Wednesday, 3 December, 2014

கொங்கதேசத்தில் வீரமாத்தி

வீரமாத்தி-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி கோயில் போன்ற கோயில்களை கொங்கதேசம் முழுக்கவே நாம் பார்க்கிறோம். இந்த கோயில்களின் வரலாறு என்ன, இவை சொல்கின்ற செய்திகள் என்ன??

வீரமாத்தி வழிபாடு பற்றிய பூர்வாங்கத்திற்கு போகும்முன் அக்காலத்தின் கணவன் மனைவி உறவு, கல்யாணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நம் கொங்கு கவுண்டர் சமூகத்தில் ஒரு பெண்ணின் கல்யானத்தின்போதே அவள் உடன்பிறந்தோரிடம் சம்மந்தம் கொள்வதாக சகோதரன்-சகோதரி ஒப்பந்தம் செய்துகொள்வார்கள் (அதனால் தான் வேறு இடத்துக்கு பெண் கொடுப்பதாக இருந்தால் மாமன் வீடு பொட்டு போட்டு ஆசீர்வதிப்பது அவசியமாகிறது; இது சீர் முறைகள் செய்து செய்த முறையான கல்யானதுக்குத்தான்-சீரழிந்த கல்யாணங்களுக்கு பொருந்தாது). அப்படி சகோதரன்-சகோதரி வீட்டில் பெண் கொடுத்து எடுக்காவிட்டாலும், பெண் பருவமடைந்தவுடன் கல்யாணம் செய்துவிடுவார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவத்தில் கல்யாணம் செய்துவிடுவார்கள். தான் என்றும் தனக்கான விருப்பு வெறுப்பு, அடையாளம், சுயம் (individuality) என்ற ஒன்று உருவாகும் முன்னரே கல்யாணம் செய்வதால் ஆணும-பெண்ணும், தனது குணத்தை-ஆளுமையை, தனது துணைக்கு தக்கவாறு வளர்த்துக் கொண்டார்கள். அப்பா, அம்மா போன்ற உறவுகள் எப்படியோ அதே போல வாழ்க்கைத்துணையும் ஆழ்மன பந்தமாக உறுதியாக இருந்தது. எனவே விவாகரத்து என்பது மிக மிக அதிசயமாக இருந்தது. அதோடு பருவ கல்யானத்தால் தேவையற்ற காம கொந்தளிப்புகள், அவற்றை அடக்கும் அவசியம், அடக்க இயலாமையால் குற்ற உணர்ச்சி, கண்ட சாதிகளோடு காதல் (விபசாரம்), ஓடிப்போதல் போன்ற அசிங்கங்கள் ஏற்படவில்லை.

(இதுவே இக்காலத்தில் முப்பது வயதில் கல்யாணம் செய்வதால் கணவன்-மனைவி என்ற உறவு மூன்றாவது மனிதர் போல ஆகிறது. இதனால் ஏற்படும் சமூக, குடும்ப, உடல்-மன பாதிப்புகள் ஏராளம். விவாகரத்துகளுக்கும் இதுவே காரணம். இன்றைக்கும் நம் சமூகத்தில் காதல் கல்யாணம் தவிர்த்து நிச்சயிக்கப்பட்ட முறையான கல்யாணங்களில் விவாகரத்து அரிதே)

ஆக, இப்படியாக அக்காலத்தில் கணவனும் மனைவியும் பிரிக்க முடியாத அன்பும், பாசமுமாக இணைந்திருப்பார்கள். அப்படியான உறவில் கணவன் மரணமடைந்தால் கற்பு நெறியில் உயர்ந்த அந்த மனைவியடையும் வேதனை சொல்லி மாளாது. அதை பிறந்துவிட்ட இக்காலத்தில் திராவிட சாக்கடை ஆட்சியில் பிறந்த நம்மால் உணரக்கூட முடியாது. கற்பின் வலிமையால்-அன்பின் மிகுதியால் தன் துணையோடு உயிர் விடுதல் ராமாயணம் மகாபாரதம் முதல் தற்காலம் வரைகூட தொடர்ந்து நடக்கும் செயல். இது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் மிருக-பறவை இனங்களில் கூட காண இயலும் காட்சியே. இது உயிரினத்தின் அடிப்படை உணர்வு வெளிப்பாடு என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். இயற்கையாகவே உணர்வுப்பூர்வமான பெண்கள் அப்படி கணவனை இழக்கும்போது அந்த செய்தி கேட்ட அதிர்ச்சியிலேயே உயிரை விட்டுவிடுவார்கள். அப்படி உயிர் போகாவிட்டாலும் கணவனோடு சேர்ந்து தீப்பாய்ந்து உயிரை விட்டுவிடுவார்கள். அப்படி தீப்பாய்ந்து உயிரை விட்ட உத்தம மாதரசிகளை நாம் வீரமாத்தி-தீப்பாஞ்சம்மன்-புடவைக்காரியம்மன்-படைக்கலக்காரி போன்ற பெயர்களால் வணங்குவோம். தீப்பாய்ந்து உயிரை விடாதவர்கள் விதவை நோன்பு ஏற்று, வெள்ளையாடை உடுத்தி, உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறைகள் மூலம் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ்வார்கள். கணவனை இழக்கும் பெண்கள் இந்த மூன்று வழிகளில் ஒன்றையே தேர்ந்தெடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் கணவன் என்றில்லை, தன் மனதில் (கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட) ஒருவனை நினைத்துவிட்டால் போதும் அவன் கல்யாணத்துக்கு முன்னர் இறந்தாலே வேறொருவனை நினைக்க-மணக்க விருப்பின்றி நம் குல பெண்கள் தீப்பாய்ந்து உயிர் விட்டுள்ளனர்!சங்க இலக்கியங்கள் தலைகற்பு இடைக்கற்பு கடைக்கற்பு என்று மூன்று நிலைகளை உரைக்கிறது.


 1. தலைக்கற்பு என்பது-கணவன் உயிர்விட்ட செய்தி கேட்டதும் மனைவி துக்கம் தாழாது தானாக உயிரை விட்டுவிடுவதாகும். இந்த மரணங்கள் இன்றளவும் நாள்வாங்கு வாழ்ந்த பெரியவர்கள் மரணங்களில் காண்கிறோம் (கீழே உள்ள செய்தித்தாள் கட்டிங்களை பார்க்கவும்). ராவணன் மனைவி மண்டோதரி, சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டியன் மனைவி பாண்டிமாதேவி, சேரன் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மனைவி, பெருவிறற்கிள்ளியின் மனைவி ஆகியோர் கணவன் இறந்த செய்தி கேட்டதும் உயிர்விட்டவர்கள்.
 2. இடைக்கற்பு என்பது - கணவன் இறந்த செய்தி கேட்டு துக்கம் தாழாது, தானும் கணவனின் சடலத்தொடு சேர்ந்து தீப்புகுதல், உண்ணாநிலையில் வடக்கிருந்து உயிர்நீத்தல், உள்ளிட்ட உயிர்மாய்த்துக் கொள்ளல் ஆகும். மகாபாரதத்தில் பாண்டு மறைந்ததும் மாத்ரி உடன்கட்டை ஏறினார். நம் கொங்கதேசத்தில் பல நூறு சம்பவங்கள் அதுபோல நடந்துள்ளன (விரிவான தகவல்கள் கீழே). குறுந்தொகையில் ஒரு பெண் குரங்கு ஆண்குரங்கின் பிரிவு தாழாது இறந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. 
 3. கடைக்கற்பு - என்பது உயிர்நீக்காது, கணவனை நினைத்து தன் வாழ்நாளை விரதகோலம பூண்டு வாழ்தலாகும். மங்கள அணிகள் நீக்கி, உணர்வுகளைத் தூண்டாத உணவுகளை உண்டு, உடல் சூட்டை இறக்க வெற்றுத் தரையில் உறங்கி, வாழ்நாளை நகர்த்துவர். கொங்கதேசத்தில் கணவனை இழந்தாலும் பெண்கள் தங்கள் வேலைகளிலும் ஆளுமையிலும் பல அரும்பெரும் பணிகளை செய்துள்ளனர். கணவன இறந்தபின்னர் பெண்ணின் தாய்வீட்டார் பருத்தி கொடுத்து நூற்றுப் பிழைக்க வழிவகை செய்வது மரபு, இன்றளவும் தொடர்கிறது.  • ஒரு பெண்தான் வீரமாத்தியாக முடிவு செய்யவேண்டும் (ஆம், பெண்தான் முடிவு செய்ய வேண்டும்; அது பெண்களின் சுய விருப்பமே தவிர கட்டாயமன்று).  • குடும்பத்தாரும் ஊராரும் வேண்டாம் என்று கூடுமானவரை எதிர்த்து சமாதானம் செய்ய முயற்சிப்பார்கள். பெரும்பாலான சூழலில் குடும்பத்தாரை எதிர்த்து பகைத்து போராடி வீரமாத்தியான பெண்கள் ஏராளம்.
 • பெண் வீரமாத்தி இறங்க கட்டுப்பாடுகள் உண்டு-பருவமடையா பெண்ணாக இருத்தல் கூடாது, கர்ப்பமாக இருத்தல் கூடாது, குழந்தைக்கு பாலூட்டி பாதுகாத்துவரும் நிலையில் இருக்கக்கூடாது, வீட்டுக்கு தூரமாக இருத்தல் கூடாது போன்றவையாகும். தீப்பாயும் முன் அந்த பெண்ணுக்கு உடல் பக்குவமாக நெய் மஞ்சள் வேப்பிலை போன்றவற்றால் பற்றுகள் போட்டு பக்குவப்படுத்துவார்கள்.

 • விதவையாக வாழ முடிவெடுத்தாலும் அதையும் ஏற்றுக் கொண்டு அந்த பெண்ணுக்கு பெண்ணின் குடும்பத்தார் கடைசி வரை ஆதரவாக இருந்து துணை புரிவார்கள்.

தெற்கு மாவட்டங்களில் நடக்கும் நோம்பியில்


மேற்சொன்ன செய்திகளுக்கு உதாரணமாக சில கொங்கதேச சம்பவங்களைப் பார்க்கலாம். 
 • காளமங்கலம் நல்லாத்தாள், தன் கணவரை புலி தாக்கியதால் இழந்த போது தீப்பாய முடிவெடுத்தார். அதை தடுத்த தன் உடன் பிறந்த சகோதரர்களுக்கு தனது படைக்கல பூசை உரிமைகளில் முன்னுரிமை கொடுக்காது; அவருக்கு உதவிய பங்காளி வீட்டு சகோதரர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

 • தோக்கவாடி வேலாத்தாள், தனது கணவர் இறந்தபின்னர் தீப்பாயும் தனது முடிவை நிராகரித்த தந்தையிடம் சண்டையிட்டு அரசனை சந்தித்து ஆதரவு பெற்று வந்து தீப்பாய்ந்தார்.


 • ஈரோடு ஆண்டகொத்தாம்பாளையம் சோளியம்மா, தனக்கு நிச்சயிக்கப்பட்ட வேலப்ப கவுண்டர் மரணிக்கவே அவர் இருந்த திசை பார்த்து தீ வளர்த்து இறங்கி உயிரை விட்டார் (கணவர் இல்லாது தனியே வேறு இடத்தில் தீப்பாய்வது அனுமரணம்; கணவர் சவத்தொடு தீப்பாய்வது சக மரணம்) 
 • தலைய நாடு கன்னிவாடியில் பட்டக்காரர் மனைவியர் மட்டுமின்றி பட்டக்காரர் மேல் அன்பும் பாசமும் மிகுந்திருந்த அவரது குடிபடைகளான ஆண்டி, நாவிதர் மற்றும் பறையர் ஆகியோர் தீப்பாய்ந்தனர். 
 • மல்லசமுத்திரம் தொண்டமாக்கவுண்டர் மனைவியார் சின்னாத்தா தொண்டமா கவுண்டருடன் சேர்ந்து தீப்பாய்ந்தார்.

மல்லை தொண்டைமாகவுண்டர் தீப்பாய்ந்தம்மன் கோயில் 

·  காடையூர் வெள்ளையம்மா கணவர் இறந்த பின்னர் தீப்பாயாது இருந்து தனது குழந்தைகளை வளர்த்து பட்டக்காரராக்கினார்.
காடையூர் வெள்ளையம்மா 
வீரமாத்தி சதிக்கல்லை ஒத்திருக்கும் சிற்பங்கள்
குமாரமங்கலம் பொன்காளியம்மன் கோயில் 

கணவன் இறந்ததும் வீரமாத்தி இறங்க முடிவெடுக்கும் பெண்ணை குதிரையில் அழைத்து வருவார்கள். அந்த தெய்வப்பெண் செல்லும் வழியில் சுமங்கலிப் பெண்கள் அவரிடம் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அந்த பெண் தனது சொத்துக்களை நல்லாருக்கும், உறவினருக்கும் பிரித்தளிப்பர். உடன்கட்டை ஏறும் இடத்தில் குழி வெட்டி குழிக்குள் கணவனின் சடலம் கிடத்தப்பட்டு நெய், எண்ணெயில் நனைந்த விறகுகள் நிறைக்கப்படும், குழியைச் சுற்றி நான்கு மூலையிலும் ஜ்வாலை தீண்டா தூரத்தில் தடிகள் நடப்பட்டு, வடக்கு திதியில் சிறிது சந்து விட்டு துணியால் சுற்றி மறைப்பு உண்டாக்குவார். வீரமாத்தி இறங்கும் பெண் வடக்கு சந்து வழியாக கணவன் சிதையை வளம் வந்து கணவனோடு குதித்து தீப்புகுவார். பெண்கள் குழவையிடுவர். அன்றிலிருந்து அந்த பெண் குலதெய்வத்திற்கு சமமாக வணங்கப்படுவார். அந்த பெண்ணின் முன் பின் 21 தலைமுறைப் பாவங்கள் நிவர்த்தியாகும்.

வருஷந்தோறும் அந்த வீரமாத்தி அம்மனுக்கு படைக்கலப் பூசை நடைபெறும். வீரமாத்திக்கு படைக்கலப் பூசை நடத்துவது பல சாபங்களை நீக்கி குடும்பத்துக்கு தலைமுறை செழிக்க வகை செய்யும்.


படைக்கல பூசை (சாமி செய்தல்) பற்றி தூரன் நல் நடராசன் மாமா விரிவாக எழுதியுள்ளார். படத்தை திருப்ப முடியலை. டவுன்லோடு பண்ணி படுச்சுக்குங்க சொந்தங்களே.

இந்த வீரமாத்தி முறை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக நம் கொங்கு பெண்கள், பின்பற்றிய ஒழுக்க நெறியையே சங்க காலம்தொட்டு கற்புநெறிக்கு இலக்கணமாக வகுத்துள்ளனர் என்பது தெளிவாகும். ஏனெனில் பல பெரும்பான்மை ஜாதிகளில் இந்த வழக்கங்கள் இருக்கவில்லை.

இந்த வழக்கம் பல காலமாக பாசத்தின் காரணமாக தொடர்ந்து வந்தது ஒரு காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தவர்கள் பாரதத்துக்குள் நுழைந்தபின்னர் பயத்தால் தீப்பாய துவங்கினர். பாரத போர் தர்மப்படி பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றோரை பாதிக்காதவாறு போர் செய்வார்கள். தோற்ற நாட்டில் பெண்களை கைதீண்ட மாட்டார்கள். அப்படி மீறி பெண்கள் மீது கைவைக்க நினைப்பது அதர்மமாக கருதப்பட்டது. உதாரணமாக தென்கரை போரில் கொங்கராயனை பறையர் படை கொண்டு வேட்டுவ-வேளாள கூட்டுப் படை வென்றது. அப்படி வென்றபோது கொங்கராயனின் மனைவியர் மற்றும் அவன் போர் வீரர்கள் அவரவர் கணவன்மார் சடலத்தொடு தீப்பாய முடிவெடுத்தபோது கண்ணியத்தோடு அனுமதித்தனர். ஆனால் முஸ்லிம்கள் படையெடுக்கும்போது தோற்ற நாட்டில் பெண்களை அடிமைகளாகப் பிடித்துப் போய் விற்றனர். நம் தங்கம், கலைப்பொக்கிஷங்கள், யானை, குதிரை போன்றவற்றை கொள்ளையிட்டு செல்லும்போது பெண்களையும் பிடித்து சென்று அடிமை சந்தையில் விற்றனர். அதற்கு பயந்து பாரதப் பெண்கள் தங்கள் நாட்டுப் படை தோற்றால் எதிரிகள் கையில் சிக்காதிருக்க தீப்பாய்ந்தனர். அதற்கு சிறந்த உதாரணம் சித்தூர் ராணி பத்மினி அவர்கள். பல ஆயிரம் பெண்கள் ஒன்றாக அலாவுதீன் கில்ஜியின் பிடியில் சிக்காதிருக்க தீயில் விழுந்து உயிர் விட்டனர்.
 
சித்தூர் ராணி பத்மினி உயிர் விட்ட இடம் (கோயில்)


தற்கால கிறிஸ்தவ-முற்போக்கு-கம்யூனிச லாபி உடன்கட்டை என்றதும் சமூக கொடுமை, பெண்ணை கட்டி நெருப்பில் வீசும் காட்டு மிராண்டித்தனம் என்று சொல்கிறார்கள். அவர்களே, கணவனை கொன்றுவிட்டு அவன் மனைவியை ரண்டாம் கல்யாணம் செய்து பிள்ளையாக பெற்று தள்ள வைத்து கொலை செய்தவன் கட்டிய சமாதியை காதலின் சின்னம் என்கிறார்கள்.

இந்த உடன்கட்டை மரபை எதிர்த்த ராஜாராம் மோகன் ராய் பற்றிய உண்மை முகத்தை நமக்கு நம் மெக்காலே கல்விமுறை போதிக்கவில்லை. அஜித் வடக்கில் ராஜாராம் மோகன் ராய் ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட்என்றும் ஓபியம் போதை வணிகத்தில் பிரிட்டிஷ்சுடன் வேலைசெயதவர் என்று நிறுவுகிறார்.

1. அனைவருக்கும் கட்டாயம்: உடன்கட்டை ஏறுதல் பற்றி பேசத் துவங்கியவுடன் சொல்லும் முதல் வார்த்தை கணவனை இழந்த பெண்கள் எல்லாரையும் பிடித்து கட்டி தீயில் போட்டுவிடுவார்கள் என்பதுதான். தீப்பாய்வது அந்த பெண்ணின் முழு முடிவு; அதோடு உறவினர்கள் எதிர்த்துள்ளார்களே தவிர யாரும் கொல்ல முயன்றதில்லை. அதோடு இது கணவன் வீட்டார் சதி என்று சொன்னாலும், அக்காலத்தில் பெண் வீட்டாரும் அதே ஊரில் தான் இருப்பார்கள்; தங்கள் பெண்ணை கணவன் வீட்டார் கட்டி தீயில் போடுவதை எந்த தகப்பன் அனுமதிப்பார் சொல்லுங்கள்? பாரதத்தின் வட பகுதிகளில் சில இடங்களில் கட்டாயமாக நடத்தப்பட்ட சில சம்பவங்களை பொதுமைப்படுத்தி இவ்வழக்கதையே காட்டுமிராண்டித்தனம் என்று பட்டம் கட்டிவிட்டார்கள் வெள்ளையர்கள்; வட நாட்டில் நடந்த கொடுமைகள் என்று அவர்கள் ஏற்படுத்திய பிம்பம் கூட பொய்தான் என்பதை பல்வேறு அறிஞர்கள் ஏற்கனவே நிரூபித்துவிட்டார்கள்.
2. சொத்துக்காக: சிலர் சொத்துக்காக பெண்களை தீயில் வீசினார்கள் என்று உளறுகிறார்கள். அக்காலத்தில் பெண்களுக்கு கல்யாணத்தின் போதே சொத்தில் ஒரு பகுதியை பிரித்து கொடுத்துவிடுவார்கள். அதுதான் ஸ்திரீ-தனம் எனப்படும் சீதனம். நம் மங்கள வாழ்த்து பாடலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும். நகைகள், வண்டி, கருவிகள், பசுக்கள், காளைகள் என்று ஒரு பெரிய லிஸ்ட் அசையும் சொத்துக்கள் பெண்ணுக்கு வழங்கப்படும். கல்யாணத்தின் பிறகுதான் வீரமாத்தி என்பதே நடக்கிறது. அதோடு பெண்களுக்கு அசையா சொத்து கொடுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததில்லை, எனவே சொத்துக்கு உடன்கட்டை என்ற குற்றச்சாட்டு முரண்பாடானது.

போன ஓராண்டில் மட்டும், அதுவும் பத்திரிகையில் வந்தவை மட்டுமே
இன்றும் உள்ள வீரமாத்தி சம்பவங்கள்  
மேலே உள்ள படங்களில் உள்ளவை தற்காலத்தில் நடந்த மரணசெய்திகள். கணவன்-மனைவி பிரிவு தாங்காது உடனே உயிர்விட்ட சம்பவங்கள். பிற சமூகத்தவர்களையும் உள்ளடக்கியது. தன் துணையின் பிரிவை தாங்காது உயிர் துரத்தல் மனித இயல்பு, காலம்-மொழி, தேசம், மனித-விலங்கு என்ற பாகுபாடு கடந்து அனைவருக்கும் இருக்கும் இயல்பு என்பதை குறிக்க.

வெள்ளைக்காரன் வெறியோடு இந்த வழக்கத்தை எதிர்க்கக் காரணம், நம் பெண்களின் ஒழுக்கநெறியான வாழ்வு தான் குடும்ப அமைப்பின் ஆணிவேராக இருந்தது. குடும்ப அமைப்புதான் நம் நாட்டின், ஆன்மீக-சமூக கட்டமைப்பின் அடித்தளமாக இருந்தது. ஆக, பெண்களின் கற்பு நெறியை சிதைக்க அவர்கள் எடுத்த முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த கற்பொழுக்கத்தை கெடுக்காது மதம் பரப்புதல், நம் சமூக கட்டமைப்பை நொறுக்குதல், நம் நாட்டை சுரண்டுதல், உலகமயமாக்கல் போன்றவை சாத்தியப்படாது. எனவேதான் அவர்களுக்கு இந்த வெறி. ஒரு பெண் வீரமாத்தியானால் அந்த பெண்ணின் பிறந்த-புகுந்த வீடுகளின் 21 தலைமுறை பாவங்கள் தீருமாம். ஆனால் அந்த வீரமாத்தியாகும் முடிவு தானாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒருமுறை வீரமாத்தியம்மனுக்கு படைக்கல பூஜை நடத்தினாலே ஜென்ம சாபல்யங்கள் கூட தீரும். கற்பு நெறி நின்ற பெண்களின் ஆத்மா உயிர்விட்ட இடத்திற்கு அப்படியொரு சக்தியுண்டு. ஏனெனில் கற்புநெறி பிறழாத பெண்கள் தெய்வத்தை விடவும் சக்திவாய்ந்தவர்கள் என்பது வேதவாக்கு. இன்று கொங்கதேச குடிகளின் காணியாச்சி கோயில்கள் பெரும்பாலானவற்றில் அவர்கள் கூட்டத்தில் பிறந்து வீரமாத்தியான தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மட்டுமின்றி அவர்களோடு வாழ்ந்த அனைத்து குடியினருமே உயர்ந்த கற்பு நெறியான வீரமாத்தி மரபை பின்பற்றினர்.

வீரமாத்தி என்ற மரபை தவறாக சித்தரித்து பாரதத்தை கீழ்மைப்படுத்தும் செயலுக்கு எதிராக இதன் பின்னணியில் இருந்த அன்றைய சமூக - மக்கள் மரபுகளை எடுத்துரைத்து விளக்கியது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

-- அன்னத்தியாகராயன் வேலப்ப கவுண்டர்

மேலும் படிக்க:

தமிழ் & வேதாஸ் சங்கத் தமிழ் நூல்களில் “சதி”

No comments:

Post a Comment