Trending

Tuesday, 3 February 2015

பிராமணர்கள் பற்றிய நமது அபிமானம்

இன்றைய ஒரு பதிவு மற்றும் அதன் கமெண்ட்கள் பார்த்தேன். அவற்றின் சாராம்சம் என்று பலவாராக சொல்லப்பட்ட கருத்துக்களாக பின்வருவனவற்றை சொல்லலாம்,

1.ஐயர்களை விட நாம் எதில் குறைந்தோம், ஏன் சிலைகளை நாம் தொடக் கூடாது?

2.கோயில்கள் பணத்துக்குதான் முன்னுரிமையாக இருப்பதற்கு அவர்களே காரணம்.
---------------------------------------------------------------

இந்த விஷயத்தில் நம் கருத்துக்கள்,

இதற்குள் போகும்முன் ஒரு விஷயம். ஐயர்கள் எல்லா கோயிலிலும் பூஜை காரியங்களில் இருப்பதில்லை. பெரும்பாலும் சிவ-விஷ்ணு ஆலயங்களிலேயே அவர்கள் இருப்பார்கள். மற்ற நம் குலதெய்வம் என்று சொல்லப்படுகிற காணியாச்சி கோயில்களில் (செல்லி/செல்லாண்டி/காளி அம்மன்) பண்டாரங்களே இருப்பார்கள். இருக்கணும்.

அந்த சில கோயில்களிலும் ஐயர்கள் வேலையான பூஜை மட்டும் நம் கண்ணை உருத்துகிறதே, இதே நம் கோயிலில் நான் தப்பட்டை அடிக்கிறேன், மாத்து விரிக்கிறேன், மொட்டையடித்து விடுகிறேன் என்று ஏன் யாரும் வருவதில்லை? அந்த வேலைகளை மற்றவர் செய்யும்போது ஏன் கண்ணை உறுத்தவில்லை?? நம் காடுகளிலும், இது நம் காடுதான என்று எல்லா வேலையையும் நம் முன்னோர்களே செய்திருக்கலாமே? ஏன் பிற ஜாதிகளுக்கு விட்டார்கள்?? அவரவர் தொழிலை-உரிமையை அவரவர் செய்ய வேண்டும், செய்ய விட வேண்டும். அதுதான் தர்மம். காணியாச்சி கோயில்களில் நமக்கு இருக்கும் நிர்வாக உரிமை போல ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒவ்வொரு உரிமை உண்டு. அந்தந்த உரிமையுள்ளவர்கள் பூஜை செய்தால்தான், குதிரை பிடித்தால்தான், பறை அடித்தால்தான் தெய்வமே மனம் குளிரும். "நான் கவண்டன் நான் சொல்றதுதான் சட்டம்" என்று எல்லார் உரிமையிலும் கைவைத்தால் அந்த சாமியே போட்டு வீசிரும். கொங்கதேசத்தில் எத்தனை ராஜ்ஜியம் மாறினாலும் கவுண்டர்கள் மட்டுமே எல்லா நாட்டுக்கும் பட்டக்காரர்களாக இருந்தார்களே, எப்படி? அந்தந்த வட்டார மக்களின் உரிமைக்கு காவலாக, நேர்மையாக இருந்ததால் தான்.


சிவ-விஷ்ணு-முருகன் போன்ற ஆகம-வைதீக கோயில்கள் கட்டுகையிலும், கும்பாபிசேகத்திலும் இன்னின்ன பூஜைகள் இப்படி இப்படி செய்வது என்று சங்கல்பம் செய்திருப்பார்கள். அவற்றை அதே முறையில் செய்ய வேண்டும். இந்த கோயில்களுக்கு பூஜை செய்ய சந்தியாவந்தனம்,காயத்ரி ஜபம், ஆத்மார்த்த பூஜை என பல நியமங்கள் உண்டு. அவற்றை பின்பற்றும் பிராமணர்களே அந்த கோயில் பூஜைகளை செய்ய வேண்டும்.

அதேபோல, ஐயர்கள் காசைப் பார்க்கிறார்கள், பணத்தாசை என்றெல்லாம் புகார். சரி. நம்மில் எத்தனை பேருக்கு அவர்கள் கோயில் நிர்வாகத்திடம் (HR&CE) பேரும் சம்பளம் எவ்வளவு என்று தெரியும்?. ஹிந்து சமய அறநிலையத்துறை என்ற சூழ்ச்சியின் ஆதி அந்தம் தெரியும்?? பிராமணர்களும், கோயில்களின் சீரழிவும் அதன்மூலமாக ஆன்மீக சீரழிவும் நடப்பது தெரியும்?? நம்ப மாட்டீர்கள். நகரத்தில் ஒரு வேளை சோற்றின் விலைதான் இன்றைய பெருங்கோயில்களில் அவர்கள் மாத சம்பளம். அதுவன்றி அர்ச்சனையில் இரண்டு ரூபாயில் ஐம்பது பைசா முதல் எழுபத்தைந்து பைசா வரை. வேறு எந்த சலுகையும் இல்லை. இப்படி இருந்தால் யார் பணத்தை எதிர்பார்க்காமல் இருப்பார்கள்?? இவை ஐயர்களை வறுமையில் வாட விட திராவிட மற்றும்  முற்போக்கு அரசியல் சக்திகள் கடந்த ஒரு நூற்றாண்டாக செய்யும் சூழ்ச்சி. இவ்வளவு சிரமத்திலும் தங்கள் குலத்தொழிலையும் ஜாதி மரபையும் விடாமல் இருக்கும் ஐயர்களை கோயில் கட்டி கும்பிடனும். கோயில் நிலங்கள், பிராமணர்களுக்கான மானிய நிலங்கள் எல்லாம் திராவிட அயோக்கியர்கள் சூறையாடியபோது நம்மில் எவ்வளவு பேர் எதிர்த்தோம்?

நமக்கு நல்ல கூட்டம் வரும் வருமானமுள்ள கோயில்கள் தான் தெரியும். ஆனால் காணி என்றால் அங்கே ஒரு சிவன் கோயில், பெருமாள் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் இருக்கும். நமக்கு பெரும்பாலும் காளியம்மன் கோயிலோடு வழிபாடு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த சிவன் பெருமாள் கோயிலை யார் பார்ப்பார்கள்?? சில காணிகளில் நம்மாட்களே கவனிக்கிறார்கள். பெருமாபாலான கோயில்களில் சுத்தமாக வருமானமே இல்லாதபோதும் தங்கள் கடமையென வெளியே சம்பாதித்து கோயில் பூஜைகளை நடத்தி வரும் ஐயர்களை தெரியுமா?? கொங்கதேசத்தில் 600+ காணிகளில் இதுதான் கதை.

தற்காலத்தில் பிராமணர்கள் காசை எதிர்ப்பார்ப்பதும், சிலர் தங்கள் மரபை மறந்திருப்பதும் காலக்கேட்டால் ஏற்பட்ட அவலமே தவிர அவர்கள் இயல்பு அல்ல. இன்று நாமும் நம் மரபை விட்டு காசை நோக்கி ஓடுகிறோம் அதுபோல. அவர்களுக்கு அவர்கள் வழியில் வாழும் வசதிகளையும், வேதபாடசாலைகளையும் அவர்களுக்கு நாம் காலம் முழுக்க உறுதி செய்தால் மீண்டும் அவர்கள் மரபுக்கு திரும்புவார்கள். இது நிச்சயம்.

தொல்காப்பியம், சங்க காலத்தில் எழுதப்பட்ட புறநானூறு, அதன்பின் வந்த சிலம்பு, அப்புறம் பக்தி இலக்கிய காலத்தில் வந்த திருமுறைகள், பின்னர் விஜயநகர ஆட்சியில் வந்தவை என அனைத்திலும் பிராமணர்களை பசுவோடு சமமாக வைத்தே நம் முன்னோர்கள் போற்றியிருக்கிறார்கள். ரண்டாயிரம் வருஷமாக அத்தனை பேரும் முட்டாளாகத் தான் இருந்தார்களா? இல்லை, ஐயர்களை விட நோஞ்சான்களாகவும் எண்ணிக்கை குறைவாகவும் இருந்தார்களா??

தமிழகப் பகுதிகளுக்கு இஸ்லாமியர்கள் வந்த காலத்தில் கோயில்களைக் காக்க (இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டு) உயிர்விட்ட பிராமணர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. பிராமணர்கள் இல்லையென்றால் இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான கோயில்கள் கொள்ளை போய் தரைமட்டமாகி இருக்கும். அவர்கள் விஜயநகர அரசை உருவாக்காமல் விட்டிருந்தால் நம்மில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாகி நாசமாகி இருப்போம். கோயில்கள் சிதைந்து, பசுக்கள் அழிந்து, நம் பெண்கள் அன்றே கற்பழிக்கப்பட்டு அடிமைச் சந்தையில் விற்கப்பட்டிருப்பார்கள். இன்று நாம்  பாகிஸ்தான் போல "அமைதியாக" இருந்திருப்போம்.

பலமுறை, நம் முன்னோர்கள் பட்டக்காரராக நாடு காணி பெற குலகுருக்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஏன் அவர்களே அதை செய்துகொண்டு மன்னனாகவில்லை?

முன்னொருமுறை ஒரு பட்டக்காரன் குடியானவர்கள் நிலத்தையும், அவர்கள் பல வருஷம் உழைத்து சேர்த்த பணத்தையும் பசுக்களையும் பிடுங்கிக் கொண்டபோது, நியாயமாக கவுண்டர்களுக்கு ஆதரவாகவே குலகுருக்கள் நடந்துகொண்டார். பணம் பதவி அதிகாரம் இருக்கிறதென்று  அக்கிரமக்கார பட்டக்காரன் பின்னால் செல்லவில்லை.

கொங்கதேசம் முழுவது இருந்த நம் காணியாச்சி அம்மன் கோயில்களை இடிக்க ஒருமுறை மதுரை நாயக்கர் உத்தரவிட்டபோது நம் கொங்க பிராமணர்கள் சேர்ந்து ராமசுப்பையர் (டாக்டர் சுப்ரமணியசாமியின் முப்பாட்டனார்) மூலமாக தடுத்து நிறுத்தி நம் கோயில்களை காத்தனர். இதைவிட வேறென்ன உபகாரம் செய்யவேண்டியுள்ளது??

பாசூர் சாமியார் செப்பேடு 

செப்பேட்டு வாசகம்:
சாசனமாவது குருசுவாமியார் பாதத்துக்கு உடல் உயிறு பொருள் மூன்றும் குரு பாதத்துக்கு தெத்தம்பண்ணி எழுதிக்கொடுத்த தாம்பிற சாசனப் பட்டயம். நாங்கள் யெந்த நாட்டிலே யெந்த ஊருலே யிருந்தாலும் யெங்கள் கோத்திறத்தாள் தலைக்கட்டு ஒன்றுக்கு னாகறம் பணம் அஞ்சு வருஷம் பிறதி குடுத்து சஞ்சாரம் வந்தபொழுது சஞ்சாரக் காணிக்கைகளையும் அப்பணைப் படிக்கி ஒபதேசம் பாதபூஜை முதலானதும் பண்ணிக்கொண்டு யெங்கள் வமுசத்தாறு புத்திரபவுத்திர பாறம்பரியமாயி பாத சன்னிதானத்தில் தீட்சை மகாமந்திரம் ஒபதேசம் பண்ணிக்கொண்டு சுவாமியார் தெண்டினை கண்டினை ஆணை ஆக்கினை அபறாதத்துக்குள்பட்டு நடந்துகொள்வோமாகவும். அபுத்திறிகம் சொத்து மடத்துக்கு சேத்தி குடுப்போமாகவும். யெங்கள் கொத்திரத்தார் யெந்த நாட்டிலே ஊரிலே காணிவாங்கி அதிகாரம் பண்ணீனாலும் குடித்தனம் பண்ணினாலும் சுவாமியார் பாதத்துக்கு நடந்துகொண்டு வருவோமாகவும். யிப்படிக்கு நடந்துவரும் காலத்தில் யிதுக்கு விகாதம் சொல்லாமல் பரிபாலனமாயி யெங்கள் வமுசத்தார் பயபக்தியாயி நடத்தி வந்தவன் சுகமாய் தனசம்பத்தும் தான்னிய சம்பத்தும் புத்திரசம்பத்தும் அஷ்டைசுவரியமும் ஆயுளாரோக்கியமும் தேவப்பிறசாதமும் குருப்பிரசாதமும் மென்மேலும் உண்டாகி கல்லும் காவேரிப் பில்லும் பூமி சந்திராதித்தியாள் வரைக்கும் அகிலாண்ட ஈசுவரர் கடாக்ஷத்தினாலே சுகமாயிருப்பார்கள். இந்தக் சாசனம் படித்துப் பார்த்தவர்களும், செவியில் கேட்ட பேரும் சுகமாயிருப்பார்கள். யிதுக்கு விகாதம் சொல்ல குருநிந்தனை சொன்னவர் கெங்கை கரையிலே காறாம்பசுவையும் பிராமணாள்களையும் மாதாபிதாவையும் கொண்ற தோஷத்திலே போவாறாகவும். யிந்தப்படிக்கி யெங்கள் வமுசத்தாறனைவரும் சம்மதிச்சு பூந்துறை புஷ்பவனீசுவரர் சுவாமி பாகம் பிரியாள் சன்னிதானத்திலே சகிறண்ணியோதக தானமாயி எழுதிக்கொடுத்த தலைக்கட்டு தாம்பற சாசனம். 

--இதை எழுதித் தந்தவர்கள் நோஞ்சான்களோ, அறிவற்றவர்களோ, வசதியற்றவர்களோ அல்ல. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் அங்கே வாழ்ந்த 18 குடிகளையும் அரவணைத்து எதிரிகளை அடக்கி ஆண்ட குடியானப் பெரியோர்கள் தான்.

செப்பேடு பட்டயங்களில் நம் முன்னோர்கள் சாபம் என்ற பகுதியில் சொல்லும்போது கங்கைக் கரையில் காராம்பசுவையும்-பிராமனனையும் கொன்ன பாவத்தில் போவதாக என்றே சொல்வார்கள். குலகுருக்களுக்கு அளித்த பட்டயங்களில் குருவுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தையும், புத்திரன் இல்லா குடும்பத்தின் சொத்தை மடத்துக்கும் என எழுதி தர காரணம் என்ன என்று சிந்திக்கவேண்டும். பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த மடங்கள் உண்டு. அவர்கள் அந்த நிலத்தின் வருவாயை கொண்டு சுகபோக வாழ்க்கை வாழவில்லை. பஞ்ச காலத்தில் குலகுரு மடங்கள் காப்பாற்றிய உயிர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. ஆனால் குருக்களோ, ஒருநாளைக்கு ஒருவேளை உணவு, வருஷம் முழுக்க ஊர் ஊராக சென்று சிஷ்யர்களுக்கு (கவுண்டர்களுக்கு) உபதேசம், பஞ்சகவ்யம் உள்ளிட்ட நன்மைகளைப் பரப்பி வந்தனர். கொங்கதேசம் நம் முன்னோர் காலத்தில் செதுக்கி வைத்தது போல் கிராம அமைப்பு, நீர்வழிகள், கோயில் அமைப்புக்கள் எல்லாம் எப்படி வந்தது?? அந்த சாஸ்திர ஞானங்கள் எங்கே இருந்து வந்தது??


பல ஆயிரம் ஏக்கர் சொத்திருந்த
பாசூர் பெரிய மட குருவின் எளிய வாழ்க்கை 

பிராமணர்களையும் பசுக்களையும் ஒரு கவுண்டன் பழித்தாலும் கைவிட்டாலும் அதைப் போன்ற ஒரு நன்றிகெட்டத்தனம் வேறில்லை.

இதுபோன்ற கேள்விகள் வருவது நம் இளைஞர்கள் தவறில்லை; சிறுவயதுமுதலே நாம் திராவிட ஆட்சியில் வளந்து வர்றோம்.. திராவிடர்கள் எதையும் ஆழமாக ஆய்ந்து பார்க்கும் வழக்கமின்றி குதர்க்கமாக கேள்வி கேட்டு பழகியவர்கள். அதே நம் மனதில் இயல்பாக வந்துவிடுகிறது. அவ்வளவுதான். காலம் சரி செய்யும்.வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே

- திருஞானசம்பந்தர் 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.  

அந்தண ரென்போர்அறவோர்மற்றெவ்வுயிர்க்கும் 
செந்தண்மைபூண்டொழுகலான்.
- திருக்குறள் 

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் 
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் 
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் 
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே

- விவேக சிந்தாமணி

தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!

"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உறையுணா பெற்றதோர் கோவே"
- திருமந்திரம் 

இதே கருத்தினை ஆதிமறையாகிய வேதங்களும் கூறுகின்றன :

"குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு 
குருர் தேவோ மகேச்வர: 
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீகுரவே நம:"

5 comments:

 1. நீடூழி வாழ்க.

  திருச்செங்கோட்டுப் படிவிழாவில் ஒவ்வொரு வருஷமும் கொங்கு நாட்டினர் படிவிழாவிற்கு வரும் ஒவ்வொரு திருப்புகழ் அன்பர்களையும் உபசரித்து அதிதி சத்காரம் செய்து வரும் அழகையும் பழனி பாதயாத்ரை செல்வோருக்கு அன்னமிடும் அழகையும் நேரில் பார்த்திருக்கிறேன்.

  யத்ருச்சையாக இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. கண்கள் பனித்தன.

  வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடித்துதித்த ...........செங்கோட்டு வேலன் அருளால்.......... இப்படி தர்ம ரக்ஷணஞ்செய்ய சித்தமாக இருக்கும் அன்பர் ஒருவராவது இருக்கும் வரை ...........கொங்கு மண்டலத்தில் கலியின் ப்ரபாவம் இருக்காது.

  தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ............. தன்னைக்காப்பவரை தர்மம் காக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நமஸ்காரம், மிக்க நன்றிங்க.. உங்களைப் போன்றோரின் ஆசிகளும், வாழ்த்துக்களுமே எங்கள் முயற்சிகளுக்கு தெய்வம் துணையிருக்க செய்கிறது.. பல ரூபங்களில் எதிர்ப்புகள் வந்தாலும் தர்மமே கவசமாக எங்களைக் காத்து வருகிறது.

   Delete
 2. மணிவேல் கவுண்டர்18 October 2015 at 07:20

  வருஷம் முழுசும் கறி-சாராயம் போட்டுகிட்டு, பொம்பள பொறுக்கிட்டு எல்லா அக்கிரமும் பண்ணிக்கிட்டு திரிஞ்சாலும் அவன் கார்த்திக மாசம் மாலை போட்டுட்டா அவனை சாமி னு கூப்பிடுறோம்.. அவன் அந்த மாசம் பக்தியா ஒழுக்கமா இருக்கறதால.. இதே பிறந்தது முதல் இறப்பது வரை, ஒவ்வொரு னாலும் 24 மணிநேரமும் ஆச்சாரங்கள், பக்தி, ஆன்மிகம், என்று எவ்வளவோ நெறிமுறைகளோடு ஆயுள் முழுசும் வாழ்ந்து, அதையே தலைமுறை தலைமுறையா பல நூற்றாண்டு பின்பற்றி வரும் பிராமணர்களை ஏன் சாமி னு சொல்லக்கூடாது...?? பிராமணர்கள், சந்நியாசிகள், மகான்கள் போன்றோரை சாமி என்றுதான் அழைக்க வேணும்...

  ReplyDelete
 3. thamizh arasu gounder22 October 2015 at 20:42

  என் பாட்டனார் வாயிலாக பிராமணர் பற்றி நான் சேகரித்த தகவல்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . . .
  எனது பாட்டார் சிறு வயதில் பால் வியாபாரம் செய்து வந்தார் அப்போது கரூர் திருமாநிலையூர் அக்ரகாரத்து பிராமணர்கள் வீடுகளில் பால் மற்றும் நெய் முதலிய பால் பொருட்களை அவர்களுக்கு விற்பார் ,தான் கொண்டு வந்த பாலையும் நெய்யையும் அவர்கள் பாத்திரத்தில் ஊற்றி விட்டு வீட்டுக்கு வெளியில் நின்று பணம் பெற்று கொள்வார் . . .
  அந்த பிராமணர்கள் அக்காலகட்டத்தில் என் பாட்டனாரிடமும் ஏழை கவண்டமார்களிடமும் தீண்டாமையை கடைபிடித்தார்கள் . . . . அவர்கள் ஸ்மர்த்த பிராமணர்கள் . . . .
  ஆனால் இன்னொரு பிராமணர் பற்றியும் என் பாட்டனார் கூறினார் அவர்கள் தான் திருநீறு சாமியார் என்றும் குருக்கள் என்று அழைக்கப்படும் குலகுருக்கள்
  அவர்கள் தாம் என் பாட்டனார் விரலை பிடித்து பரப்பிய மணலில் எழுத கற்றுக் கொடுத்தார்கள் , குலதெய்வ சப்பரத்தை அந்த குலம் வாழும் ஊர்களுக்கு எடுத்துச் சென்று குலம் தழைக்க பூசை செய்து திருநீற்று பிரசாதம் வழங்கினார்கள், மாங்கல்ய வரி என்னும் சிறிய தொகையை பெற்று எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள் ,ஒவ்வொரு பரம்பரை பற்றியும் தெளிவாக குறித்து வைத்து இருந்தார்கள் , நம்மை கவுண்டரே என்றே அழைத்தார்கள் , படிப்பறிவு இல்லாது இருந்த அக்கால கொங்கு மக்களுக்கு நல்ல புத்திமதி சொன்னார்கள் , எங்கள் குலத்தின் நன்மைக்காக இறை வழிபாடுகளும் பூசைகளும் செய்தார்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் , அப்படி நன்மைகள் செய்த அவர்கள் இன்றும் அன்று போலவே எளிமையாகவே இருக்கிறார்கள் . . . . .
  நம் குல குருக்கள் சிவபிராமணர்கள் , ஆனால் திராவிட கழகத்தினரால் பார்ப்பணர் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் அனைத்து பிராமணர்களையும் சுட்டிக் காட்டப்பட்டு எதிர்க்கப்பட்டார்கள் . . . .
  நான் கேட்கிறேன் இன்று நம் இனத்தில் பலர் ஏற்றுமதி தொழில் உட்பட பல தொழில்கள் செய்து பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் , எந்த குலகுரு அவ்வாறு செய்து ஆடி காரிலும் பென்ஸ் காரிலும் உலா வருகிறார்கள் . . . .யோசியுங்கள் . . .
  நான் ஸ்மர்த்த பிராமணர்களுக்கு எதிரானவன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதேநேரத்தில் என் குலம் தழைக்க பூசை செய்யும் குலகுருக்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் . . .
  பெரியார் பேச்சை கேட்கும் முன் என் பாட்டனாரின் பேச்சை கேட்டதால் நான் உண்மையை உணர்ந்து கொண்டேன் . . .

  ReplyDelete
 4. முற்போக்கு சிந்தனையுள்ள நண்பரோடு, நீண்ட நாட்களுக்கு முன் ஒரு கோயிலுக்கு போயிருந்த போது.. அங்கே ஒரு முதிய சாமியார் படுத்திருந்தார்.. நிச்சயம் பிராமணரில்லை என்று அவர் உருவம் சொல்லியது.. என் நண்பர் சூத்திரர்கள் விஷ்ணுவின் பாதத்தில் படைக்கப்பட்டார்கள் என்று வர்ணாசிரமம் பற்றி பேசியபோது பெரியவர் எழுந்து அமர்ந்தார்..

  "ஏண்டா, உனக்கு கங்கை எங்க உருவாச்சு னு தெரியுமா?"

  "இமய மலைல"

  "புரானத்துல எங்கீனு சொல்றாங்க?"

  "தெரில"

  "விஷ்ணுவோட பாதத்துல. சரி, கீதைல புண்ணியவான் எங்க போவான் பாவி எங்க போவான் னு சொல்லுது தெரியுமா?"

  "எங்கீங்க?"

  "பாவி விஷ்ணு வாய்க்குள்ள, புண்ணியவான் விஷ்ணுவோட பாதத்துக்கு.."

  "மகாலட்சுமி கூட விஷ்ணுவோட காலத்தாண்டா விடாம புடிசிட்டிருக்கா... அர்ஜுனனும் க்ரிஷ்ணனோட கால முக்கியம் னு நெனச்சுதான் அவர் துணை கெடச்சுது.. பாதத்துக்குத் தான்டா மகத்துவமே.. அதோட, விஷ்ணு எப்பவும் பாற்கடல்ல பாம்புமேல படுத்திருக்கறவன் டா.. நீட்டி படுத்தா ஏது மேல ஏது கீழ? கிறுக்குப் பசங்க பேச்ச கேட்டுட்டு ஏண்டா கூறுகெட்டு திரியறீங்க" ன்னார்..

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates