Trending

Saturday, 5 March 2016

நவீன மயானங்கள்

சமீப காலமாக தேசம் முழுக்கவே மெதுவாக பரவி வரும் நவீன முறை மின்மயான எரியூட்டு முறைகள் நம் பாரம்பரியப்படி சரியானவையா? இதனால் என்னென்ன பாதிப்புகள் என்று சற்று விரிவாக பார்ப்போம்.
முதலில் ஒரு உதாரண சம்பவம் பார்ப்போம்.. எல்லாம் விளங்கும்..

கடந்த 2015 ஜூலை மாதம் திருச்சி மாநகராட்சி மின்மயானத்தில் ஒரு பிரச்னை ஏற்பட்டு மின்மயானம் மூடப்பட்டது.  சவத்தை எரிக்க கொண்டு வந்த உறவினர்களிடம் பத்தே நிமிடத்தில் அஸ்தி தரப்பட்டதும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளே நுழைந்து பார்க்கையில் இறந்தவரின் உடல் எரிக்கப்படாமல் இருந்துள்ளது. அங்கே பாதி எறிந்த சடலங்களும் இருந்துள்ளது. கோபமடைந்த உறவினர்கள் மின்மயானத்தை அடித்து நொறுக்கிவிட்டு உடலை கொண்டு சென்று உள்ளூர் சுடுகாட்டில் எரித்து முடித்துள்ளனர். இந்த திருச்சி டெண்டரை மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே பல மின்மயானங்கள் செயல்படுத்தி வரும் ரோட்டரி சங்கம் தங்களது சங்கத்தை சேர்ந்த "சார்லஸ்" என்பவரிடம் ஒப்பந்தத்தை விட்டதால் இது ஒப்பந்ததாரர் பிரச்னை என்று கூறிவிட்டது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணை என்ன, நிலவரம் என்ன என்று எந்த செய்தியும் இல்லை ஆனால், மின்மயானம் சீல் வைக்கப்பட்டது.


1. மின்மயானங்களில் உண்மையில் சவங்களை எரிக்கிறார்களா இல்லையா? எரிக்காமல் வைத்திருந்த காரணம் என்ன? 

2.சமூக விரோத செயல்கள், உடல்பாகங்கள் திருட்டு, மற்றும் மருத்துவ ஆய்வுகளுக்கு போன்ற காரணங்களுக்காக எடுத்து செல்கிறார்களா?

3.அப்படியானால் வழங்கப்படும் அஸ்தி யாருடையது?? இதைக் கொண்டு ஈமச் சடங்குகள் செய்வது முறையானதா?? எரிக்கப்படும் போதும் செலவைக் குறைக்க இரண்டு மூன்று சவங்களை ஒன்றாகப் போட்டு எரிப்பதும் நடந்துள்ளது!

4.நம் நாட்டு, நம் மதத்து ஈம காரியங்களில் பாரம்பரிய முறையை விடுத்து புதிய முறையை புகுத்த காரணமென்ன? இதன் பின்புலம் என்ன?

சுற்று சூழல் சீர்கேடு - நவீன மின்மயானங்கள் பற்றி பேசும்போது பாரம்பரிய மயானங்கள் சுற்று சூழலை மாசுபடுத்தும் என்ற அபாண்டமான பொய்யை சொல்கிறார்கள். மின்மயானம் மின்சாரத்தால் இயங்குவதாகும். உடலை எரிக்க ஒரு மடங்கு வேப்பம் தேவையெனில் அதைவிடவும் ஐந்து மடங்கு வெப்பம் தரக்கூடிய நிலக்கரி பவர் பிளாண்டில் எரித்ததாக வேண்டும். அந்த நான்கு மடங்கு நிலக்கரியானது உற்பத்தியிலும், மின்பகிர்வு-மின்கடத்தலிலும் சேதாரமாகும். நம் கண்ணுக்கு தெரியாமல் பல மடங்கு புகையும் வெப்பமும் உருவாக்குவது மின்மயானமே. மேலும், மின்சாரம் தயாரிக்க நிலக்கரி வெட்டி, தோண்டி, ரயில்களிலும் லாரிகளிலும் கொண்டு கொட்டி அதனால ஏற்படும இயற்கை சீர்கேடுகள் எந்த கணக்கு? நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கொல்லப்படுகிறது. ஆனால் நம் பாரம்பரிய முறையிலோ நாட்டு மாட்டு சாண வரட்டி, விறகு மற்றும் நெய் (தற்காலத்தில் தவறாக சீமெண்ணெய்) தான் பயன்படுத்துவார்கள். ஆக, நிஜத்தில் இயற்கையை கெடுப்பது மின்மயானமே.

இதே நம் முன்னோர்கள், சில நூறு சாண வரட்டிகளைக் கொண்டு திருநீறு ஸ்புடம் போடுவது போல மூடாக்கு போல பொட்டு 'சுட்டு' விடுவார்கள். உடல் பொடிந்து விடும்.  சுடுவது வேறு, எரிப்பது வேறு. எரிப்பது என்பது அக்னி ஜ்வாலை எழ அதில் உடலை எரிப்பது; இந்த வழக்கம் பத்தினிப்பெண்கள் உடன்கட்டை (வீரமாத்தி) ஏறுகையில் மட்டுமே நம் கொங்கதேசத்தில் இருந்துள்ளது. மற்றபடி, கொங்கு வழக்கப்படி சவத்தை சுடுவதே நமது வழக்கம். இதனால் இயற்கைக்கு பாதிப்பு என்பது நவீன முறைகளைக் காட்டிலும் மிக மிக குறைவு. ஆனால் மின்மயானங்களில் சுடுவது நடப்பதில்லை; எரிப்பதே நடக்கிறது!

கபால கிரியை-கபால மோட்சம் என்பது மண்டை ஓடு வெப்பத்தில் வெடிப்பதாகும். இது ஈம சடங்கில் முக்கியமானதாகும். வட மாநிலங்களில் அப்படி வெடிக்காவிட்டால் கட்டை கொண்டாவது அடித்து நோருக்குவார்கள்; அதை கபால கிரியா என்று சொல்வார்கள். ஞானி-மகான்கள் ஜீவசமாதியடைகையில் தங்கள் ஆத்மா சக்தியை உச்சிக்கு கொண்டுவந்து தலையில் தேங்காய் உடைக்கச் சொல்லி கபால மோட்சம் பெறுவார்கள்.

இவைபோல ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பல்வேறு முறையான ஈமச் சடங்குகள் உள்ளன. ஒவ்வொரு சடங்கிளும் ஏராளமான ஆன்மீக அறிவியல் காரணங்கள் பொதிந்துள்ளன. கேரள சமூக ஆய்வாளர் அஜீத் வடக்கில் ஓரளவு இந்த ஈம சடங்குகள் பற்றி நவீன விஞ்ஞான துறையாகிய குவாண்டம் பிசிக்ஸ் கொண்டு விளக்கமளிக்க முயன்றுள்ளார்.

சுடுவது மட்டுமின்றி, நம் கொங்கு வழக்கப்படி இன்னும் பல சாங்கியங்கள் உண்டு. பால் தெளிப்பது, நவதானியம் தூவுவது, போன்ற பல ஈமக் காரியங்கள் மின்மயானத்தில் நடத்த முடியாத சூழல் உள்ளது.

ஈம சடங்குகள் முறையே நடைபெறுவது மிக மிக அவசியமாகும். காரணம், நம் பாரம்பரிய மரபுகள் சொல்கிறது, "பெற்றோர் ஆசியின்றி, முன்னோர் ஆசி இல்லை.. முன்னோர் ஆசியின்றி குலதெய்வ ஆசியில்லை.. குலதெய்வ ஆசியின்றி எந்த தெய்வவும் பலனளிக்காது". திருக்குறள் முதல் புறநானூறு வரை ஏராளமான தமிழ் இலக்கியங்களிலும் தென்புலத்தார் கடன், பெருஞ்சோரு போன்ற பேர்களில் இந்த ஈம காரியங்கள் மற்றும் பித்ரு காரியங்கள் குறிக்கப்பட்டுள்ளன. பித்ரு காரியம் சரியாக செய்யாதவர் எந்த வித கோயில் காரியம், ஹோமம் என்று எதிலும் பங்கேற்கக் கூடாது என்று சாஸ்திரங்களே சொல்கின்றன. ஏனெனில் இது நாம் ஒரு ஆத்மாவுக்கு செய்யும் கடன். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால்தான், ஆதரவற்ற நிலையில் உள்ள சவங்களை முறைப்படி இறுதி காரியம் செய்பவருக்கு அஸ்வமேத யாகப் பலன் என்று எல்லா வித புண்ணிய காரியங்களுக்கும் கிரீடம் வைத்தது போன்றதாக இந்த தர்மத்துக்கு விதித்துள்ளனர் நம் பெரியோர். இறுதிக்காரியங்கள் ஈம சடங்குகள் அவ்வளவு முக்கியமானவை. இதில் நேரமில்லை என்று குறுக்குவழிகள் கூடாது.

நவீன விஞ்ஞானத்தால் இன்றளவும் முழுதாக புரிந்துகொள்ள முடியாததான, நம் முன்னோர்களின் இந்த ஈமச் சடங்குகள் மேல் உள்ள வியப்பால் சவப்பெட்டியில் மூட வேண்டிய தங்கள் வழக்கத்தையே கோட வெளிநாட்டுக்காரர்கள் மாற்றிக் கொண்டு நமது மரபுகளுக்கு திரும்பத் துவங்கியுள்ளார்கள்! ஆனால் நாமோ, கையில் இருக்கும் களஞ்சியத்தின் மதிப்பு தெரியாது வெளிநாட்டு மோகத்தில் பாரம்பரியத்தை கைவிடுகிறோம்.வாழ்வாங்கு வாழ்ந்த நம் பெரியவர்களை பத்தோடு பதினொன்றாக கொண்டு தள்ளி, யாரின் சாம்பல், எலும்பு என்று உறுதிபட தெரியாமல் கொண்டு போய் காரியம் செய்து.... மிக தவறான காரியமல்லவா..? பெற்றவர்களுக்காக அவர்கள் ஈம காரியங்கள் கூட முறையாக செய்யாமல் வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?? அவ்வளவு அவசரமாக வாழ்ந்து என்ன சாதிக்கவிருக்கிறோம் என்று எண்ண வேண்டும். எதோ பேரிடர் காலத்தில் அடையாளம் தெரியாத சவங்களை ஒன்றாக போட்டு கொளுத்துவது போன்றெல்லாம் செய்துள்ளனர். இதெல்லாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் பாவமல்லவா..?

கிராமிய அதிகாரம் பறிப்பு - இந்த நவீன நகர மின்மயானன்களால் மற்றுமொரு இழப்பு என்பது கிராம அதிகாரம். ஊர் கட்டுப்பாடு என்பதில் முக்கிய அங்கம சுடுகாட்டு உரிமை. கோயில் உரிமை, கிணற்று நீர் உரிமை, போல சுடுகாடு என்பது தற்காலத்திலும் கிராமத்திற்கு இருக்கும் ஒரு அதிகாரமாக இருந்து வருகிறது. நவீன மின்மயானங்கள் வருகையால் அதுவும் பறிபோகும் நிலை ஏற்படுகிறது!

கவுண்டர்களது ஈம காரியங்களில் நம் குடி ஜாதிகளுக்கு பல உரிமைகள் உள்ளன. குறிப்பாக நாவிதர் மற்றும் பறையர்கள். அந்த உரிமைகள், நம்மையும் அவர்களையும் பிணைத்து வைக்கும் சங்கிலிகள். இந்த அவசரடி இறுதி சடங்குகளால் அந்த சமூக பந்தமும் அறுபடுகிறது.

அமாவாசை-பித்ரு தர்ப்பணம்
http://www.karikkuruvi.com/2015/08/blog-post_13.html

தேசத்தை மூளை சலவை செய்வது-உளவாளியின் வாக்குமூலம் - http://www.karikkuruvi.com/2015/08/1985-kgb.html

கொங்கதேசத்தில் வீரமாத்தி
http://www.karikkuruvi.com/2014/12/blog-post.html

அஜீத் வடக்கில் கட்டுரை
http://ajitvadakayil.blogspot.in/2012/11/rip-impossible-with-burial-world-is.html

நக்கீரன் செய்தி ரிப்போர்ட் - பதிவு செய்த நாள் : 17, ஜூலை 2015 (8:8 IST) 
http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=146845


1 comment:

  1. Good work
    நான் போடணும்னு நெனச்சேன் இன்னும் கொஞ்சம் தகவல்கள் உள்ளது. தருகிறேன் ரீபோஸ்ட் பண்ணுங்க !

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates