Trending

Wednesday, 26 August 2015

ஸ்ரீ சத்யவான்-சாவித்ரி புண்ய சரித்திரம்

மகாபாரதம் – வனபர்வம் - காம்யகவனம்
ஜயத்ரதனை வென்று,அவன் பிடியிலிருந்து த்ரௌபதியை விடுவித்து அழைத்துக் கொண்டு வந்த பின்னர் தர்மராஜனாகிய யுதிஷ்டிரர், ரிஷிகளுடன் காம்மிய வனத்தில் அமர்ந்திருந்தார்.மாமுனிவர்களும் பாண்டவர்களுக்கு நேர்ந்த துன்பங்களுக்குத் தமது அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். அவர்களில், மார்கண்டேயரை பார்த்து யுதிஷ்டிரர் வினவினார்- "பெரியீர் நடந்தது-நடந்து கொண்டிருப்பது-நடக்க போவது, ஆகிய முக்காலமும் தாங்கள் அறிவீர்கள். தேவரிஷிகளிடையேயும் தங்கள் புகழ் பரவியுள்ளது.என் உள்ளத்தில் உள்ள ஒரு ஐயத்தைத் தங்களிடம் கேட்கிறேன்;  அதைத் தாங்கள் நீக்க வேண்டும்". 

Sunday, 23 August 2015

கம்பர்

நம் கல்யாணங்களில் குடிமகன் பாடும் மங்கள வாழ்த்து, புலவனார் பாடும் கம்பர் வாழ்த்து போன்றவற்றை எழுதியவர். கொங்கு மக்களின் வாழ்க்கை நெறியான ராமாயணத்தை தமிழில் எழுதியவர். நம் இனத்தின் மேன்மையை பற்றிய ஏர் எழுபது, திருக்கை வழக்கம். போன்ற அரிய பணிகளை செய்தவர்.

கொங்கு மங்கள வாழ்த்து

கொங்கு திருமணங்களில் பாடப்படும் கொங்கு மங்கள வாழ்த்து.

காப்பு வெண்பா:

நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.

Tuesday, 18 August 2015

வெள்ளியங்கிரி பயணம்

எத்தனை பேர் வெள்ளியங்கிரி மலை ஏறியிருக்கிறீர்கள்? அற்புதமான அனுபவம் அது. கொங்கு மண்டலத்தில் சிவன் வசிக்கும் கைலாசம் என்று வெள்ளியங்கிரியையே சொல்லுவார்கள். ஏழு மலைகள், வணன்களால் சூழப்பட்ட பகுதிக்குள் பயணம்.

Sunday, 16 August 2015

வேட்டுவர் வெள்ளாளர் சமூக உறவு

சமீப காலமாக எங்கு பார்த்தாலும் வெள்ளாள கவுண்டர்கள் – வேட்டுவ கவுண்டர்கள் விரோதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள். விரோதம் பாராட்ட ஆயிரம் காரணம் இருந்தாலும் விரோதம் தவிர்க்கவும் நினைத்துப் பார்க்கவும் நல்ல விஷயம் நாலு இருக்கத்தான் செய்கிறது.

Thursday, 13 August 2015

அமாவாசை-பித்ரு தர்ப்பணம்

முன்னோர் இறந்த திதி அன்றும், அமாவாசை அன்றும் பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம். இயலாதோர், தெரியாதோர் ஆடி-தை-புரட்டாசி அமாவாசைகளில் செய்யலாம். ஒரு ஆண் பிறக்கும்போதே பெற்ற கடனாக பித்ருக் கடன் ஏற்படுகிறது. ஆடி அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் மிக மிக அவசியம். பித்ரு தர்ப்பணம் என்பது பல பெயர்களில் சங்க காலம் முதல் இருந்து வருகிறது. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த செய்தி கொங்கு மண்டல சதகத்தில் வருகிறது. புறநானூறில் சேரன் பாரதப் போரில்

Wednesday, 12 August 2015

"ஈஞ்சனுக்கு எங்கும் காணி"-ரகுநாதசிங்க கவுண்டர்

ஈஞ்ச கூட்டம் மாவீரரை பெற்றெடுத்த கூட்டம்... ரகுநாதசிங்க கவுண்டர்.. கிழக்கே ராசிபுரம், அத்தனூர் வரை.. மேற்கே கோவை தொண்டாமுத்தூர், நீலாம்பூர் வரை.. வடக்கே செவியூர், சிறுவலூர் வரை.. தெற்கே பழனி வரை என கிட்டத்தட்ட கொங்கதேசத்தையே திக்விஜயம் செய்தவர்... 

Saturday, 1 August 2015

தேசத்தை மூளை சலவை செய்வது-உளவாளியின் வாக்குமூலம்

1985 ஆண்டு ரஷ்ய உளவு அமைப்பான KGB யின் முன்னாள் அதிகாரி யூரி பெஸ்மினோவ் அளித்த பேட்டியில் உளவு அமைப்புக்கள் வெளிநாடுகளில் செயல்படும் விதங்கள் பற்றி பல அதிர்ச்சிகரமான செய்திகளை வெளியிட்டார். அவற்றை அறிந்துகொண்டாலே நம் நாட்டில் நிகழும் சமூக மாற்றங்கள், முற்போக்கு, பெண்ணிய, திராவிட, கலாசார சீர்கேடுகளின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் எப்படி இயக்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates