Trending

Friday, 2 January 2015

ஜெயமோகனும் - மோரூர் கன்ன கூட்ட கவுண்டர்களும்

ஜெயமோகன் மாதொருபாகன் சர்ச்சை குறித்து முழுதும் அறியாமல் தனது கருத்தை அவர்தளத்தில் வெளியிட்டிருந்தார். நாட்டு கவுண்டர்களை அவர் சில்லுண்டிகள், தெருமுனை சண்டியர்கள், சில்லறைகள் என்று குறிப்பிட்டிருந்தார். அவருக்கு அறிவளிக்கும் முயற்சியாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.தக்கை ராமாயணம்: ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை போற்றி பரப்பினர். மோரூர் கன்ன கூட்ட மரபில் வந்த நல்லதம்பி காங்கேயன் ராமாயணம் ஒன்ரதொரு தெய்வீக இலக்கியத்திற்கு செய்யும் சேவையால் தன் பேர் நிலைக்க வேண்டும் என்று பத்தர்பாடி எம்பெருமான் கவிராயரைக் கொண்டு தக்கை ராமாயணம் என்னும் இசைக்காவியத்தை உருவாக்கி அரங்கேற்றச் செய்தார்.திருசெங்கோட்டு கோயில்த் திருப்பணி: திருசெங்கோட்டுக் கோயிலுக்கு மோரூர் காங்கேயர்கள் செய்த திருப்பணிகள்: மலைக்கோயில் படிகள், பல்வேறு மண்டபகங்கள், தள பாவுகற்கள், அர்த்தநாரீஸ்வரர் கோயில் மண்டபங்கள், செங்கோட்டு வேலவர் மண்டபங்கள், திருக்கோயிலைச் சுற்றி ரதவீதிகள், பூஜை பாத்திரங்கள், தீப, தூபங்கள், பதினெட்டு வகை இசைக்கருவிகள், நந்தவனங்கள், நித்ய பூஜைக்கு தேவையான நிவேதனங்கள், மண்டபக் கட்டளைகள் என்று அனைத்தையும் ஏற்படுத்தியதோடு சுற்று வட்டாரத்து மக்களையும் திருப்பணியில் ஈடுபடச் செய்தனர். அனைத்து ஜாதிகளுக்கும் கோயில் உரிமைகளையும், தேர், பூஜை மற்றும் மண்டபக் கட்டளை உரிமைகளையும் பகிர்ந்தளித்து கோயில் மீது பற்று ஏற்படச் செய்தனர்.
திருசெங்கோட்டு கோயில் சிற்ப வேலைப்பாடுகள் கொங்கதேச சிற்பக்கலைக்கு மணிமகுடமாகும். கோயில் வேலைகளுக்கு அக்காலகட்டத்தின் தலைசிறந்த சிற்பிகளை அழைத்துவர அவர்கள் அடுப்பெரிக்க சந்தனக் கட்டை கொடுத்து நம்பிக்கையளித்து வரவைத்தனர். இன்றளவும், தங்கள் நிலங்களை விற்றாவது கோயில் திருப்பணிகள் தொய்வின்றி நடத்திடத் தயங்காதவர்கள் ஏராளமானோர் உண்டு.

சமய இலக்கியங்கள்: தங்கள் வட்டாரத்தில் உள்ள தெய்வங்கள் மீது சிற்றிலக்கியங்கள் பாடச் செய்து புலமையையும் பக்தியையும் ஒருங்கே வளர்த்தனர். நல்லபுள்ளியம்மன் பள்ளு, பாம்பலங்காரர் வருக்கக்கோவை, திருசெங்கோட்டு இலக்கியங்கள் உட்பட ஏரளாமான சமய இலக்கியங்களை உருவாக்க தூண்டுகோலாக இருந்தவர்கள் மோரூர்க் காங்கேயர்கள். உரிச்சொல் நிகண்டு என்ற நூலை காங்கேய மன்னர் ஒருவரே எழுதியுள்ளார். பொப்பண்ண காங்கேயன் என்பவர் சிலப்பதிகாரத்துக்கு மிகப்பிரபலமான உரை செய்விக்க அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர்.

தங்கள் நாட்டில் வாழ்ந்த பிற குடிகளை ஆதரித்து வாழ்ந்ததில் மோரூர் காங்கேயர்கள் சிறப்பிடம் வகிக்கின்றனர். அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர்கள். செங்குந்த மரபில் உதித்த நல்லையன் என்பவர் ஒரு காங்கேய மன்னருக்கு பிள்ளையில்லா குறை நீங்க செய்யப்பட யாகத்தில், தங்கள் பட்டக்காரரின் வேண்டுதல் நிறைவேற தலையை அரிந்து யாகபலி கொடுத்துக் கொண்டார். அந்த நன்றிக்கடனுக்காக நல்லையனின் சிலை இன்றளவும் மோரூர் காங்கேயர் குலதெய்வக் கோயிலில் வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது. அந்த சம்பவத்திற்கு பிறகு திருச்செங்கோட்டில் செங்குந்தர்களுக்கு ஏராளமான உரிமைகள் தரப்படுகிறது. முதல் காங்கேய மன்னரான சூரிய காங்கேயன் ஒரு கட்டத்தில் தனது சகோதரனும் இளமையிலேயே பிரிந்தவருமான தலைய நாடு கண்ணிவாடி பட்டக்காரரான முத்துசாமி கவுண்டரை அடையாளம் காணுகிறார். சூரிய காங்கேயனைப் போலவே முத்துசாமி கவுண்டர் குடிமக்களின் அன்பை வென்றவராக வாழ்வதும் அவரின் வாழ்வை வளம்பெரச் செய்தது நல்லராண்டிப் பண்டாரம் என்றும் அறிகிறார். அதற்கு கைமாறாக மோரூரில் தனது அறுபது பங்காளிகளையும் சேர்த்து அறுபத்தியோராவது காங்கேயராக நல்லராண்டிப் பண்டாரத்தையும் அங்கீகரித்து பட்டயம் வெட்டிக் கொடுக்கிறார்.

இப்படிப் பலநூறு ஆண்டுகளாக மொழிச் சேவையும், மக்கள் சேவையும், மகேசன் சேவையும் ஒருங்கே செய்துவந்தனர் மோருர்க் காங்கேயர்கள். தங்கள் கோயில், மரபுகள், பெண்கள், அடியார்கள் என்று அனைவர் மீதும் அவதூறு பரப்ப புனைவென்னும் சாயம் பூசி ஒருவன் பொய் வரலாறு எழுதினான். அவர்களுக்கு வன்முறை தெரியாமலும் இல்லை; பொருளாதாரத்தில் பின்தங்கியுமில்லை; அரசியல் அனாதைகளும் இல்லை. அவர்கள் நினைத்திருந்தால் பெருமாள் முருகன் வம்சத்தையே கருவறுத்திருக்க முடியும். ஆனல அவர்கள் நிதானம் தவறாமல் அனைத்து ஜாதியினரையும் பக்தர் குழுக்களையும் அழைத்து கலந்தாலோசித்து முறையாக சட்டப்பூர்வமாக புகார் கொடுத்தனர்.

இப்படி பண்போடு நடந்துகொண்ட மோரூர்க் காங்கேயர்களைத் தான் மெத்தப் படித்த அறிவாளி, பார் போற்றும் இலக்கியவாதி என்று சொல்லப்படும் ஜெயமோகன் (களத்தகவல் எதுவும் தெரியாமல்) தெருமுனைச் சண்டியர்கள் என்றும், எலிகள் என்றும், சில்லுண்டிகள் என்றும் தரமற்ற வார்த்தைகளை பொதுவெளியில் கூறுகிறார். (அதுவும் எவனோ முட்டுசந்தில் உட்கார்ந்து கொண்டு, உண்மை நிலவரம் தெரியாமல் விளம்பரம் தேட விரும்பி கருத்துக் கட்டுரைகளைக் கக்கும்  அரைவேக்காடு ஹிந்துத்வ விஷமிகள் எழுதிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு). பெரிய மனிதர்கள், பண்பானவர்கள் யார் என்பதும், கல்வியோ-இலக்கியவாதிப் பட்டமோ ஒருவனின் தரத்தை முடிவு செய்யும் அளவுகோள்கள் இல்லை என்பதும் விளங்கும்.

தவறான சேர்க்கையும், ஆராயாமல் கருத்துக் கூறுவதும் அசிங்கத்தையே வரவழிக்கும்.ஜெயமோகன் கட்டுரையைத் தொடர்ந்து அன்பர்கள் தந்த  பதிலடி மற்றும் எதிர்வினைகளின் & எதிர்வினை 2 போது ஜெயமோகன் கள நிலவரம் பற்றிய தனது அறியாமையை ஒப்புக் கொண்டும் தனது வாதத்துக்கு அழகுச்சாயம் பூசியும் அசடு வழிந்ததை தவிர்த்திருக்கலாம்.

1 comment:

  1. பின்வரும் விசயங்களை இந்த கிறுக்கன் ஆதரிக்கிறான் என்பது தெளிவு.. http://www.jeyamohan.in/69178


    பெண்கல்வி, விதவைத்திருமணம், தீண்டாமை விலக்கு, கலப்புத்திருமணம் ஆகியவற்றை முன்வைத்தபோது அன்றைய சீர்திருத்தவாதிகளான எழுத்தாளர்களுக்கு இதேபோல எதிர்ப்பு வந்தது. மதவாதிகள் சாதியவாதிகள் புண்பட்டார்கள். புண்பட்டவர்களின் பக்கம் சட்டம் நின்றிருந்தால் இங்கே என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கும்?

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates