Trending

Wednesday, 2 September 2015

தர்மம் போற்றும் மனதும் ஜாதியும்

கண்ணனை பார்த்து அர்ஜுனன் கேட்கிறார். 

"கண்ணா, அதர்மம் செய்ததற்கு தண்டிப்பது தர்மமா? அல்லது உறவுகளை கொல்லும் பாவமா? என்று நான் மிகவும் குழம்பியுள்ளேன். எனது தர்மம் என்ன, வழிகாட்டு!"


"முதலில் நீ யார் என்று சொல்!" 

"நான் துரோணரின் சீடன், குந்தி புத்திரன், சத்ரியன்.." "நீ குந்தியின் புத்ரனாக இருப்பதால் நீ ஒரு சத்ரியன்; சத்ரியனாக இருந்ததால் தான் துரோணரின் சீடனாகவும் ஆனாய். எனவே சத்ரிய நீதியை நிலைநாட்டு. தர்மத்தின் வழியின் நின்று, அதர்மம் தலைதூக்கினால், லாபம்-நஷ்டம், வெற்றி-தோல்வி, உறவு-பகை, மானம்-அவமானம் போன்ற பார்வைகளைக் கடந்து இவற்றைக் கடந்து ஆயுதமேந்தி தர்மத்தை நிலைநாட்ட போராடுவது சத்ரியனின் கடமை.அப்படிப்பட்ட தர்ம போராட்டத்தில் நீ வெற்றி பெற்றால் புகழோடு இந்த ராஜ்ஜியம் அனைத்தையும் சேர்த்து நீ ஆள்வாய்; ஒருவேளை தோற்று மரணித்தாலும் சுவர்க்கம் அடைவாய். எனவே தர்மத்திற்காக போராடும்போது எப்படியும் நஷ்டமில்லை. துணிந்து நில்"

-----------------------------

இந்த மனநிலை, குடும்பம், தொழில், சமூகம் என்று வாழ்வின் எல்லா காலகட்டத்திலும் மிகவும் தேவைப்படும். முதலில் நாம் யார், நமது அடையாளம் என்ன என்பதில் தெளிவு வேண்டும். நமது நோக்கம்-கடமை என்ன என்பதை புரிந்துகொண்டு அதற்கான நியாயமான காரணங்களை, எவ்வித சமரசங்களும் இன்றி புரிந்துகொள்ள வேண்டும். சிறிதளவேனும் அதர்மம் இருந்தாலும் அதை தவிர்ப்பது சிறப்பு. அதன்பின் செயலில் இறங்க வேண்டும். நாம் நல்ல விஷயத்துக்காக உழைக்கிறோம் என்ற எண்ணம் வலுவாக இருந்தால் நமது செயலாற்றல் பல மடங்கு பெருகும். எவ்வளவு எதிர்ப்பையும் சமாளிக்கும் மனதிடம் இருக்கும். வென்றாலும் தோற்றாலும் மனம் ஆணவமோ, அவமானமோ பெற்று கெட்டுப்போகாது. ரிசல்ட் எதுவாயினும், நமக்கான கூலி நிச்சயம் உண்டு. இதுதான் தர்மம் நமக்கு கொடுக்கும் கவசமும், ஆயுதமும் ஆகும். 

ஜாதி தேவையா இல்லையா என்பதற்கு "என் முன்னோர்கள் கடைபிடித்தார்கள் அதனால் கடைபிடிக்கிறேன்" "என் ஜாதி பெருமிதமாக இருக்கு அதனால் ஜாதி வேணும்" என்று கண்மூடித்தனமாகவோ, "ஏன் சொல்பவன் மட்டும் ஒழுங்கா?" என்று எதிர் கேள்வியினாலோ நியாயப் படுத்தாமல் (மறைமுகமாக தோல்வியை ஒப்புக்கொள்ளாமல்), நியாயமான காரணங்களை புரிந்து கொண்டு ஜாதியை ஆதரிக்க வேண்டும். அதுதான் காலாகாலத்துக்கும் நிலைக்கும். 

மனிதன் ஒரு சமூக விலங்கு. கூட்டமாக வாழும் இயல்புடையவன். யானைகள், சிங்கங்களைப் போல. புலிகளைப் போல தனிமை வாழ்வு வாழ்பவன் அல்ல. அந்த கூட்டம் எதனடிப்படையில் என்பதில்தான் வேறுபாடுகள் உருவாகின்றன. பாரதத்தின் சனாதன தர்மம் என்பது, காலாகாலத்துக்கும் இயற்கை வளங்கள் அழியாது, அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்கள் "தேவைகள்" நிறைவேறி அவமானங்கள் இல்லாது ஆத்மதிருப்தியோடும், ஆரோக்கியத்தோடும் வாழும் சமூக-பொருளாதார-ஆன்மீக கொள்கைகளே. நிஜ சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மைகள் அறியலாம். வெள்ளையர் வருமுன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக, பொருளாதாரம், கல்வி, மருத்துவம், ஆன்மிகம், தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், அன்றாட வாழ்க்கை என்று எல்லாத் துறையிலும் நம் தேசம் முன்னோடியாக இருந்தது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபப்ட்டு தற்கால மேற்குலகம் ஒப்புக்கொண்டு நம் முன்னோர் வாழ்வியலை பின்பற்றத் துவங்கியுள்ளது. அத்தகைய உயரிய நிலையை எட்ட வழிவகை செய்த சமூக அமைப்பாக ஜாதி இருந்தது என்றால் மிகையல்ல. இவை நம்மால் ஆதாரப்பூர்வமாக் நிரூபிக்க முடிந்தவை; இவையன்றி இன்னும் ஏராளமான தெய்வீக சக்தியும், அறியப்படாத -புரிந்துகொள்ள முடியாத நன்மைகளும் நம் சனாதன தர்மத்தால் அடைந்தோம். பிற நாடுகளில் இருந்த சமூக-பொருளாதார-ஆன்மீக அமைப்புகள் , முற்காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி, வெறுப்பு, துவேசம், அடக்குமுறை போன்றவற்றை விதைத்து பெரும்போர்கள், ஒழுக்கமின்மை, கணக்கற்ற படுகொலைகள், பஞ்சம் போன்றவற்றையே விதைத்தன என்பதையும் அறியலாம். எனவே நம் முன்னோர்களின் ஜாதி அமைப்பே எல்லா தரப்பு மக்களுக்கும் நிலையான மகிழ்ச்சியையும், இயற்கைக்கு பாதுகாப்பையும், நிறைவான வாழ்வையும் தரும் என்பதால், உலக நன்மை வேண்டி ஜாதியை ஆதரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates