Trending

Thursday, 1 September 2016

நாட்டுப்பசுக்கள்

நாட்டுப்பசுக்கள் நமது கொங்கதேசத்தின் காராள வம்ச குடியானவர்களுக்கு தனிப்பெரும் தெய்வம், குடும்ப உறவு, அடிப்படை சொத்து. நாட்டுப்பசுக்களை பற்றி அடிப்படையான சில விஷயங்களை அறிவோம்.


நாடு
தற்காலத்தில் நாட்டை அரசியல்-சட்ட ரீதியான எல்லைகளால் வரையறுக்கிறார்கள். இன்று உள்ளது போல படைபலம் கொண்டு தன்னால் இயன்ற அளவு பிடித்துக் கொள்வது நாடு அன்று. நம் பண்டையகால முறைப்படி உலகை ஏழு தீபங்களாக (தீவுகளாக, தற்போது கண்டங்களாக) பிரித்தனர். அதன்படி ஆசிய கண்டம் என்பது ஜம்பூத்வீபம். ஆசியக் கண்டத்தில் நாம் வாழும் இந்தியா ‘பாரத வர்ஷம்’ எனப்பட்டது. வர்ஷம் என்றால் மழை. மழையின் பொருட்டு ஏற்படும் நீரோட்டத்தின் மூலம் இணைக்கப்பட்ட நிலப்பகுதிகள் சேர்ந்தது பாரத வர்ஷம். பாரத வர்ஷத்தில் 58 தேசங்கள் உள்ளன. தேசங்களின் உட்பிரிவுகளாக நாடுகள் இருந்தன.

நாடு என்பது அடிப்படையில் இயற்கை ஏற்படுத்தும் எல்லைகளுக்குட்பட்டு ஒவ்வொரு பகுதியின் நீர் வடிகாலைப் பொருத்து அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மண்ணின் தன்மை பொருத்து அமையும். ‘தன்னிறைவு பெற்ற’ சீதோஷ்ண-சமூக-கலாசார-பொருளாதார மண்டலங்கள். உதாரணம்: கொங்கு நாடு மலைகள் சூழ்ந்து, அந்த மலைகளிலிருந்து வடியும் நீர் காவிரி உள்ளிட்ட நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருக்கும். நாடுகள் பிரிக்கப்பட்டாலும் இந்த தன்னிறைவு கொள்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதையே சனாதனக் கொள்கை (sustainability) என்று சொல்வார்கள். அஃதாவது அந்நாட்டின் பெரும்பான்மைத் தேவைகளுக்கு அந்நாட்டை விட்டு வெளியே செல்லத் தேவை இருக்காது. நாடுகள் ஏன்? நம் கிராமங்களே சனாதன கொள்கையின் அடிப்படையில் உருவானவை. அப்படியான நாடுகளில், அந்த நாடுகளுக்கேற்ப மண்ணின் நுண்ணுயிர்கள் முதல் செடிகொடிகள், காய்கறிகள், தானியங்கள், விலங்குகள், மனிதர்கள் அவர்தம் குணங்கள் செயல்பாடுகள் என அனைத்தும் மாறுபடும். இவை அந்த மண்ணின் தன்மையையும், நீரையும், சீதோஷ்ண நிலையையும் அனுசரித்து வருவதால் அம்மண்ணிற்கேற்ற வகைகள் அதைத் தாங்கி வாழக் கூடியதும் ஆகும். அப்படி ஒரே நாட்டுக்குள் பல நூற்றாண்டுகளாக அந்நிய மரபணுக் கலப்பின்றி வளர்த்தெடுக்கப்பட்ட பயிர் உயிரின வகைகள் நாட்டு ரகங்கள் ஆகும். அப்படியான பசு வகைகளே நாட்டுப் பசுக்கள் ஆகும். இப்பசுக்கள் மண்ணிற்கேற்றவை. இம்மனிதர்களுக்கானவை.


நாட்டுப்பசு-சீமை மாடு அடிப்படைகள்
சீமை மாடுகளை ‘உயர் ரக’ என்னும் அடைமொழி கொடுத்து நம் நாட்டிற்குள் ‘பல்வேறு சக்திகள்’ திட்டமிட்டு நுழைத்து விட்டன. தற்கால அறிவியல் உலகம் ஒவ்வோர் உயிரினத்திற்கும் கொடுக்கும் உயிரியல் பெயரை (zoological name) கொண்டே அறியலாம்.

நாட்டுப் பசுக்களுக்கும் சீமை மாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணை மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே நாட்டுப் பசுக்களையும் சீமை மாடுகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறானது.


உயிர்ச் சூழல்: “Gut Biome” என்று மேற்கத்திய அறிவியல் உலகம் தற்போதுதான் கண்டறிந்துள்ளது. ஆனால் இந்த உயிர் சக்தியை நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே கண்டறிந்து அதனடிப்படையில் பஞ்சகவ்யம் உட்பட பல நூறு மருந்துகளும் மருத்துவ முறைகளையும் கண்டறிந்து வைத்திருந்தனர். மனிதன் முதல் விலங்கினங்கள், பறவைகள் எனத் தாவரங்கள் செடிகொடிகள் வரை உடலுக்குள் பல கோடி நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அவையே மனிதன் உண்ணும் உணவின் மூலம் சத்துகளை கிரகித்துக் கொடுப்பன. அதன் மூலம் ஹார்மோன்கள் அளவுகள், நோய் எதிர்ப்பு சக்தி என்பன வரை உயிர் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. உயிர்களின் மிக முக்கியமான அங்கமான இந்த உயிர்ச்சூழல் நன்மையளிக்கும் நுண்ணுயிர்கள் பலவும் அந்தப் பகுதிக்கான நாட்டுப் பசுவின் ஜீரணப் பாதையில் இயற்கையாக அமைந்திருக்கிறது. ஒரு பூகோளப் பகுதிக்கு உண்டான அனைத்து உயிர்களுக்குமான நுண்ணுயிர்களின் ஆக்க சக்தியாக நாட்டுப் பசு இருப்பதால்தான் நம் முன்னோர்கள் அதை எல்லா உயிரினங்களிலும் மேலானதாக உயிர்களை ரட்சிக்கும் கோமாதாவாக எண்ணி வணங்கினர்.

உணவு: சாத்விகமான உணவு. ஒழுக்கமும், அறிவும் கொடுத்து சமூகத்தை நிலையாக வைக்கக் கூடிய குணத்தைக் கொடுக்கும் உணவு நோய் வராமலும் வந்த நோயைக் குணப்படுத்த பல நூறு மருந்துகளுக்கு மூலப் பொருளாகவும் நாட்டுப் பசுவின் பால் முதல் சிறுநீர் வரை அனைத்தும் பயன்படுகின்றன.

சனாதன வாழ்வு: நாட்டுப் பசுக்கள் இல்லாமல் சனாதன-தன்னிறைவு பெற்ற வாழ்க்கை சாத்தியமில்லை. உழவுக்கு மழைபோல, பசு இல்லாவிடினும் மண் தன் உயிரை இழக்கும். விவசாயம், உணவு, மருந்து, சமூகம் என அனைத்திலும் பசுவின் தாக்கம் அளப்பரியது.

ஆரோக்கியம்: சீமை மாடு என்பதே ஒரு நோய்க் கூடம். சீமை மாட்டுப் பாலும் நாட்டுப் பசும்பாலும் பார்க்க ஒன்று போல் இருந்தாலும் இரண்டிற்கும் பெரும் வித்யாசங்கள் உள. பாலின் முக்கிய அங்கமான பால்புரதமானது (விவீறீளீ ஜீக்ஷீஷீtமீவீஸீ) நாட்டுப் பசுவில் (கி2 ஙிமீtணீ-சிணீsமீவீஸீ) ஆகவும் சீமை மாடுகளில் கி1 ஙிமீtணீ-சிணீsமீவீஸீ ஆகவும் மாறுபடுகிறது. கி1 ஙிமீtணீ-சிணீsமீவீஸீ புரதம் மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்போது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். இதனால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டிஷ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கி2 பால் என்றே தனி பிராண்டில் பால் வியாபாரம் நடக்கிறது.

சீமை மாட்டுப் பால் ‘ஸ்லோ பாய்சன்’போல அதன் பாதிப்புகள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டுக்கு வந்த புதிதில் சரிசமமாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டுப் பசுக்களின் தாக்கம் சரி விகிதமாக இருந்தது. அதனால் அன்றைய காலகட்டங்களில் தெரியவில்லை.

ஆனால் தற்போது சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியாதிப் பெருக்கம் நன்றாகத் தொடங்கியுள்ளது.

சர்க்கரை: இந்த கி1 ஙிமீtணீ-சிணீsமீவீஸீ புரதமானது நம் உடலின் இன்சுலின் சுரப்பியின் புரதத்தை ஒத்திருப்பதால் ஹார்மோன் சுரப்பி நிலை தடுமாறுகிறது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுமாற்றம் ஏற்பட்டு சர்க்கரை நோயை வரவழைக்கிறது. நாட்டுப் பசுவின் பால் இது போன்ற எந்தத் தீங்கையும் உருவாக்குவதில்லை.

ரத்தக் கொதிப்பு: (பிரஷர்) சீமை மாடுகளுக்கு உடலில் வியர்வைச் சுரப்பி கிடையாது. அதன் கெட்ட நீர், உப்புகள், மூத்திரம் பாலின் வழியாக மட்டுமே வெளியேறியாக வேண்டும். சீமை மாடுகளினால், அஃது உண்ணும் தீவனத்திற்கும், மாட்டுத் தீவனத்தில் அதிக பால் கறவைக்குச் சேர்க்கப்பட்டிருக்கும் வஸ்துக்களுக்கும், அத்தனை உப்பையும் சிறுநீர் வழியாக வெளியேற்றி விட இயலாது. உடலின் உப்பும், கெட்ட நீர்களும் பாலின் வழியாக வெளியேறும்.

அதனால்தான் சீமை மாட்டுப் பாலில் கொஞ்சம் உப்புச் சுவை கூடுதலாக இருக்கும். நாளடைவில் இந்த தீய உப்பின் தேக்கத்தால் உடலில் ரத்தக் கொதிப்பு நோய் ஏற்பட்டுவிடுகிறது. நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற நாட்டுப் பசுவுக்கு உடல் எல்லாம் வியர்வை சுரப்பி உண்டு. அதுவுமன்றி அதன் பால் எவ்வித தீங்குகளையும் ஏற்படுத்துவதில்லை.

ஆட்டிசம்: பல நூறு ஆண்டுகளாக நாம் அதிகம் கேட்டிராத நோய் ஆட்டிசம். இது குழந்தைகளின் உடலையும் மூளையையும் ஒரு சேரத்தாக்கும் கொடூர நோய். தற்போது மாநகரங்களில் இந்நோய்க்கென தனியே மருத்துவமனை கட்டும் அளவு பெருகியதன் காரணம் என்ன? சீமை மாட்டு ஏ-1 பால் இந்நோய்க்கான மிக முக்கிய காரணி. சீமை மாடுகள் நம் நாட்டுக்குள் வந்த பின்னர்தான் இந்நோயின் வளர்ச்சி அதிகமாகி வருகிறது. நாட்டுப் பசுவின் பால் நல்ல புத்தியையும், சூட்டிப்பையும், நரம்பு மண்டலத்துக்குப் பலத்தையும் கொடுக்க வல்லது.

ஹார்மோன் சீர்கேடு: வெளிநாட்டு சீதோஷ்ண நிலைக்குரிய சீமை மாட்டுப் பால் நம் நாட்டில் பயன்படுத்தும் போது உடலின் ஹார்மோன் சமநிலையைத் தடுமாறச் செய்கிறது. இதன் தாக்கம் பிட்யூட்டரி, தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட முக்கிய சுரப்பிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் உடலின் வளர்ச்சி முதல் அனைத்து உறுப்புகள், புத்தி, மனோநிலை அனைத்தையும் தடுமாறச் செய்கிறது. நாட்டுப் பசுக்கள் நம் மண்ணுக்கேற்ற தன்மையோடு இயற்கையோடு இயைந்த உடல்வாகு உடையதால் தடுமாறிய ஹார்மோன் சமநிலையைக் கூட சரி செய்யக்கூடியது.

பரம்பரை வியாதிகள்-மரபணுக் கோளாறுகள்: சீமை மாடுகளின் பால் மூலக்கூறுகள் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவுவதால் மரபணுவாகிய குரோமோசோம் சங்கிலியில் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. எனவே இதன் பாதிப்பு நமக்குத் தெரியாவிட்டாலும் நம் பிள்ளைகளுக்கோ பேரன் பேத்திகளுக்கோ நிச்சயம் தெரியும். இது மரபணு மூலமாகப் பரம்பரை வியாதியாக மாறி விடும் அபாயம் வெகு அதிகமாகவே உள்ளது.

பாலியல் கோளாறுகள்: சீமை மாடுகளின் உடலில் ஆண்-பெண் வர்க்க ஹார்மோன் சமநிலையில் இல்லை. காளைகள் மந்தமானதாகவும், கிடாரிகள் (பெண்) ஹார்மோன் மிகுதியாக உடையதாகவும் உள்ளன. இவற்றின் பாலைப் பருகும் மக்களுக்கும் அந்த பாதிப்பு பல வகைகளில் வெளிப்படுகிறது. மலட்டுத்தனம், பாலியல் குறைபாடு, மாதவிடாய்-கர்ப்பப்பை-பால் சுரப்புக் கோளாறுகள் போன்றவை. சில நாட்டுப் பசுக்களில் காளை-கிடாரி இரண்டிலுமே ஆண்-பெண் ஹார்மோன் சமநிலையில் உள்ளது. ஒழுக்கமாக வாழ நாட்டுப் பசுவின் பாலே சிறந்தது.
மந்தபுத்தி: சீமை மாட்டின் பால் தாமச உணவாகும். சோம்பேறித்தனம், மந்தம், அர்த்தமற்ற திடீர் கோபங்கள், புரிந்து கொள்ளாத் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். அதன் தன்மையை மீறிய கொழுப்பும், தவறான புரதமும் இந்தப் பாதிப்பை உண்டாக்குகின்றன. எருமைப் பாலுக்கும் சீமை மாட்டுப் பாலுக்கும் எந்த வித வித்யாசமும் கிடையாது. மாறாக நாட்டு மாடுகளின் பால் சாத்வீகமான உணவாகும். நிதானம், கவனம், கற்பூர புத்தி, செயல் வீரம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

சித்த ஆயுர்வேத மருந்துகள் செய்யும்போது நாட்டுப் பசுவின் பொருள்களையே பயன்படுத்த வேண்டும். சித்த ஆயுர்வேத சாஸ்திரங்கள் எழுதப்பட்ட காலத்தில் நாட்டுப் பசுக்களே இருந்தன. சீமை மாடுகளை நம் முன்னோர் கண்ணால் கூடக் கண்டதில்லை. நாட்டுப் பசுவின் பஞ்சகவ்யம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் மூலம் பூரணமாகக் குணப்படுத்தக் கூடிய வியாதிகளாவன: கான்சர், இதய நோய்கள், எலும்பு-தசை நோய்கள், தோல் நோய்கள், எய்ட்ஸ், கண் பிரச்னைகள், பைல்ஸ், ஆண்மைக் குறைவு, மன அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தக் கோளாறுகள், சுவாசக் கோளாறுகள், மனநலக் கோளாறுகள், குழந்தையின்மை, வயிறு, குடல் நோய்கள், ஹார்மோன் கோளாறுகள், காது-மூக்கு-தொண்டை நோய்கள், மாதவிடாய்-கர்ப்பப்பை நோய்கள், உடல் பருமன், தைராய்டு பிரச்னைகள், கிட்னி-சிறுநீர் பிரச்னைகள்.

பொருளாதாரம்
சீமை மாடுகள் மூன்று மடங்கு தீனி எடுத்து நாட்டுப் பசுவை விட வெறும் ஒன்றரை மடங்குப் பால் தருகிறது. (அந்தப்பாலின் மூலமாகப் பின்னாளில் பல வியாதிகள் வந்து செலவுகளை ஏற்படுத்தும் என்பது வேறு விஷயம்) நான்கு ஈத்துகளில் கன்று ஈனும் தன்மை நின்று போகும் (பெரும்பாலான வகைகளில்). பராமரிப்பு, வேலை, தீனி ஆகியன அதிகம் தேவை. நோய் சீக்கிரம் தாக்கும். காளைக் கன்று ஈன்றால் எதற்கும் உதவாது. பஞ்ச காலங்களைத் தாங்காது. ஒரு முறை இளைத்தால் மீண்டும் தேறாது. இதன் சாணமும் சிறுநீரும்-நாட்டுப் பசுவின் நன்மையில் நூற்றில் ஒரு பங்கு கட இல்லை. ஆக, அதிக பால் சுரப்பால் தற்காலிகமாக கையில் பணம் புரள்வது போன்ற மாயத் தோற்றத்தைத் தவிர வேறு பலன் இல்லை. நாட்டுப் பசுக்களின் பொருளாதார நன்மைகளை இரு வகைகளில் பிரிக்கலாம். ஒன்று வருமானப் பெருக்கம். மற்றொன்று செலவு குறைப்பு.

செலவு குறைப்பு: தீவன செலவு மிகக் குறைவு. பராமரிப்புச் செலவு மிகக் குறைவு. நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகையால் மருத்துவச் செலவு கிடையாது. விவசாய உரச் செலவு குறைகிறது. (விரிவான விளக்கங்கள் விவசாயம் என்ற தலைப்பில்). பல நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலைத் தருவதால் மனிதர்களுக்கும் மருத்துவச் செலவை மறைமுகமாகக் குறைக்கிறது. நாட்டுப் பசுக்கள் முறையாகப் பயன்படுத்தப்பட்டால் 70% மருத்துவமனைகள், 80% மருந்துகள், 90% ஊட்டச்சத்து மருந்துகள் 90% உரம் பூச்சி மருந்துகள் போன்றவற்றைத் தவிர்க்க இயலும்.

வருமானப் பெருக்கம்
நாட்டுப் பசும்பாலை லிட்டர் ரூ.40 கொடுத்து வாங்கவும் மாநகரங்களில் மக்கள் தயாராக உள்ளனர். நாட்டுப் பசுவின் ஒரு வருடத்து காளை பஞ்சகாலத்திலும் ரூ.20,000க்குப் போகும். நாட்டுப் பசு பத்து ஈத்து குறையாமல் கொடுக்கும். நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்து செய்யப்படும் விபூதி கிலோ ரூ.150க்கு விற்கப்படுகிறது. (3 கிலோ சாணம்=1 கிலோ விபூதி) சிறுநீர் கொண்டு செய்யப்படும் அர்க் லிட்டர் ரூ.500! (20 லிட்டர் சிறுநீர்=13 லிட்டர் அர்க்). பஞ்சகவ்யத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட மருந்துகள் பல்வேறு நோய்களுக்குச் செய்யப்படுகின்றன.

ஒரு நாட்டுப் பசுவின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1000 சம்பாதிக்க முடியும் என சேலம் சுரபி கோசாலா நிறுவனர் சுவாமி ஆத்மானந்தா நிரூபித்து வருகிறார். அதற்கான இலவசப் பயிற்சியும் தருகிறார். இவரைப் போல இன்னும் பல சேவை அமைப்புகள், கோசாலைகள் நாட்டுப் பசு வளர்ப்பை சிறந்த லாபகரமான தொழிலாக நடத்த பயிற்சியளித்து வருகிறார்கள்.

விவசாயம்
விவசாயத்துக்குத் தேவையான உரத்தை சிறுநீர்-சாணம் மூலமாகத் தரும் விலைமதிக்கமுடியாத நுண்ணுயிர்களை மண்ணுக்குத் தந்து அதன் உயிராற்றலை மேம்படுத்தும். ஒரு நாட்டுப்பசுவைக் கொண்டு 35 ஏக்கர் நிலத்தைப் பண்படுத்த முடியும்.

காற்றிலேயே 68% தழைச்சத்து (ஸீவீtக்ஷீஷீரீமீஸீ) இருக்கையில் வெறும் 46% உள்ள யூரியா ஏன் போட வேண்டும்? காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்துக் கொள்ளும் சக்தியை மண் இழந்ததே காரணம். மண்ணில் நுண்ணுயிர்ப் பெருக்கம் நடந்துவிட்டால் யூரியாவின் தேவை மிகக் குறைவு. இதே போலத்தான் எல்லாச் சத்துகளும். அந்த நுண்ணுயிர்களை இயற்கையாகவே நாட்டுப் பசுக்கள் தனது ஜீரணப் பாதையில் கொண்டுள்ளதால்தான் அதன் சாணம் மிகச் சிறந்த உரமாகிறது. அதை முறையாக பஞ்சகவ்யமாக்கி மண்ணுக்குச் சேர்ப்பதன் மூலம் மண்ணின் உயிர்த்தன்மையை மீட்க முடியும்.


இதனால் உரச்செலவைக் குறைப்பதுடன் மண்ணின் வளத்தையும் விஷமற்ற உணவுகளையும் விளைவிக்க முடியும். பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், கன ஜீவாம்ருதம் உள்ளிட்ட ஏகப்பட்ட ஊட்டச்சத்து மருந்துகளும், மண்ணில் மண்புழு வாழ்வதற்கான சூழலை மேம்படுத்துகின்றன. பூச்சி விரட்டி மருந்துகளும் பயிரின் பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்த உதவுகின்றன. பஞ்ச கவ்யம் என்பது நாட்டுப் பசுவின் ஐந்து பொருள்களான பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகிவற்றைக் கொண்டு செய்யப்படுவது. சீமை மாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவது மண்ணின் தன்மையையும் குணத்தையும் காலப்போக்கில் மாற்றிவிடும். நாட்டுப் பசுவின் பஞ்சகவ்யம் மூலம் கிடைக்கும் பலனில் பத்து சதவீதம் கூட கிடைக்காது.

இறந்த நாட்டுப் பசுவைப் புதைத்து வைத்த இடத்திற்கு ஐந்து வருடங்களுக்கு உரமே தேவை இல்லை. அம்மண்ணில் ஒரு கிலோ ஒரு ஏக்கர் பூமிக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்தைத் தரவல்லது. இறந்த பசுவின் கொம்பில் ஊனை எடுத்துவிட்டு அதில் சாணம் நிரப்பிப் புதைத்துவிட்டால் ஒரு வருடம் கழித்து அதில் பஸ்பம் இருக்கும். அந்த பஸ்பமானது ஒரு கிராம் ஆயிரம் மடங்கு வீரியமுள்ள நுண்ணுயிர்களைக் கொண்டிருக்கும். மண்ணின் வளத்திற்கு அதை விஞ்சிய ஊட்டச்சத்து இல்லை. நாட்டுப் பசுக்கள் இல்லாமல் சீரோ பட்ஜெட் பார்மிங், இயற்கை வேளாண்மை, கலப்புப் பண்ணையம் என எவையும் ஏட்டுச் சுரைக்காயாகத்தாம் இருக்கும்.

ஆன்மிகம்
நாம் கோவிலில் இறைவனுக்குப் பயன்படுத்தும் பால், தயிர், நெய் விளக்கு போன்றவற்றிற்கு நாட்டுப் பசுவின் பொருள்களையே பயன்படுத்த வேண்டும். சீமைமாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவது மிகப்பெரிய பாபமாகும். அதேபோல கும்பாபிஷேகம், கோபூஜை, கிரஹப் பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப் பசுவையே பயன்படுத்த வேண்டும். சீமை மாடுகளை வணங்குவது அர்த்தமற்றது மட்டுமன்றி தவறானதும் கூட. நாட்டுப் பசுவின் உடலில் 33 கோடி தேவர்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளனர்.

கோவில் பசு
கோவிலுக்கென்று பசு இருக்கும். அபிஷேகத் தேவைகளுக்கும் இன்னபிற பூஜை, விபூதி தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும். இதன் பொருட்டே பாரம்பரியமிக்க பெரிய கோவில்களுக்கு கோசாலைகள் தனியே இருக்கின்றன. கோவிலில் பசு இருப்பது கோவிலின் ஆன்ம சக்தியைப் பன்மடங்கு உயர்த்தும். கோயில்களில் நாட்டுப் பசுக்களே இருக்க வேண்டும்.

ஆலயம்
ஆலயம்-ஆ(நாட்டுப் பசு)+லயம்-பசு தன்னை மறந்து லயித்து பால் சுரந்த இடமே ஆலயம். கோயில்-கோ(நாட்டுப்பசு)+இல்-பசு இருக்கும் இடம்.

வாழ்க்கை
நாட்டுப் பசு பாரத மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்து இருந்தமைக்கான சில நடைமுறைகளை நினைவுபடுத்துவோம்.

தினமும் காலையில் உண்ண அமர்வதற்கு முன்பாக சமைக்கப்பட்ட உணவில் ஒரு கைப்பிடி பசுவுக்கும், ஒரு கைப்பிடி காக்கைக்கும் எடுத்து வைப்பது பாரதக் கலாசாரம். இன்றும் பாரம்பரியமிக்க பல குடும்பங்களில் இந்த வழக்கம் இருந்து வருகிறது. இதன்மூலம் சகல தெய்வங்களும் பித்ருக்களும் திருப்தி அடைவர் என்பது வேத வாய்மை.

தினமும் எழுந்தவுடன் முதலில் பசுவைப் பார்ப்பது பாரத மக்களின் வழக்கம். காலையில் எஜமானரைப் பார்ப்பதால் பசுவும் மகிழ்ச்சியுறும்.

கர்ப்பிணிகள் தாய்வீடு சென்று குழந்தை பிறந்து திரும்புகையில் ஆச்சி மாடு சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. பிறந்த குழந்தைகள் ஒரே மாட்டின் பாலைக் குடிப்பது ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. காரணம் ஜீரணப் பாதையின் நுண்ணுயிர் விகிதத்தை முறைப்படுத்தல். அந்நாளில் அனைத்து வீடுகளிலும் பசுக்கள் இருந்தன. இருப்பினும் இம்முறை பின்பற்றப்பட்டது ஆரோக்கிய காரணமே.

விவசாயிகள் தங்கள் சுற்றம், பணியாளர்கள் வீட்டிலிருந்து குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்று வந்தால் பணம் வாங்காமல் தருவார்கள். இதைக் குழந்தைப் பால் என்று சொல்வார்கள்.
மாட்டுப் பொங்கல், ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம், ஜல்லிக்கட்டு போன்றவை பசுவோடு நாம் பகிர்ந்து கொள்ளும் விழாத் தருணங்கள்.

முன்னாளில் தவறுகள் செய்தால் சாணிப்பாலில்/பஞ்சகவ்யத்தில் குளிக்க வைப்பர். யாரேனும் மரணமடைந்தால் சாணிப்பால் மேல் நின்று துக்கம் விசாரிக்கும் வழக்கம் சில இடங்களில் உண்டு. பசுவின் சாணம் பாபம் போக்கும் என்னும் நம்பிக்கையின் அடிப்படை.

பசு இறந்தால் மனிதர்கள் இறந்தது போலவே உறவினர்கள் வீட்டில் வந்து துக்கம் விசாரிப்பதும் இறந்த பசுவை சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்வதும் இன்றளவும் உள்ள வழக்கம். இது பசுவை நாம் குடும்ப உறுப்பினர்கள் போல நடத்தியமையின் அடையாளம்.

பெரியவர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் விருப்பத்தின் பொருட்டு மாட்டுத் தொழுவத்தில் கொண்டு வைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. அப்பசுவைப் பார்த்துக்கொண்டும் அதன் வாலைப் பிடித்துக் கொண்டும் உயிர் பிரிவதால் மோக்ஷம் கிட்டும் என்பது வேத வாய்மை.

அறியாமல் செய்த பாபங்களால் யமலோகத்தில் வைதரணி நதியில் தத்தளிக்கையில் ஆன்மாக்களை, பசு வந்து காக்கும். (கோ சேவை செய்த ஆத்மாக்களுக்கு).

நல்ல நிலையில் இருக்கும் பசுவை உணவுக்காகக் கொல்வது பாரதக் கலாசாரத்தில் இல்லாத ஒன்றாகும். உயிர்களைக் கொல்வதால்/பிராமணர்களைத் துன்புறுத்துவதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுவது போல பசுக்களைக் கொல்வதும் துன்புறுத்துவதும் கோஹத்தி தோஷத்தை ஏற்படுத்தும். சந்ததிகளையும், தேசத்தையும் அழிக்கக் கூடிய தோஷமாகும். பசு ரத்தம் சிந்தும் பூமியை நோய்களும், பஞ்சமும் தாக்கி அழிக்கும்.

பசுவே செல்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. படையெடுப்பின்போது பசுக்களைக் கவர்ந்து செல்வர். ஆநிரை கவர்தல், மீட்டல் என இலக்கியங்களில் காணலாம். பசுக்கள் ஒரு தேசத்தின் சொத்து-அடையாளம்-மானம். பசுக்களை மீட்பதற்காகவே பல போர்கள் நடந்துள்ளன.

கிரஹப்பிரவேசம், கும்பாபிஷேகம், கல்யாணம் என அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் பசு இடம் பெறும். பசு இடம் பெறுவதால் அந்தச் சுப கார்யங்களில் அனைத்து தெய்வங்களும், தேவர்களும் கலந்து கொண்டதாக அர்த்தம்.

பசுக்களை எங்கு கண்டாலும் கையெடுத்து வணங்குவோரின் மறுபிறவிக்கும், சந்ததிக்கும் சகல தேவர்களின் ஆசியும், நல்வரங்களும் கிட்டும்.

வெளிநாட்டுச் சதிவலைகள்:
இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டுப் பசுக்கள் தாம் முதுகெலும்பு. அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்யத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். நாட்டுப் பசுக்கள் இல்லையேல் இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், பஞ்சகவ்யம்/ஆயுர்வேத மருத்துவம் போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை.

விவசாயமும், மருத்துவமும் நாட்டுப்பசுவைச் சுற்றி இருந்ததால் அதை அழிக்காமல் வெளிநாட்டு ரசாயன, பூச்சிகொல்லி, பார்மா (ஆங்கில மருந்து) வியாபாரிகளுக்கும், தயாரிப்போருக்கும் வேலை இருக்காது என்பதால் நாட்டுப் பசுக்களின் கொலைக்களம் பிரிட்டிஷ் கவர்னர் ராபர்ட் கிளைவால் தொடங்கப்பட்டது. இருந்தும் பசுவை வைத்து வாழ்ந்து பழகிய இந்தியர்களிடமிருந்து மாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சதிக்குத் துணையாக நாட்டுப் பசுக்களுக்கு மாற்றாக கலப்பின மாடுகளைத் திணித்தார்கள். பால் அதிகம் கிடைத்ததால் பஞ்சத்தில் அடிபட்ட நம் உழவர்கள் கலப்பின மாடுகளை வைத்துக்கொண்டு நாட்டு மாடுகளை ஒதுக்கத் தொடங்கினர்.

நாளடைவில் நாட்டு மாடுகள் முக்கியத்துவம் மறந்து அவை அழிவின் பாதையில் கொண்டு செல்லப்பட்டன. இதனால் இலவச இயற்கை உரங்களுக்கு மாற்றாக ரசாயனங்களை வாங்க வேண்டியதாயிற்று. கலப்பின மாட்டின் பாலால் பெருகிய நோய்களாலும் சத்துக் குறைவாலும் ஊட்டச்சத்து பானங்கள் நோய் எதிர்ப்புக் குறைவாலும் அவற்றிற்கான மருந்துகள் என வெளிநாட்டினர் வியாபாரம் விரிந்தது. தீவனத்துக்காக இந்திய தானியங்கள் பெருமளவில் செலவிடப்பட்டதால் உணவுப் பொருள்கள் விலையும் எகிறியது. பின்னால் வந்த இந்திய அரசாங்கமும் பல்வேறு காரணங்களால் பசுமைப்புரட்சி என்ற விஷப் புரட்சி மூலம் அதற்கு மேலும் வலு சேர்த்தது.

வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் தயாராகும் வேப்பெண்ணெய், வேப்பம் பிண்ணாக்கு, வேர்மி கம்போஸ்ட், கோகோ, பீட் முதலான இயற்கை உரங்களை வாங்கிக் கொண்டு நமக்கு யூரியா போன்ற ரசாயன விஷங்களை விற்கிறார்கள். இந்த விஷப் பயன்பாட்டால் வரப்போகும் மரபணுக் கோளாறுகளுக்கும், கான்சர் போன்ற கொடிய நோய்களுக்குமான மருந்து நாட்டுமாடுகளிடமிருந்தே கிடைக்கின்றன. அவை பாரதத்தின் சொத்து.

இன்று பிரேசில், ஐரோப்பா உட்பட பல வெளிநாடுகளில் இந்திய நாட்டுப் பசுவகைகள் லட்சக்கணக்கில் வளர்க்கப்படுகின்றன. இந்தியத் தொழிலதிபர்களும் பெரும் பணக்காரர்களும், ஏன், சீமை மாட்டுக்குத் தீவன உற்பத்தியாளர்களுமே கூட தங்கள் வீட்டிலும் பண்ணைகளிலும் நூற்றுக்கணக்கான நாட்டுப் பசுக்களை வளர்க்கிறார்கள். மாநகரங்களில் டாக்டர்கள், தொழிலதிபர்கள் உட்பட பெரிய பதவிகளில் உள்ளோரும் வீட்டுத் தேவைக்குப் பசுவை வீட்டிலேயே வைத்து வளர்க்கத் தொடங்கியுள்ளார்கள்.

இன்று பல சமூகத் தொண்டர்கள், கோசாலைகள் மூலம் நாட்டுப் பசுவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வேகமாகப் பரவி வருகிறது. நாமும் உணர்ந்து நாட்டுப்பசுக்களைப் பேணிக்காத்து நன்மையடைவோம்.

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.”

-திருஞானசம்பந்தர் தேவாரம்.

நாட்டுப்பசுக்களைப் பற்றி மிக விரிவாக அறிய "திமில்" நூலைப் படிக்கவும். பிரதிக்கு +91 88837 40013. 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates