Trending

Saturday, 1 August 2015

தேசத்தை மூளை சலவை செய்வது-உளவாளியின் வாக்குமூலம்

1985 ஆண்டு ரஷ்ய உளவு அமைப்பான KGB யின் முன்னாள் அதிகாரி யூரி பெஸ்மினோவ் அளித்த பேட்டியில் உளவு அமைப்புக்கள் வெளிநாடுகளில் செயல்படும் விதங்கள் பற்றி பல அதிர்ச்சிகரமான செய்திகளை வெளியிட்டார். அவற்றை அறிந்துகொண்டாலே நம் நாட்டில் நிகழும் சமூக மாற்றங்கள், முற்போக்கு, பெண்ணிய, திராவிட, கலாசார சீர்கேடுகளின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் எப்படி இயக்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த யூரி பெஸ்மனோவ், இந்திய வரலாறு, மொழிகள், சமூகவியல், இலக்கியம் போன்றவற்றில் நிபுணர். இந்தியாவில் பல காலமாக மீடியாவில் பணியாற்றியவர்.

அவர் பேட்டியின் முக்கிய பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு,

ரஷ்ய உளவுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 15% குறைவான பணம், நேரம் உழைப்பு மட்டுமே உளவு வேலைக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது. மீதி அனைத்து 85% மும் ஒரு நாட்டின் மீது கலாசார-சித்தாந்த யுத்தம் நடத்தவே செலவிடப்படுகிறது. ஒரு எதிரி தேசத்தையே மூளைச்சலவை செய்வது என்ற இந்த கலாசார யுத்தம் நான்கு நிலைகள் கொண்டது,தேசத்தின் தர்மத்தை குறித்த தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கல் (Demoralization):
15-20 வருஷங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த கட்டத்தில் ஒரு தலைமுறை மாணவர்களுக்கு மார்க்சிய-லெனினிய கம்யூனிச கருத்துக்கள் மண்டையில் திணிக்கப்படும். தங்கள் சொந்த நாட்டின் மரபுகள், கலாசாரத்தின் மீது வெறுப்பும், பிற்போக்குத்தனம்-காட்டுமிராண்டித்தனம் என்ற எண்ணமும், தாழ்வுமனப்பான்மையும் ஏற்படுத்தப்படும். அதற்கு மாற்றாக கம்யூனிசம்-நவீனம்  தான் உயர்ந்த சமூகத்தை தரும் என்ற மாயை மனதில் பதிக்கவைக்கப்படும். இந்த வலையில் வீழ்வோர், தங்கள் நாட்டு மக்களையே கம்யூனிச மூளைச்சலவை செய்யத் துவங்கிவிடுவர். கொடுமை என்னவென்றால் அவர்கள் மக்கள் பணி-சமூக மாற்றம் செய்கிறோம் என்ற மாயையில் இருப்பர்; ஆனால் அவர்கள் உழைப்பெல்லாம் நிஜத்தில் தேசவிரோத சக்திகளுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கும், இது அவர்களுக்கே தெரியாது. ராணுவ கேம்புகளுக்கு இழுத்துச் சென்று "ஸ்பெஷல் சிகிச்சை" கொடுத்தாலன்றி, அவர்களுக்கு எவ்வளவு ஆதாரங்களோடு உண்மையை எடுத்து சொன்னாலும் புரிந்துகொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். இந்த திட்டத்தில் பலியாகும் அரைவேக்காட்டு புத்திசாலிகள் சமூக-அரசு பதவிகளில் அமர்ந்திருப்பார்கள்.

ஸ்திரத்தன்மை சிதைப்பு (Destabilisation):
2-5 வருஷங்கள் எடுத்துக் கொள்ளும் இந்த நிலையில், ஒரு தேசத்தின் பொருளாதாரம், அரசியல், வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் ராணுவக் கொள்கைகள் கடுமையான விமர்சனத்துக்கும் அதிருப்திக்கும் உள்ளாகும்.

கிளர்ச்சி/புரட்சி (Crisis):
தொடர்ந்து பரப்பப்பட்ட வேருப்புணர்வின் காரணமாக கிளர்ச்சியும் புரட்சியும் வெடிக்கும். இந்த கட்டம் சுமாராக 6 நீடிக்கும். இதனால் இருக்கும் ஆட்சிமுரைகள் ஒழிக்கப்பட்டு கம்யூனிச ஆட்சிமுறையோ அல்லது கம்யூனிச ஆட்சிக்கு ஜால்ரா தட்டும் ஆட்சி அமர்த்தப்படும்.

சகஜமாக்குதல் (Normalisation):
புதிதாக உருவான ஆட்சியையும், சமூக பொருளாதார கொள்கைகளையும் சாகசப் படுத்தும் கட்டம். இது நீண்ட நெடிய காலம் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆயுதம், அடக்குமுறை, வன்முறை, கொலை என்று எதிர்ப்பவர்கள் குரல்வளை, உயிர் என்று அபாக்கப்படும். விஷக் கருத்துக்களை பரப்ப கருத்துரிமை பேசியவர்களுக்குக் கூட கருத்துரிமை சுத்தமாக இருக்காது.

இந்த நிலையை எட்ட உதவிய “அரைவேக்காட்டு சிந்தனையாளர்கள் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள் எல்லாரும் வேலை முடிந்ததும் அரசியல் விபசாரிகளாக கருதப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவார்கள்!. காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமாக கம்யூனிசம் பற்றி தெரிந்தும், கனவு கண்டும் இருப்பார்கள். யதார்த்தத்தில் அப்படி இல்லை என்று உணரும்போது அவர்கள் கடுமையான எதிரிகளாக மாறிவிடுவார்கள் என்பதால் அவர்கள் சுவற்றோடு சேர்த்து நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
-------------------------------------------
நம் தேசத்தின் சனாதன தர்மத்தாலும், பரந்துபட்ட பல்வேறு கலாசார பன்முகத் தன்மையாலும், மதமாற்றமும் சரி சித்தாந்த மாற்றமும் சரி, இங்கே செல்லுபடியாகவில்லை. பிற தேசங்களில் கால் நூற்றாண்டு முதல் ஒரு நூற்றாண்டுக்குள் முடிந்த மதமாற்றம், சித்தாந்த மாற்றம் நம் தேசத்தில் மட்டும் பல நூற்றாண்டுகள் கடந்தும் நடைபெறவில்லை. தெய்வ அருளின் சக்தி அப்படி. இந்த கம்யூனிச சூழ்ச்சியும் நம் நாட்டில் நிச்சயம் வெற்றி பெறாது.


பேட்டி மூலம்: (முழுப் பேட்டி)

பேட்டியின் முக்கிய பகுதி:


மேலும் படிக்க,

பெரியார் என்பது ஈவெராவுக்கு பொருந்துமா??

௧.ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்
http://www.jeyamohan.in/?p=28449

௨.நமது எஜமானர்கள்
http://www.jeyamohan.in/?p=28387

௩.அன்னியநிதி – கடைசியாக…
http://www.jeyamohan.in/?p=28464


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates