Trending

Monday, 17 October 2016

குலத்தொழில்

குலத்தொழில் என்பது பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தெய்வம் போன்றது என்றால் மிகையல்ல. பல நூறு தலைமுறைகளாக அவன் வம்சத்துக்கு சோறு போட்டது. அவன் வம்சத்தொடு சேர்ந்து வாழ்ந்த பிற ஜாதியினருக்கும் சேவை செய்தது, பணத்தைத் தாண்டி. குலத்தொழில் என்பதை இன்று தவறாக சித்தரித்து, அவை நசியும்படியான சட்டங்களும் சமூக சூழல்களும் உருவாக்கிவிட்டார்கள். குலத்தொழில்களின் நியாமனான சமூக பங்களிப்பென்ன, இன்றைய முக்கியத்துவம் என்ன, மீட்பதின் தேவையென்ன என்பதைப் பற்றி கொஞ்சம் அலசுவோம்.குலத்தொழில்கள் உருவாகி வந்த விதம்

ஆதியில் மனிதன் இனக்குழுக்களாக நாடோடி வாழ்வு வாழ்ந்தனன். பின்பு விவசாயம், நீர் மேலாண்மை பெருகியவுடன், நீரும் உணவும் நிலையாய் கிட்டத் துவங்கியவுடன் ஓரிடத்தில நின்று வாழ துவங்கினான். நின்று வாழ துவங்கியபின்னரே சமூகங்கள், அரசுகள் உருவாயின. இப்படி சமூக வாழ்வு உருவான மனிதன் தனக்கெனவும், அந்த பகுதிக்கேனவும் சட்டதிட்டங்கள் வகுத்து பின்பற்றினான். ஒவ்வொரு மனிதனும் தனக்கான தேவைகளை தானே செய்து நிறைவேற்றிக் கொண்டு வாழ்வது சமூக வாழ்க்கை முறையில் சிரமமாகவும் நேரம் பிடிப்பதாகவும் இருந்தது. அதனால் மனிதர்கள் அவரவர் தகுதி, திறமை, எண்ணம், சிந்தனை, சூழல்கள் அடிப்படையிலும் அவரவர் முன்னோர்களின் வழியே அறிந்த தங்கள் வம்ச பின்னணி குறித்தும் அறிந்து அதனடிப்படையில் தொழில்களைப் புரிந்தனர். உதாரணமாக கவுண்டர்களின் முன்னோர் மரபுப்படி மரபாளன் என்ற குல மூதாதையர் இறைவனால் விவசாயம் செய்யப் பணிக்கப் பட்டு பிறந்தனர் போன்ற செய்திகள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியைச் செய்து தங்களுக்கு தேவையான பிற பொருட்கள்/வேலைகளைப் பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்வது பேரும் மனிதக் கூட்டத்தின் தேவைகளைச் சமாளிக்க உதவியாக இருந்தது. ஒரு பணியை மட்டும் செய்துவந்தால் செய்தொழில் நேர்த்தியும் உற்பத்தி நுணுக்கங்களும் மேம்பட்டது. இந்த தொழில்கள் யாவும் இயற்கையைக் கெடுக்காத இயற்கையோடு இணைந்தவையாக இருந்தன. மேலும் இங்கே ஒருவரை பெருவர் சார்ந்து வாழும் வாழ்வே பிரதானமாக இருந்தது; தொழில் பணத்திற்கானது அல்ல; வாழ்வுக்கானது.கிராமங்களே அன்றைய தேசங்களின் அடிப்படை உறுப்புகளாக இருந்தன. ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு தனி சர்க்கார் போல இயங்கின. அவர்களுக்கு தேவையான அனைத்தும் அந்த கிராமத்திலேயே கிடைக்கும்படி ஒவ்வரு கிராமத்திலும் எல்லா சாதியினரும் இருந்தனர். கிராமங்கள் வெளியில் இருந்து எதையும் கேட்காத தற்சார்பு கொண்டவயாக இருந்தன.

ஒரே இனத்துக்குள் இருந்து குறிப்பிட்ட தொழில் செய்துவந்தவர்கள் தங்கள் இனத்துக்குள்ளேய கல்யாணம் செய்தது அவர்கள் தொழில் வகையிலும் உதவியாக இருந்தது. வாழ்க்கை முறையிலும் புரிந்துணர்வு கொள்ள வசதியாக இருந்தது. இப்படி பல தலைமுறைகள் ஒரே தொழில் செய்துவந்தவர்கள் தங்களுக்குள் மாறி மாறி கல்யாணம் செய்து, மீண்டும் மீண்டும் அதே தொழிலை அடுத்தடுத்த தலைமுறை செய்யச் செய்ய அந்த தொழில்நுட்பம் அவர்கள் வம்ச வரமாக ஜீனிலேயே ஊறிய விசயமாகப் போய்விட்டது.

(இன்று ஒவ்வொரு தொழில்துறையிலும் இந்த ஜீனில் ஊறிய திறமைகள் எவ்வளவு நன்மை செய்கின்றன என்பதை கூர்ந்து நோக்கினால் தெரியும். கல்வி, கல்வி சார்ந்த துறைகளில் பிராமணர்கள் கொடி கட்டுகிறார்கள். நிதி நிர்வாகம், வங்கித் துறையில் செட்டியார்கள் சிறப்பாக உள்ளனர். அக்கவுண்ட்ஸ் மேனேஜ்மென்ட் துறையில் கருணீகர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். கவுண்டர்கள் தங்கள் விவசாய பின்னணியால் ஆப்பரேசன் மேனேஜ்மென்ட் சார்ந்த துறைகளில் பளிச்சிடுகிறார்கள் உற்பத்தி, டெக்ஸ்டைல், போக்குவரத்து, ரிக் போன்று.)

குலத்தொழில் தந்த தனிமனித நன்மைகள்

குலத்தொழில் இருந்த காலத்தில் ஒருவன் பிறந்தபோதே அவனுக்கு தொழில் உத்திரவாதமாக இருந்தது. அவன் வீடே பயிற்சிக் களம், தந்தையே குரு. கிராமத்தினர் அனைவரும் வாடிக்கையாளர். கூலிகள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை. போட்டி பொறாமைகள் இல்லை. தங்களுக்கு தேவையான பிற சேவைகளும் கைக்கெட்டும் தூரத்தில். ஒரு இனத்தில் இருப்பவர்கள சொந்தபந்தங்கள் அனைவரும் ஒரே தொழிலில் இருந்ததால் இங்கே ஏற்றத் தாழ்வுகள் போட்டி பொறாமைகள் மிக மிக குறைவு. அதனால் நிம்மதியான வாழ்வு சாத்தியமானது. உறவுகள் உறவுகளாக இருந்தன.

ஆனால் இன்று, ஒருவன் தொழில் துவங்க வேண்டுமானால் வெகுகாலம் எங்காவது போய் படிக்க வேண்டும், அப்புறம் அனுபவத்துக்கு பயிற்சி பெற வேண்டும். முதலீடு திரட்ட வேண்டும், ஆட்களைச் சேர்க்க வேண்டும், மூலப்பொருட்கள் கொள்முதல், அரசு அனுமதிகள், மார்கெட்டிங், வாடிக்கையாளர்கள், நிதி நிர்வாகம் என்று எவ்வளவோ சிக்கல்கள். இவற்றில் இருந்து  ஒருவன் வெற்றி பெற்று வருவது அவ்வளவு எளிதல்ல.

தேச நன்மைகள்

பண்டைய பாரதத்தின் ஞானம் தவிர்த்துச் செல்ல முடியாத அளவு ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறப்பாக இருந்தது என்பது தெளிவு. தேசத்தின் தொழில் ஞானச் செல்வங்கள் குலத்தொழில்களில் இருந்தன. குலக்கல்வியின் வாயிலாக ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட்டது. (பின்னர் நம் தேசத்தை கொள்ளையிட வந்த கிறிஸ்தவ ஐரோப்பிய கொள்ளைக் கும்பலால் நம் கல்விமுறைகளும், தொழில்முறைகளும் சீர்கெட்டன. அவர்களின் வாரிசுகளாக செயல்படும் பலராலும், இன்றும் நம் குலத்தொழில்-கல்வியினை மீட்க இயலா சூழல் இருந்து வருகிறது.)

ஒருவன் பிறக்கும்போதே அவனுக்கான தொழில், வருமான வழிகள் தெளிவாகவும், வரையருக்கப்பட்டும் கைக்கெட்டும் தூரத்திலும் இருந்ததால் தேசத்தில் வேலையில்லா திண்டாட்டமில்லை. வறுமையில்லை. அவரவர் உறவுக்குள், சமுதாயத்துக்குள் ஒரே நிலையில் ஒரே தொழிலில் இருந்ததால் சமுதாய குற்றங்கள் கிளர்ச்சிகள் இல்லை. இவற்றால் மக்கள் தரப்பில் இருந்து கிளர்ச்சிகள், அதனால் அரசின் ஸ்திரத்தன்மைஇன்மை போன்றவை கேள்விக்குள்ளாகும் சூழல் இல்லை. இது நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடும் விஷயங்கள்.

குலத்தொழில்கள் ஒவ்வொன்றிலும் தர்மம் என்பது அடிப்படையாகப் பின்பற்றப்பட்டது. தொழில் கற்றுக் கொள்ளும்போதே தொழில் தர்மமும் தெய்வ சாநித்யமாக அறிவுறுத்தப்படும். அந்த தர்மமானது மக்களையும், கலாசாரத்தையும், இயற்கையையும் காக்கும்வண்ணம் இருக்கும். உதாரணமாக நாட்டியம்-நாடகம் போன்றவற்றை குலத்தொழிலாக கொண்ட மேளக்கார ஜாதியினருக்கு பொதுமேடையில் காம உணர்வுகளைத் தூண்டும் ராகங்கள் பாடக்கூடாது, ஆண்-பெண் சரச லீலைகளைக் காண்பிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. வேளாளருக்கு விருந்தோம்பல் பசியாற்றுதல் என்பது தர்மமென போதிக்கப்பட்டது. பணம் என்பது பிரதானமாக இல்லாமல் தர்மம் முன்னின்றது.

இயற்கை-ஆரோக்கிய நன்மைகள்

குலத்தொழில்கள் அடிப்படையிலேயே கிராமங்களில் நடப்பவை. உற்பத்தியும் நுகர்வும் ஒரே இடத்தில் நடப்பவை. அதனால் தேவையற்ற போக்குவரத்து இல்லை. லட்சக்கணக்கில் இருந்த கிராமங்களில் ஒவ்வொரு கிராமங்களிலும் சிறு சிறு குழுக்களாக பெரும்பாலான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படும். உள்ளூர் தேவைக்குப் போக உபரிகள் கிராம சந்தைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டும் அடுத்தடுத்த பெருஞ்சந்தைகளுக்கு போய் அதன்மூலம் பற்றாக்குரையுள்ள மற்ற கிராமங்கள் தேசங்களுக்குச் சென்று  அதிலும் உபரியானவை துறைமுகம் வழியாக ஏற்றுமதியாகும். இதனால் மொத்த உற்பத்தி என்பதே இல்லை. எங்கே மொத்த உற்பத்தியுள்ளதோ அங்கே நீர் காற்று நிலம் என மாசடைவது தவிர்க்க இயலாது. ஆனால் குலத்தொழில் அமைப்பில் மாசடைவு என்பதே இல்லை. விவசாயம் முதல் அனைத்துப் பொருட்களும் இப்படி இயற்கை சார்ந்தும், மனித உழைப்பு சார்ந்தும் இருந்ததால் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும் சரி, அவற்றை நுகர்வோருக்கும் சரி நல்ல ஆரோக்கியம் கிடைத்தது.காலனிய-பெருநிறுவன சூழ்ச்சிகள்

இன்று ஜாதி ஒழிப்பு பேசும் அறிவுஜீவிகள் முதல் வெளிநாட்டு கூலிக்கு மாரடிக்கும் முற்போக்குகள் வரை ஒப்புக்கொள்ளும் விஷயம் பாரதம் பிரிட்டிஷ் வரும்வரை பதினாறு நூற்றாண்டுகளாக உலகின் மிகப்பெரும் வணிக சக்தியாக விளங்கிற்று என்பதும், அதற்குக் காரணம் இங்கே நிலவி வந்த ஜாதி சார்ந்த குலத்தொழில் முறையே என்பதும்தான். நாட்டைச் சுரண்டி கொள்ளையிட துடித்த பிரிட்டிஷ்க்கு ஜாதிய அமைப்பு பேரும் இடையூறாக இருந்தது. பொருளாதார ரீதியாகவும், மதமாற்றதிற்கும், அரசியலிலும் என எதிலும் பாரதத்தைக் காக்கவும், சுரண்டலை எதிர்க்க்கவுமான மனோநிலையை-வலிமையை ஊட்டியது ஜாதிய அமைப்பு. அதன்காரணமாகத்தான் வெள்ளையர்கள் நம் நாட்டில் ஜாதி ஒழிப்பு மற்றும் முற்போக்கு குரலை உயர்த்தினர். அதிசயமாக, பிரிட்டிஷின் அந்த குரலுக்கு பொதுவுடைமை பேசி முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்களின் தந்தை கார்ல் மார்க்ஸ் கூட ஆதரித்தார்! ஒரே குட்டை. குலத்தொழில்முறைக்கு எதிரான சட்டங்கள், கல்விமுறைகள், சமூக அமைப்புகள் என்று அனைத்தும் வலிந்து திணிக்கப்பட்டன.

குலத்தொழில்கள் ஒவ்வொன்றாக நசியும்போதும் அந்த வெற்றிடத்தை பிடித்துக் கொண்டவை பெருநிறுவனங்களே. சில இடங்களில் உள்ளூரிலேயே நவீன உற்பத்தி முறைகள் கொண்டு பிற ஜாதியினர் செய்யும்படி தென்பட்டாலும் காலப்போக்கில் அவை சாமானியர்களுக்கான தொழிலாக இல்லாமல் கார்பரேட்கள் மட்டுமே செய்யக்கூடிய தொழில்களாக மாற்றமடைந்தன. அவையும் சில காலத்தில் வெகு சில நிறுவனங்கள் மட்டும் செய்யும் தொழிலாக மாறிப்போயின. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு நிலையிலும் மக்களின் பொருளாதாரம், கலாச்சாரம், ஆரோக்கியம், இயற்கை வளங்கள் என்று அனைத்தையும் சுரண்டிக் கொண்டுசெல்லும் விதமாக இருந்து வருகிறது என்பது தற்செயலாக நடப்பதா திட்டமிட்டு அரங்கேறுவதா தெரியவில்லை.

சில உதாரணங்கள் கீழே,

சாணார் - சாணார்களின் குலத்தொழிலான கள்ளை சர்க்கார் ஏலம் போட்டு கடைக்கு கொண்டுவந்து பொதுவுடைமை ஆக்கியது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டு சாராயம் வந்தது. அதையும் ஏலத்தில் பிராந்தி கடை என்று எல்லாருக்கும் கொடுத்தது. இப்போது அரசாங்கமே நடத்துகிறது. ஆனால் உற்பத்தி முழுக்க வெகு சில நபர்களிடம். பல லட்சம் பேரின் அடிப்படை வாழ்வாதாரம் இப்போது வெகு சிலரின் பெருஞ்சொத்து. ஆரோக்கியம் வளர்த்த கள் சட்டவிரோதமே ஆகிவிட்டது. மேலும், சாணார்கள் தயாரித்த கருப்பட்டிக்கு மாற்றாக வெள்ளை சர்க்கரை வந்தது. ஏராளமான பல நோய்களும் வந்தன. பனை மரம் அழிந்த வேகத்தைவிட பல மடங்கு வேகத்தில் வெகு சில சர்க்கரை ஆலைகள் வந்தன. மிகப்பெரும் ஆரோக்கிய மூலகாரணத்தை கள் மற்றும் க்ருப்பட்டி இழப்பால் தவரவிட்டோம். போதை நோய், சர்க்கரை வியாதி உட்பட ஏராளமான வியாதிகளுக்கு அடிப்படை சாணார்கள் குலத்தொழில் நசிவுதான்.

சக்கிலியர் - தோல் பதனிடுதல் மூலம் நமக்கு தேவையான செருப்பு, சிறு பைகள், சால் போன்றவற்றை இயற்கையான முறையில் தோலைப் பதனிட்டு செய்து வந்தார்கள். இப்போது தோலுக்காக பசுக்களை கொன்று குவித்து ஆறுகளை நாசம் செய்யும் கடும் விஷ கெமிக்கல்களைக் கொட்டி தோலைப் பதனிடுகிறார்கள். ஒரு சிலரின் நன்மைக்காக ஒரு மாநிலமே விஷ நீரை அருந்துகிறது. எங்கு பார்த்தாலும் கேன்சர். இது சக்கிலியர் என்ற ஒரு ஜாதியின் குலத்தொழில் நசிவால் வந்த வினை.நாவிதர் - நாவிதர்கள் இழப்பால் நாம் நம் கலாசாரத்தையே இழக்கும்படியான சூழல் உருவாகிறது. கல்யாணங்கள் சீர்முரைகள் மறந்து ஆடம்பரமும், தமிழ் முறை கல்யாணம் போன்ற புதிய முறைகளும் உள்ளே நுழைகின்றன. மேலும் நாவிதர்கள் இழப்பால் பேரும் மருத்துவ அறிவு அழிகிறது. நாவிதர்களே நம் கிராம மருத்துவர்கள். பெரும்பாலும் நோய் வராத வண்ணம் கழிவுநீக்கம், எண்ணெய்க் குளியல், நசியம், என்று பலவித முறைகளால் ஆரோக்கியத்தைப் பேணி காத்து வந்தார்கள், அப்படியே ஏதேனும் நோய் வந்தாலும் கைவைத்தியம் மூலமே பெரும்பாலும் சரி செய்துவிடுவார்கள். இன்று நாவிதர்கள் மருத்துவத்தைக் கைவிட்டதால் தொட்டதற்கெல்லாம் இங்கிலீஸ் மருத்துவம் எதேடுத்தாலும் ஆயிரம் ஐநூறு. முதலில் இங்கிலீஷ் மருத்துவம் என்று உருக்கு ஊர் டாக்டர் இருந்தார்கள் எல்லாருக்கும் இனிப்பாக இருந்தது; இப்பொது அவையும் வழக்கொழிந்து பெருநிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் சென்று கொண்டிருக்கிறது. பல லட்சம் கோடி பணம் மருத்துவம் மூலம் வெளியே போகிறது.

உப்பிளியர் & வண்ணார் - உப்பிளியர் நம் கிராமத்து வேதியாளர்கள். கெமிக்கல்கள், வேடியுப்புகள், சாயம் போன்றவற்றை இயற்கையான முறையில் தயாரித்து வந்தனர். வண்ணார்கள் அந்த சாயத்தைக் கொண்டு கைகொளர் நெய்யும் துணிகளுக்கு வண்ணமிட்டுத் தருவர் (அதனால்தான் வண்ணார்). இன்று அந்த பொருட்கள் அனைத்தும் விஷ மூலம் கொண்ட கேமிக்கல்களால் செய்யப்படுகிறது. இதுவும் காற்பறேட்மயமாகி பலகாலமாகிறது. இந்த கெமிக்கல் மயம். எங்கெங்கும் வியாதிகள்.பறையர் - பறையர்கள் ஊர் காவலர்களாக, தலையாரிகளாக இருந்தவரை ஊரில் திருட்டு பிரட்டுகள் கட்டுக்குள் இருந்தன. கிராம எல்லைகள், நில எல்லைகள் சரிவர தெரிந்துவந்தன. அதனால் கோர்ட் வழக்குகள் போவது உள்ளூரிலேயே மிக சுலபமாக முடிந்தது. இன்று ஒவ்வொரு சிறு சிறு பணிக்கும் அரசில் லஞ்சமான லஞ்சம அழ வேண்டியுள்ளது. போலிஸ், கோர்ட் என்று எங்கு சென்றாலும் சொத்தை அழிப்பதிலேயே குறியாக உள்ளார்கள். இது பறையர் சமூகம் குலத்தொழில் அழிவால் வந்தது.சுய விருப்பு வெறுப்பு ஆர்வம - செயற்கை வாதம்

குலத்தொழில் பற்றி கூறும்போது ஒருவாதம் மட்டும் வரும். ஏன் ஒருவன் மேல் அந்த தொழிலை திணிக்க வேண்டும்? ஒருவனுக்கு பிடித்த தொழிலை செய்யவிடாமல் ஏன் கட்டுப்பாடு? என்பதே.

முதலில்,
இந்த திணிப்பு என்பதே தவறான வாதம். ஒருவன் அவன் வீட்டில் பார்த்து வளர்ந்த தொழில்.. இயற்கையிலேயே அவன் ஜீனில் உள்ள தொழில் திணிக்கப்படுகிறது என்பதே தவறு. உண்மையில் வேறு தொழில்களுக்கு அவனை போகச் செய்யும் சமூக மாற்றம்-சமூக சூழலே திணிப்பாகும். சில தொழில்களை இழிவு என்ற தோற்றத்தை தேசவிரோத சக்திகள் உருவாக்கி அதை செய்வோருக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்கி அவர்களை அதிலிருந்து வெளிஎற்றுவதுதான் இங்கே இருக்கும் சூழ்ச்சி. அவர்களாக வெறுத்து வெளியேறுவதில்லை.

இரண்டாவது,
விருப்பமான.. அந்த விருப்பம் என்பதை கொஞ்சம் ஆய்ந்தோமானால் எப்படி இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஒரு வம்சம் ஒரே தொழிலை விரும்பி செய்துவந்தார்கள் என்று புரியும். புதிதாக ஒரு விஷயத்தின் மீது விருப்பம் உள்ளிருந்து வருவது மிக மிக அரிது. எந்த ஒரு விஷயம் நமக்கு எளிதாக வருகிறதோ, புரிகிறதோ, நம் படைப்பு சக்தி துலங்குகிறதோ, அதிலேயே நம் விருப்பம் வளரும். இதைவிட்டு எனக்கு அந்த விருப்பம், எனக்கு இந்த விருப்பம் என்று ஒவ்வொரு காலத்துக்கும் மாறும் விருப்பங்களை நம் இயல்பிர்கான விருப்பம் என்று எண்ணுவது சிறுபிள்ளைத்தனம். நீங்களே சிந்தித்துத் பார்க்கவும். சிறு வயது முதல் நம் கல்வி லட்சியங்கள் என்று எண்ணியவை மட்டும் எவ்வளவு மாற்றம் கண்டிருக்கும் என்று. மேலும், இன்று குலத்தொழிலை விட்டவர்கள், தங்கள் விருப்பப்படிதான் தங்கள் கல்வியைத் தேர்ந்தேடுக்கிரார்களா? இல்லை, தாங்கள் படித்த துறையிலேயே வேலை செய்பவர்கள் எத்தனை பேர்?? பிடித்த கல்வி-பிடித்த தொழில் என்று காரணம் காட்டி குலத்தொழிலை அழித்த சட்டங்களும், சமூக போராளிகளும்.. ஒரு மனிதன் தனக்கு விருப்பமான பாடத்தையோ தொழிலையோ அடையும்படியான நிலை இல்லாமை குறித்து கவலை கொண்டதா? இது பாதி கிணறு தாண்டும்போது கைவிட்டது போன்ற காரியமல்லவா??

இறுதியாக..
இந்த கிராம தொழில்கள், சிறு தொழில்கள் தான் பாரதத்தின் முதுகெலும்பு என்றுதான் ராஜாஜி பகுதிநேர தொழில்கல்வி திட்டம் கொண்டு வந்தார். அதை குலக்கல்வி திட்டம் என்றுகூறி அழித்துவிட்டார்கள். அதையே இன்று கர்நாடகாவில் சில கிராமங்கள் சேர்ந்து இதே பகுதிநேர கல்வி-பகுதிநேர விவசாய சிறுதொழில் என்று திட்டம்போட்டபோது எல்லாரும் பாராட்டுகிறார்கள்.

இன்றளவுமே, பாரதத்தின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி என்பது ஜாதிதான். அதற்கு கீழ்க்கண்ட வாசகமே சாட்சி.

// A UNIDO study (1997) shows that out of the 370 small scale industrial clusters and 2600 artisan-based clusters, which generated 70 per cent of India’s industrial output, 66 per cent of exports, and 40 per cent of employment, only 13 were government-sponsored. The rest had evolved out of the caste/community-based network.//

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசயாமும் சிறு-குறு தொழில்களும்தான்.. பெருநிறுவனங்கள் தரும் பொருளாதார பங்களிப்பு இன்னும் ஐந்து சதத்தைக் கூட தாண்டவில்லை. கிராம தொழில்கள் குலத்தொழில் மரபு மூலமா கடத்தப்பட்டது.. பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாகி வந்த இயற்கையை அழிக்காத விஷயங்கள்.. அவை அனைத்தும் குலக்கல்வி அழிவால் அழிந்தன.. அந்த இடத்தை பெருநிறுவனங்கள் பிடித்துக் கொண்டு வருகின்றன-சுகாதாரம்/இயற்கை அழிவோடு பொருளாதாரமும் அழிகிறது..

தன் வாழ்வின் பெரும்பகுதியை நூலகங்களில் செலவிட்டு பிரிட்டிஷ் கால இந்தியாவை வெளிக்கொணர்ந்த தரம்பால் அவர்களின் கூற்று இங்கே கவனிக்கத் தக்கது,

“For the British, as perhaps for some others before them, caste has been a great obstacle, in fact, an unmitigated evil, not because the British believed in castelessness or subscribed to a non-hierarchical system, but because it stood in the way of their breaking Indian society, hindered the process of atomisation, and made the task of conquest and governance more difficult.”

இனிமேலாவது ஒவ்வொரு ஜாதி சங்கமும் தங்கள் குல பாரம்பரிய அறிவை மீட்க தங்கள் குல பெரியவர்கள் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்தினரும், அவரவர் கிராமத்தில் குலத்தொழில் புரிவோர் உரிமைகள், வருமானம், சமூக பாதுகாப்பு உறுதியாக இருப்பதை உறுதி செய்து, உள்ளூர் மக்களிடம் பொருட்கள் வாங்கி ஊக்குவித்து வர வேண்டும். இது வருங்காலத்தில் அனைவரையும் காக்கும்.

எனவே எதார்த்தத்தைப் புரிந்துகொண்ட உண்மையான வரலாற்று ஆய்வுகளை படித்து, பாரம்பரியம் காத்து, தர்மத்தின் பாதையில், இயற்கை வழியில் எல்லாருக்கும் பயனுள்ள வகையில் வாழ்வோம்.

நாவிதர்
சாணார்
பறையர்
தேசத்தை மூளை சலவை செய்வது-உளவாளியின் வாக்குமூலம்


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates