Trending

Monday, 27 April 2015

மாதொருபாகன் - முக்கியஸ்தர்கள் கருத்து

மாதொருபாகன் நாவல் மற்றும் சர்ச்சை குறித்து யார் யாரோ கருத்து சொல்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். ஆனால் இங்கே கருத்து சொல்ல தகுதி, அனுபவம், ஆராய்ச்சிகள் போன்றவற்றை செய்தவர்களிடம் எந்த ஊடகமும், யோக்கியர்களும் கேட்கவே இல்லை. அப்படி கேட்கவேண்டிய நபர்களிடம் பேட்டி கண்டு அவர்களின் கருத்துகள் இங்கே காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது. எங்கள் அம்மையப்பனுக்கு அர்ப்பணம்.திருச்செங்கோட்டு கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்.. திருசெங்கோட்டின் முதல் எம்.பி... முதல் பார்லிமென்டில் அங்கம வகித்தவர்களில் இன்னும் வாழ்பவர்.. மாதொருபாகன் நாவல் குறிப்பிடும் 1940 காலகட்டங்களில் சமூக நிர்வாகப் பொறுப்புகளில் இருந்த திரு.காளியண்ண கவுண்டர், நாவலைப் பற்றி கூறிய கருத்துக்கள்,
கொங்கதேசத்தின் வரலாற்று ஆய்வுகளில் தனிமுத்திரை பதித்தவர். ஆயிரக்கணக்கான ஆவணங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடு பட்டயங்கள் ஆராய்ந்து வெளியிட்டவர். நூற்றுக்கணக்கான புஸ்தகங்கள் எழுதியவர். கொங்கு வரலாற்றின் முதுபெரும் நிபுணர் கல்வெட்டறிஞர் புலவர் திரு.ராசு அவர்கள் மாதொருபாகன் நாவல் பற்றி கூறிய கருத்துக்கள்,
திருச்செங்கோடு வரலாற்றை 1960களில் எழுதி வெளியிட்டவரும், முதுபெரும் தமிழ் புலவரும், திருச்செங்கோட்டில் பிறந்து வாழ்ந்து வருபவருமான திரு நாராயணசாமி நாய்க்கர் மாதொருபாகன் நாவல் விவகாரம் பற்றி தனது கருத்தினை எழுதியே கொடுத்துவிட்டார்.

Very old and well experienced tamil pandit Sri Narayanasamy Naicker (Scholor who authored History of Tiruchengode), refuses and condemns Perumal Murugan's Madhorubagan novel and stories he claimed to be true.


"முற்றிலும் கிடையாது. சொன்ன வாய் அழுகிவிடும்!"பெருமாள் முருகனின் ஆசிரியரும், பெருமாள் முருகன் பிறந்த பனங்காடை கூட்டத்தை சேர்ந்தவரும், கொங்கு வட்டார ஆய்வாளரும், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்துறை பேராசிரியருமான டாக்டர் திரு பொன்னுசாமி அவர்கள் கருத்து,பெருமாள் முருகன் மற்றும் மாதொருபாகன் நாவல் பற்றிய சர்ச்சையில் திருசெங்கோட்டு எளிய மக்கள் கருத்து, இதற்கு மேல் யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை..


முந்தைய பகுதிகள் லிங்க்:2 comments:

 1. Perumal Murugan Converted Christen

  ReplyDelete
 2. கம்யூனிஸ்டுத்தலைவர்களான பாலதண்டாயுதம் பற்றியோ சங்கரய்யா பற்றியோ இப்படி ஒருநாவலை எழுதினால் இடதுசாரிகள் அதை அவர்களின் கருத்துரிமை என்று சும்மா விடுவார்களா?

  அருந்ததி ராய் அவரது நாவலில் ‘அரசியலுக்கு வந்த ஒரு நம்பூதிரியின் வீடு ஒரு நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட்டது’ என்ற ஒற்றை வரியை எழுதியதற்காக அந்த எழுத்தாளரை கேரளத்துக்கே வரவிடமாட்டேன் என்று இடதுசாரிகள் கொதித்தார்கள். ஈ.கே.நாயனார் பொதுமேடையில் எச்சரித்தார். தெருக்களின் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்

  பால் ஜக்காரியா ஒரு மேடையில் இடதுசாரித்தலைவர்களை தனிப்பட்ட முறையில் பேசினார் என்று சொல்லி பையன்னூர் என்னும் ஊரில் அவர் ஒரு விழாவுக்குச் செல்லும் வழியில் கூட்டமாக வழிமறித்து நிறுத்தி அடித்தார்கள். பால் ஜக்காரியா கேரளத்தின் முதுபெரும் எழுத்தாளர்

  [அவரது பேச்சின் இணைப்பை அனுப்பியிருக்கிறேன். கேளுங்கள். அப்படி என்ன பெரிதாக விமர்சனம் செய்துவிட்டார்? அவரை அடித்தவர்கள் பெருமாள்னு முருகனுக்கு எதிராக அறப்போராட்டம் செய்ததை கருத்து ஒடுக்குமுறை என்று கூச்சலிடுகிறார்கள்]

  இடதுசாரித் தலைவர்களை விமர்சித்ததற்காக எழுத்தாளர்கள் தாக்கப்பட்ட 23 நிகழ்ச்சிகளை கேரள இதழ் ஒன்று பட்டியல் இட்டது. எதற்காகவாவது நம் எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்தார்களா?

  ஏன், கொஞ்சநாள் முன்னால் லீனா மணிமேகலை என்னும் கவிஞர் இடதுசாரி பிம்பங்களான மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோருக்கு பாலுறவுச்சித்தரிப்பு அளித்து ஒரு கவிதையை எழுதினார். அவரை வசைபாடி, வீடு புகுந்து மிரட்டல்விட்டவர்கள் இதே இடதுசாரிகள். அதாவது அவர்களின் புனிதபிம்பங்கள் வழிபாட்டுக்குரியவர்கள். அவர்களை சாதாரணமாக விமர்சித்தால்கூட அடிப்பார்கள். ஆனால் மற்றவர்களின் பிம்பங்களை உடைப்பது அவர்களின் கருத்துரிமை

  அதுகூட எளிமையான இலக்குகளையே எடுப்பார்கள். துணிச்சல் இருந்தால் சார்லி ஹெப்டோவின் கருத்துரிமையை ஆதரிக்கிறோம் என்று சொல்லிப்பார்க்கட்டுமே. முகமதுவின் கார்ட்டூன்களைப்பற்றி கருத்துரிமை என்ன சொல்கிறது என்று சொல்லட்டுமே

  தமிழின் ஒரு அதிபயங்கர ‘ திராவிடமுஸ்லீம் ‘ கவிஞர் ஒருவர் முகமது கார்ட்டூன்கள் வெளிவந்தபோது ‘கருத்துரிமைக்கு எல்லை உண்டு’ என்று எழுதினார். இன்றைக்கு அவரே ‘கருத்துரிமைக்கு எல்லை உண்டு என்றெல்லாம் பேசுவது அயோக்கியத்தனம்’ என்கிறார். ஏனென்றால் இது இந்துக் கடவுள்கள்.

  ஏதோ ஒரு கவிதையிலே மார்க்ஸியத்தலைவர்களை பூடகமாக வசைபாடிவிட்டார் என்று சந்தேகம் வந்தபோது சங்கர ராமசுப்ரமணியம் என்னும் கவிஞரை இடதுசாரிகள் வீடுபுகுந்து இழுத்துவந்து அடித்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினார்கள். கவிஞர் விக்ரமாதித்தன் ஒரு கவிதையில் மார்க்ஸை ஏதோ சொல்லிவிட்டார் என்று மன்னிப்புக்கடிதம் எழுதி வாங்கினார்கள். இதெல்லாமே இலக்கிய உலகம் அறிந்தவை . நீங்களும் அறிந்தவை. நீங்களும் கண்டிக்கவில்லை.

  அன்றைக்கு தமிழகத்தின் எந்த இடதுசாரி கருத்துரிமைக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார்.? கருத்துரிமை என்பது என்ன? இந்து தெய்வங்களை வசைபாடும் உரிமை, இந்து மக்களை இழிவுபடுத்தும் உரிமை மட்டும்தானா?

  ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates