Trending

Tuesday, 8 September 2015

கொங்கு கல்யாணத்தில் விளையாட்டுகள்

நம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த விளையாட்டுக்கள், கேலி கிண்டல் எல்லாம் நம் குடியானவர் வீட்டு கல்யாணங்களை காலா காலத்துக்கும் நினைத்து மகிழ வைத்திருந்த வேர்கள். அத்தகைய தருணங்களின் தொகுப்பு இதோ..

கல்யாணத்தில் நடக்கும் விளையாட்டுக்கள்.. மாப்பிள்ளை & பொண்ணுபிள்ளை இருவரையும், அண்டாவில் நீர் அல்லது நெய் நிறைத்து போடப்படும் மோதிரத்தை யார் எடுப்பது என்று விளையாட்டு. சில ஊர்களில் இரண்டு மோதிரங்கள் போடப்பட்டு எந்த மோதிரம் முதலில் சிக்குகிறதோ அதைப் பொறுத்து பெறப்போகும் குழந்தை ஆனா பெண்ணா என்று சொல்வார்கள். 

இதுதான் மாப்பிள்ளை அழைப்பு. குதிரையில் மாப்பிள்ளை அழைக்கிறது சமீப காலமா அரிதா போச்சு. விடுதி வீட்டில் இருந்து பெண் வீட்டுக்கு கல்யாணம் செய்ய வரும் மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார் வாசலில் (தற்போது கல்யாண மண்டபம்) வந்து நின்று அழைக்க வருவர். யார் தேடி வருவது என்பதில் ஒரு விளையாட்டு. மாப்பிளை வீட்டாரை பெண் வீட்டார் வந்து அழைத்து போவதா, பெண் வீட்டை தேடி மாப்பிளை வீட்டார் முதலில் வருவதா என்று போட்டி. இதில் யார் யாரை இழுப்பது என்று போட்டி நடக்கும். யாரும் முன்னால் வர மாட்டார்கள்; ஏன், அவர்கள் நம்மைத் தேடி வரட்டும் நாம ஏன் போகணும் என்று இரு சாராரும் முரண்டு பிடிப்பார்கள். பெரியவரோ, குடிநாவிதரோ இரண்டு தரப்புக்கும் பஞ்சாயத்து செய்து நீரை கீழே ஊற்றி கோடு போட்டு ஆளுக்கு ஒரு அடி என்று வரவைப்பார். அப்படி இருவரும் நெருங்கி வரும்போது இடையே இருக்கும் கோட்டைத் தாண்டி பெண்வீட்டாரோ/பிள்ளை வீட்டரோ எதிர்தரப்பில் இருந்து யாரையேனும் தங்களுக்குள் இழுத்துக் கொள்வர். முதலில் அப்படி இழுத்துக்கொள்வோர் வென்றதாக விளையாட்டு.
வரவேற்பில் மாப்பிள்ளை & பெண் வீட்டார் இருவருமே தங்கள் படைபலத்தை காட்ட நீண்ட வரிசையில் நிற்பர். சொந்தபந்தங்கள்தான் பலம், கவுரவம் என்பதை இதில் இருந்து அறியலாம். வரவேற்பில் பங்காளிகள் நிறைஞ்சு இருக்கணும் என்பது பெருமையான விஷயம். கல்யாணத்துக்கு வரும் சொந்தபந்தங்களை பாசத்தோடு வரவேற்று கேலிகிண்டலோடு செல்வர்.கும்பிடு பெருசு சிறுசு என்று கிண்டல் களை கட்டும்.


மாப்பிளையும், மச்சினனுக்கும் விளையாட்டு. பெண்ணின் சகோதரனும், மாப்பிள்ளையும் கீழே படத்தில் உள்ளவாறு இலையின் மேல் கைகளை கோர்த்தவாறு அமர்ந்திருப்பர். பெண் வீட்டின் மூத்த பெரியவர் யாரேனும், முதலில் கைகளில் நெய்யை ஊற்றிவிட்டு, அதன்மேல் ஒரு மோதிரத்தைப் போடுவர். கட்டை விரலால் இருவர் உள்ளங்கைகளுக்கு இடையே இருக்கும் மோதிரத்தை யார் எடுப்பது என்று போட்டி நடக்கும். (கீழே படத்தில் கல்யாணப் பெண்ணே போடுவது போல இருப்பது பிழையாகும்)
பெண் தூக்குவது என்பது ஒரு சடங்காக இருந்தது. பெண்ணின் தாய்மாமனுக்கே பெண்ணின் மீது முதல் உரிமை. அவர்கள் பெண்ணை தோளில் தூக்கி வருவார்கள். தற்போது இந்த சீர் பெருமளவு நின்றுவிட்டது. பழைய கல்யாண ஆல்பத்தில்,
மாப்பிள்ளைக்கு திருஷ்டி சுற்றும் கொழுந்தியா அல்லது நங்கையார், மாப்பிள்ளையிடம் தட்டில் பணம் போட சொல்லி முரண்டுபிடிப்பார்கள். பத்து போட்டால் நூறு வேண்டும் என்றும், நூறு போட்டால் ஐநூறு வேண்டும் என்றும் விளையாடுவார்கள்.

கல்யாணம் முடிந்து விருந்துக்கு உக்காரும்போது, மாப்பிள்ளைக்கு பெண் வீட்டு பங்காளிகள் தான் சோறு போடுவார்கள்.(கல்யாணமே பெண் வீட்டில்தான் நடக்கும் என்பதால் விருந்து பரிமாறும் கடமை, பந்தி விசாரிப்பது அனைத்தும் பெண் வீட்டு பங்காளிகலையே சாரும்). அப்போது, மாப்பிள்ளை இலையில் சோறும் நிறைய ரசமும் ஊற்றிவிடுவார்கள் ரசம் இலையை தாண்டி கீழே செல்லாமல் மாப்பிள்ளை சாப்பிட்டுவிட வேணும். கையும் வாயும் வேக வேகமாக உருப் உருப் என்று ரசத்தை அள்ளி அள்ளி உறுஞ்சி தங்கள் திறனை காட்ட முயற்சிப்பார்கள். (படம் இல்லை)

கல்யாணப் பெண்ணின் வெக்கம் ஒவ்வொரு தருணங்களிலும் பார்க்க கண்கோடி வேண்டும். மாப்பிள்ளை, பெண்ணிடம் பேச முயற்சிப்பது, ஜாடைகள், தூதுகள், கல்யாணம் உறுதியான பின்னர் கல்யாணத்துக்கு முன் பெண்ணைப் பார்க்க வருவது என்று கல்யாண காலம் வசந்த காலமாக இருக்கும். ஒரு சினிமா படமே, இதை வைத்து எடுக்கப்பட்டது. 

கல்யாண காலத்து மகிழ்ச்சி எல்லாம் வாழ்க்கை முழுக்க எண்ணிப் பார்க்கலாம். இதற்கு எளிமையாக வீட்டில் கல்யாணம் செய்தால் பலமடங்கு மகிழ்ச்சி பெருகும். கல்யாணத்தின்போதே உறவுகள் பலப்படும். இந்த விளையாட்டு மகிழ்ச்சி எல்லாமே, கொங்கு முறைப்படி அருமைக்காரர் முன்னின்று சீர்முறைகள் செய்து கல்யாணம் செய்யும்போது மட்டுமே சாத்தியம். பெற்றோரை சாகடித்து நோகடித்து வேறுசாதியில் கல்யாணம் செய்வோருக்கு சாபமும், வெறுப்பும், அவமானங்களுமே வாழ்வு முழுதும் மிஞ்சும்!

படங்கள் நன்றி:
aj போட்டோகிராபி
அருண் போட்டோகிராபி

--சித்ரமேழி தர்ம சபை

மேலும் படிக்க,
மரபு கல்யாணமா-விளம்பர கல்யாணமா?
தாலியின் வரலாறு
நல்லிணக்கமானகொங்கு உறவுகள்
கொங்கு கவுண்டர்கள் மேல் குவியும் பாவங்கள்
கிறிஸ்தவமயமாகும் கொங்கு திருமணங்கள்
கலப்பு கல்யாணம் செய்வோர் படிக்க
ஏன் கோயிலில் கல்யாணம் கூடாது?
தமிழ் முறை கல்யாணம் செய்வோர் படிக்க
வம்ச விருத்தி
எளிமையின் இன்றைய அவசியம் 3 comments:

 1. வணக்கம்,

  எனது நண்பரின் வழியாக இந்த பதிவை காண நேர்ந்தது..

  இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் சில படங்கள் நான்(erode suresh) எடுத்தது .. எனது அனுமதியில்லாமல் இந்த படங்களை பயன்படுத்தியுள்ளீர்கள்.. இது வருத்தத்தை தருகின்றது.. மேலும் இந்த்படங்களில் இருக்கும் மணமக்கள் மற்றும் நண்பர்கள் என்னிடம் வருத்தப்படுக்கொண்டுள்ளனர்.. எனவே, விரைவில் எனது படங்கள் அனைததையும் நீக்கி விடும்படி கேட்டுக்கொள்கின்றேன்.. மேலும் சங்கடங்கள் ஏதும் ஏற்படமால் இருக்க விரும்பும்..

  நன்றி
  சுரேஷ் பாபு

  ReplyDelete
  Replies
  1. நமஸ்காரம்,

   உங்கள் படங்கள் நீக்கப்பட்டுவிட்டன. உங்கள் முகநூல் பக்கத்தில் அவற்றை மறு பதிப்பு செய்யக்கூடாது என்ற எச்சரிக்கை எதுவுமில்லை. அது பொதுவில் அனைவரும் காணும்படி பிரசுரித்திருந்தீர்கள். மேலும் அதில் உங்கள் பேரும் குறிப்பிடப்பட்டிருந்ததால், கீழே நன்றி என்று உங்கள் போரையும் குறிப்பிட்டே பதிந்திருந்தோம். தற்போது நீக்கப்பட்டுவிட்டது. சிரமத்துக்கு மன்னிக்கவும்.

   நன்றி,
   சித்ரமேழி தர்ம சபை

   Delete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates