Trending

Monday, 28 September 2015

குடியானவர்

குடியானவர் - குடி என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான சொல். சாதி என்ற சொல்லால் சாதியைக் குறிக்கும் முன்னரே குடி என்ற சொல்லே பயன்பட்டு வந்துள்ளது. தொல்காப்பியம், திருக்குறள் எல்லாவற்றிலும் ஜாதியை குடி என்றே சொல்லியிருக்கிறார்கள். குடியானவர் என்ற சொல்லின் மேன்மையும் தொன்மையும் விளங்கியிருக்கும். நாடோடி/பழங்குடி வாழ்க்கைக்கு மேம்பட்டவர் குடியானவர். குடியானவர் என்றால் நாடோடி வாழ்க்கையில் இருந்து ஓரிடத்தில் நின்று நிலைத்து வாழ்வதற்கான வாழ்வாதாராங்களை, தனக்கும் தன்னை அண்டி வாழும் பிற சாதிகளுக்கும் உருவாக்கி, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளோடு வாழும் வெள்ளாளர். குடியானவர் என்ற சொல்லிற்கு விவசாயி; குடிகளைக் காப்பவர்; நாட்டின் பிரஜை என்று பல்வேறு பொருள்களில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கொத்துக்காரர், மணியக்காரர், பட்டக்காரர் என்று ஒருவன் எந்த பதவி வகிக்கவும் அடிப்படையில் அவன் குடியானவராக இருத்தல் வேண்டும். கொங்கதேச வரலாறு முழுக்கவே குடியானவர்கள் பட்டக்காரர் பதவி பெற்ற வரலாற்றைப் பல இடங்களில் காண முடியும். கவுண்டன், வெள்ளாளன், காராளன் என்பதுபோல குடியானவர் என்பதும் நம்மை குறிக்கும் ஒரு சொல்.

Sunday, 27 September 2015

தொடரும் நாடக காதல்-அடக்குமுறை-பிசிஆர் நிரந்தர தீர்வு என்ன??

படத்தில் இருக்கும் நபர் திரு திலீப், சேலத்தில் மேஜராகாத பள்ளி சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட காமவெறியனைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது காவல் நிலையம் முன்பே கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானவர்.

Friday, 25 September 2015

சீதனம்

சீதனம் வரதட்சணை போன்றவற்றை சமூக கொடுமையாக்கி நம் பாரத சமூகத்தையே கொடுமைக்கார பெண்ணடிமை சமூகம் என்று சித்தரித்து வந்தனர். தர்மம், சமூக அமைதி, பெண்களுக்கு உயரிய இடம் கொடுத்து வந்த நம் சமூகத்தில் இப்படி ஒரு கொடுமையா என்று நம்மை குற்ற உணர்ச்சியில் தள்ளப் பார்க்கிறார்கள். உண்மையில் சீதனம் கொடுப்பது பற்றிய முழுமையாக பார்ப்போம்.

சொந்தத்தில் கல்யாணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?

நம் முன்னோர்கள் காலம் காலமாக உறவின்முறைக்குள்ளேயே கல்யாணம் செய்து வந்தார்கள். இன்றுவரையிலும்கூட பல குடும்பங்களில், இந்திந்த குடும்பத்தில்தான் கல்யாணம் என்று நீண்ட நெடு நாட்களாக பல நூற்றாண்டுகளாக கல்யாணம் செய்துவரும் குடும்பங்கள் எந்த வித குறையும் இன்றி அறிவும் ஆரோக்கியமும் நிரம்பப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். 

Tuesday, 15 September 2015

பொக்கிஷங்களை பாதுகாப்போம்!

ஆரோக்கியம், விவசாயம், நீர்பாசன முறைகள், மாடு-கன்றுகள் வளர்ப்பு, ஜாதி வரலாறு, மருத்துவம், விடுகதைகள், வட்டார பழமொழிகள் மற்றும் கதைகள், சமையல் முறைகள், ஊர் வரலாறுகள், சீர் முறைகள், பிரசவம், குழந்தை வளர்ப்பு, ஆன்மிகம், கோயில் விஷயங்கள் என்று ஏராளமான தகவல்கள் அவர்களிடம் நாம் சேகரிக்க வேண்டியுள்ளது. சின்ன சின்ன விஷயங்கள் பற்றிக் கூட ஆழமான நுட்பமான கருத்துக்களை அவர்களிடம் கேட்டரிய முடியும். வெளிநாடேல்லாம் போய் ஆகாத கருமத்தை படிக்கும் நாம் வீட்டுக்குள்ளேயே-அதுவும் நம் வாழ்வுக்கு அவசியமான செய்திகளின் பொக்கிஷமாக இருக்கும் பெரியவர்களை மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோமே! நம் முட்டாள்தனத்தின் உச்சமல்லவா இது..?

Tuesday, 8 September 2015

கொங்கு கல்யாணத்தில் விளையாட்டுகள்

நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த விளையாட்டுக்கள், கேலி கிண்டல் எல்லாம் நம் குடியானவர் வீட்டு கல்யாணங்களை காலா காலத்துக்கும் நினைத்து மகிழ வைத்திருந்த வேர்கள். அத்தகைய தருணங்களின் தொகுப்பு இதோ..

Thursday, 3 September 2015

மரபு அருளும் ஆரோக்கியம்-வீடியோ பதிவுடன்

நம் உடலுக்கு தேவையான சத்துக்களை வைட்டமின், புரோட்டின் என ஒரு பத்து பதினைந்து பெயர்களில் அடக்கி விடுகிறார்கள். இந்த சில ஊட்டச்சத்துக்களை மட்டும் பெற்றாலே நாம் நோயின்றி வாழலாம் என்ற பிரம்மையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.நிஜத்தில் நம் உடல் இயக்கத்திற்கு ஏராளமான மூலக்கூறுகள் தேவை. என்சைம்கள் என்று சொல்லலாம். உதாரணமாக, நவீன அறிவியல் பார்வையில் தேனை சோதனை செய்தால் அதில் 93% சர்க்கரை மீதி நீர், மற்றும் சில கனிமங்கள் மட்டுமே தெரியும். ஆனால் உண்மையில் தேன் அமிர்தத்துக்கு ஒப்பான பல ஆயிரம் என்சைம்களை உடையது; அவற்றை இந்த நவீன அறிவியலால் கண்டறிய இயலவில்லை.

Wednesday, 2 September 2015

தர்மம் போற்றும் மனதும் ஜாதியும்

கண்ணனை பார்த்து அர்ஜுனன் கேட்கிறார். 

"கண்ணா, அதர்மம் செய்ததற்கு தண்டிப்பது தர்மமா? அல்லது உறவுகளை கொல்லும் பாவமா? என்று நான் மிகவும் குழம்பியுள்ளேன். எனது தர்மம் என்ன, வழிகாட்டு!"

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates