Trending

Friday, 9 June 2017

வாழ்க்கை சுலபம் -உலகப்பிரசித்தி உரை (தமிழில்)

ஜோன் ஜண்டை - தாய்லாந்து இயற்கை விவசாயி, விதை சேமிப்பாளார், இயற்கை வீடுகள் கட்டுமானர், எளிய வாழ்வு பிரசாரகர். தனது வாழ்வும், கற்றலும் பற்று சுவையாகவும், எளிமையாகவும், ஆழமாகவும் புரியும்படி பேசிய இந்த உரை உலகப்பிரசித்தி பெற்றது. அதை நம் சொந்தங்களுக்கு கிட்ட தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். தற்கால சூழலில் நம் சமுதாயத்துக்கு கொஞ்சம் அவசியமான உரைதான்.இவர் கூறுவதை அவரவர் சூழலுக்கேற்ப இயன்றவரை பின்பற்ற முயலலாம். எளிமை என்பது ஆரோக்கியம், செல்வம், உறவுகள், அன்பு என அனைத்தையும் தரக்கூடியது.
என் வாழ்வில், எல்லாருக்கும் நான் சொல்ல விரும்பும் ஒரு வார்த்தை உள்ளது. அது "வாழ்க்கை சுலபமானது". அது இனிமையானதும் சுலபமானதுமாகும். முன்னர் நான் அப்படியெல்லாம் யோசித்தது இல்லை.

நான் பாங்காக்கில் (தாய்லாந்து தலைநகர்-மாநகரம்) இருந்த போது, வாழ்க்கை மிகவும் கடினமானது-சிக்கலானது நு நெனச்சேன். 

நான் பொறந்தது வடகிழக்கு தாய்லாந்தில் ஒரு எளிய கிராமத்தில். நான் குழந்தையா இருந்தப்ப எல்லாமே சுலபமாகவும், இனிமையாகவும் இருந்துச்சு. ஆனா, டிவி வந்தப்புறம் நிறைய மக்கள் எங்க ஊருக்கு வந்தாங்க; "நீ ஏழை, நீ உன் வாழ்க்கைல வெற்றிய தேடி போகணும், அதுக்கு நீ பாங்காக் போகணும்" நு சொன்னாங்க.

அதனால நானும் வருத்தத்தையும் ஏழையாகவும் உணர்ந்தேன். அதனால பாங்காக் போக முடிவெடுத்தேன்.

கல்லூரி வாழ்க்கை
பாங்காக் சென்றபோது, அது அவ்வளவு இனிமையாக இருக்கவில்லை. நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளனும், அதுக்கு நிறைய படிக்கனும் மிக கடினமா வேலை செய்யணும், அப்புறம்தான் உங்களுக்கு "வெற்றி" கிடைக்கும்.

நான் மிக கடினமா வேல செஞ்சேன், ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் குறைந்தபட்சம். ஆனா என்னால சாப்பிட முடிஞ்சது என்னவோ ஒரு கிண்ணம் நூடுல்ஸ், இல்ல அது மாதிரி ஏதாவது கொஞ்சூண்டு கிடைக்கும்.

அப்பறம் நான் தங்கியிருந்த இடமும் மிக மோசமானது, பல நபர்கள் தூங்கும் சிறிய அறை. பயங்கர வேக்காடா இருக்கும்.

நான் நிறைய கேள்வி கேக்க துவங்கினேன். நான் கடினமா உழைச்சும், என் வாழ்க்கை ஏன் இன்னும் ரொம்ப கடுமையா இருக்கு. நான் ஏராளமா உற்பத்தி செய்யறேன், ஆனா எனக்கு தேவையானது கிடைக்கல; இதில் எதோ தப்பிருக்கு. மேலும் நான் கத்துக்க முயற்சி செஞ்சேன்; படிச்சேன்; கல்லூரிக்கு போய் படிச்சேன்.
கல்லூரில படிக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஏன்னா அது ரொம்ப சலிப்பானது.

மேலும், கல்லூரில இருக்கற எல்லா துறை பாடங்களையும் பார்த்தேன்; பெரும்பாலும் அவை அழிவுக்கான அறிவுகள். எனக்கு ஆக்கப்பூர்வமான கல்வி கல்லூரில இல்லை. இப்போ, நீங்க ஒரு ஆர்கிடேக்ட் அல்லது என்ஜினீயர் ஆகறீங்க னா, நீங்க இன்னும் நிறைய அழிக்கிறீங்க நு அர்த்தம். இந்த மக்கள் வேலை அதிகமா செய்ய செய்ய, மலைகளுக்கு அழிவு அதிகமாகும். நல்ல விளைநிலங்கள் எல்லாம் கான்கிரீட் கலவையால மூடப்படும். நாம நெறைய அழிப்போம்.
நாம விவசாயம் படிக்கிறோம்னா, நீங்க நிலம், நீர் எல்லாத்தையும் எப்படி விஷமாக்கறது நு படிக்கிறீங்க நு அர்த்தம்; நாம எல்லாத்ஹ்டையும் அழிக்க படிக்கிறோம். நாம செய்யற எல்லாமே சிக்கலாகவும், கடினமாகவும் இருக்கறதா உணர்ந்தேன். நாம எல்லாத்தையும் கடினமாக்கிட்டு இருக்கோம்.

வாழ்க்கை ரொம்ப கடினமாச்சு; நான் ஏமாற்றத்தை உணர்ந்தேன்.
நான் ஏன் பாங்காக் ல இருக்கணும் நு சிந்திக்க ஆரம்பிச்சேன். நான் சிறுவனா இருந்தப்ப யாரும் தினமும் எட்டு மணிநேரம் வேலை செய்யல; எல்லாரும் வருஷத்துல ரண்டு மாசம் மட்டும் அதுவும் தெனமும் ரெண்டு மணிநேரம் மட்டுமே வேல செஞ்சாங்க - அரிசி நடவு ஒரு மாசம் அறுவடை ஒருமாசம். பாக்கி பத்து மாசம் ஓய்வு நேரம்தான். அதனாலதான் தாய்லாந்துல ஏராளமான பண்டிகைகள் இருக்கு, ஒவ்வொரு மாசமும் ஒரு நோம்பி இருக்கும். ஏன்னா, அவங்களுக்கு அவ்ளோ ஓய்வு நேரம் கெடச்சுது.
எல்லாருமே பகல்நேரத்துல குட்டி தூக்கம் போடுவாங்க. இப்பவும்கூட நீங்க லாவோஸ் போனீங்கனா மக்கள் மதியம் சாப்டுட்டு குட்டி தூக்கம் போடுறத பாக்கலாம். எழுந்தப்பறம், உன் மாப்பிள எப்படி இருக்கார், மருமக என்ன பண்றா நு குசலம் பேசுவாங்க. ஜனங்களுக்கு ஏராளமான நேரம் இருந்துச்சு. நேரமிருந்தால, ஜனங்க 'அவங்களோட' இருக்க முடிஞ்சுது.

அவங்களோட இருக்க இயலும்போது, அவங்களை புரிஞ்சுக்க முடிஞ்சுது. அவங்க தங்களை புரிஞ்சிக்கும்போது, அவங்களுக்கு வாழ்க்கைல என்ன தேவைன்னு பார்க்கறாங்க. அதனால பல ஜனங்க, தங்கள் வாழ்க்கைல சந்தோசம் வேணும், அன்பு வேணும, வாழ்க்கைய அனுபவிக்கனும்னு பார்த்தாங்க.
அதனால ஜனங்க வாழ்க்கைல பல அழகியல பார்த்தாங்க, அந்த அழகை பல விதங்கலா பிரதிபலிச்சாங்க. சில மக்கள் கத்தியால சீவி மிக நேர்த்தியான அழகான கூடைகளை முடைஞ்சாங்க. இப்போலாம் யாரும் அதுபோல செய்ய முடியறதில்லை. ஜனங்க பிளாஸ்டிக எங்க பார்த்தாலும் பயன்படுத்தறாங்க.

அதனால, இதுல எதோ தப்பிருக்கு னு எனக்கு தோனுச்சு, என்னால இந்த வாழ்க்கைமுறைல வாழ முடியாது. சரின்னு, கல்லூரிய விட்டுட்டு ஊருக்கு போயிட்டேன்.

வீட்டுக்கு போனப்புறம், நான் குழந்தையா இருந்தப்ப எப்படி பொழச்சனோ அப்படியே வாழ துவங்கினேன். வருஷத்துக்கு ரண்டு மாசம் மட்டும் வேல செய்ய துவங்கினேன். நாலு டன் அரிசி கிடச்சுது. ஆறு பேர் குடும்பத்துக்கு அரை டன்னுக்கு குறைவா தான் சாப்டோம். கொஞ்சம் விக்க முடிஞ்சுது.
அப்புறம் ரண்டு மீன் குளங்கள வெட்டுனேன். வருஷம் முழுக்க சாப்பிட மீன் கிடச்சுது. அப்புறம் சுமார் அரை ஏக்கருக்கு குறைவான இடத்துல காய்கறி தோட்டம் போட்டேன். ஒருநாளைக்கு கால்மணிநேரம். தோட்டத்துல முப்பது வகை காய்கறி இருக்கு. ஆறு பேர் அவ்வளவையும் சாப்பிட முடியாது. சந்தையில விக்க கொஞ்சம் உபரி இருக்கு. அதிலையும் கொஞ்சம் வருமானம் பார்க்க முடியுது.

வாழ்க்கை ரொம்ப சுலபமா உணர்ந்தேன்.  எதுக்கு பாங்காக் ல ஏழு வருஷம் கடுமையா வேலை செஞ்சு சாப்பிட கூட போதாம இருக்கணும்; இங்க வருஷத்துல ரண்டு மாசம், நாளைக்கு கால்மணிநேரம் வேல செஞ்சுட்டு என்னால ஆறு பேருக்கு சோறு போடா முடியுது. அவ்ளோ சுலபம்.

வீடு 
அப்புறம், என்னைப்போல பள்ளிகூடத்துல மார்க் எடுக்காத முட்டாப்பசங்கலாம் வீடு கட்ட முடியாதுனு முன்னலாம் யோசிப்பேன். ஏனா, என்னைவிட ரொம்ப நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போறவன் கூட முப்பது வருஷம் வேலை செஞ்சாதான் வீடு கட்ட முடியுது. என்னமாதிரி கல்லூரி கூட முடிக்காதவன் எப்படி வீடு கட்ட முடியும். என்னப்போல படிப்பில்லாதவர்களுக்கு நம்பிக்கையில்லாத விஷயம்.

ஆனா, நான் மண் வீடுகளை கட்ட ஆரம்பிச்சேன், ரொம்ப சுலபம். ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம், காலை 5-7 மணிவரை, மூணு மாசத்துல எனக்கு வீடு கிடைச்சிருச்சு.

பள்ளியில் ரொம்ப புத்திசாலியான இன்னொரு நண்பன், அவனும் மூணு மாசத்துல வீடு கட்டிட்டான். ஆனால் அவன் கடன்காரனாகிட்டான். அவன் கடனை கட்ட முப்பது வருஷம் ஆகும், வேலை செய்யணும். ஆக, எனக்கு 29 வருஷம் 10 மாசம் மிச்சம். வாழ்க்கை ரொம்ப சுலபம்!(அடுத்தவனைப் போல வீடு, நகரத்துல அடுக்குமாடி வீடு னு தலைய குடுத்துட்டு ஆயுசுல பாதிநாள் கடன் கட்டுறதை விட, நமக்கான எளிமையான வீடு கட்டுறது மூலமா முப்பது வருஷ உழைப்பு, நேரம், பணம், சந்தோசம் மிச்சம் னா ஏன் அதைப் பத்தி யோசிக்கக்கூடாது?) 
இவ்வளவு சுலபமா வீடு கட்டிர முடியும்னு நான் யோசிச்சதே இல்ல. அப்புறம் நான் வருஷம் ஒரு வீடு கட்டுவதை தொடர்ந்தேன், குறிஞ்ச பட்சம் வருஷம் ஒன்னு. இப்போ என்கிட்டே பணமில்ல ஆனா என்கிட்டே நிறைய வீடு இருக்கு. இப்போ என் பிரச்னை, இன்னிக்கு ராத்திரி எந்த வீட்டுல தூங்க போறதுன்னு தான்.


Image result for Jon Jandai

அதனால, வீடு ஒரு பிரச்சனையில்ல, யார் வேணாலும் வீடு கட்டலாம். 13 வயசு குழந்தைக, பள்ளிக்கூடத்துல ஒண்ணா சேர்ந்து செங்கல் செய்யறாங்க, வீடு கட்டிறாங்க. ஒரு மாசம் கழிச்சு அவங்களுக்கு ஒரு நூலகம் கிடச்சிருது. குழந்தைகனால வீடு கட்ட முடியும், வயசான பாட்டினால அவங்களுக்கு ஒரு வீடு கட்டிக்க முடியும். ரொம்ப சுலபம்.

உங்களால என்னை நம்ப முடியாட்டி முயற்சி செஞ்சு பாருங்க. யாராவது வீடு வேணும்னு நினைச்சா.

ஆடைகள்

அடுத்த விஷயம் உடைகள்.

நான் ஏழைபோல நினைச்சேன், நான் அழா இல்லைன்னு நெனச்சேன். என்னை நல்லா காட்டிக்க, மற்றவங்கள போல, ஒரு சினிமாக்காரனைப் போல உடுத்த முயற்சி பண்ணேன்.

ஒரு ஜோடி ஜீன்ஸ் வாங்க நான் ஒரு மாசம் சேமிக்கனும்.அதை போட்டுக்கிட்டு கண்ணாடி முன்னாடி வலதும், இடதுமா திரும்பி திரும்பி பார்த்தாலும், நான் அதே நபர்தான். ரொம்ப விலைபிடிக்கும் ஜீன்ஸ் என் வாழ்க்கைய மாத்தல. நான் கோமாளித்தனமா உணர்ந்தேன், நான் ஏன் அதை வாங்கணும்? ஒரு மாசம் செலவு பண்ணி ஒரு ஜோடி பேன்ட் வாங்கினாலும், அது என்னை மாற்றல.

இதைப்பத்தி நிறைய யோசிச்சேன். ஏன் நான் பேஷன தொடரணும். நாம என்னைக்கும் பேஷன பிடிக்க முடியாது ஏன்னா நாம அது பின்னால போறோம். (அது மாறிகிட்டே இருக்கு, மாத்திகிட்டே இருக்காங்க, நாம மாத்த முடில). அதனால அதை பிடிக்க கடைவேண்டாம்; இங்கயே இருப்போம். உங்ககிட்ட இருக்கறத பயன்படுத்துங்க.

அதுக்கப்புறம், இப்போவரை இருபதுவருஷமா, நான் துணிகள் வாங்குறது இல்ல. மக்கள் என்னை பாக்க வந்துட்டு போகும்போது, நிறைய துணிகளை விட்டுட்டு போறாங்க. இப்போ என்கிட்டே டன்கணக்குல துணிகள் இருக்கு.

நான் ரொம்ப பழைய துணிகள் போடுறதை பார்த்து மக்கள் இன்னும் பல துணிகளை குடுக்கறாங்க. அதனால என் பிரச்சனை, மக்களுக்கு நிறைய துணிகள அடிக்கடி குடுக்கறதுதான். ரொம்ப சுலபம்.

நான் உடைகள் வாங்குறதை நிறுத்தியப்புரம், அது வெறும் துணிகளை மட்டும் இல்ல, இன்னும் பல இருக்கு னு உணர்ந்தேன். என்ன கத்துக்கிட்டேன்னா, நான் ஒன்னு வாங்குறேனா, இது என் தேவைக்காக வாங்குறேனா, ஆசைக்காக வாங்குறேனா னு யோசிப்பேன். எனக்கு பிடிச்சிருக்குன்னு நான் வாங்குறேன்னா நான் தப்பு பண்றேன்னு அர்த்தம். இப்படி நான் யோசிக்கும்போது நான் ரொம்ப சுதந்திரமா உணர்றேன்.

மருந்து

அப்புறம் கடைசியா மருந்துகள்.. எனக்கு நோய் வந்தா நான் என்ன செய்யறது?

என்கிட்டே பணமில்லைனா நான் என்ன செய்யறதுன்னு ஆரம்பத்துல நான் ரொம்ப கவலைப்பட்டேன்.நான் மீண்டும் சிந்திக்க துவங்குனேன். நோய் ஒரு சாதாரண விஷயம்தான், கெட்ட விஷயமில்ல. நமக்கு நோய் வருதுனா நாம வாழ்க்கைல எதோ தப்பு பண்ணிட்டோம்னு காட்டுறதுக்கு நோய் ஒரு அறிகுறி.

அப்ப, எனக்கு நோய் வந்தா, நான் போற தப்பான திசைல நின்னு மீண்டும் என்கிட்டயே திரும்பி போகணும். நான் என்ன தப்பு பண்ணேன் னு யோசிக்கணும்.

நீரை வச்சு எப்படி குணப்படுத்தறது, பூமியை வச்சு எப்படி குணப்படுத்தறது, அடிப்படை அறிவைக் கொண்டு நோய்களைக் குணப்படுத்திக்கக் கற்றுக்கிட்டேன்.
இப்போ, இந்த நாலு விஷயத்துக்கும், சுயசார்புடையவனா இருக்கேன், வாழ்க்கை ரொம்ப சுலபமா இருக்கு, சுதந்திரமா உணர்றேன். நான் எதைப்பற்றியும் கவலைப்படாம இருக்கறதா உணர்றேன், பயமில்ல, என்னால என் வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சுக்க முடியும்.

முன்ன எனக்கு ஏகப்பட்ட பயம், என்னால எதுவும் செய்யமுடியாது. ஆனா இப்போ, நான் பூமில தனித்துவமான நபரா உணர்றேன். நான் யார் மாதிரியும் ஆக வேண்டியதில்லை. நான் நம்பர் ஒன்.

இதுமாதிரி விஷயங்கள் வாழ்க்கைய சுலபமாகவும், மென்மையாகவும் ஆக்குது. அப்புறம் நான் பேங்காக்ல இருந்தது பற்றி யோசிச்சேன், ரொம்ப இருள் நிறைஞ்ச வாழ்க்கையா தோணுச்சு. என்னைப்போல பலரும் யோசிப்பாங்க னு தோணிச்சு.

அதனால நாங்க  சியாங் மாய் ல "புன் புன்" னு ஒன்ன துவக்குனோம். முக்கிய குறிக்கோள், விதைகள காப்பாத்தறது. விதைகள் சேகரிக்கறது. விதைதான் உணவா மாறுது, உணவுதான் வாழ்க்கை தருது. விதை இல்லைனா, வாழ்க்கை இல்ல. விதை இல்லைனா சுதந்திரம் இல்ல. விதை இல்லைனா சந்தோசம் இல்ல. ஏன்னா, உங்க வாழ்க்கை இன்னொருத்தரை சார்ந்து இருக்கும். ஏன்னா உங்ககிட்ட உணவில்ல. அதனால விதைகள் காப்பாத்தறது ரொம்பவே முக்கியம், அதனாலதான் 'புன் புன்' விதைகள் காத்தலுக்கு ரொம்ப கவனம் செலுத்தறோம்.

இரண்டாவது கற்றல் மையம்.. வாழ்க்கைய எப்படி சுலபமாக்குறது னு கற்றுக்க ஒரு மையம் வேணும்னு நினைச்சோம்.. ஏன்னா வாழ்க்கைய எப்படி கடினமாகவும் சிக்கலாக்கிக்கறதுனு தான் நமக்கு கற்பிக்கப் பட்டிருக்கு. எப்படி சுலபமாக்குறது? அது ரொம்ப சுலபம்.. ஆனா நமக்கு எப்படி சுலபமாக்கிக்கரதுன்னு தெரில. எப்படி சுலபமா வாழ்றதுனு எல்லாம் சேர்ந்து கத்துக்கலாம்.

ஏன்னா, யாரையும் சார்ந்திருக்காம எதோடையும் தொடர்பில்லாம இருக்க பயிற்றுவிக்கப்பட்டிருக்கோம், அப்பத்தான் பணத்தை மட்டுமே நம்பி இருப்போம் அல்லவா. ஆக நாம் சக மனிதர்களை சார்ந்து இணைந்து இருக்க தேவையில்லை. ஆனால் இனி நாம் மகிழ்ச்சியாக வாழ நாம் பழையபடி திரும்ப, நம்முடன் நாம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், சக மனிதர்களோடும், நமது மனம், உடல் அனைத்தோடும் நாம் நெருங்கியிருக்க வேண்டும்.
நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். வாழ்க்கை எளிது. ஆரம்பம் முதல் இன்றுவரை, நான் கற்றுக்கொண்ட நான்கு அடிப்படைத் தேவைகள்: உணவு, வீடு, உடை, மருந்துகள் - இவை எல்லாருக்கும் எளிதாகவும், சுலபமாகவும் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அதுவே நாகரீகம்-பண்பட்ட சமூகம். இந்நான்கு விஷயத்தையும்  பெரும்பாலான மக்களுக்கு கிடைக்க மேலும் மேலும் கடினமாக்கிக் கொண்டே வருகிறீர்கள் என்றால் அது அநாகரீகம்-பண்பற்ற சமூகம்.

ஆக, இப்போது நம்மை சுற்றி அனைத்தையும் பார்க்கும்போது, எல்லா தேவையுமே மக்களுக்குக் கிடைக்க மிகக் கடினமாகவே உள்ளது. மனித இனத்தின் வரலாற்றின் மிக அநாகரீகமான காலகட்டம் இது.

தற்போது மேற்படிப்புகள் படித்து ஏராளமானவர்கள் வருகிறார்கள். உலகத்தில் ஏராளமான பல்கலைக்கழகங்கள் உள்ளன, ஏராளமான புத்திசாலிகள் வந்துவிட்டார்கள்.ஆனால் வாழ்க்கை மேலும் மேலும் கடினமாகிக் கொண்டே வருகிறது. இப்படி கடினமாக்குவது யாருக்காக? இப்போது நாம் கடினமாக வேலை செய்வது யாருக்காக?

இது தவறென்று நினைக்கிறேன், இது இயல்பு அல்ல.நான் இயல்பு நிலைக்கு செல்ல வேண்டும். இயல்பான மனிதனாக, விலங்குகள் தங்கள் இயல்புடன் இருப்பதைப் போல மாற வேண்டும். பறவைகள் தங்கள் கூடுகளை ஓரிரு நாளில் கட்டிவிடுகின்றன. எலிகள ஒரே இரவில் தங்களுக்கான வலையை தோண்டிக் கொள்கின்றன. ஆனால் அறிவாளி மனிதன் ஒரு வீடு கிடைக்க தன் வாழ்நாளில் முப்பது வருஷம் வேலை செய்ய வேண்டும்; பலருக்கு தங்களுக்கென்று வீடு என்பதை அவர்கள் வாழ்நாளில் நம்ப முடியாத ந்விஷயமாக உள்ளது. இது தவறு.

நாம் ஏன் நம் உணர்வையும் நம் சக்தியையும் அழித்துக் கொள்ள வேண்டும்? எனவே, நான் சாதாரண மனிதனாக வாழ்வது போதும் என்று எண்ணுகிறேன், அசாதாரண வழியில்! நான் இயல்பாக இருக்கிறேன், ஆனால் மக்கள் என்னை அசாதாரணமாக பார்க்கிறார்கள், வேடிக்கை மனிதனாக. ஆனால் எனக்கு அதைப்பத்தி கவலை இல்லை. அவர்கள் அப்படி நினைப்பது அவர்கள் குற்றம்.

வாழ்க்கை எளிமையாக லேசாக இருக்கிறது, அதுபோதும் எனக்கு. மக்கள் என்னவோ நினைக்கட்டும், எனக்கு வெளியில் இருப்பதை என்னால் நிர்வகிக்க முடியாது. என் மனதை மாற்றிக் கொள்வதும்  அதை நிர்வகிப்பதும் தான் என்னால் முடியும். இப்போது என் மனம் லேசாகவும் எளிதாகவும் உள்ளது, அது போதும்.

எல்லாருக்கும் வாய்ப்பு வேண்டுமானால், வாய்ப்பிருக்கிறது. எளிமையாகவா, கடுமையாகவா.. உங்களைப் பொருத்து..
நன்றி!
எளிமையின் இன்றைய அவசியம்
நவீன வாழ்வும் மருத்துவமும் - டாக்டர் ஹெக்டே
அழகுக்கலையா? அசிங்கப் பிழையா?
மரபு கல்யாணமா-விளம்பர கல்யாணமா?


There is one word that I have always wanted to say to everybody in my life. That word is “Life is easy.” It’s so easy and fun. Before that, I never think like that.
When I was in Bangkok, I felt like life is very hard, very complicated.
I was born in a poor village on the Northeastern of Thailand. And when I was a kid, everything was fun and easy, but when the TV came, many people came to the village, they said, “You are poor, you need to follow success for your life. You need to go to Bangkok to pursue success in your life.”
So I felt bad, I felt poor. So I needed to go to Bangkok.
University Learning
When I went to Bangkok, it was not very fun. You need to learn, study a lot and work very hard, and then you can get success.
I worked very hard, eight hours per day at least, but what I can eat is just a bowl of noodles per meal, or some Tama dish of fried rice or something like that.
And where I stayed was very bad, a small room with a lot of people slept. It’s very hot.
I started to question a lot. When I work hard, why is my life so hard? It must be something wrong, because I produce a lot of things, but I cannot get enough. And I tried to learn, I tried to study. I tried to study in the university.
It’s very hard to learn in university, because it’s very boring.
And when I looked at subjects in the university, in every faculty, most of them had destructive knowledge. There’s no productive knowledge in university for me. When I look at something like if you learn to be an architect or engineer, that means you ruin more. The more these people work, the mountain will be destroyed more. And a good land in Chao Praya Basin will be covered with concrete more and more. We destroy more.
If we learn agriculture faculty or something like that, that means you learn how to poison, to toxicate the land, the water, and learn to destroy everything. I feel like everything we do is so complicated, so hard. And everything we just make it hard.
Life is so hard and I felt disappointed.
I started to think about, why I have to be here in Bangkok? I thought about when I was a kid, nobody worked eight hours per day, everybody worked two hours, two months a year, planting rice one month and harvesting the rice another month. The rest is free time, ten months of free time. That’s why people have so many festivals in Thailand, every month they have festival. Because they have so much free time.
And then in the daytime, everybody even takes a nap. Even now in Laos, if anybody go to Laos if you can, people take a nap after lunch. And after they wake up, they just gossip, how’s your son-in-law, how’s your wife, daughter-in-law. People have a lot of time, but because they have a lot of time, they have time to be with themselves.
And when they have time to be with themselves, they have time to understand themselves. When they understand themselves, they can see what they want in their life. So, many people see that they want happiness, they want love, they want to enjoy their life.
So, people see a lot of beauty in their life, so they express that beauty in many ways. Some people by carving the handle of their knife, very beautiful, the baskets they are weaving very nicely. But, now, nobody does that. Nobody can do something like that. People use plastic everywhere.
So, I feel like it’s something wrong in there, I cannot live in this way of living. So, I decided to quit University, and went back home.
When I went back home, I started to live like I remember, like when I was a kid. I started to work two months a year. I got four tons of rice. And the whole family, six people, we eat less than half a ton per year. So we can sell some rice.
And then I dug two ponds, two fish ponds. We have fish to eat all year round. And I started a small garden. Less than half an acre. And I spend 15 minutes per day to take care of the garden. I have more than 30 varieties of vegetables in the garden. So, six people cannot eat all of it. We have a surplus to sell in the market. We can make some income in there, too.
House
So, I feel like, it’s easy, why I have to be in Bangkok for seven years, working hard and then not have enough to eat, but here, only two months a year and 15 minutes per day I can feed six people. That’s easy.
And before I think that stupid people like me who never get a good grade in the school, cannot have a house. Because people who are cleverer than me, who get number one in the class every year, they get a good job, but they need to work more than 30 years to have a house. But for me who cannot finish university, how can I have a house? Hopeless for people who have low education, like me.
But, then I started to do earthly building, it’s so easy. I spend two hours per day, from 5 o’clock in the morning, to 7 o’clock in the morning, two hours per day. And in three months, I got a house.
And another friend who’s the most clever in the class, he spent three months to build his house, too. But, he had to be in debt. He had to pay for his debt for 30 years. So, compared to him, I have 29 years and 10 months of free time. So, I feel that life is so easy.
I never think I can build a house easy like that. And I keep building a house every year, at least one house a very year. Now, I have no money, but I have many houses.
My problem is tonight which house I will go to sleep tonight.
So, a house is not a problem, anybody can build a house. The kids, 13 years old, at the school, they make bricks together, they make a house. After one month, they have a library. The kids can make a house, a very old nun can build a hut for herself. Many people can build a house. So, it’s easy.
If you don’t believe me, try it. If somebody wants to have a house.
Clothing
And then, the next thing is clothing.
I feel like I’m poor, I feel like I’m not handsome. I tried to dress like somebody else, like a movie star. To make myself look good, look better.
I spent one month to save money to buy a pair of jeans. When I wear it, I turn left, and turn right, look at the mirror. Every time I look, I am the same person. The most expensive pant cannot change my life. I feel like I’m so crazy, why I have to buy it? Spend one month to have a pair of pants. It doesn’t change me.
I started to think more about that. Why we need to follow fashion? Because, when we follow fashion, we never catch up with it, because we follow it. So, don’t follow it, just stay here. Use what you have.
So, after that, until now, 20 years, I never buy any clothes. All the clothes I have is leftovers from people. When people come to visit me, and when they left, they left a lot of clothes there. So, I have tons of clothes now.
And when people see me wear very old clothes, they give me more clothes. So, my problem is, I need to give clothes to people very often now.
So, it’s so easy.
And when I stopped buying clothes, I feel like, it’s not only clothes, it’s about something else in my life, What I learned is that when I buy something, and I think about, I buy it because I like it, or I buy it because I need it.
So, if I buy it because I like it, that means I’m wrong. So, I feel more free when I think like this.
Medicine
And the last thing is, when I get sick, what will I do?
I really worried in the beginning, because when I have no money, what I will do. But, I started to contemplate more. Normally, sickness is a normal thing, it’s not a bad thing. Sickness is something to remind us that we did something wrong in my life, that’s why we get sick.
So, when I get sick, I need to stop and come back to myself. And think about it, what I did was wrong.
So, I learned how to use water to heal myself, how to use earth to heal myself, I learned how to use basic knowledge to heal myself.
So, now that I rely on myself in these four things, I feel like life is very easy, I feel something like freedom, I feel free. I feel like I don’t worry about anything much, I have less fear, I can do whatever I want in my life.
Before, I had a lot of fear, I cannot do anything. But, now I feel very free, I feel like I’m a unique person on this Earth, nobody like me, I don’t need to make myself like anybody else. I’m the number one.
So, things like this make it easy, very light. And, after that, I started to think about that when I was in Bangkok, I felt very dark in my life. I started to think that many people maybe thought like me at the time.
So, we started a place called “Pun Pun” in Chiang Mai. The main aim is just saving seed. To collect seed, because seed is food, food is life. If there is no seed, no life. No seed, no freedom. No seed, no happiness. Because your life depends on somebody else. Because you have no food.
So, it’s very important to save seed. That’s why we focus on saving seed. That’s the main thing in Pun Pun.
And the second thing is it is the learning center.
We want to have a center for ourselves to learn, learn how to make life easy. Because we were taught to make life complicated and hard all the time. How can we make it easy? It’s easy, but we don’t know how to make it easy anymore. Because we always make it complicated and now, we start to learn, and learn to be together.
Because, we were taught to disconnect ourselves from everything else, to be independent, so we can rely on the money only. We don’t need to rely on each other. But now, to be happy, we need to come back, to connect to ourselves again, to connect to other people, to connect our mind and body together again.
So, we can be happy. Life is easy. And from beginning until now, what I learned is the four basic needs: food, house, clothes and medicine must be cheap and easy for everybody, that’s the civilization.
But, if you make these four things hard and very hard for many people to get, that’s uncivilized.
So, now when we look at everywhere around us, everything is so hard to get. So I feel like now is the most uncivilized era of humans on this Earth.
We have so many people who finish from university, have so many universities on the Earth, have so many clever people on this Earth. But, life is harder and harder. We make it hard for whom? We work hard for whom right now?
I feel like it’s wrong, it’s not normal. So, I just want to come back to normal. To be a normal person, to be equal to animals. The birds make a nest in one or two days. The rats dig a hole in one night. But, the clever humans like us spend 30 years to have a house, and many people can’t believe that they can have a house in this life. So, that’s wrong.
Why we destroy our spirit, why do we destroy our ability that much? So, I feel like it’s enough for me, to live in the normal way, in the abnormal way. So, now I try to be normal. But, people look at me as the abnormal one. A crazy person. But, I don’t care, because it’s not my fault. It’s their fault, because they think like that.
So, my life is easy and light now. That’s enough for me.
People can think whatever they want. I cannot manage anything outside myself. What I can do is change my mind, manage my mind. Now, my mind is light and easy, that’s enough.
If anybody wants to have a choice, you can have a choice. The choice to be easy or to be hard, it depends on you.
Thank you.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates