Trending

Monday, 12 January 2015

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரருக்கு வெற்றி!

ஸ்ரீ அர்த்தனாரீஸ்வரப்பெருமானின் கிருபையால் மாதொருபாகன் பிரச்சனையில் திருசெங்கோட்டு மக்களுக்கு நல்லதொரு தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஜனநாயக நாடு என்ற கட்டத்துக்குள் நின்று பார்க்கும்போது சில விசயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.சில நாட்கள் முன்பு..

12.01.2015 பேச்சு வார்த்தை உடன்படிக்கை,

பேச்சுவார்த்தை முடிவில் பெ.முருகன் 

இதைத் தொடர்ந்து,பொதுமக்கள் அனுதாபம் சம்பாதிக்க பெருமாள் முருகன் தனது பேஸ்புக்கில் எழுதியவை,

குறிப்பு: 
நண்பர்களே, கீழ்வரும் அறிக்கை இரண்டு நாட்களுக்கு இந்த முகநூலில் இருக்கும். அதன்பின் சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் இருந்து பெருமாள்முருகன் விலகிவிடுவான். சமூக வலைத்தளங்களில் அவனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. 
---------------
எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை
எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.

பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.

‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.

2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.

3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.

4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.

5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி. 
பெ.முருகன்
பெருமாள்முருகன் என்பவனுக்காக

--------

மாதொருபாகன் பிரச்சனையில் ஜனநாயகம் என்பது ஒரு மாயை என்பதை அறியலாம். மக்களுக்கு முடிவெடுக்கவும், பொதுக்கருத்தை உண்டாக்கவும் தேவை தகவல்கள். ஆனால் மீடியாக்கள் மற்றும் சிந்தனையாளர்கள் என்று 'வளர்க்கப்பட்டவர்கள்' தவறான செய்திகளையும்/உண்மையாகவே இருப்பினும் தவறான விகிதத்திலும்/தவறான நேரங்களிலும்/ தவறான கோணங்களிலும்/தங்கள் கற்பனைகள்-திசை திருப்பும் கருத்துக்களை கலந்தும் கொடுக்கிறார்கள். இதுபோன்ற தகவல்களை வைத்துக்கொண்டு எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் நல்ல முடிவை எடுக்க முடியாது. ஆகவே, மக்களுக்கு அவர்களே முடிவெடுத்த திருப்தியை கொடுக்க, நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ அதற்கான தகவலகளை மட்டும் தந்து காரியம் சாதிப்பதே நடந்து வருகிறது.. இதை ஜனநாயகம் என்றால் வேடிக்கைதான்.

ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் என்பது இரு சாராருக்கும் உள்ளது. ஒரு எழுத்தாளன் கூறும் கருத்தை, கற்பனை செய்தியை ஒரு வாசகன் எதிர்த்து ஜனநாயக முறையில் குரல் கொடுப்பது தவறு என்றால், நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்லி கொள்வதில் அர்த்தமில்லை.

உயிரை விட மானத்தையும் உழைப்பையும் பெரிதென வாழும் மக்கள், கடவுள் பெண்கள் உட்பட ஒரு பெரும் ஊரையே கேவலமாக ஒருத்தர் புக் எழுதுவாராம்.. அதை வித்து பணமும் பேரும் சம்பாதிப்பாராம்.. அதை எதிர்ப்பதை வைத்தே அவர் விளம்பரமும் வியாபாரமும் பெருக்கிக்குவாராம். கடைசியா மன்னிப்பு கேட்டுட்டா விட்டுருனுமாம்.. என்னடா நியாயம்?? பாதிக்கப்பட்டவன் நேரம், உழைப்பு, பொருள் செலவு செய்து தன் பக்கத்து நியாயத்தை நிலை நாட்டனுமா..?? எழுதியவருக்கு என்ன தண்டனை? அவருக்கு என்ன நஷ்டம்?? பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நஷ்டஈடு?? இதுதான் ஜனநாயகமா..??. இதுபோல ஆள் பலம, பணபலம், ஒற்றுமை இல்லாத ஊர்கள, சமூகங்கள், மக்கள் தங்கள் தரப்பு நியாயத்தை வெளிக்கொண்டுவருவது எப்படி??

-இதுவரை தனது சர்வீசில் இப்படியொரு பந்த் பார்த்ததில்லை என்கிறார்கள் போலீசார். அதுவும் கட்சி, அமைப்பு, சாதி, மதம் கடந்து பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் மேல் கொண்ட பக்தியின் காரணமாக நடத்தப்பட்டது. கோபமடைந்த பெண்கள் ரண்டாயிரம் பேரைக் கொண்டு நாமக்கலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது; அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
-திருச்செங்கோடு சுற்று வட்டாரத்தின் அனைத்து சாதியினரும், அனைத்து தொழிலதிபர்கள், மற்றும் கட்சியினர் (தங்கள் கட்சியின் ஆதரவில்லாவிட்டாலும்)  இந்த போராட்டத்துக்க்கு முழு ஆதரவு தந்தனர்! இதுவும் வரலாறு காணாத ஒற்றுமையாகும். எந்தெந்த கட்சிகள் இதற்கு எதிராக வேலை செய்தனர் என்று கண்டறிந்து அவர்களை திருச்செங்கோட்டில் தலையெடுக்க விடாமல் செய்வது அவசியமாகும்.

-ஆனால் இதைப்பற்றி எந்த டிவியும், பேப்பரும் காட்டவில்லை. காரணம் இருவர். ஆளும்கட்சி அரசியல் காரணமாக போலிஸ் துணையோடு இந்த பிரச்சனையை வளரவோ தீர்க்கவோ முன்வரவில்லை. பெருமாள் முருகன் மீது இதுவரை வழக்குகூட பதிவாகவில்லை. இரண்டு கம்யூனிச-முற்போக்கு-திராவிட மாபியா

-திருசெங்கோட்டின் முன்னாள் எம்.பி யும் மாதொருபாகன் நாவல் நடந்த காலகட்டம் என்று பெருமாள் முருகன் சொன்ன காலகட்டத்தில் சிறந்த அரசியல்-கோயில்-சமூக தலைவராக இயங்கியவருமான திரு.டி.எம்.காளியண்ணன் அவர்கள், நாவலில் சொல்லப்பட்டவை முழுக்க பொய் என்று கூறியுள்ளார். அவருக்கு இப்பொது வயது 91. அவர் பெருமாள் முருகனின் புத்தகங்களை படித்தவர். இன்றும் தினமும் சமூகம்-அரசியல்-இலக்கியம் என்று ஆக்டிவாக இருப்பவர். அவர் பெருமாள் முருகனை கடுமையாக கண்டித்துள்ளார்.-கம்யூனிச-முற்போக்கு இயக்கங்கள் மற்றும் இவர்கள் கைக்கூலிகள் வெளிநாட்டு கூலி வாங்கிக் கொண்டு இந்திய பெண்கள், கடவுள்கள், கலாச்சாரம் மரபுகள் அனைத்தையும் அசிங்கப்படுத்தும் வேலையை பல காலமாக செய்கின்றன. இதை பெ.முருகனுக்கு ஆதரவு கூறிய ஜெயமோகனே தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.

-கருத்துரிமை காவலர்கள் என்ற பேரில் பெருமாள் முருகனின் ஆபாச கருத்துகளுக்கு வக்காலத்து வாங்கும் முற்போக்கு கம்யூனிஸ்ட்கள் தான் அருண் ஷோரி எழுதிய "Worshipping False Gods" புத்தகத்தையும் எதிர்த்தார்கள். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டீ குரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு புத்தகம் ஆங்கிலத்தில் பதிவாவதை தடுத்தார்கள். அதேபோல ஹிந்துத்வ குரூப்பில் சிலரகளும் பெ.முருகனுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். இதே ஹிந்து அமைப்புகள் தான் வெண்டி தோனிங்கர் எழுதிய ஹிந்துயிசம் என்ற புஸ்தகத்தை தடை செய்ய போராடி வெற்றி பெற்றனர். அண்ணாதுரையின் ஆரிய மாயை, புலவர் குழந்தையின் ராவண காவியம், தெய்வநாயத்தின் விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒரு ஒப்பாய்வு புஸ்தகம், ஆண்டாளை கேவலப்படுத்திய புஸ்தகம் போன்றவற்றை எதிர்த்தனர். இவர்களுக்கெல்லாம் ஒரு நியாயம் திருசெங்கோட்டு மக்களுக்கு ஒரு நியாயமா?? இன்னும் சிலர் குழந்தைத் தனமாக புத்தகத்தை எரிப்பது சரஸ்வதியை அவமதிப்பது என்கிறார்கள். அவர்களுக்கு சில செக்ஸ் புத்தககங்களை அனுப்பி வைக்க வேண்டும், பார்ப்போம் சரஸ்வதி பூஜையில் அவற்றை வைத்து பூஜிப்பார்களா என்று!

-நம் ஊரிலேயே இருந்துகொண்டு, நம் ஊர் மக்கள் தரும் சம்பளம் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழும் சில துரோகிகள் பெருமாள் முருகனுக்கு வக்காலத்து வாங்கி துணை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யார் என்று அறிந்து அவர்களை சமூக பொருளாதார ரீதியாக தவிர்ப்பதும், பெருமாள் முருகனுக்கு கொடுக்கப்படும் தண்டனையைவிட அதிக தண்டனை பெற வேண்டும் என்று போராடவும் வேண்டும். காலம் கனிந்து வரும்போது ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரால் தண்டிக்கப்படுவதையும் காண வேண்டும்.

-ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை ஸ்டாலின் குணசேகரன், திருச்செங்கோடு மக்கள் ஸ்ட்ரைக் நடத்திய அன்று மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சார்பில் பெருமாள் முருகனுக்கு ஆதரவு கூறி நிகழ்ச்சி நடத்துகிறார்! நாவல் எழுதியவனுக்கு குடை பிடிக்கும் கம்யூனிஸ்ட் என்று ஸ்டாலின் குணசேகரன் நிரூபித்துள்ளார். அவரை உங்கள் பள்ளி கல்லூரியில் அழைக்க வேண்டுமா என்று சிந்திக்கவும்.-இந்த நாவல் எழுத எலும்புத் துண்டு வீசிய டாடா கம்பெனி, போர்டு போன்றவற்றை யார் தண்டிப்பது?

-கவுண்டர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று யார் சொன்னது? இதோ திருச்செங்கோடு பிரச்சனையில் கவுண்டர்கள் மட்டுமின்றி பிற ஜாதியினரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஸ்ட்ரைக் போராட்டம் என்று நடத்தி மீடியாவை கையில் வைத்திருக்கும் முற்போக்கு கம்யூனிச மாபியாவை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளார்கள். இந்த ஒற்றுமையை உடையாமல் நம் மரபுகள் கலாசாரம் என்று சமூகத்தை எல்லா ஜாதியினரையும் அரவணைத்து வளர்த்துவதில் நமது வெற்றி உள்ளது. நம்பிக்கை இருந்தால் எல்லாம் சாத்தியமே. திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் அருளை நம் மக்கள் அனைவரும் உணர்ந்த சம்பவம் இது. கொங்கதேசத்தில் இது ஒரு திருப்புனை என்றால் மிகையல்ல.

-கருத்துரிமை என்ற பெயரில் வணிக நோக்கில் பிறர் மனம் புண்படும் படியாக ஆதாரமில்லாத எதை வேண்டுமானாலும் புனைவாக எழுதிவிடலாம் என்ற எழுத்துப் பாஸிச வாதிகள் திருந்த வேண்டும். குட்டக் குட்டக் குனிந்து கொண்டே இருக்கும் சொரணையற்ற மக்கள் தொகுதியாக சமூகம் என்றென்றும் இருக்காது. உள்நோக்கத்தோடு சமூகத்தை அதன் பண்டைய பாரம்பரிய வேர்களிலிருந்து பிரித்தெடுத்து அதன் பாரம்பரியத்தை பொய் புனைவுகளின் மூலம் கொச்சைப் படுத்தி மேற்கத்திய சுரண்டல் கலாச்சாரத்திற்குள் தள்ள முனையும் முற்போக்கு என்ற பெயரில் கல்லா கட்டும் பிற்போக்கு எழுத்தாளர் கைக்கூலிகள் பாடம் கற்க வேண்டும்... விழிப்புணர்வு பெற்ற மக்கள் சமூகம் உங்கள் தீய நோக்கங்களை முறியடிக்கும்.

-கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஹிந்து மதத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வக்கிரங்களின் சில சாம்பிள்கள் இதோ,

1) ஆண்டாள் நாச்சியார் பெரியாழ்வாருக்கும், வேசிக்கும் பிறந்தவர்
2) திருஞானசம்மந்தர் கோயிலுக்கு வரும் மங்கையரை 'சைட்' அடித்தார். மைத்துனம் செய்தார்
3) திருச்செங்கோடு தேர் திருவிழாவில் யார், யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம்

இந்த குறிப்புகளெல்லாம் ஒரு சாம்பிள் தான். இம்மாதிரி நிறைய புத்தகங்கள் திட்டமிட்டு எழுதப்படுகின்றன. இதை எழுதும் எழுத்தாளர்கள் அன்னிய சக்க்திகளால் ஊக்குவிக்கப்படுகிறார்கள். உள்ளூர் மக்கள் உண்மை புரியாமல் நடுநிலை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தங்கள் தலைகளில் மண்ணை வாரி இறைத்துக்கொள்வதுடன், மற்றவர்களின் தலைகளிலும் சேர்த்து இறைக்கிறார்கள். மத அவமதிப்பிற்கு பொங்கி எழாதவர்கள், கருத்து சுதந்திரம் பறிபோகிறதே என்று பொங்கி எழுகிறார்கள். எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நன்றாக உங்கள் கருத்து சுதந்திர குதிரையை ஓட்டுங்கள். யார் வேண்டாம் என்றார்கள்.

பேஸ்புக் எதார்த்த சமூகத்தை பிரதிபலிக்கவில்லை, என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இங்கே இருக்கும் பெரும்பான்மை கூச்சலைக் கண்டால் சமூகம் மீள முடியா பாதாளத்தை நோக்கி பாய்கிறதே என்ற அயர்ச்சி ஏற்படும், ஆனால் உண்மையில் சமூகம் அவ்வளவெல்லாம் கெடவில்லை.

செய்ய வேண்டிய செயல்பாடுகள்

தெய்வமலை திருசெங்கோட்டுக்காக ஒன்று கூடிய அனைவரும் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். கோயில் திருவிழாவை இனி மிகச்சிறப்பாக செய்வதில் தான் அந்த எழுத்தாளனுக்கும் அவனுக்கு வக்காலத்து வாங்கிய முற்போக்கு கம்யூனிசவாதிகளுக்குமான பதிலடி இருக்கிறது. அறநிலையத்துறை நமது திருசெங்கோட்டு கோயிலுக்குள் புகுந்த பின்னர் பல பூஜைகளும், மரபுகளும் மறைக்கப்பட்டு நடத்தப்படாமல் உள்ளது. அவற்றை மீண்டும் நடத்திக் காட்ட வேண்டும்.

முன்னர் தி.கோடு சுற்று வட்டார கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருவர் அவசியம் தேர் நோம்பியில் கலந்து கொள்வார்கள்; அதுபோல சூழலை மீண்டும் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை உருவாக வேண்டும். வட நாட்டு காப் பஞ்சாயத்து போல அரசு-அரசியல் சாரா மக்கள் குழுவாக இருந்து நம் மக்களின் உரிமைக்காக முறையாகப் போராட வேண்டும். இனி அரசியல் கட்சிகள், மீடியா, அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. உண்மையான ஜனநாயகம் காப் பஞ்சாயத்து அமைப்புகளில் தான் உள்ளது.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates