Trending

Thursday, 17 November 2016

கொங்கு விஷநீர் பிரச்னை - தீவிரமும் தீர்வும்

முன்பெல்லாம் கான்சர் என்பது சினிமாவில் மட்டுமே கேள்விப்பட்ட வியாதி. குழந்தையின்மை என்பது மிக அரிதாக இருந்த விஷயம். இப்போது கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்கள் உறவினர் ஊர்-வட்டத்திலேயே நிச்சயம் நான்கு பேராவது கேன்சர் நோயாளிகளோ, குழந்தயின்மையாள் பாதிக்கப்பட்டவர்களோ இருப்பார்கள். செய்தி என்று பெருமூச்சு விடவேண்டாம். நீங்கள் ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்நாளுக்குள் உங்கள் குடும்பத்தில் மகன்-மகளோ அல்லது பேரன் பேத்தியோ நிச்சயம் ஒருவரையாவது நோயாளியாகப் பார்க்கத்தான் போகிறீர்கள். காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

Friday, 21 October 2016

கங்கா குலம்
காடாய்க்கிடந்த கொங்க தேசத்தை நாடமைத்த ஆட்சியாளர்களான கொங்க வெள்ளாளர்கள் கங்கா குலத்தை சார்ந்தவர்கள். கங்கா நதிகங்கா குலம் மற்றும் கங்கையுடன்  கொங்க வெள்ளாளர்கள் தொடர்புகளை பற்றி காண்போம்.

Monday, 17 October 2016

குலத்தொழில்

குலத்தொழில் என்பது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெய்வம் போன்றது என்றால் மிகையல்ல. பல நூறு தலைமுறைகளாக அவன் வம்சத்துக்கு சோறு போட்டது. அவன் வம்சத்தொடு சேர்ந்து வாழ்ந்த பிற ஜாதியினருக்கும் சேவை செய்தது, பணத்தைத் தாண்டி. குலத்தொழில் என்பதை இன்று தவறாக சித்தரித்து, அவை நசியும்படியான சட்டங்களும் சமூக சூழல்களும் உருவாக்கிவிட்டார்கள். குலத்தொழில்களின் நியாமனான சமூக பங்களிப்பென்ன, இன்றைய முக்கியத்துவம் என்ன, மீட்பதின் தேவையென்ன என்பதைப் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

Wednesday, 12 October 2016

கொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி

குடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் காலகாலமாக வாழ்ந்துவரும் கொங்க நாவிதர் பற்றி விரிவாக காண்போம். நாவிதர் என்போர் சவரத் தொழில் செய்வோர் என்ற பிம்பம்தான் மனதில் உள்ளது. ஆனால் கொங்கு சமுதாயத்தைப் பொறுத்தவரை கவுண்டர்கள் வாழ்வில் நாவிதர்களுக்கு தனிப்பெரும் சிறப்பும், பொறுப்பும் உள்ளது.

Tuesday, 11 October 2016

மழை வேண்டி கன்னியாத்தா வழிபாடு

‘மானத்த நம்பியல்லோ… மக்களத்தான் பெத்தோமய்யா… மக்களைத்தான் காப்பதுக்கு... மாரி மழை பெய்ய வேணும்’ எனப் பாடல்களைப் பாடியும், மழை வேண்டி வீடு, வீடாகச் சென்று ‘மழைச் சோறு’ பெற்றும் விநோத ‘மழைக் கன்னி’ வழிபாட்டை, கிராம மக்கள் நடத்தினர்.

Thursday, 1 September 2016

நாட்டுப்பசுக்கள்

நாட்டுப்பசுக்கள் நமது கொங்கதேசத்தின் காராள வம்ச குடியானவர்களுக்கு தனிப்பெரும் தெய்வம், குடும்ப உறவு, அடிப்படை சொத்து. நாட்டுப்பசுக்களை பற்றி அடிப்படையான சில விஷயங்களை அறிவோம்.

Monday, 8 August 2016

பெருமைமிகு சங்கு

பல தேசங்களாக பாரதம் பிரிந்திருந்தாலும் சில விஷயங்கள் பாரதத்தின் அனைத்து தேசங்களிலும் பொதுவாக பின்பற்றப்பட்டு அவை அணைத்து தேசங்களையும் இணைக்கும் ஒரு கலாசார சரடாக செயல்படும். அப்படிப் பட்ட விஷயங்களில் ஒன்று சங்கு. கொங்கதேசம் கடல் எல்லைகள் இல்லாத பூமி, ஆயினும் கொங்கில் சங்கு பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆன்மீக, மருத்துவ கலாசார காரணங்களே அதற்கு காரணமாகும். அவ்வாறான சில விஷயங்களை தொகுக்கிறோம்.

Thursday, 28 July 2016

குலகுரு மரபு-ஓர் அறிமுகம்

குரு
குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். குரு, ஆச்சாரியர், உபாத்தியாயர் என்ற சொற்கள் வெவ்வேறு பொருள் கொண்டவை; ஆனால் தற்காலத்தில் ஒரே பொருளில் பார்க்கப்படுகின்றன. உபாத்தியாயர் கடமை கற்பிப்பதோடு முடிகிறது. ஆச்சாரியர் தான் கடைபிடிப்பதை, சோதித்து கற்பிக்கிறார். ஆனால், குருவானவர் சொல், செயல், ஸ்பரிசம், திருஷ்டி, சித்தம் போன்றவற்றால் அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தை அருளவல்லவர். சிஷ்யனின் வாழ்வு முழுவதற்குமான ஞானத்தையும், நல்லருளை வழங்கி வழிநடத்தக் கூடியவர். ரத்த பந்தம் இல்லாமலேயே வாழ்வின் அனைத்து அம்சங்களும் பூரணமடைய வழிகோளுபவர். குருவே பிரம்மாவாக, விஷ்ணுவாக, சிவமாக அருள வல்லவர். குருவின் ரூபத்தில் மும்மூர்த்திகளையும் நாம் தரிசிக்கலாம். இந்த கருத்தை வேதங்களும், திருமூலர் திருமந்திரமும் பல இடங்களில் மாறாமல் செப்புகின்றன.

Tuesday, 22 March 2016

சுதேசி பானங்கள்

சுதேசி பானம் என்பது நம் நாட்டில் நம் நாட்டவர்களால் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பானங்கள் அல்ல. தொன்றுதொட்டு நம் மண்ணில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு நம் மக்களால் தயாரித்து பயன்படுத்தப்பட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திய பானங்களே சுதேசி பானங்களாகும். இவை நம் உடல் உறுப்புகளில் தேங்கிய நுண்கழிவுகளைக் கூட வெளியேற்றி, உடலுக்கு குளிர்சியூட்டி, ஜீரணத்தை பெருக்கி, சக்தியளிக்கும் பானங்களாகும். வரும் கோடை காலத்துக்கு குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் பெப்சி, கோலா மற்றும் பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள் போன்ற வஸ்துக்களை விடுத்தது நம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த சில சுதேசி பானங்களை கொடுத்துள்ளோம். குடியானவர்கள் பானங்களை தெரியாதவர்கள் தெரிந்து கொள்க.

Wednesday, 16 March 2016

போராளீஸ் சாய்ஸ்ல விட்டவை

தமிழ்நாட்டு சாதி ஒழிப்பு புற்ச்சி போராளீஸ் சாய்ஸ்ல விட்ட சில சம்பவங்களை இங்கே நினைவூட்டுகிறோம். 

Monday, 14 March 2016

உடுமலை சம்பவம்

இன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.

Sunday, 13 March 2016

கோவை செழியன்

அதிமுக வில் எம்ஜிஆர் முதலாளி என்று அழைக்கும் அளவு மரியாதையும் தனிப்பட்ட அன்பையும் பெற்றவர் கோவை செழியன். நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவரே சட்டமன்ற உறுப்பினர், அவரே எம்.பி, என்ற நிலையில் தேர்தல் நிர்வாக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

Tuesday, 8 March 2016

பொன்னேர் பூட்டும் வைபவம்

பொன்னேர் பூட்டும் விழா, பொன்னேர் கட்டுதல் என்று குறிப்பிடப்படும் விழா நம் தொன்மையான விழாக்களில் ஒன்று. தற்காலத்தில் ஏறக்குறைய நாம் மறந்துவிட்ட பண்டிகை. அதென்ன, பொன்னேர் கட்டுதல்..?? தைப்பொங்கல் என்பது அறுவடை முடிந்தபின் நடக்கும் பண்டிகை போல, பொன்னேர் கட்டுவது என்பது சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் குடியானவர் பண்டிகை. பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதல் கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள். தற்காலத்தில் கொங்குப் பகுதியில் அருகிப் போயிருந்தாலும் பாரதத்தின் பிற பகுதிகளிலும், பாரத ராஜ்யம் ஏற்பட்ட வெளிநாடுகளிலும் இன்றளவும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொங்குப் பகுதியில் எண்பது வயது தாண்டிய பெரியவர்கள் அவர்கள் சிறு வயதில் இப்பண்டிகை கொண்டாடட்டத்தை நினைவுகூறுகிறார்கள்.

Saturday, 5 March 2016

நவீன மயானங்கள்

சமீப காலமாக தேசம் முழுக்கவே மெதுவாக பரவி வரும் நவீன முறை மின்மயான எரியூட்டு முறைகள் நம் பாரம்பரியப்படி சரியானவையா? இதனால் என்னென்ன பாதிப்புகள் என்று சற்று விரிவாக பார்ப்போம்.

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates