கோவிலை தரைமட்டமாக இடித்து சுயம்பு மூர்த்தி தவிர அனைத்தும் நீக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட முன் மண்டப மினி பெரிய சைஸ் ஆனால் பழைய பய உணர்வு வரவில்லை மேலும் உள்ளே பலிடும் கருப்பராயன் சிலைகள் கோவிலுக்கு வெளியே தனியாக மரத்தடியில் வைக்கப்பட்டுள்ளது, ரத்தக்கறை ஆகாமல் இருக்க வேண்டி, கோவிலை சுத்தமாக வைக்கிறார்களாமா,..
அந்த இரண்டு மினியையும் மறைத்து விட்டு இது என்ன கோவில் என்று கேட்டால் யாராலும் பதில் சொல்ல முடியாது அவ்வளவு மாற்றம் உள்ளே இருந்த வேண்டுதல் சுடுமண் சிற்பங்களை வைத்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இடித்து தரைமட்டமாக்கினர்...

மேலும் முன் மண்டப மினி சிலைகளையும் இடிக்க வேண்டாம் மறுபடியும் அவ்வாறு அமையாது என்று கூறியும், பெரிதாக கட்டுகிறோம் என்ற பெயரில் இடித்து தள்ளினார்கள்... இப்பொழுது தன் பொழிவை இழந்து டைல்ஸ் கஸ் கொண்டு பளபளக்கும் இடமாக மாற்றியது தான் மிச்சம்...

சுத்தம் சோரு போடும் ஆனால் என்னாளும் பக்தியை தராது...

இன்று பொங்கள் திருவிழாவிற்கு சென்ற போது மனசு கேட்கவில்லை...என் தெய்வத்திற்கே சோதனையா எங்கு சென்று முறையிடுவேன்...எனக்குள் இருக்கும் ஆதங்கம் எங்கள் ஊரில் உள்ள கருப்பராயன் சாமியை தன் நினைவு தெரிந்த நாளில் இருந்து வழிபட்டவர்களுக்கும் உள்ளது... மதில் சுவர் கோபுரம் பழையது இடியும் நிலையில் உள்ளது அதை இடித்து கட்ட போரோம் என்று கூறினார்கள், ஆனால் உள்ளே உள்ள சிலைகள் அகற்றப்படும் என்று எவரும் சொல்லவில்லை, என் அம்மா மற்றும் அவரது வழி சொந்தங்கள் அனைவரும் சாமி ஆடி அருள் செல்பவர்கள் அவர்கள் கோவிலில் நடந்த இந்த மாற்றத்தில் கோவிலுக்கே வருவதில்லை, அவர்களின் அருள்வாக்கு படி ஏற்கனவே நிறைய முறை இடித்து கட்டும் பணி தடைபட்டது.. கடைசியாக கும்பாபிஷேகம் செய்யும் போது தான் தெரிந்தது... எனக்கும் என் அம்மாவிற்கும் நேற்று கோவிலில் மனசே இல்லாமல் தரிசனம் செய்துவிட்டு வந்தோம்....

-Sathiya Rasu

தொடர்புடைய பதிவுகள்:
கோயில் புனரமைப்பு முறை: http://www.karikkuruvi.com/2014/08/blog-post_18.html
புராதன கோயில்கள் திட்டமிட்டு சிதைப்பு: http://www.karikkuruvi.com/2013/10/blog-post_21.html
ஆலய வழிபடுவோர் சங்கம்: http://www.karikkuruvi.com/2014/08/blog-post_13.html
அறநிலையத்துறை அக்கிரமம்: http://www.karikkuruvi.com/2014/04/blog-post_3811.html

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates